Quantcast

எல்லோரா குடைவரைகள் சிற்பக்கலை ஆர்வலர்களுக்கு ஒரு புதையல். அது ஒரு குடைவரை என்பதனால் மட்டும் அல்ல அதில் உள்ள சிற்பங்களின் அழகு மற்றும் கலை நுணுக்கங்களும் தான். இன்று எல்லோரா குடைவரை 21 இல் இருந்து ஒரு அற்புத வடிவத்தை பார்க்கப்போகிறோம்.

அழகிய கார்த்திகேயனின் வடிவம் தான் அது.

karthikeya

படங்களுக்கு நன்றி:

http://www.elloracaves.org/search.php?cmd=search&words=&mode=normal&cave_name=21

அருமையான சிற்பம். சாமபங்கத்தில் கார்த்திகேயன், வலது கையை இடுப்பில் வைத்து ( இதற்கு கட்யவலம்பிதம் என்று பெயர் ) நிற்கும் கோலம்.

karthikeya

செதுக்கப்பட்டபோது நான்கு கைகளுடன் இருந்து சிலை, இப்போது காலத்தின் கோலத்தால் மிகவும் சிதைந்துள்ளது. வலது மேல் கரம் சுத்தமாக காணமுடியவில்லை. இடது மேல் கை, அவர் வாஹனமான மயிலை தடிவியவாறு உள்ளது. கீழே இருக்கும் இடது கையில் ஏதோ பாத்திரம் போல உள்ளது. பூணூல் அணிந்து, கழுத்தில் அணிகலன் பல, அழகிய கிரீடம் என்று ஜொலிக்கிறான் குமரன்.

மயிலும் காலத்தின் பசிக்கு தனது தலையை பறிகொடுத்துவிட்டது, ஆனால் அது மயில்தான் என்பது இறக்கை மூலம் தெளிவாக காட்டுகிறது. கால்கள் தான் கொஞ்சம் தடிமனாக உள்ளன ( முருகனை தூக்கி தூக்கி பலம் ஏறிவிட்டதோ?)

peacock

மேலே இரு புறமும் கந்தர்வர்கள். இடது பக்கம் ஆண் பெண் இருவருமே குமரனின் அழகை வியந்து வலது கையை விஸ்மயத்தில் வைத்துள்ளனர். வலது புறம், ஆண் கரம் கூப்பி அஞ்சலியில் உள்ளார். பெண்ணோ, கொஞ்சம் துணுக்காக அமர்திருக்கிறாள்.

the flying celestial couples

இப்போது ஆடு தலைகளுக்கு வருவோம். இருவரும் யார்

குமாரனின் இடது புறத்தில் இருக்கும் ஆடுதலை கொண்ட உருவும், சற்றே நளினமாக தெரிகிறது. அதன் வலது கையில் மலரை கொண்ட முகர்ந்துக் கொண்டு இருக்கிறது. இடது கை இடுப்பில் ஒய்யாரமாக - அந்த தலை சற்றே சாய்ந்திருக்கும் பாணி, அனைத்தும் இது ஒரு பெண் என்று எனக்கு உணர்த்துகிறது - உங்களுக்கு ?

left side goat headed attendant

வலது புறம் இருப்பது ஆண். ஆனால் அவர் கைகள் வைத்திருக்கும் முறை புது விதமாக உள்ளது. வலது கை வணக்கம் சொல்ல இருந்தாலும், இடது கை மடக்கி உள்ளது. ( புரூஸ் லீ ‘குங் ஃபூ’ பாணியில் வணக்கம் சொல்வது போல உள்ளது)

right side goat headed assistant

இவர்கள் யார். குமரனின் கதைகளில் வரும் ஆடு தலை கொண்ட பெண் - அஜமுகி, சூரபத்மனின் தங்கை, கஸ்யப முனிவர்-மாயா வின் பெண்.

முழு கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.

http://indianmythologytales.blogspot.com/2009/04/tales-of-muruga-part-1.html

சரி, அந்த மற்றொருவர் யார்?. ஆடு தலை கொண்ட ஆண், தக்ஷன் மட்டும் தானே. அப்படியானால் இது தக்ஷனா ? அவனுக்கும் குமரனுக்கும் என்ன சம்மந்தம்?

இரண்டு வாரம் விடுமுறையில் நாளை முதல் செல்கிறேன். தில்லை, தஞ்சை, சீராப்பள்ளி, மதுரை, கோவை என்று பெரிய பயணம் முடிக்க ஆசை - பல அற்புத சிற்பங்களை உங்களுக்கு பரிசாகக் கொண்ட வர திட்டமிட்டுள்ளேன். அதுவரை , வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், டிசம்பர் 10th, 2009 அன்று 12:53 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 11 மறுமொழிகள்

  1  

Hi Friend ur doing an excellent work.. Can we exchange links…

டிசம்பர் 10th, 2009 at 15:19
சச்சிதானந்தன்
  2  

எல்லோராவில் கார்த்திகேயன் பார்த்தேன்.
படமும் விளக்கமும் நன்று.
பணி தொடர்க.

டிசம்பர் 10th, 2009 at 18:06
  3  

hi vijay,

sure, will check out yours soon.

@ சச்சிதானந்தன், மிக்க நன்றி,

rgds
vj

டிசம்பர் 10th, 2009 at 18:41
Kathie B.
  4  

Happy 2010 to you, too. Daksha’s hand
position certainly is unusual, at first I thought he had 3 hands. What’s he doing with Kumara? K’s torso is awfully short isn’t it. Do you have the date of cave 21?
Celestial lady on proper rt. is hitting her forehead in wonder,perhaps? proper lft. celestials seem to have pots on their heads

டிசம்பர் 15th, 2009 at 2:05
Kathie B.
  5  

After reading the blog, guess goat & ram
could be Maya & Rsi Kasyapa?

டிசம்பர் 15th, 2009 at 2:11
anandhi natarajan
  6  

happy nwyear. i saw same goat head woman in halabedu temple in two dfferent panale

டிசம்பர் 27th, 2009 at 21:44
  7  

hi Anandhi

Those are different - its found in tiruvanamalai as well. most certainly a local folklore ( later dated)

rgds
vj

ஜனவரி 6th, 2010 at 8:01
umesh derebail
  8  

Nice deduction, hope it meets with historians perspective too

பெப்ரவரி 17th, 2010 at 16:32
  9  

hi Umesh

Welcome to the site. If you do find any authentic accounts, pl do share with us

rgds
vj

பெப்ரவரி 18th, 2010 at 7:39
  10  

the Goat heads may well be Agni and Angaraka (mars).
In the northern version, sooran does not show prominence ( so ajamukhi is neither).
In Jain domination (Ellora), it is very logical and customary to have the planetary influence for Skanda. Agni and Angaraka both represent goats (one Ram and other Goat).
Hope this is in the right direction!

ஜூலை 16th, 2010 at 10:08
Sumathi
  11  

Hello Sir,

Very nice job. I thing that right side goat showing the “chin mudhra”.

Thak you
Sumathi

ஆகஸ்ட் 25th, 2011 at 17:22

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி