Quantcast

அழியா திறன் அழகுக்கு உண்டா? காலம் மாட மாளிகைகளையும், உலக அழகிகளையும் விட்டு வைப்பதில்லை. எனினும் ஒரு சிலர் மட்டும் காலத்தையும் வென்று அழியாப் புகழ் பெறுகின்றனர். சிற்பம், ஓவியம் ஆகியவற்றிலும் இது போல சில உண்டு. இப்படி அழியாப் புகழ் பெறக்கூடிய ஓவியத்தை படைக்கும் திறன் படைத்த ஓவியர் ஒருவர் தனது முழு கவனத்தையும் தமிழக கோயில் சிற்பங்களை வரைவதில் செலுத்தினால் - அதுவும் அவர் ஓவியர் சில்பி போன்ற திறமை படைத்தவர் என்றால் - அது நமக்கு ஒரு வரப் பிரசாதம்

ஓவியர் சில்பி அவர்களின் படைப்புகளில் ஒரு உயிரோட்டம் இருக்கும். அவர் ஓவியம் வரைய தேர்ந்தெடுக்கும் கோணங்கள் மிகவும் கடினமான கோணங்களாக இருக்கும். ஆனால் அவர் அவற்றை பார்த்து அசராமல் ஒவ்வொரு சிறு அம்சத்தையும் கூட விடாமல் வரையும் அபார திறன் படைத்தவர். அவரது இந்த திறமைக்கு இன்று ஒரு அத்தாட்சி. ஒரு அற்புத கோட்டோவியம் - வரலாற்றில் மிகவும் முக்கியமான பல இரகசியங்களை இன்றும் தன்னுள் வைத்திருக்கும் கோயில் திருவலஞ்சுழி. நண்பர் / வழிகாட்டி என்று பல கோணங்களில் என்னை தூக்கி நிறுத்தும் தூண் - திரு சுந்தர் பரத்வாஜ் அவர்கள் ஒரு நிறை குடம் - ஆலயங்கள் பராமரிப்பு, சரித்திர ஆய்வு என்று பல காரியங்களை ஓசை இல்லாமல் செய்து கொண்டிருக்கும் பெரியவர், இந்தப் பதிவு அவருக்கு சமர்ப்பணம். இது அவருக்கு மிகவும் பிடித்த கோயில்.

இதோ சில்பி அவர்களின் ஓவியம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் தீட்டியது. அப்போது கோயில் மிகவும் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. சிற்பங்கள் அனைத்தும் வெட்ட வெளியில் இருப்பதை இந்த ஓவியத்தின் மூலம் நாம் காணலாம்.

Slide1

இங்கிருந்த சிற்பங்களில் பல தற்போது தஞ்சையில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன. ( விநாயகர் தவிர - அவர் மட்டும் எப்படியோ தப்பித்து அங்கேயே தங்கிவிட்டார் )

ஆலயம் தற்போது செப்பனிடப்பட்டு தனது சிற்பங்களை பெற தயாராக உள்ளது. திரு சுந்தர் பரத்வாஜ் கொடுத்துதவிய புகைப்படங்களோடு நம்மிடம் உள்ள புகைப்படங்களையும் கொண்டு, ஓவியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அடையாளம் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம். வாசகர்கள் உதவினால் இதை ஒரு வேண்டுகோளாக அதிகாரிகளிடம் எடுத்துச்சென்று இந்த கலைப் பொக்கிஷங்களை அவற்றிற்கு உரிய இடங்களில் சேர்க்க நாம் முயற்சி செய்யலாம். முக்கியமாக இந்தப் பதிவு அமரர் ஓவியர் சில்பி அவர்களின் கலைக்கு சமர்ப்பணம்.

Slide2
Slide3
Slide4
Slide5
Slide6
Slide7
Slide8
Slide9
Slide1

இந்தப் பதிவில் என்னைப் போலவே நீங்களும் சிற்பங்களை ஒப்பிட்டு நோக்கும் முயற்சியில் இன்பம் அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு வளைவு, உடைந்த பாகம் என்று தேடும் போது அந்த அற்புத ஓவியரின் திறன் பிரமிக்க வைக்கிறது. இந்த சிற்பங்களை விவரிக்க இன்னும் ஒரு பதிவு தேவை, எனினும் உங்களுக்கு ஒரு போட்டி - சிற்பங்கள் எவை எவை என்று அடையாளம் கண்டு சொல்லுங்கள் பார்ப்போம். இந்த வரிசையில்.

இதுவரை நாம் கண்டுபிடித்த சிற்பங்கள்

puzzle

ஏன், ஓவியத்தில் இருக்கும் அணைத்து சிற்பங்களையுமே அடையாளம் கண்டு பிடிக்க முயற்சி செய்யலாமே.

puzzle+unfound+sculptures

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, பெப்ரவரி 17th, 2010 அன்று 16:09 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 9 மறுமொழிகள்

Kathie B.
  1  

What a lot of Masterpieces!
Will really be happy to learn names for some
of these murthis I’ve gotten wrong :
1. Bhairavar
2. Shiva w ‘big hair’ name? can’t remember
3. Parvati/Shiva
4. Agastya
5. Ardhanareshwar
6. Bhikshatanar w winnowing fan?
7. Brahma?
Un-numbered:
another Bhikshatana?
Dvarapalaka
Dakshinamurthi
Dvarapalaka
Ganesha
Silpi sketch left out a beautiful Korravai in museum. Looks like Tiruvalanjuli. Will send if you want.

பெப்ரவரி 17th, 2010 at 16:52
Dhivakar
  2  

சில்பியின் முத்துக்கள் இவை!

IN THE SAME LENGTH SPS CONTRIBUTION TO HISTORY AND INDIAN TRADITION IS ENORMOUS. Nice to see mentioning his contribution here in this post. I wish more and more to follow

Dhivakar

பெப்ரவரி 17th, 2010 at 17:33
  3  

such a waste post.
pics are not clear.
u wasted ur time and others.

see my blogs at http://www.pasug.blogspot.com
and tell - esp. the Thiru Kurung Kudi kovil pics.

பெப்ரவரி 17th, 2010 at 17:37
  4  

also see my flickr page
http://www.flickr.com/photos/pasug

ppl dont hv time to click and see big pics.
put 1 big pic. and say lot in text

பெப்ரவரி 17th, 2010 at 17:39
  5  

அநேகமாய் அடையாளம் கண்டு பிடிச்சுட்டார், நான் கொஞ்சம் லேட், :( பரவாயில்லை, அருமையான, பதிவு வழக்கம்போல், இது என்ன பானகத் துரும்பு போல இந்தப் பசுபதினு ஒருத்தர் சொல்றார்??? :((((((((

பெப்ரவரி 17th, 2010 at 18:13
  6  

dear pasupati

first of all welcome to the site and thanks for your comments. You can never satisfy everyone i guess.

However, i did try to navigate inside your blogsite to search for the mentioned post - i am not tech savy, but was not able to cite the tirukurungudi post even after trying for 5 min. Maybe you can give us the correct url or have better tags , links to help easy navigation.

On your flickr album, didnt have chance to go through in detail - but found the narratives pretty one sided and against a particular religion not considering the relative timeframes. Though i have not studied buddhist sculpture in detail, if you want to have a healthy discussion, please feel to mail me. You are free to air your views but would request that we must be mature and responsible in what we put up on the net.

rgds
vj

பெப்ரவரி 17th, 2010 at 18:34
  7  

hi kathie,

1 is techically not bairavar….atleast not the classical one - clue main diff is the vehicle

vj

பெப்ரவரி 17th, 2010 at 18:39
Satish Kumar A
  8  

Wonderful post Vijay. Beautiful sketch my the master artist..good tribute to him. And due respect to SPS…

Is the no.1 Sculpture - Adhikara Nandhi?

பெப்ரவரி 24th, 2010 at 11:21
umesh k derebail
  9  

Statue no 10 looks like Veerabhadra, who is supposed to be son of Lord Shiva

ஜூலை 22nd, 2011 at 10:07

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி