Quantcast

“அலைகளையும்,கொழுந்து விட்டெரியும் அழலையும்,காற்றின் போக்கில் விண்ணில் தவழ்ந்து செல்லும் வெண்முகிலின் கூட்டத்தையும் தூரிகையால் ஓவியமாக வடிக்க வல்லவனே மிகச் சிறந்த ஓவியன்.”

விஷ்ணு தர்மோத்தர புராணம், Ch 43 V 28

நான் இதனை முதல் முறையாக திரு.சிவராமகிருஷ்ணன், சென்னை அரசு ஓவியக் கல்லூரி ஆசிரியர் , அவர்களின் உரையில் ( அதற்கு அழைப்பு விடுத்த திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி ) கேட்டேன். உரையின் தொடக்கத்திலேயே மேல்கண்ட அந்த அற்புத வாக்கியத்தைச் சொல்லி எங்கள் ஆர்வத்தைத் தூண்டினார் சிவராமகிருஷ்ணன்.

”ஓர் ஓவியனின் பார்வையில் சிற்பம்” என்பதே உரையின் தலைப்பு - பல அற்புதமான சிற்ப வடிவங்களில் பொதிந்து கிடக்கும் கலை நுட்பங்களை அவர் எங்களுக்கு விளக்கினார். எனினும் என்னை மிகவும் கவர்ந்தது முடிவில் அவர் விளக்க எடுத்துக்கொண்ட ‘அஜந்தாவின் அழியா ஓவியங்கள்’ தலைப்பு (சிவகாமியின் சபதம் - ஆயனச் சிற்பியின் தாக்கம்தான்!!)

நண்பர்கள் பலரும் அஜந்தா சென்று அங்குள்ள அழியா ஓவியங்களைப் பார்த்துவிட்டுப் புளகாங்கிதம் அடைவதைக் கண்டதுண்டு. எனினும் அவர்கள் அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு அப்படிப் பரவசப் படுகிறார்களா என்று ஒரு கேள்வி மனத்தில் இருந்தது. இங்கேதான் நுண்கலை வல்லுனர்களின் உதவி நம்மைப் போன்ற சாமானியர்களுக்குத் தேவை (இந்தப் பதிவை இட அனுமதி அளித்த திரு. சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு மற்றுமொரு முறை நன்றி - இப்பதிவில் உள்ள நல்ல அம்சங்கள் எல்லாம் அவருடையவை; பிழைகள் ஏதேனும் இருந்தால் அவை எனது மட்டுமே )

long shot of the mural

இப்படித்தான் பொதுவாக அஜந்தா செல்லும் அனைவரும் அங்கிருக்கும் ஓவியங்களைப் பார்க்கின்றனர். சிதைந்து போனாலும் அதில் எஞ்சி இருக்கும் கலையை நாம் உன்னித்துப் பார்த்தால் மேலும் மேலும் ரசிக்கலாம். படத்தின் வலப்புறம் பாருங்கள்.

long shot of the mural with the apsara

இது அஜந்தாவின் பதினேழாம் குடைவரையில் இருக்கும் சுவர் ஓவியம். வானுலக தேவதை புத்தரை வழிபட பூலோகம் இறங்கி வரும் காட்சி இது -

அருகில் சென்று ஓவியத்தின் அழகை ரசிப்போம்.

closeup of the mural

பேரழகுதான் - பொறுங்கள், அதற்குள் ’பேஷ் பேஷ்’ எல்லாம் வேண்டாம். இந்த ஓவியத்தின் நுட்பங்களை முதலில் பார்ப்போம்.

அதற்கும் முன்னர், நண்பர் ஓவியர் திரு பிரசாத் அவர்களை கட கடவென்று இந்த ஓவியத்தின் நகல் ஒன்றை வரைந்து தரச் சொன்னேன். இதோ அது -

prasad's rendition

ஒவ்வொன்றாக இந்த ஓவியத்தின் உன்னதங்களைப் பார்ப்போம்.

முதலில் - விஷ்ணு தர்மோத்தரத்தின் சித்ர ஸூத்ரம் பகுதியில் இடம்பெற்ற இன்னும் ஒரு வாக்கியத்தைப் பார்ர்ப்போம் ( விஷ்ணு தர்மோத்தரம், *அபிலாஷ்தார்த்த சிந்தாமணி,* சிவதத்வ ரத்நாகரம், சில்ப ரத்நம், நாரத சில்பம், ஸரஸ்வதி சில்பம், ப்ரஜாபதி சில்பம் முதலியவை சித்திரங்கள் பற்றித் தெரிவிக்கும் நூல்களில் குறிப்பிடத் தக்கவையாகும். இந்நூல்கள் ஓவியத்தின் தன்மை, வகைகள், செயல்முறை, வண்ணங்கள், துணைக் கருவிகள், மூலப் பொருட்கள், நற்பண்புகள், குறைகள், நடைமுறை, திறனாய்வு மரபுகள் பற்றிக் கூறுகின்றன. விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ’சித்ர ஸூத்ரம்’ என்று அழைக்கப்படும் பகுதியே பண்டைய ஓவியக் கலை நுட்பம் பற்றித் தெரிவிக்கும் தலைசிறந்த பகுதியாகும். )

// ரேகாம் ப்ரசம்ஸந்தி ஆசார்யா:, வர்ணாத்யாம் இதரே ஜநா://

என்றால் ” வல்லுனர்கள் ஓர் ஓவியத்தைக் கோடுகளை கொண்டே மதிப்பிடுவர்”

நாம் எல்லோருமே ஒருமுறையாவது வர்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்ட முயற்சி செய்திருப்போம் ( சிறு வயதிலாவது !!). சிலர் முறையாகப் பயின்றும் இருப்பார். அப்படி நாம் தீட்டும்போது வர்ணத்தில் தோய்த்த தூரிகையை அப்படியே கையை எடுக்காமல் ஒரே மூச்சில் கோடுகளை வரைவது எவ்வளவு சிரமம் என்று அறிவோம். ஆனால் அதுதான் கைதேர்ந்த ஓவியனின் திறமை. இப்போது இந்த அஜந்தா ஓவியத்தின் கண்களையும் புருவத்தையும் பாருங்கள் - ஒரே இழுப்பில் வரையப்பட்ட அழகு - ஒரே இழுப்பு தான் - புருவம் வந்து விட்டது; அடுத்த இழுப்பு கண்களில் தோற்றம்.

eyes and the eye brows

அவை வெறும் நேர் கோடுகளும் அல்ல; அந்த வளைவுகளுக்குள் ஒரு நயம் உள்ளது. அந்தச் சிறு நெளிவில் கடைக்கண்ணின் தோற்றத்தின் உயிர்ப்பு மிக்க வெளிப்பாடு. அப்பப்பா ! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்னொரு வாக்கியம் -

// அபி லகு லிகிதேயம் த்ருச்யதே பூர்ணமூர்த்தி: //

அப்படியென்றால் “முழு உருவத்தையும் வெகு சில கோடுகளைக் கொண்டு உணர்த்த வேண்டும் “

சரி, சம கால ஓவிய முறைகள் அஜந்தாவில் உள்ளனவா? பொதுவாக முப்பரிமாண உருவங்களை இரண்டு பரிமாணத்தில் காட்டுவதே ஓவியம். ஆனால் பார்ப்போருக்கு அது முப்பரிமாணத்தை உணர்த்த வேண்டும்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஓவியத்தில் உள்ள இரு காதணிகளையும் பாருங்கள்.

the ear rings

இடப்புறக் காதணி - வெறும் இரு நேர் கோடுகள் மட்டுமே கொண்டு தீட்டப்பட்டுள்ளது. அடியில் சற்றே வளைந்த கோடு. ஆனால் இதை வலது தோட்டுடன் ஒப்பிட்டுக் காணும் பொது. இது வட்டமான காதணி தான். எனினும் அங்கேயும் அது வட்டமாக இல்லை – Oval shapeல் இருந்தாலும் அந்த வடிவமைப்பு நமக்கு இரு காதணிகளின் வட்டமான தோற்றத்தை இடைவெளியுடன் முப்பரிமாணத்தில் உணர்த்தும் வகையில் உள்ளது - நமது பார்வையுடன் விளையாடுவதே இதன் நோக்கம்.

முதன்முதலில் சொன்ன வாக்கியத்தில் வற்புறுத்தப்படும் அசைவு -இதுவும் ஓர் ஓவிய முறை - பொருட்களின் அசைவை உயிரோட்டத்துடன் சித்திரிப்பதே ஓவியத்துக்கான இலக்கணம்.

இந்த ஓவியத்தில் உள்ள நிகழ்வு - இறங்கும் தேவதை திடீரென நின்று அருகில் இருப்பவரைப் பார்க்கிறாள். அவள் முகம் சற்றே இடது புறம் திரும்ப ஆரம்பிக்கிறது - கண்கள் இவற்றை முந்திக் கொண்டு விட்டன - கடைசியில் அவள் அணிந்திருக்கும் அணிகலன்கள் - திடீரென நின்று பாருங்கள் - அந்த திடீர் அசைவுக்கு ஈடு கொடுக்க அவை குலுங்கும் வண்ணம் வடித்த ஓவியனின் திறன்…

sway of jewellery
the sway of the jewellery

இது போல இன்னும் பல திறமைகளை இங்கு வெளிக்காட்டுகிறான் ஓவியன். அண்மையில் இருக்கும் பொருட்களைப் பெரிதாகவும் , தொலைவில் இருக்கும் பொருட்களைச் சிறியதாகவும் பார்க்கும் நமது மூளையை - இரு பரிமாணத்தில் இருக்கும் ஓவியத்தை முப்பரிமாணம் என்று நினைக்க வைக்க - அவன் அதை ஓவிய முறையில் கையாளும் உத்தி : கழுத்தில் உள்ள ஹாரத்தின் மணிகளைப் பாருங்கள் - நடுவில் உள்ள மணிகளைப் பெரிதாகவும், தோள்களின் மேல் செல்லும் பொது அவையே சிறிதாகவும் தெரியும்படி தீட்டி - நம்மை மயக்குகிறான் ஓவியன்.

இவனன்றோ சிறந்த ஓவியன் !

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை சனிக்கிழமை, ஜனவரி 23rd, 2010 அன்று 12:05 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 18 மறுமொழிகள்

Sivaram Kannan
  1  

Spellbinding Article Vj. A huge bow to bringing this to us.

ஜனவரி 23rd, 2010 at 14:08
thivaaji
  2  

it is a pleasure to visit your blog! lovely! thanks!

ஜனவரி 23rd, 2010 at 16:28
Shivan
  3  

I may be having a difference of opinion with some of the artistic details, yet the whole essay is good and with rare information. Your sincerity and enthusiasm in this field is really laudable.

ஜனவரி 23rd, 2010 at 17:42
  4  

hi sirs, all praise to the unknown painter and sivaramakrishanan sir.

rgds
vj

ஜனவரி 23rd, 2010 at 20:20
  5  

Shivan sir, Please do voice your opinion, afterall these are interpretations and the more we explore we learn more

vj

ஜனவரி 24th, 2010 at 18:31
Padhma
  6  

I just started reading ur blog a couple of weeks back - it is so informative and interesting! Especially, this post - an amazing short course of art appreciation! Look forward to learning more about the painting and sculpture heritage of India!

PR

ஜனவரி 25th, 2010 at 2:11
  7  

dear padma

Welcome. Please take time to read the archives / prev posts. am sure you will find them interesting. will try n live up to the high expectations in the coming posts as well

rgds
vj

ஜனவரி 25th, 2010 at 5:45
  8  

அபாரம் ஸ்வாமிநாதன் சார் எங்கோ இருக்கவேண்டியவர். நமது அதிர்ஷ்டம் சென்னையில் நமக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார் :)
நன்றி, விஜய், இந்த இழைக்கு.

ஜனவரி 25th, 2010 at 20:38
  9  

Oh wow…some of us don’t even give a second look at these and you have written a whole piece!! Even the guides at Ajanta are in such a hurry to finish the loop that they barely touch the surface in terms of explaining these murals.

பெப்ரவரி 3rd, 2010 at 12:40
Deepa
  10  

Awesome! I have been viewing your blog for a while through PS group. Thanks so much for helping open art-blind eyes like mine :)
Impressive to think they imagined and executed such art so long ago.. these are so much more impressive than the Da Vinci/Rafael…

பெப்ரவரி 3rd, 2010 at 23:52
  11  

Im coming to your blog after such a long time and what a treat…its amazing to see such works and your post just brings out the masterpiece out there..loved the first quote

பெப்ரவரி 4th, 2010 at 20:18
anandhinatarajan
  12  

hi,thanks viaji. once i enjy the painting with touist guide. but this time i enjoy more with artist guide.facial expressios and costumes are awesome in ajanta
anandhinatarajan

பெப்ரவரி 5th, 2010 at 13:12
  13  

ஓவியத்தை ரசித்ததோடு அல்லாமல், எப்படி ரசிக்கவேண்டும் எனவும் காட்டுகிறீர்கள், நல்ல உழைப்பு, அருமையான இடுகை, நன்றி விஜய். மேன்மேலும் சிறப்பான இடுகைகளை இட வாழ்த்துகள்.

பெப்ரவரி 11th, 2010 at 13:38
Sathish
  14  

Great work vijay na… Thanks for sharing the details of the great master piece…

மார்ச் 5th, 2010 at 9:22
  15  

thanks sathish. looking forward to seeing your sketches on temple art.

cheers
vj

மார்ச் 5th, 2010 at 11:55
  16  

dear satheesh,

Tks, looking forward to receiving your sketches on temple art soon.

cheers
vj

மார்ச் 5th, 2010 at 11:57
Alice Zoellin
  17  

This black Apsara of cave 17 was copied in oil by an artist SARVAIYA probably in the 60ies. I would like to know more about him.

நவம்பர் 29th, 2011 at 3:37
  18  

Dear Alice,

Will check and revert. Tks for the information

rgds
vj

நவம்பர் 29th, 2011 at 15:30

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி