Quantcast

சிறப்பு விருந்தினர் அரவிந்த் படைக்கும் சிறப்பு விருந்து. பலரும் செல்லும் காஞ்சியில் ஒளிந்து இருக்கும் பொக்கிஷம். நண்பர் அரவிந்த் சிலை சிற்பங்கள் மேல் தீராக் காதல் கொண்டவர். சிற்பம் பற்றி பல நல்ல புத்தங்களை சேகரித்து, அவற்றை பல முறை ஆழ்ந்து படித்து, அதன் பின்னர் அங்கு சென்று மீண்டும் மீண்டும் ரசித்து ஆராய்பவர். மேலே படியுங்கள் - இனி ஓவர் டு அரவிந்த்

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பது நான் பல நாட்களாக செய்யவேண்டும் என்று குறித்து வைத்த ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின்போது பலமுறை சென்றிருந்தாலும், சமீப காலத்தில் இந்த புதையல்களின் குவியலை சென்று பார்க்கவில்லையே என்ற ஒரு குறை வெகு நாட்களாக இருந்தது.

ஒரு நண்பருடன் பேசும்போது, ஆர்வம் மீண்டும் எழுந்தது. கடைசியில், சென்ற வாரம், இப்போதே போக வேண்டும் என்று முடிவெடுத்து - அதுவும் அது ஒரு முழு வாரக் கடைசி - இரண்டு நாட்கள் ஒதுக்கி வைத்து - முடிந்தவரையிலும் அனைத்து இடங்களை இம்முறை பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புறப்பட்டேன். நண்பர் கோபிநாத ஸ்ரீநிவாஸ் அவரும் உடனே வருகிறேன் என்று சேர்ந்துக்கொண்டார்.

ஒவ்வொரு ஆலயமாக செல்லச் செல்ல, சிற்பங்களின் போதை ஏறியது, வெய்யில் அதிகம் - என்றாலும் முதல் நாள் கைலாசநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சி அம்மன் , உலகளந்த பெருமாள் என்று சனிக்கிழமை வந்தது தெரியாமல் ஓடியே போய் விட்டது.

அடுத்த நாள் விடியற் காலையிலேயே புறப்பட்டு விட்டோம். மதியம் நடைசாத்தும் முன்னர் முடிந்த வரையிலும் முடிக்க வேண்டும் . ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்தை முடித்துவிட்டு வைகுண்ட பெருமாள் கோயில் விரைந்தோம். ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளியேஇருந்து பார்த்த பிரம்மாண்டத்திற்கு உள்ளே சிற்பங்கள் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை. ஆனால் வைகுண்ட பெருமாளோ …அப்பாடா - நகர முடியவில்லை - ஒவ்வொரு துணுக்கும் ஏராளமான சிலை, அவை சொல்லும் கதை. ஒரு இடத்தில ஹோங் சென், மல்லை கடற்கரை கோயில், பல்லவ மன்னர்கள் அரியணை ஏறும் வைபவம் என்று எங்கே பார்த்தாலும் சிற்பக் குவியல். அப்போது கோவில் பூசாரி பக்கத்தில் இன்னும் ஒரு நல்ல கோயில் இருக்கிறது - போய்ப் பாருங்கள் என்றார்.

வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரம் தான் . ஆனால் அதை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை.

strange+surroundings

பூசாரி - இரண்டாவது வலது ரோட்டில் திரும்ப சொன்னார் - திரும்பியவுடன் கோபுரம் தெரிந்தது. ஆஹா என்று, சென்று பார்த்தால் - உள்ளே செல்லும் வழி தெரியவில்லை. எல்லா பக்கமும் நவீன வீடுகள். திரும்ப ஒருமுறை வந்த வழியே வந்து பார்த்தோம். ஆ , இதோ ஒரு சிறு பாதை. முப்பது அடி உள்ளே - அருமையான கோயில். பல்லவர் கட்டிய சிறு ஆலயம் தான் - மொத்தமே நாலாயிரம் சதுர அடி தான் இருக்கும். எதிரே ஒரு சிறு நந்தி, பக்கத்தில் ஒரு அரச மரம் ( அதுக்கு நல்ல கூட்டம் போல தெரிகிறது )

mathangeshwara kanchi
nandhi+sacred+tree
nandhi

தரையில் இருந்து பத்து படி ஏறினால் மண்டபம்

mathangeshwara

உள்ளே - லிங்கம் - அதன் பின்னர் அற்புத சோமஸ்கந்தர் வடிவம். இது எந்த பாணியில் உள்ளது? பார்த்து சொல்லுங்கள்

somaskanda+mathangeswara
the+main+shrine

இந்த ஆலயத்தின் உள்பக்க சுவரிலும், வெளி பிரகாரத்திலும் இன்னும் மிக அற்புத சிற்பங்கள் உள்ளன. இவற்றின் அழகை முழுவதுமாக ரசிக்க மீண்டும் ஒரு முறை வர வேண்டும்.

அற்புத சிற்பங்களையும் இந்த ஆலயத்தின் வரலாற்றையும் பற்றி - தொடரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், பெப்ரவரி 11th, 2010 அன்று 17:29 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 10 மறுமொழிகள்

  1  

அர்விந்த்,

கலக்கிட்டீங்க, நெறைய பேருக்கு தெரியாத இடம், சூப்பர்.

இப்படியெல்லாம் சஸ்பென்ஸ் வைக்காதீங்க, சீக்கிரம் மத்த டீட்டெயில்ஸ் குடுங்க…

பெப்ரவரி 11th, 2010 at 20:45
  2  

அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன்.

பெப்ரவரி 11th, 2010 at 21:05
Prasad
  3  

I had been to this temple during my visit to chennai in December. Its fully hidden from the street view by apartment buildings all around it.

Interestingly only one half of the temple has carvings.. the other half is barren and according to the priest it was abandoned due to a war! :)

Vj : Let me know if you need more pictures of this shrine.

பெப்ரவரி 12th, 2010 at 1:34
  4  

ரீச் heritage trip செல்கையில் இதைப் பார்த்துள்ளோம். ASI யின் பராமரிப்பில் உள்ளது

பெப்ரவரி 12th, 2010 at 2:14
  5  

Many temples to see in Kanchi..i just spent a day there

பெப்ரவரி 12th, 2010 at 9:19
  6  

This reminds of the temple at Nallur near Kumbakonam where there is a beautiful panel behind the main lingam depicting shiva’s marriage to Parvati. i even took a pic, but promised the priest that i would not post it on the net… shall send it to u if u like…

பெப்ரவரி 12th, 2010 at 9:43
anandhi natarajan
  7  

Hi, It is beautiful.Nallur somaskanthar is “sudhai” not stone.You can view my blog “Panchvarneswar temple. I add theaivatharisanam by sun tv vedio also.
anandhi

பெப்ரவரி 12th, 2010 at 13:13
  8  

If you see a old book by Alexander Rea of ASI (Britisher’s Time)..This temple had so much of open space. Really we are loosing many heritage site to Blind “Development”

பெப்ரவரி 12th, 2010 at 16:22
Kathie B.
  9  

Matang. is lovely, but I think Muktesh. is even lovelier as far as its sculpture goes. It’s the one where the murthis look down at you.

பெப்ரவரி 21st, 2010 at 5:18
Kathie B.
  10  

Matang. is lovely, but I think Muktesh. is even lovelier. That’s the one where the murthis look down at you.

பெப்ரவரி 21st, 2010 at 5:19

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி