Quantcast


திருகழுகுன்றம் அல்லது திருக்கழுக்குன்றம், சென்னைவாசிகளுக்கு சுவையான பழைய நினைவுகளை கண்டிப்பாக தரும். ஏனெனில் பள்ளிச் சுற்றுலா என்றாலே அங்குதான் கூட்டிச் செல்வார்கள். அவர்களை சொல்லிக் குற்றம் இல்லை - அந்த நாளில் கையில் இருந்தது மல்லை , மாதவரம் பால் பண்ணை, வேடந்தாங்கல் , கிண்டி பூங்கா. எல்லாம் ஒரே நாளில் சென்று வந்துவிடலாம் , கட்டணம் இல்லை, வார நாட்களில் ஈ காக்கா வராது -பிள்ளைகள் கூட்டத்தில் தொலைந்து போகாது.. கொஞ்சம் பெரிய வகுப்பு என்றால் செஞ்சிக் கோட்டை -எனினும் திருகழுகுன்றம் தனி இடம் பெறும், காரணம், சில வருடங்கள் வரை இங்கே வந்து காலை உணவு அருந்திவிட்டு சென்ற கழுகுகள் !! பக்ஷி தீர்த்தம் .

ஓட்டை பள்ளிப் பேருந்தில் காய்கறி கூடை போல அனைவரையும் அடைத்து, தலத்தில் இறக்கி விடுவார்கள். நல்ல பையன் என்றால் நண்பனுடன் கை கோர்த்து செல்லலாம். சேஷ்டை செய்பவன் என்றால் ஒரு பெண்ணோடு ( அப்போது அது ஒரு பெரும் தண்டனை ) - ஆனால் பாதகர்கள் - எப்படி தான் விவரம் தெரியும் முன்னரே இதை மாத்தி, தனி தனியாய் அமர்திவிட்டர்கள். சரி, அதை விடுவோம் - ஜோடி மாடுகளை போல படிகளை சிரித்துக்கொண்டே ஏறுவோம். அப்போது படிகள் இத்தனை செங்குத்தாக இருந்தாக நினைவில்லை - எல்லாம் சிறிது செழிப்பு / பருமன் செய்யும் வேலையோ??

இதனாலோ என்னவோ , பள்ளி முடிந்தவுடன் எவருமே அந்தப்பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. மூவர் - அப்பர், சம்பந்தர் , சுந்தரர் பாடிய தலம் . மல்லையில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தான். ஆனால் யாரும் போவதில்லை. கழுகுகள் வருகை வேறு நின்று விட்டது ( விமோசனம் பெற்று விட்டனர் போல - இன்னும் ஒரு யுகம் ஆகும் மீண்டும் அவை வர !)

இதனால் அர்விந்த், வா அங்கே போகலாம், என்றதும் சட்டென பணிகளை முடித்துக்கொண்டு காரை திருவான்மியூர் கோயில் குளத்தருகே நிறுத்துவிட்டு விட்டு அவருடன் கிழக்கு கடற் கரை சாலையில் விரைந்தோம். இரண்டு இடங்களில் வழி கேட்டோம் - அப்புறம் மலை கண்ணில் பட்டு தானே வழி காட்டியது.

எங்கள் அதிஷ்டமோ துரதிஷ்டமோ , வழக்கம் போல, தளத்தை பற்றி சரியாக படித்துவிட்டு செல்லவில்லை. பலரை போல் வந்த பல்லவ குடவரை கோயிலை ( ஒருகல் மண்டபம் ) தேடாமல், நேரே மலை மீது உள்ள ஆலயத்திற்கு விரைந்தோம். இந்த மலை மேல் என்பது ஒரு முக்கியமான வாக்கியம். மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனை அடுத்த பதிவில் குடைவரையை பற்றி பேசும்போது மீண்டும் பார்ப்போம்.

திரு K. R. ஸ்ரீனிவாசன் அவர்களது பல்லவ குடைவரைகள் இந்த பதிவை எழுத மிகவும் உதவியது. ( சென்று வந்த பின்னர் படித்தேன் !! பின் புத்தி )

விடா முயற்சி - சரி சரி விட்டு விட்டு ( பத்து படிக்கு ஒருமுறை மூச்சு வாங்கி ) மேலே ஏறி பார்த்தல் - இந்தனை சிறிய கோயில். அதுவும் கட்டுமான கோயில் - சிற்பங்களும் அவ்வளவு இல்லை. ஏதோ விசேஷம் வேறு - ஒரு சின்ன கிராமமே மூலவர் முன்னர் இருந்தது. அஷ்டகோணமாக வளைந்து - வேதகிரீஸ்வரரை தரிசித்துவிட்டு வெளியே பிரகாரம் வந்தோம் , அங்கே ஒரு புதையல் … சுவர்களில் நடுவில் துவாரம். அதனுள் பல்லவ புடைப்பு சிற்பம். சோமஸ்கந்தர்

the tirukazhukundram vedagireerswarar panel

பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி - மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.

உடனே படம் எடுத்து விட்டு - உமை வடிவம் எப்படி செதுக்கப்பட்டுள்ளது என்று எட்டி பார்த்தோம். ராஜசிம்ஹ்ன் பாணியிலா , அல்லது அவனுக்கு முன்னர் உள்ள பாணியிலா ?

somaskanda tirukazhukundram

அப்போது , தமிழ் நாட்டு வரலாற்றில் அழியா இடம் பிடிக்க வேண்டும் என , தமிழக கோயில்களை காக்க வந்த காவலன் என்று தானே பட்டம் சூடிக்கொண்டு திரியும் மடையன் ஒருவன் வந்தான். எங்களை தமிழ் கலாசாரம் தெரியாத மூடர்கள் என்று வேசி படங்கள் எடுக்கும் முட்டாள்கள் என்று கூட்டத்தை கூட்டினான். வேறு வேலையே இல்லாமால் திரியும் கூட்டம், எங்கே வம்பு என்று அலையும் கூட்டம், உடனே சபை கூடியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் - நாங்கள் விஷயம் தெரிந்தவர்கள், மூலவரை படம் எடுக்க மாட்டோம், இவை வழிபாட்டில் இருக்கும் சிற்பங்கள் அல்ல. கலை வளர்க்கவே எங்கள் முயற்சி என்று முறையிட்டோம். எனினும் அந்த மூடன், அவனுடன் கூடிய பஞ்சாயத்து - செவிடர்கள் கூட்டமாக மாறியது. புகை படம் எடுக்க கட்டண சீட்டு பெற்றுள்ளோம், படம் எடுக்காதே என்று அறிவிப்பு பலகை எங்கும் இல்லை என்று வாதாடினோம். இடையில் சென்று அடுத்து இருந்த ரிஷப வாஹனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிவனை படம் பிடித்தேன். பல்லவ சிற்பம் - அபாரம்.

rishabavaahana shiva

கூட்டம் களை கட்டியது. ஆங்காங்கே சரித்திர காவலர்கள் அவதாரம் எடுத்தாற்போல கூச்சல் போட்டனர். மிகவும் வருத்ததுடன் எஞ்சி இருந்த ஒரு சிற்பத்தை படம் எடுக்காமல் திரும்பினோம்.
( நண்பர்கள் உதவியுடன் விரைவில் அந்த படத்தை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது )

நல்ல காலம். சோமஸ்கந்தர் படம் அருமையாக வந்துள்ளது.

உள்ளே இரு புறம் பிரம்மா , மற்றும் விஷ்ணு

closeup

சிவன் மற்றும் உமை. உமை அமர்ந்திருக்கும் பாணி - நீங்களே முடிவு செய்யுங்கள்.

shiva
umai

குழந்தை குமரன் - தனது கிரீடத்துடன்.

baby skanda

கண்டிப்பாக ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் தான். இந்த சிற்பத்தில் ஒரு தனித்தன்மை - சிம்ஹாசனம் அடியில் பாருங்கள். மற்ற ராஜசிம்ஹ்ன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்களில் வருவது போல பன்னீர் சொம்பு போல இல்லாமல் இங்கே ஒரு வாய் அகல பாத்திரம் போல உள்ளது.

throne and the vessel

ஆலயம் பற்றி மேலும் விவரம். மூவர் பாடல்கள்.

http://www.shaivam.org/tamil/thirumurai/thiru01_103.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru06_092.htm
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru07_081.htm

அவர்கள் பாடியது மேலே உள்ள ஆலயமா - கிழே உள்ள குடவறையா. அவர்கள் காலம் மகேந்திர பல்லவரின் காலம் என்றாலும் அவர்கள் அவனது குடைவரைகள் பற்றி ஒரு பாடல் கூட பாடவில்லை. மேலும் அப்பர் பாடலில்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

என்று பாடுகிறார். அதனால் மேலே உள்ள ஆலயத்தையே அவர் பாடினார் என்று நாம் அறியலாம். அப்போது லாஜிக் கொஞ்சம் இடிக்கிறதே. மகேந்திரர் காலத்து மூவர் பாடிய கோயிலில் அவனுக்கு மூன்று தலைமுறைக்கு அடுத்து வந்த ராஜசிம்ஹ்ன் பாணியில் சிற்பங்களோ என்ற கேள்வி எழுகிறது ? இப்படி இருக்குமோ - அப்போது அது ஒரு செங்கல் / சுதை கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக இருந்திருக்கலாம், பின்னர் ராஜசிம்ஹ்ன் காலத்திலோ பின்னரோ மூன்று பெரும் பாறைகளை நிறுத்தி இப்போது உள்ள கோயிலின் கருவறை நிறுவப் பட்டிருக்கலாம் - இதுவே அதனுள் இருக்கும் பிற்காலத்து சோமாஸ்கந்தர் வடிவத்தின் விளக்கம் என்றும் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் நூலில் குறிப்பிடுகிறார்

அடுத்து வரும் பதிவுகளில் குடவரை கோயிலையும் அதில் உள்ளே கல்வெட்டை கொண்டு இதே கருத்தை எப்படி ஊர்ஜிதம் செய்வது என்பதையும் விரைவில் பார்ப்போம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, ஜனவரி 20th, 2010 அன்று 8:30 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 12 மறுமொழிகள்

Dhivakar
  1  

பன்னீர் சொம்பு போல இல்லாமல் இங்கே ஒரு வாய் அகல பாத்திரம் போல உள்ளது.

Your observation and Comments are very nice.

I have seen those eagles at 11 noon for taking prasadam’s during 1970’s. very steep steps like Mangalagiri Panaka Narasimha Temple.

Good that you have covered the important ones.

Dhivakar

ஜனவரி 21st, 2010 at 11:41
rhoda alex
  2  

great writing vj…so much so that i checked out chetan bagat’s books today :-)

ஜனவரி 23rd, 2010 at 20:21
  3  

@ Dhivakar sir. but still rue the missed panel !!

@ rhoda - thanks - it was fun read, but guess with the number of comments for this particular post, my ambitions of becoming a writer arent too bright.

vj

ஜனவரி 24th, 2010 at 18:29
Kathie B.
  4  

How odd, 1st 3 & last 2 photos don’t open. Maybe it’s just my Mac. You were so lucky to be able to photograph the fine Somaskanda - I didn’t even think to ask. I do have photos of the Orukal Mandabam if you want them.
Is there a 3rd cave there?

ஜனவரி 27th, 2010 at 23:24
  5  

dear kathie

we have some glitches on the site since beginning of this week. thiru is battling to set it right. till then please bear with me. Pl do send in oru kal mandabam snaps.

3 shrines - the later structural temple on the plain, the pallava period cave on the foothills and the oldest - shrine on top of the hill.

rgds
vj

ஜனவரி 28th, 2010 at 7:36
  6  

//அப்போது , தமிழ் நாட்டு வரலாற்றில் அழியா இடம் பிடிக்க வேண்டும் என , தமிழக கோயில்களை காக்க வந்த காவலன் என்று தானே பட்டம் சூடிக்கொண்டு திரியும் மடையன் ஒருவன் வந்தான். எங்களை தமிழ் கலாசாரம் தெரியாத மூடர்கள் என்று வேசி படங்கள் எடுக்கும் முட்டாள்கள் என்று கூட்டத்தை கூட்டினான். வேறு வேலையே இல்லாமால் திரியும் கூட்டம், எங்கே வம்பு என்று அலையும் கூட்டம், உடனே சபை கூடியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் - நாங்கள் விஷயம் தெரிந்தவர்கள், மூலவரை படம் எடுக்க மாட்டோம், இவை வழிபாட்டில் இருக்கும் சிற்பங்கள் அல்ல. கலை வளர்க்கவே எங்கள் முயற்சி என்று முறையிட்டோம். எனினும் அந்த மூடன், அவனுடன் கூடிய பஞ்சாயத்து - செவிடர்கள் கூட்டமாக மாறியது. புகை படம் எடுக்க கட்டண சீட்டு பெற்றுள்ளோம், படம் எடுக்காதே என்று அறிவிப்பு பலகை எங்கும் இல்லை என்று வாதாடினோம். இடையில் சென்று அடுத்து இருந்த ரிஷப வாஹனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிவனை படம் பிடித்தேன். பல்லவ சிற்பம் - அபாரம்.//

வருத்தமா இருக்கு, எங்களுக்கும் இம்மாதிரி அநுபவங்கள் நேர்ந்தன. அதனாலேயே படங்கள் எடுக்கிறதுனா யோசிக்க வேண்டி இருக்கிறது. அப்படியும் உங்கள் வர்ணனையும் சிற்ப ரசனையும் அபாரம். மிக்க நன்றி. யாரும் வரலை, பின்னூட்டம் வரலைனு நினைக்காதீர்கள், எனக்குத் தெரிந்து என் நண்பர் வட்டத்தில் பலரும் உங்கள் பதிவுகளைப் படிப்பதாய்ச் சொல்லி இருக்கின்றனர். சிலருக்குப் பின்னூட்டம் கொடுப்பதில் சோம்பல், அல்லது தயக்கம் இருக்கலாம். வாழ்த்துகளும், ஆசிகளும்.

பெப்ரவரி 1st, 2010 at 7:11
nallasivam
  7  

wonderful continue this great job

செப்டம்பர் 20th, 2010 at 17:11
  8  

நீங்க இங்கே குறிப்பிட்டு இருப்பது மூலவரின் சுற்றுப் பிரகாரம் இல்லையா? நான் சொல்லுவது சரியாக மூலவர் இருக்கும் கர்ப்பக் கிரகத்து உள் சுற்று சுவற்றில்.
இதற்கே படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்பது புரிகிறது. உள்ளே படம் எடுக்க முடியாவிட்டாலும் நீங்கள் பார்க்க அனுமதி வாங்கலாம்.

அக்டோபர் 1st, 2010 at 20:26
M.CHITRARASAN
  9  

I have a chance to visit the world wonderfull chola tempele “pragatheeswarar” inTanjore with a special permission to see the paintings of Rajaraja cholan and Karuvurdevar and three statue in siting posture around the ‘Moolavar” and also lot of paintings seen in and arround the wall of the temple in the first inner circle of the Moolavar.Lot of focus light arranged in and arround the circle.A marvalous and wonderful paintings of the kingdom of chola samrajiyam not everseen
in anywhere.The second circle of the ‘Moolavar’ have also contains the beautiful 64 posture of dancing girl sculpturet in 62 single stone,But 63 number stone is partly sculptured and 64 number is in plain. But the reasons not known for the incompletion of the
the dance posture.Any reference about the resons for the incompletion of the sculpture known by the viewer Please send to the poetry in stone
M.Chitrarasan,
6.keelaiyur

நவம்பர் 6th, 2010 at 23:24
  10  

Hi Chitrarasan, Indeed fortunate. I am hoping to get the Chola Paintings book published by Tanjore Univ this week. will try and work a few more posts on these paintings shortly.

regarding the dance karanas and why they were left unfinished, is a mystery.

rgds
vj

நவம்பர் 8th, 2010 at 8:14
Vidya sudhan
  11  

Hi vijay and chitrarasan, when we visited the above mentioned area of the big temple, the person taking us around said that the reason it was not completed was because Rajaraja had passed away by then and Rajendra transferred the sculptors to Gangaikonda Cholapuram to work on the temple he was building there! Would that be a credible explanation?

ஜனவரி 7th, 2012 at 20:56
  12  

dear Vidya,

The Emperor donated Gold for making the allow for the big temple’s top finial in his 25th year of reign - ie 985+25 - 1010 CE. that is the date we take for the consecration of the big temple. Rajendra was made co regent in 1012 and became sovereign in 1014 ( 29th year - the last of sri Raja raja ) - the most common dates taken for his Ganges campaign are after his 6th year and the city building comes much later ( around his 17th year of reign) - so the argument is not correct. However, it is another story that within 35 years of the big temple consecration Rajendra moved bulk of his father’s donations from the big temple to his temple !! more mysteries

ஜனவரி 9th, 2012 at 14:10

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி