Quantcast

பேரூரின் கலைச் சுரங்கத்தை என்று கண்ணுற்றேனே அன்று முதல் இந்தக் கலையழகை நம் கலாஇரசிகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து இரசித்து சுவைக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் பொங்கிக் கொண்டே இருந்தது. ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல! பத்து வருடங்கள்! ஆனால் இத்தனைக் காலம் பொறுத்ததிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பதிவினை படித்து முடிக்கும் பொழுது அதை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.

இன்று நாம் பார்க்கப் போவது அழகுப் பெட்டகமான ஊர்த்துவதாண்டவ மூர்த்தியின் அற்புத அழகைத்தான். இதோ, சிறைக்குள் இருக்கும் இந்த உயிர்ச் சிலையைப் பாருங்கள்.

how+its+exhibited+now

முதலில், இது ஒரு தூண் சிற்பம்! ஒரே கல்லால் ஆன தூண் சிற்பம். பேரூரின் இந்தக் கனகசபையில் மிகவும் அற்புதமான வேலைப்பாடமைந்த எட்டு தூண்கள் இங்கே வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை கி.பி 1625 முதல் கி.பி. 1659 வருடங்களில் இராஜா சிவத்திரு அழகாதிரி நாயக்கர் அவர்களால் அமைக்கப் பெற்றது.

so+difficult+to+truly+appreciate
the+rear+with+cage
the+steel+cage+cannot+appreiciate

இரும்புக் கூட்டுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாலோ என்னவோ, சிற்பக்கலையின் உச்சமாகத் தோன்றும் இந்தக் கலையின் அழகு பெரும்பாலானோர் கவனத்திற்கு வருவதேயில்லை! இதைப் படித்த பின்னாவது சில நல்ல உள்ளங்கள் இந்தச் சிறைக்கு பதில் நல்ல கண்கவரும் கண்ணாடிக் கூண்டை அமைப்பார்கள் என நம்புவோம்.

even+so+close+cant+appreciate
sadly+cant+appreciate+its+beauty
this+is+speciality+of+this+but+cant+notice

சோழர்களின் காலத்திற்குப் பின்னும், 13 – 14 ஆம் நூற்றாண்டு பாண்டியர்களின் காலத்திற்குப் பிறகும் சிற்பக் கலையின் வளர்ச்சி சற்றே குன்றியது போல்தான் இருந்தது. ஆனால் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கனகச்சபை சிற்பம், சிற்பக் கலை இன்னும் மறைந்து விட வில்லை மாறாக அந்தக் கலையில் தேர்ச்சி அடைந்து அழகில் இமயத்தையும் விஞ்சியதை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

கம்பிகளுக்குள் இல்லாமல், கம்பீரமாக நிற்கும் பிரிட்டிஷ் காப்பகத்தின் பழைய புகைப்படம் இதோ…

the+splendor+that+was

ஓவியர் சிற்பி அவர்கள் ஓவியமும் இதோ ( நன்றி varalaaru.com )

perur

நம்முடைய கலை மீதான கட்டுக்கடங்காத ஆர்வத்தை அறிந்து, புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் இந்த அழகுச் சிலையின் அழகை கண்ணார பருகுவதற்காக கதவையும் திறந்து காட்டிய அந்த ஆலயத்தின் EO அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, இந்தக் கலை விருந்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இதோ, மனதைக் கொள்ளையடிக்கும் அந்த அழகுச் சிலையின் உருவம்.

shiva+urdhva+thandava+with+front+cage+open

இது ஒரு தனித்துவம் வாய்ந்த சிற்பம், கற்சிலையாகப் பார்த்தாலும், சிவனின் நடனமாகப் பார்த்தாலும் சாமனியர்களால் எளிதில் புரிந்துகொள்வது கடினம்தான். சிவனை நாடி அவனை அறிந்தால்தான் இந்த நடனத்தையும் புரிந்துகொண்டு இரசிக்கமுடியுமாம்! ப்ரம்மா, விஷ்ணு, கந்தன், நாரதர், பரதன் (நாட்டிய சாஸ்திரத்தை எழுதியவர்) இவர்களால்தான் நடனத்தை அறிந்து கொண்டு இரசித்து ஆனந்திக்க முடியுமாம்!

சாலுவன் குப்பத்தில் இருக்கும் கல்வெட்டு ஒன்று சிவநடனத்தின் தனிச் சிறப்பை கூறுவதோடு, நாட்டியத்தின், சங்கீதத்தின் கூறுகளை விளக்கி, சிவநடனத்தை கண்டுகளிக்க விளக்குகிறது: யதி ந விததா பரதோ யதி ந ஹரிர் நரதோ ந வ ஸ்கந்தா பொத்தம் க இவ ஸமர்த்தாஸ் ஸங்கிதம் கலகலஸ்ய (Epigraph. Ind. 10, p. 12).
நூல்: NATARAJA – THE LORD OF DANCE - Dr. Sivaramamurti

சிவநடனத்தைக் கண்டுகளிக்கும் இந்தக் கடவுளர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொருவரும் தங்களின் இரசனைக்கு தக்கவாறும், நடனத்தை ஊக்குவிப்பதைப் போலவும், பல்வேறு இசைக் கருவிகளை உபயோகித்து நாயகனின் நாட்டியத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றனர். இதோ அதைப்பற்றி சில வரிகள், நடனத்தை நாயகன் துவக்கிய கணமே விஷ்ணு மர்தளம் என்னும் வாத்தியத்தை இசைத்து தன் தெய்வீக இசைய பரவவிட, துடிப்பாய் எழும் அந்த ஒலி வண்ணமயில்களைத் தோகைவிரித்தாடச் செய்யும் கரு மேகங்களின் இடியாய் எழுகிறது. தாமரைக் கையோன் பிரம்மாவோ வெங்கலத் தாளத்தை நாட்டியத்திற்கும் விஷ்ணுவின் தாளத்திற்கும் ஏற்றார் போல் தட்டி இசைத்து காமனை வென்ற சிவனின் நர்த்தனத்தை இடைவிடாது நடத்துகிறார்.

the+speciality+of+this+unique
vishnu+on+drums

இங்கிருக்கும் பிரம்மாவிற்கு அப்படி என்ன சிறப்பு, தெரிகிறதா?

see+attributes+deer+axe+with+brahma
count+the+heads

ஐந்து சிரங்களைக் கொண்ட பிரம்மா, சிவனுக்குரிய சின்னங்களான மானையும், மழுவையும் கொண்டுள்ளார்!!

இசைக்கலைஞர் எவ்வாறு கணநேரம் தன் பாடலை நிறுத்தி, தாளத்திற்கும், ஸ்ருதிக்கும் ஏற்றவாறு எப்படி திரும்பத்தொடர்கிறாரோ, அதே போல் இங்கு நம் ஆடலழகனும் கணநேரம் தன் நடனத்தை நிறுத்தி தன் மத்தளத்தை இசைத்து இசையை தன் வழிக்கு நேர்த்திசெய்து மீண்டும் தொடர்கிறார்.

shiva+beating+the+drum

காரைக்கால் அம்மையார் இங்கே மற்றுமொரு தனித்துவம்! இது தனிச் சிற்பம் அல்ல அதே தூணில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பமே!

karaikkal+ammai
masterly+karaikkal+ammai
notice+shrivelled+breasts+folds+in+the+throat

என்னவொரு அற்புதமான வடிவமைப்பு! வற்றிய முலைகள், சுருங்கி மடிப்புகளைக் காட்டும் கழுத்து தசைகள், வயதான தோற்றத்தை அற்புதமாக எடுத்துக் காட்டும் இந்தச் சிலை இளம் வயதிலேயே, வயதான பேய் உருவம் கேட்டுப் பெற்ற காரைக்காலம்மையார்! (முந்தைய பதிவுகள் பார்க்கவும்)

முயலகன் மட்டும் தப்பி விடுவாரா என்ன? இதோ தன் கையில் பாம்பை பிடித்தவாறு காணப்படும் கொழு கொழு முயலகன்.

a+very+healthy+muyalagan

சற்றே நீளமான பதிவுதான், என்னசெய்வது இதை பாகங்களாகப் பிரித்து பதிவது தவறென்று தோன்றுவதால் வார்த்தைகளைச் சுருக்கி, வண்ணப் படங்களை பேச வைக்கிறேன்.

அழகான பிரிந்த தாடை, அழகிய வரிகளைக் கொண்ட நாசிகளை உடைய அழகிய இளமைத் ததும்பும் வதனம் கொண்ட சிவன்.

face+of+shiva+doublechin+nostrils

உயர்த்திய கால்கள், எவ்வளவு அழகாக கனக் கச்சிதமாக வடிக்கப் பட்டிருக்கும் மூட்டு, கைகள், கைவிரல், நகம், விரல் மூட்டுகளின் மேல் உள்ள வரிகள், நகச்சதை, என்னவொரு தத்ரூபமான படைப்பு!!

beauty
notice+kneecap
detail+of+hand+fingers+nail

மற்றுமொரு அழகிய வடிவமைப்பு, மேல்பாகமும் அடிப்பாகமும் காட்டும் கால் பாதம், விரல்கள், பாதத்தின் மேல் தெரியும் காலணியின் வார்ப்பட்டை, வளைந்து திரும்பி அழகிய முத்திரையைக் காட்டும் கை, கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல், இதை விடத் துல்லியமாக யாரால் வடிக்க இயலும்!

beauty2
oh+those+toes+feet
the+sandals+feet
toe+ring+sandal
see+the+sandal
see+the+sandal
the+palm+fingers+seems+to+be+holding+something

எண்ணற்ற வடிவங்களைத் தாங்கி இருக்கும், கைகள் வரிசையாய் விரிகின்றன…

the+hands
the+hands2

தனித்துவம் பெற்ற எண்ணற்ற சின்னங்கள் எப்படித்தான் வடித்தனரோ! இவைகள் அனைத்திற்கும் பெயர்களும், முக்கியத்துவமும் கூடத் தெரியவில்லை, தேடிக் கண்டுபிடிப்போம்.

another+special+lady
deer+what
holding+fire+in+palm+notice+nails

சிறப்பிற்கும் மேல் சிறப்பான ஒன்று!

check+what+is+in+his+hand
nandhi+banner

பொதுவாக நாம் சிற்பத்தின் அளவைக்காட்ட ஏதேனும் தெரிந்த பொருளை உபயோகிப்பது வழக்கம், முக்கியமாக அளவில் மிகவும் சிறிய சிற்பங்களின் அளவை எடுத்துக்காட்ட, அதே போல் பெரிய கோவில் துவார பாலகர் சிற்பத்தின் அளவைக் காட்ட சிற்பி உபயோகித்திருக்கும் யானைக் கூட நினைவுக்கு வரலாம் உங்களுக்கு. ஆனால், இங்கு தற்செயலாகவோ, அல்லது சிற்பத்தின் பெருமையைக் கூட்டுவதற்காகவே, இயற்கையாக கிடைத்த இந்த அரிய தடயம், மனதை கொள்ளை கொண்டுவிட்டது! நீங்களேப் பாருங்கள்.

finger+nails+mosquito
idea+on+size

சிற்பியின் திறமையும், சிலையின் தத்ரூபமும் தான் இந்தக் கொசுவை ஏமாற்றி விட்டதோ! பாவம் படைத்தவனின் குருதியையே ருசிப் பார்க்க துளையிட முயற்சி செய்கிறது போலும்!!

இந்தப் பதிவும் இதில் உள்ள சிற்பங்களும் தங்கள் மனதை நிச்சயம் கொள்ளை கொண்டிருக்கும், அவ்வாறு இருந்தால் இந்தக் கொள்ளை அழகை பேரூர் செல்லும் யாவரும் கண்டு மகிழ வேண்டும் என்று நினைத்தால், இந்தப் பதிவை நண்பர்களோடும், நல்ல உள்ளம் கொண்ட அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள், அப்படியாவது சில நல்ல உள்ளங்கள் சேர்ந்து இரும்புச் சிறையில் இருக்கும் இந்த அழகுச் சிலைக்கு கண்ணாடிக் கூண்டு கிடைக்க வழி பிறக்கட்டும்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், மார்ச் 25th, 2010 அன்று 21:14 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 28 மறுமொழிகள்

Prasad
  1  

Brilliant write up! Cant wait for the remaining seven … The british era photo is simply outstanding

மார்ச் 25th, 2010 at 22:04
rhoda alex
  2  

Absolutely amazing…superb post vj! I am so glad that are 7 more! Kudos for all the effort you put in to showcase these beauties to us.

The detail of fingers and finger nails are outstanding…no wonder the mosquito was fooled! The British pic is out of this world! What are the patterns in the soles of Shiva’s feet and his palms? And what he is wearing in his legs - dont they look more like anklets rather than sandals?

மார்ச் 25th, 2010 at 23:54
  3  

I have no words to comment about this wonderfull Siva and your ellaboration and pics.

Just wanted to say thanks. Thanks a lot.
Whenever I go to a temple i’ll spend more time with the silpas than the main deity.

If you have time just visit my site where I have written about silpas.

Thanks
http://www.virutcham.com

மார்ச் 26th, 2010 at 0:22
covai praveen
  4  

நன்றி விஜி சார்

பாரூரும் அரவல்குல் உமைநங்கை
அவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊருரன் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
றம்பலத்தே பெற்றா மன்றே.
- - என்று சுந்தரர் சிதம்பரத்தில் நின்றுகொண்டு பேரூரிலுள்ள நடராஜரின் அழகை மானசீகமாக கண்டு பாடினார். அதைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் “தில்லையில் நின்று கொண்டு பேரூரைப் பற்றி பாடும் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “அந்த அழகைக் காண கோடி கண்களும் போதாது. அந்தப் பரவசத்தை அனுபவித்துதான் உணரமுடியும்” என்றார்.
உடனே பேரூருக்கு வந்த தில்லைவாழ் அந்தணர்கள் நடராஜரின் அழகைப் பார்த்து மயங்கி, சுந்தரர் சொன்னது உண்மைதான் என்றுணர்ந்து “சிதம்பரத்தில் இருப்பது திருச்சிற்றம்பலம் இங்கிருப்பதோ அழகிய திருச்சிற்றம்பலம்” என்று கூறிச் சென்றனர்.
அப்பேர்ப்பட்ட பெருமையுடைய இந்த கனக சபையை திருமலை நாயக்க மன்னாpன் சகோதரன் அளகாத்திரி நாயக்கன் கட்டினான். 1625 முதல் 1659 வரை 34 வருடங்கள் கட்டப்பட்ட கனகசபையில் பிரம்மா, திருமால், அதி உக்ரகாளி, சுந்தரர் ஆகியோருக்காகவும் நந்தியின் தவத்திற்காகவும் சிதம்பரத்தில் போலவே இங்கும் ஆனந்த நடனமாடினார். இறைவன். அதனால்தான் இத்தலம் மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் நடராஜரின் நுழைவு வாயிலில் இரண்டாவது பஞ்சாட்சர படியினை தாண்டும்போது கோமுனி, பட்டிமுனி என்னும் பெயாpல் பிரம்மாவும், திருமாலும் இருப்பதாக ஐதீகம்.

மார்ச் 26th, 2010 at 1:06
  5  

சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய இந்த கனக சபையில் மருதமலையிலிருந்து கற்களை கொண்டு வந்து சிற்பங்களை 28 வருடங்களாக பாடுபட்டு செய்தவரின் பெயர் கம்பனாச்சாரி. குனகசபையில் 36 த்துவங்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் 36 தூண்கள் உள்ளன.

மார்ச் 26th, 2010 at 1:07
  6  

இந்த அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை!

நகம், நகத்தின் சதை, விரல் முட்டிகளின் மடிப்புகள் முதற்கொண்டு ஒவ்வொரு அமைப்பும் அற்புதமாக வடித்துள்ளான் சிற்பி! இவ்வளவு அழகும், துல்லியமும், ஒரு வித குறைவும் இல்லாமல் வடிப்பதற்கு எவ்வளவு தவவலிமை வேண்டியிருந்திருக்கும் அந்த சிற்பிக்கு!
இதை வடித்தவன் சாதாரண சிற்பியாய் மட்டும் இருந்திருக்கவே முடியாது, ஆழ்ந்த பக்திமானாக, நல்ல தவசியாகத் தான் இருக்க வேண்டும்.
இந்தக் கலைப் பொக்கிஷம் நிச்சயம் பாதுகாக்கப் பட வேண்டிய ஒன்று.
நம் முன்னோர்களின் திறமையை பறைச் சாற்ற இது நல்லதொரு தடயம்.
அற்புதமான இந்தப் பதிவிற்கு நன்றியோடு வாழ்த்துக்கள் விஜய்…

மார்ச் 26th, 2010 at 3:33
சச்சிதானந்தன்
  7  

பேரூர் சென்றபொழுது பார்த்திருக்கிறேன். சில்பியின் கைவண்ணத்திலும் இவை வந்திருக்கின்றன. இந்த வலைப்பூவில் படித்தபிறகு, விரல், நகம், சகச் சதை எனத் துல்லியமாகப் பார்த்த பார்வையைச் செதுக்கியோர் கேட்டிருப்பின் செதுக்கியபோதிருந்த உளநிறைவை விஞ்சிய நிறைவு பெற்றிருப்பர். நன்றி

மார்ச் 26th, 2010 at 5:06
  8  

hi rhoda

yes..you are absolutely right. they are some forms of anklets and not sandals - as we can see the sole of the feet - the marks in the hands and feet are auspicious marks - vishnu is said to have the sangu ( conch) n chakra ( discus) regai - ofcourse buddha too has similar - worshipped as buddha paadha. but what put me off is the anklet having a toe ring!!

மார்ச் 26th, 2010 at 7:26
  9  

சச்சிதானந்தன் ஐய்யா ,

“செதுக்கியபோதிருந்த உளநிறைவை விஞ்சிய நிறைவு பெற்றிருப்பர்.”

உங்கள் நல்ல உள்ளமும் தமிழும் மணக்கிறது.

விஜய்

மார்ச் 26th, 2010 at 8:38
Dhivakar
  10  

I have now words to express. As ‘Kovai Praveen’ said, This is Azhakiya Thiruchitrambalam.

Vijay! Your minute observations are treasure to others. Keept it up!!

Dhivakar

மார்ச் 26th, 2010 at 10:57
rudhran
  11  

thank you again

மார்ச் 26th, 2010 at 11:22
  12  

Vijay

May God bless you to write more and more about such outstanding, marvellous, divine , what more to say of our arts.

Some highly intellectual people are misguiding the blog crowds thru their different approach. As you have rightly said there, I never ever have felt that these silpas are dressless.
That was the worst or mean way of putting something to praise something.

I am going to be your regular reader from now on. I choose some specific artciles to read out for my son. Yours is defenitely one.

I thank you again.
Keep up your good work.

http://www.virutcham.com

மார்ச் 26th, 2010 at 12:29
  13  

@ Praveen - Tks for all the info, would be interesting for people who want to dwell more deeper. at the moment i am happy swimming on the surface !!

@ viruthcham - thanks - visited your site, interesting post. tks

@ rudran sir - honored again.

மார்ச் 26th, 2010 at 12:47
Sthapati K P Umapathy Acharya
  14  

Dear Viji,
Very brilliant article. Regarding Nataraja sculpture, which is considered as one of the best.The anklet was specially designed one. Its technical name is “Gadaavirutam”- a Vedic term. It is a special kind of ornament both in terms of intricacy and spirituality, implies the energy concentrated on the ornament - emits energy continuously. The technical name is completely forgotten. If one should understand the name and its etymology, may do the work exceedingly well.I will send more details about it soon. We
should thank Kovail Praveen, for the providing the Sculptors name. (is there any inscription?)

மார்ச் 26th, 2010 at 13:21
  15  

umapathy sir, we are indeed blessed to have you explain these to us.

Just spoke to Praveen, the name of the stapathi comes from the sthala puranam. I have a old copy - will refer and post fully

anbudan
vj

மார்ச் 26th, 2010 at 14:06
  16  

சிலையின் தத்ரூபமும் தான் இந்தக் கொசுவை ஏமாற்றி விட்டதோ! பாவம் படைத்தவனின் குருதியையே ருசிப் பார்க்க துளையிட முயற்சி செய்கிறது போலும்!

மார்ச் 26th, 2010 at 14:29
  17  

Amazing. Brilliant expressions. Why, we can think of a bullet proof glass cage instead. I think a petition would do.

மார்ச் 26th, 2010 at 14:53
Kathie B.
  18  

great to see all sorts of new people finding you. That article above the Nandi on a stand,
has me puzzled, too. I still can’t understand how you can find time for all your research!
Amazing.

மார்ச் 26th, 2010 at 23:48
கலாப்ரியா
  19  

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..
என்று உங்களை வாழ்த்தத் தோன்றுகிறது….
சொந்த வார்த்தைகளில் வாழ்த்த, திறந்த வாய்
மூடினால்த்தானே…-கலாப்ரியா

மார்ச் 29th, 2010 at 20:57
  20  

dear kathie

I had checked this with Dr. Nagaswamy, he has given me a technical name for it, but failed to note it down. will check again and get the info

rgds
vj

மார்ச் 30th, 2010 at 7:27
  21  

கலாப்ரியா,

உண்மைதான் - இந்த சிற்ப்பத்தை பார்த்த தினத்தில் இருந்து உறக்கம் என்பதே இல்லை.

விஜய்

மார்ச் 30th, 2010 at 7:28
  22  

Amazed to see you so deep in passion and enjoying your writing.. Wonderful details and thanks a lot.

ஏப்ரல் 4th, 2010 at 22:04
  23  

Hi Sriram

Welcome to the site and thanks for the nice words.

rgds
vj

ஏப்ரல் 5th, 2010 at 7:04
Satish
  24  

Mind boggling post Vijay. Its a pity that we are in such a state to protect such marvels from vandalism by placing a iron grill around it. Such indisciplined folks we are….even the genuine people cant enjoy its beauty.

Such marvels which stood the test of time for hundreds of years….even under foreign invasions… could not be safegaurded in FREE INDIA without physically seperating it. :(

Satish

ஏப்ரல் 5th, 2010 at 18:20
  25  

true satish, hope its not too late…

ஏப்ரல் 5th, 2010 at 18:58
  26  

Its quite a time since I last visited this site and today I got time to visit few postings of yours. Indeed it was a quite good experience seeing marvellous posts of yours. I would like to suggest a kind of single place where we can group the images per temple and per icon. Per temple will help a person if he/she is visiting that temple, and per image will help in understanding the various forms and evolution in the iconography. Will check with Arvind if such a think is possible as he is working on per images as of now.

மே 28th, 2010 at 16:41
gopalakrishnan.K.
  27  

I am born and brought up in this place. I have touched and felt every stone of this temple. It is great work to write about the minute details of the sculptures. I suggest you should have added the drawing on the ceiling, mentioning the important events happened in the life of every “nayanmars”. If you go to perur next time please make a note of it. There is a three dimension drawing also seen. If you are standing in front of the kanagasabai, on the top of the left side pillar you can see the three dimension drawing of the kanagasabai. I heard that the artist was a left hander he sat on the edge of the scafolding and drawn the picture using his left hand by seeing the live view of kanagasabai from there. If you are going to Perur next time enjoy the picture.

டிசம்பர் 4th, 2010 at 16:50
  28  

Dear Mr Gopalarishnan

We were there in Dec when the restoration work was going on.Infact climbed up the saaram with the artists and looked at their work. Was greatly disappointed at the renovation job. don’t want to add more.

rgds
vj

டிசம்பர் 7th, 2010 at 7:04

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி