Quantcast

மனிதக் கலாசாரத்தின் பிறப்பிடம், வானத்தில் காற்றில் பறக்கும் ஒரு பட்டம் போல - பலர் இந்த பட்டதை பிடிக்க பெரும் முயற்சி செய்கின்றனர்.

சரியான ஆதாரங்கள் இல்லாதபோது, தாங்கள் எழுதியதற்கு துணையாக, தாம் சொல்லியவற்றை சரியென அவற்றை எடுத்து நிறுத்த, கடல் கொண்டமை , எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தங்கள் துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர். ஒரு சமூகத்தின் முகவரி கூட இல்லாமல் செய்யும் இயற்கை கூற்றுகள் எப்படியோ அவனது நினைவுகளை மட்டும் விட்டு விடுகின்றன. எது நிஜம் என்பதை மனிதனின் தொழில் நுட்ப வளர்ச்சிகள் - தெளிவாக கால அட்டவணை நிர்ணயம் செய்யும் யுத்திகள், ஆழ் கடலில் சென்று ஆய்வு செய்யும் இயந்திரங்கள், அரசாங்க உதவி - போன்றவை வெளி கொணரும். அப்படி ஏதாவது எனது இன்றைய பதிவை தவறு என்று காட்டினால் நானும் மகிழ்ச்சி அடைவேன்.

இது ஒரு வியாதி. தங்களது காலாச்சாரமே மிகவும் தொன்மையானது என்பதை ஒரு வெறித்தனமாக கூறுவது. அதற்காக இவர்கள் எதையும் செய்வார்கள். இது ஒரு நாட்டிருக்கோ , சமூகத்துக்கோ அல்ல - பொதுவாக பாரெங்கும் இது பரவி உள்ளது. தாங்கள் தான் மூத்தவர், மற்றவர் அனைவரும் தங்களுக்கு கீழ் நிலை என்று காட்டுவதில் இவர்களுக்கு ஒரு போதை. எனினும் சில பல சமயங்களில் உண்மை நம் கண் முன்னே இருக்கும்போது, நாம் அதை ஏற்கும் மனப்பக்குவம் கொள்ள வேண்டும். அப்படி பட்ட பதிவு தான் இது.

இப்படி அனைத்திற்கும் சாட்சியங்கள் தேடுவதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அதையும் சொல்ல வேண்டியது தான். இன்றைக்கு நமக்கு இருக்கும் அறிவுத் திறன், தொழில் நுட்பம் - இவையால் விளக்க முடியாத சில புதிர்களும் உண்டு. அப்படி ஒரு புதிரே நாம் இன்று பார்க்கும் கல் வட்டங்கள்.

கல் வட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், மலையடிப்பட்டி நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தோம். அப்போது, ஒரு பெயர் பலகை. மிகவும் பழக்கமான வண்ணம் - பலகை. பலகை மிகவும் சிதைந்து இருந்தாலும் பலமுறை பார்த்த ஒன்று என்பதால் உடனே வாகனதை நிறுத்தினோம்.

stonecircles1

ஆம், தொல்லியல் துறை அறிவிப்பு / எச்சரிக்கை பலகை. ஆனால் அருகில், கோயிலோ , இடிபாடுகளோ எதுவும் கண்ணுக்கு தென்படவில்லையே என்று சற்று குழம்பி நிற்கும் பொது.

stonecircles2

அதோ பின்னால் இருக்கிறதே, ஒரு அழகிய கல் வட்டம். சுமார் 1000 இருந்து 300 BCE ஆண்டு என்று சரித்திர கூறுகள் காலம் கணிக்கும், இவை நமது முன்னோர் இறந்தவரின் ஈம பொருள்களை தாழிகளில் புதைத்து , அதனை சுற்றி அடையாளமாக இந்த கற்களை வைத்தனர் எனக் கூறப்படுகிறது.

stonecricles3

இதில் என்ன அதிசயம் என்றால், இந்த வகை கற்கள் அருகாமையில் எங்கும் இல்லை. இந்த வட்டங்கள் இருக்கும் இடத்தை விட்டு பத்து அல்லது இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்து வரப்பட்டவை. ஏதோ ஒரு மூதாதையர் வழிபாடு முறையை ஒட்டி உள்ளது.

இந்த அழகு - அந்த வட்டம் இன்றும் நம் முன்னே இருப்பது தான்.

stonecircles5

அதை ரசிக்கும் அதே தருணத்தில், ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், இவை வெறும் கற்கள் தான். எந்த பெரிய வேலை பாடும் அவற்றில் இல்லை. உள்ளே கிடைத்த தாழிகளில் பொருட்கள் இருந்தன - உண்மை தான். ஓட்டில் சில எழுத்துக்கள் இருந்தன என்று இன்று கூட நாளேட்டில் செய்தி வந்தது , எனினும்…..

மீண்டும், நான் முதலில் சொன்னததப் போல, கண்டிப்பாக தென்னகத்தில் இரு முறையாவது பெரிய கடல் கொண்ட சரித்திரம் உள்ளது. பெரும் பகுதி அழிந்து, அதனால் முதல் இரு சங்கங்களும் களைந்து, பாண்டிய மன்னன் மதுரையை இன்றைய தென்னிந்திய நிலப் பரப்பின் நடுவில் நிறுவினான் என்றும் வழக்கில் உள்ளது. அப்படி இருப்பினும், எஞ்சி இருப்போர் திரும்பவும் இப்படி கற்கால / உலோக கால மனிதனை போல பின் தள்ளப்படுவரோ? இது ஒரு இடம் என்று அல்ல, தமிழகம் முழுவதும் இது போல உள்ளன. தொல்லியல் துறை சுட்டியில் சென்று பாருங்கள் !!!

ASI - Megalithic

இந்த புதிர் இன்னும் பெரியது. இது போன்ற கல் வட்டங்கள் உலகத்தில் பல இடங்களில் உள்ளன !! கூகுளாரைக் கேட்டு பாருங்கள்.

எனினும், நான் சொல்ல வந்தது என்ன வென்றால் ( சில நண்பர்கள் இதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை ) எனினும் நமது முன்னோர்கள் இந்த கற்களை புதுக்கோட்டையில் உருட்டி வட்டமிடும்போது எகிப்து பிரமிடுகள் புவியில் ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகள் நின்றுவிட்டன.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

காண்பிக்க பதிவுகள் ஏதும் இல்லை.

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, மார்ச் 5th, 2010 அன்று 15:22 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 5 மறுமொழிகள்

  1  

நண்பரே!
தாங்கள் சொல்வது சரிதான், நம்மிடம் பிரமிடுகளைப் போல பெரிய அளவில் எந்தச் சின்னங்களும் அந்தக் கால கட்டத்தில் இல்லை. ஆனால் மல்லையில் கிடைத்த முருகன் ஆலயம், சிந்துச் சமவெளி நாகரீகம் போன்ற பல்வேறு தடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை விழாவின் போது சந்தித்த கலிங்கா பாலு அவர்கள் கடல் கொண்ட பல்வேறு சின்னங்களைப் பற்றி கூறினார், பொறுத்திருந்து பார்ப்போம் முழுத் தகவல்களையும். ஒருவேளை நம்மவர்கள் கற்களை உபயோகப்படுத்துவதற்கு முன் வெறும் செங்கற்களை மட்டும் பயன்படுத்தினார்களே என்னவோ!
ஒரு உதாரணத்திற்கு நம் முன்னோர் பாண்டியர்களும், சோழர்களும் கட்டிய அரண்மனை மாளிகைகளின் சுவடுகள் கூட இல்லாமல் அழிந்து விட்டனவே! அது போல் மற்றவைகளும் அழிந்திருக்குமோ!!!

எனக்கு ஒரு சந்தேகம், எகிப்து பிரமிடுகள் கட்டப்பட்ட ஆண்டுகள் 2500 BC முதல் 2150 BC என்று சொல்கிறார்கள் ஆனால் இரும்பு உபயோகப் படுத்தப் பட்ட காலமே 1800 BC முதற்கொண்டுதான் என்றும் சொல்கிறார்கள், அப்படி இருக்கையில் எவ்வாறு அந்த கடின கற்களை எகிப்தியர்களால் செதுக்கி இருக்கமுடியும்? வெங்கலத்தைக் கொண்டு செதுக்கி இருக்கக் கூடும் என்று தாங்கள் சொன்னால், இந்த நாள் வரை அதிகம் சிதையாமல் இருக்கும் அந்தக் கற்களை எவ்வாறு அவர்கள் செதுக்கி இருக்க முடியும்? கற்களால் ஆன உபகரணங்களைக் கொண்டும் செதுக்குவது என்பது இயலாது!!! ஒரே குழப்பமாக இருக்கிறது.
எகிப்து - கெய்ரோ அருங்காட்சியத்தில் உள்ள ஏராளமான சிலைகளை 3000 BC, 4000 BC என்று காலத்தை எழுதி வைத்துள்ளார்கள், அதெல்லாம் நம்பக் கூடியதாக இல்லை. புகைப்படம் எடுத்து வந்தால் விஷயம் தெரிந்தவர்களிடம் காட்டி கேட்கலாம் என்றால் அதற்கும் அனுமதி இல்லை.
5000ம் 6000ம் வருடங்களுக்கு முன் இவையெல்லாம் சாத்தியமா?!

மார்ச் 5th, 2010 at 16:00
  2  

யோசிக்கவேண்டிய விஷயம், சதீஷ் எழுப்பி இருக்கும் சந்தேகங்களும் சிந்திக்கத் தூண்டுகின்றன. எப்படி இருந்தாலும் வழக்கம்போல் அருமையான பதிவுக்கு நன்றி.

மார்ச் 5th, 2010 at 16:09
PN Subramanian
  3  

Very interesting. Tribal cultures have co-existed with advanced civilizations. Very recently we found one near Bhopal. See the link:
http://mallar.wordpress.com/2009/07/13/भोपाल-के-इर्दगिर्द-आदि-मा/

மார்ச் 9th, 2010 at 13:41
  4  

very very interesting..i read there are many dolmens around..even in and around Anegundi ..will send you an article sent to me by one of the Prof I have quoted in my story

அக்டோபர் 18th, 2010 at 10:19
  5  

very interesting PNS sir.

True Lakshmi - there is so much to learn, but fast getting run down by the pace of development !!

rgds
vj

அக்டோபர் 18th, 2010 at 16:07

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி