Quantcast

வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். மூன்று வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடைவெளியில் பல அற்புத இடங்கள் சென்றோம், பல பிரமிக்க வைக்கும் படங்களை எடுத்தோம், நண்பர்கள் , ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் பலரை சந்தித்தோம்.

இந்த பதிவை துவங்கும் போதே இதை நடக்க செய்த வள்ளல்கள் அனைவரையும் வணங்கி துவங்குகிறோம். .

நீங்கள் இந்த பழைய பதிவை பார்த்திருப்பீர்கள், இல்லையெனில் ஒரு முறை பார்த்துவிட்டு தொடருங்கள். 2008 வருடம் ஜூன் மாதம் ஆலயச் சீரமைப்புக்கான இந்த சவாலை ‘ரீச்’ அமைப்பு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.

ஆயிரம் ஆண்டு தவம்
அரக்க பறக்க எங்கள் பயணத்தில் முதல் இடமாக வேலை எவ்வாறு வந்துள்ளது என்று பள்ளி தேர்வு எழுதிய மாணவர்கள் போல ஆர்வத்துடன் - கொஞ்சம் பயத்துடன் ( ஏனெனில் பல இடங்களில் - இதை பற்றி கொஞ்சம் கூட சிற்ப அறிவோ, அதைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலோ இல்லாத ஞானசூனியங்கள் ஆலயச் சீரமைப்பு என்ற பெயரில் சுவரில் டைல்ஸ் ஒட்டி, சிற்பங்களுக்கு நீல வண்ணம் அப்பி ஏற்கனவே இருந்த அழகைச் சிதைக்கும் நவீன ‘மாலிக்காபூர்கள்’ செய்யும் அட்டகாசங்களை பார்த்து கலங்கி ) - இதை எப்படி சரியாகச் செய்ய வேண்டும், அதுவும் தனியார் - சாமானியர்கள் பங்கேற்று இந்த தொழிலில் தேர்ச்சி பெற்ற பெரியவர்கள் வழி நடத்த - ஒரு எடுத்துக்காட்டாக இது அமைய வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

நீங்களே பார்த்துவிட்டு எங்கள் பணியை மதிப்பீடு செய்யுங்கள்.

then
now

இன்னும் வருகிறது.

then 1
now 1

சுதை சிற்பங்கள் பாரம்பரிய முறையில் செப்பனிடப்பட்டுளன.

then 2
now 2

வேலைப்பாடு மிகுந்த விமானம் என்பதால் நமக்கு விருந்து.

then 3
now 3

உபயோகம் செய்யும் வண்ணங்கள் ( தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற புராதன முறையை தொடர்ந்துள்ளன ) கண்ணுக்கு குளிர்ச்சியாய்

then 4
now 4

பூத ரேகை

then 5
now 5

புராதன பாணி துளியும் மாறாமல்

now 6
then 6

எப்படியாவது செய்யவேண்டும் என்றில்லாமல் ‘இப்படி தான் செய்ய வேண்டும்’ என்று செய்துள்ள குழுவுக்கு பாராட்டுக்கள்.

then 8
now 8

நெஞ்சைக் கொள்ளை கொண்டது கைலாசநாதர் ஆலயம். நல்ல சகுனம், மேகம் கருத்தது, புறப்படும் வேலைவரை தூறல் போடாமல், வாகனத்தில் ஏறிய பிறகே பிளந்தது வானம். இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் காண தன் எழிலை மீண்டும் திரும்பப் பெற்ற விமானம் ஜொலித்தது. ஆஹா!!

utm kailasanatha temple
utiramerur kailasanatha temple

இந்த பதிவு இத்துடன் முடியவில்லை. இன்னும் இங்கே சீரமைப்பு பணிகளின் பொது கிடைத்த அற்புத சிற்பங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இந்த முயற்சி உங்களை இது போல இன்னும் பல முயற்சிகளுக்கு உதவ தூண்டும், அழிவின் விளிம்பில் இருக்கும் இது போன்ற கலை செல்வங்கள், நமது புராதன குல தனங்களை மீட்டுத்தரும் முயற்சியில் ரீச்சுக்கு இது ஒரு துவக்க கொடு - பயணம் தொடரும். நீங்களும் சேர்த்து வழிநடந்தால் வேகம் கூடும்.

( இந்த பதிவு மற்றும் மூன்று வார கால பயணத்தில் நான் எடுத்த படங்கள் அனைத்தும் எனது நண்பர் திரு தினேஷ் சுந்தரேசன் அவர்களின் அதி நவீன கேமரா கொண்டு எடுத்தவை . மிகவும் நல்ல உள்ளம் படைத்தவர், கேட்டவுடன் கேமரா மட்டும் தர மாட்டேன், அதனுடன் சேர்த்து அணைத்துவித உதவிக் கருவிகளையும் எடுத்து சென்றால் தான் தருவேன் என்று கூறி என்னை அசத்திய பெரிய மனம் படைத்தவர். டிசம்பர் 23rd அன்று மாலை ஒரு சாலை விபத்தில் எங்களை விட்டு பிரிந்த அவருக்கு இந்த பதிவின் மூலம் அஞ்சலி செலுத்துகிறேன்)

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: 

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, ஜனவரி 6th, 2010 அன்று 15:12 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 21 மறுமொழிகள்

Dhivakar
  1  

My heart goes with the Young Man.

One good news and one bad news..

Nallathum Naane, Theeyathum Naane : BG

Dhivakar

ஜனவரி 6th, 2010 at 15:57
  2  

கல் மட்டும் கவி பாடவில்லை, கல்லைக் கண்டோரும் அல்லவா கவி பாடியுள்ளனர். வாழ்த்துக்கள்! கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை.

ஜனவரி 6th, 2010 at 16:03
Kathie B.
  3  

oh, what a shame. So sad.

ஜனவரி 6th, 2010 at 18:36
TiM Sunder
  4  

Great pictures, a historical restoration job well done, Dinesh’s texts live through, his camera and lenses still helped even though he is gone, Sorry for the loss.

ஜனவரி 6th, 2010 at 19:11
rhoda alex
  5  

So very sorry to hear about your friend.

and a wow for the start of this series!

ஜனவரி 7th, 2010 at 9:09
Humble
  6  

Kudos to REACH and thanks to Vijay for sharing the good news.

You told me that he was in critical condition or something, but I didn’t know he is no more.

Sad.. May his soul rest in peace

Humble

ஜனவரி 7th, 2010 at 13:01
Navin
  7  

Vj, the restoration job is simply awesome and professional…deepest condolences on the sad demise of your friend.

ஜனவரி 7th, 2010 at 16:56
Narasimhan Srinivasan
  8  

wonderful article dear Dinesh. Great effort by our demised friend Dinesh Sundaresan. May his soul rest in peace.

The Uttiraimerur Kailasanatha looks like a classical Pallava creation. What is your take on this Vijay?

Cheenu

ஜனவரி 7th, 2010 at 17:30
  9  

hi cheenu

click on the link http://www.poetryinstone.in/lang/en/2008/09/05/a-thousand-year-struggle-to-survive.html to read the first post…u can see the inscriptions - danti varma pallava and rjc as well

the central shrine has an amazing shiva lingam - the back of the shrine is mty but is framed….means there must have been a somaskanda panel sometime before - maybe was in wood and deteriorated..

vj

rgds
vj

ஜனவரி 7th, 2010 at 18:04
Rajeswari
  10  

Congrats for this great workers!!!!!!!!!!!

ஜனவரி 7th, 2010 at 20:14
Rajeswari
  11  

Congrats for this great workers!!!!! sorry about your friend.

ஜனவரி 7th, 2010 at 20:20
  12  

Vijay deserves a special thanks for his right way of putting the old and new, which in spite of taking the pictures from day one of renovating Uttaramerur, I could not do. I will surely have this blog link added to our web site. Thanks Vijay. Wish members join us by joining REACH’s yahoo group: temple_cleaners.
Thanks again, VIJAY

ஜனவரி 8th, 2010 at 13:28
N.S. Narayanasamy
  13  

Vijay, had I known earlier about your south trip in December, I would have been pleased to join you in the trip. I could not forget the Mahendra Pallava cave temples trip with you. Your compilation of the old and new photos of Uthiramerur temple is very good. By the way, I am really sorry for your friend Dinesh. He still lives in our midst through his camera and lense in the Uthiramerur photos.

ஜனவரி 8th, 2010 at 15:21
  14  

@ chandra - great work.

@ Narayanaswamy - sir, the mahendra caves was an amazing trip. But this was an extended trip and wanted to focus more time on taking photos - so restricted to myself and Arvind…we spent close to 2-3 hours at each site - so was not sure how others would handle. Next time for sure.

rgds
vj

ஜனவரி 8th, 2010 at 15:25
Kathie B.
  15  

Can’t wait to see the murthis!

ஜனவரி 13th, 2010 at 10:09
Raman
  16  

Fantastic job. A great service to our heritage.

ஜனவரி 17th, 2010 at 9:06
Kumaran
  17  

Gave a good intro to a good work. I was excited to read about this. But at the end, reading about the tragic accident of your friend made me sad.

பெப்ரவரி 27th, 2010 at 5:28
Arun
  18  

Nice to hear that gud news……but saddest part is v lost dinesh……..from ur chat script i could understand how gud was he at heart….may his soul rest in peace…..he always lives here wit us…..v miss u dinesh……love u dude

மார்ச் 6th, 2010 at 14:39
  19  

yeah Arun, He truly lives on.

மார்ச் 8th, 2010 at 11:43
Subhashini
  20  

So Sorry to hear about your friend. Amazing work..

ஜூன் 4th, 2010 at 10:59
  21  

“Eppadi irundha naan ippadi aayitten” - this dialogue sounds positive in this case :)

ஆகஸ்ட் 26th, 2010 at 10:49

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி