Quantcast

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் - பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்ற பொது அங்கு இருக்கும் சிற்பங்களை கண்டு நான் அசந்து போனேன்! கண்முன்னே இருப்பது என்ன என்று திணறி நின்றேன். சிற்பக் கலையில் ஆர்வம் பெருக, எனது தேடல் பேரூர் சிற்பங்களின் மேல் இருந்த மதிப்பை பன்மடங்கு பெருக்கியது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவற்றை படம் பிடிக்க செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. அவற்றை படம் எடுக்க அனுமதி இல்லை. நாளேட்டில் வந்த சிறு சிறு படங்களையே பதிவு செய்ய முடிந்தது. எனினும், ஒவ்வொரு தோல்வியும், மீண்டும் அடுத்த முறை அங்கு சென்று அதிகாரிகளிடம் முறையிடும் வேகத்தை கூட்டியது. இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.

2008 ஆம் ஆண்டு, சிங்கையில் அன்னலக்ஷ்மி நிறுவனம் ஒரு விழா எடுத்தது. வேண்ட வெறுப்பாக மனைவி மகனுடன் ஒரு சனிக்கிழமை அங்கு சென்றேன். எங்கே எப்படி வெளியே நழுவலாம் என்று எத்தனிக்கும் போது, ஒரு கோடியில் - தொலைவில் - மிகவும் அழகான விநாயகர் ஓவியங்கள் தென்பட்டன. இது போல

http://www.hindu.com/mp/2007/06/09/images/2007060951460301.jpg

என்னையும் அறியாமல் அருகே சென்றேன். அருமையான ஓவியங்கள், மிக நுண்ணிய வேலைபாடு, படங்களின் அடியில் ஒரு கையெழுத்து - பத்மவாசன். ஆஹா , என் அதிர்ஷ்டம் என்று நினைக்கையில், அருகில் ஒரு சிறு அறிவிப்பு பலகை தென்பட்டது. அதில் ஓவியர் அங்கு இருப்பதாகவும், உடனே நம் முகங்களை வரைந்து தருவார் என்றும் அறிவித்தது. சுற்றி பார்த்தேன், அடுத்த கடையில் ஓவியர் எங்கே என்று கேட்க, அதோ என்று கையை காட்டினார். மிகவும் எளிமையான குர்தா அணிந்து சாந்தமாக சிரித்த முகத்துடன் - திரு. பத்மவாசன் அங்கே நின்று நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருந்தார்.

அருகில் சென்று, என்னை நானே அறிமுகம் செய்துக்கொண்டேன். பொன்னியின் செல்வன், கல்கி, ஓவியர் சிகரம் சில்பி என்று நடை களைகட்டியது. சில்பியின் சிஷ்யன் என்ற முறையில் அவரைப் பற்றிய பல அரிய தகவல்களை கூறினார். நடராஜர் சிலை உருவத்தை வரையும் போது, காகிதம் குறைவாக இருக்க, இன்னொரு காகிதத்தை எடுத்து ஒட்டி தொடர்ந்தார் எனவும். இன்னொரு காகிதத்தில் அதே நடேசனின் பின் வடிவத்தை வரைந்தாராம் சில்பி. இரு காகிதங்களும் இதனால் ஒரே அளவில் இல்லாமல் போயின. பல வருடங்களுக்கு பின், திரு. பத்மவாசன் அவர்கள் ஒரு புத்தகத்திற்காக அவரது கணினியில் ஒரே அளவாக பெரிது படுத்தி, இரு ஓவியங்களையும் ஒன்றின் மேல் மற்றொன்றை வைத்து பார்த்தால் கணக்கட்சிதமாக பொருந்தின என்று அவர் அந்த அற்புத ஓவியரின் சிறப்பை விளக்கினார்.

பிரியும் போது தனது முகவரியையும் தொலைப்பேசி என்னையும் ஒரு சிறு காகிதத்தில் பென்சிலில் எழுதிக் கொடுத்தார். ( இன்றும் வைத்துள்ளேன் !!)

டிசம்பர் 2009. மீண்டும் பேரூர் நோக்கிப் படை எடுத்தோம். எப்படியாவது படம் எடுக்க அனுமதி பெற வேண்டும் என்ற வெறியோடு - தெரிந்த நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டேன். நண்பர்கள் பலர் முயன்றும், ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரும் ஆலயத்தின் அறநிலைத்துறை அதிகாரி மனது வைத்தால் தான் ஒரே வழி என்று சொன்னார்கள். எவ்வளவோ பண்ணிட்டோம், இதையும் பண்ணிவிடுவோம் என்று அவரது அலுவலகம் முன் சென்று நின்றோம். ஒரு ஒரு மணி நேரம் காத்திருந்த பின் உள்ளே அழைத்துச் சென்றார்கள். சிறு வயது அதிகாரி, எதிர்பார்த்ததை விட டிப் டாப்பாக உடை அணிந்து மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். சின்ன அலுவலகம், எனினும் நான்கு கணினிகள் சுற்றிலும், கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. முதலில் மறுத்தார், ஆலய பாம்ப்லெட் கொடுத்தார், அதில் இருக்கும் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். எனினும் நான் ஏற்கவில்லை, எனது மடிக் கணினியை திறந்து, செய்து வரும் பணிகளையும், பட சேகரங்களையும் விளக்கினேன். ஒரு மணி நேரம் போனது, கல்லும் கரையும், என்பது போல அதிகாரியும் எங்கள் பணியின் பொருளை உணர்ந்து அனுமதி தந்தார். கட கட என்று வேளையில் இறங்கினோம். அப்போது மின்சாரம் போனது…எனினும் அடுத்த நாளும் சென்று படம் எடுத்து முடித்தோம். எல்லாவற்றையும் எடுத்து விட்டோம் என்ற மிதப்போடும் வெகு நாள் இலக்கு நிறைவேறிய மன நிறைவுடன் திரும்பினோம்.

அடுத்த வாரம், சென்னையில், திரு. பத்மவாசன் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்தேன். படங்களை எல்லாம் நிதானமாக பார்த்தார். கண்களில் சிறு பிள்ளை கடையில் கமர்கட் பாட்டிலை பார்ப்பது போல, அனைத்தையும் வரைந்து விட வேண்டும் என்று நினைத்தார் போல.பேரூர் படங்களை பார்த்தவுடன் - விடு விடு என எழுந்து உள்ளே சென்றார் - சிறிது நேரத்தில் பல ஓவியங்களை கொண்டு வந்தார். தான் பேரூர் சென்ற போது வரைந்த ஓவியங்கள் என்றும் படம் எடுத்து போடுங்கள் என்றும் சொன்னார். கரும்பு கடிக்க கூலியா. முதலில் கண்ணில் பட்டது மூலவர் - வண்ணம் தீட்டிய ஓவியம்.

perur+patteswarar+moolavar

அசந்து போனேன். இப்படி அந்த தாமர வண்ணம் அதன் பொலிவு - எப்படித்தான் கொண்டு வந்தாரோ?

அடுத்து சில தூண் சிற்பங்களின் ஓவியங்களை படம் பிடிக்கும் பொது, இது ஒரு சிறப்பான சிற்பம் என்றார். இதை நான் பேரூரில் பார்த்த பொழுது ஒன்னும் பெரிதாக இல்லை என்று படம் கூட எடுக்க வில்லையே என்றவுடன், அதன் சிறப்பை விளக்கினர். தலையில் குட்டிக்கொண்டு திரும்ப படம் எடுக்க வேண்டுமே என்று திண்டாடிய பொழுத, நண்பர் பிரவீன் அவர்கள் உதவினார். நேற்று இதற்காகவே பேரூர் சென்று அதிகாரியை பார்த்து, தொலைபேசியில் அழைத்து சிலை இருக்கும் இடம் கேட்டு, படம் எடுத்து அனுப்பினார்.

perurpillar


அப்படி இந்த தூண் சிற்பத்தில் என்ன விசேஷம். ஏதோ முனிவர் தவம் செய்வது போலத் தானே உள்ளது

தொடரும். ….

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, மார்ச் 12th, 2010 அன்று 19:40 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 10 மறுமொழிகள்

சச்சிதானந்தன்
  1  

யாழ்ப்பாணத்து இசைவாணர் முத்துக்குமாரசாமி சர்மாவின் அருமை மகன் பத்மவாசன்.
அந்தப் பெயரே கலைமணக்கும். தந்தையும் தனயனும் என் அன்புக்கு உரியவர்கள்.

மார்ச் 12th, 2010 at 20:34
  2  

விஜய்,
மிகவும் அருமையான துவக்கம், பேரூர் - உண்மையில் சிற்பத்தில் பேரூர்தான்…ஆனால் நான் அந்த ஆலயத்திற்கு சென்ற தினம் ஆடிப்பெருக்கு, அதனால் அங்கு வந்திருந்தது மக்கள் வெள்ளம், ஒரு சிற்பத்தைக் கூட என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. மிகவும் வருத்தத்தில் இருந்த எனக்கு இங்கே விருந்து கிடைக்கும் என எதிர் பார்க்கவில்லை.

மேலும், பத்மவாசன் அவருடைய பேரூர் அனுபவத்தை விவரித்தார் அவரை நானும், நம் ஓவியர் பிரசாத்தும் சந்தித்த பொழுது. அவரையும் அங்கு அமர்ந்து ஓவியம் வரைய விடாமல் அலைக்கழித்த விஷயமும் பின்னர் அவரை ரத்தினக் கம்பளம் விரிக்காத குறையாக வரவேற்று உபசரித்ததும் மிகவும் சுவாரசியம்…

பத்மவாசன் - சில்பியின் கலையழகு போல், இந்த வாழும் கலைச் செல்வத்திற்கு சில்பி வைத்தபெயர்.

மார்ச் 13th, 2010 at 19:12
covai praveen
  3  

நன்றி VJ அவர்களே!
பலருக்கு தெரியாத தகவல்கள்!
தெரியப்படுத்துகறீர்கள் VJ……….
தொடர்ந்து தாருங்கள்…!
~~~~~~~

ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே..
-சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
~~~~~~~~
இத்திருக்கோயில் நடராஜர் திருச்சபை திருப்பணி 34 ஆண்டுகள் நடைபெற்றதாம். இப்போது 340 ஆண்டுகள் உழைத்தாலும் அத்தகைய வேலைப்பாடுகளைச் செய்வதற்கான கலைத் தொழில் நுட்பத்திறன் நம்மிடையே இல்லை. நமது கோயில்கைளப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை, அந்த நடராஜரின் குனித்த புருவமுமம், குமிழ் சிரிப்பும் நம் நெஞ்சை விட்டு என்றும் அகலா.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு தாங்களும் வருகை புரிந்து இரையருள் பெற அன்புடன் அழைக்கிறது.

மார்ச் 13th, 2010 at 20:30
Srinivasan N. (Cheenu)
  4  

Oh yes. Dear Vijay, this particular article opened up after my long lay off from this precious website. And what a site it is indeed!!!!! I won’t talk about these pages in past-tense. Needless to say, while the article itself, in terms of minute observation of details (or shall I call them detailed observation or very sharp collection of even the minutest details of the precious sculptural marvels at Perur) was thoroughly pain-staking and therefore, excellent our compliments themselves will be rendered incomplete in case we ignore the great effort that went behind in capturing those details through the accompanying pictures. All in all, a highly fulfilling experience for the visitor to this site!!!!! All kudos to you and your team, dear Vijay. This is invaluable service being done to the lover of arts (even if morons like me do not understand them very deeply) by you through pages. Please keep up the good work.

Srinivasan (Cheenu)
New Delhi

மார்ச் 16th, 2010 at 22:27
  5  

Maravanpulavu sir, very glad to hear. Padmavasan sir is truly remarkable person

@ satheesh - Yeah yeah, he did mention about it, well it pays to know people at the top !!

@ cheenu - welcome back,long time no see.

cheers
vj

மார்ச் 17th, 2010 at 7:42
Sri Prasath
  6  

” Sharvam Shiva-Shakthimayam ”

” Hari Om” !

மார்ச் 21st, 2010 at 13:33
annapoorna
  7  

HI VJ..
After reading your blog I can feel a special affinity developed in me towards sculpture. This time when i visited rockfort in trichy I was surprised to see a similar sculpture of Arjuna.. Though i was not able to plot the needle point, it was similar.. will mail you the photo..

ஏப்ரல் 5th, 2010 at 10:47
Brenda Beck
  8  

The observation that Arjuna is standing on a needle during his penance (in this very ancient sculptural representation of the Mahabharata Pasupata story) links very nicely with my recorded-published version of the Annanmar Kathai. In this local folk epic (recorded in a village quite close to Coimbatore) the heroine Tamarai goes to the exact place that Arujna did his pennance, and begins a pennance of her own. She is said to sit on a pillar made of seven needles and then to meditate on Lord Shiva for 21 years. Shiva eventually grants her two sons (one of whom is a reincarnation of Arjuna) and these young men later spear a great wild boar, whom Shiva has caused to be born at the same time as they are. This sculptural reference to the great Mahabharata tale of the Pasupata provides a lovely visual link between the two stories!

ஏப்ரல் 7th, 2010 at 23:41
  9  

Dear Ms Brenda Beck

Its an honor to have such an eminent scholar take time to comment.

there is also a small episode in that finds mention in the perur puranam - talks of a curse for a karikarcholan - for killing a brahmin who had taken the guise of a pig to cut himself from his family ties and who haunted him as a ghost since ( brahmahatti dosha). This sculpture could depict that legend as well, since the next pillar is that of the monkey faced king - musukundan

rgds
vj

ஏப்ரல் 9th, 2010 at 9:57

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி