Quantcast


ஐயப்பன் சீசன். கூட்டம் களை கட்டியது. நோ என்ட்ரி.. புதிர்களை தாண்டி மலைகோட்டை அடைவதற்குள் சூரியன் தனது அரைநாள் வேலையை முடித்து விட்டு மேலே நகர்ந்துக்கொண்டிருந்தான். முதல் படியிலேயே சண்டை - தேவஸ்தான அதிகாரியுடன் - கேமரா டிக்கெட் வாங்கியே ஆகவேண்டும் என்று அவர் ஒரே பிடியாய் நிற்க, நாங்கள் ஆசி குடைவரைகளை பார்க்க மட்டும் தான் போகிறோம் - அதற்க்கு சீட்டு தேவை இல்லை என்று வாதாடி தோற்றோம் ( எந்த ஆசி தளத்திற்குள் சென்று படம் எடுக்க கட்டணம் தர தேவை இல்லை. முக்காலி கொண்டு எடுக்க வேண்டும் என்றால் தான் பிரச்சினை ). வேண்டா வெறுப்பாக கட்டணத்தைக் கட்டி சீட்டை பெற்றுக்கொண்டு முதல் தளத்தை கடந்து இடது புறம் திரும்பினோம். உடனே அருகில் இருந்த உங்கள் நண்பன் - அவர்தான் நம்ப ஆட்டோ காரர் - ஒரு விதமாக பார்த்தார். அந்தப் பக்கம் உட்டு அடிக்க வந்தோம் என்று முதலில் நினைத்தாரோ என்னமோ. பின்னர், இது தப்பான வழி. அப்படி போ என்றார். சுற்றி பார்த்தோம் - அறிவு ஜீவிகள் - பேர் பலகையில் முழு பக்கம் வரைந்து வைத்துள்ளனர். அதுவும் பல்லவர் குடைவரை செல்லும் வழி என்று ( பெரும்பாலான அறிஞர்கள் இந்தக் குடைவரை பாண்டியர் குடைவரை என்று கருதுகின்றனர் ). எனினும் அவர் விட வில்லை. எங்கே சார் போகணும் என்றார். குடைவரைக்கு என்று சொன்னோம். ”ஏன் சார், வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை. மேலே போங்க!” என்றார்.

அதை பார்க்கத்தான் வந்தோம் என்றவுடன்,எதோ புழு பூச்சியை சாப்பிட்டது போல ஒரு எக்ஸ்பிரஷன் காட்டி மீண்டும் பீடியை ஊத ஆரம்பித்தார். ஒரு நூறு அடி நடந்ததும் எங்களுக்கே ஒரு கலக்கம். இது சரியான வழியா என்று. நல்ல வேளை, வீடுகளின் நடுவில் ஒரு சின்ன குறுக்கு பாதை மலையை நோக்கி சென்றதை கண்டு அதனுள் விரைந்தோம். பத்து அடி சென்றவுடன்….எதிரே பிரம்மாண்டம்.

carved+into+hillface
massive+rockface

அப்படியே பெரிய மலையின் அடியில் எப்படித்தான் இடம் பார்த்து இப்படி குடைந்தார்களோ. பாறையும் அதன் அடியி உள்ள குடைவரையும் கண்ணைப் பறித்தன. அங்கே அலை மோதிய கூட்டம், ஆனால் இங்கே ஈ காக்கா இல்லை. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தனர் ( சிற்பத்தின் கால்கள் தான் ஸ்டம்ப்_. ஆசி நபர்கள் இருவர் இருந்தனர்

front+facade

மலையை ஆழமாக்க குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை. வெளித் தூண்களே எப்படி உள்பக்கமாக இருக்கின்றன பாருங்கள்.

idea+of+depth+from+other+angle
to+give+you+an+idea+of+depth

தூணைப் பார்த்தவுடனேயே சந்தேகங்கள் - இது பல்லவ தூண் மாதிரி இல்லையே. அருகே ஆசி பலகை - இது மாமல்லர் காலம் என்று அடித்துச் சொன்னது 640 to 670 AD.

asi+board+claiming+build+by+mamalla+pallava
pillar+style

நீள்சதுர வடிவில் இருக்கும் குடைவரையின் இரு பக்கங்களில் இரு அர்த்த மண்டபங்கள் வெட்டப்பட்டுள்ளன. உள்ளே கர்ப்பக்கிருஹம் - ஒன்று சிவனுக்கு,மற்றொன்று பெருமாளுக்கு. இரண்டு கருவறைகளுக்கும் கருவறை காவலர்கள், மற்றும் அர்த்த மண்டபத்துக்கும் இரு வாயிற் காவலர்கள் - என்று மொத்தம் எட்டு வாயிற் காப்போன் சிலைகள் உள்ளன !! ( ஒவ்வொன்றாக அடுத்த பதிவில் பார்ப்போம்)

beautiful+left+shrine
beautiful+right+shrine

பின் சுவரில் சிற்பி தனது முழு திறனையும் காட்டி - விநாயகர் ( மாமல்லர் காலத்தில் விநாயகர் சிற்பமா?) , நான்முகன், முருகன், சூரியன் மற்றும் துர்க்கை சிற்பங்கள் உள்ளன.

relief+sculptures
row+of+relief+sculptures
the+reliefsculptures+on+facing+wall

ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் அவற்றை பார்ப்போம். ஆசி ஓவியர் சிற்பங்களை வரைந்துக்கொண்டிருந்தார். ( கரும்பு கடிக்க கூலி வேணுமா - நமக்கு )

asi+artist+sketching

ஏனோ அந்த ஆட்டோ காரர் சொன்ன “ஏன் சார், அங்கே வேஸ்ட் பண்றீங்க. அங்கே பார்க்க ஒன்றும் இல்லை ” என்ற வார்த்தைகள் இப்போதும் வலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அறியாமை தமிழகத்தில் இப்படியும் இருக்கலாகுமோ…

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஏப்ரல் 29th, 2010 அன்று 14:24 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 12 மறுமொழிகள்

annapoorna
  1  

When something is always available for us we ll not know the value of it…. Thanks for the post.. Love to read more on this…

ஏப்ரல் 29th, 2010 at 14:52
சச்சிதானந்தன்
  2  

பல்லவர் காலம் இல்லையெனில் எநதக் காலம்? மகேந்திரவர்மன் சைவனானபின் எழுதிய கல்வெட்டு, தாய்ச் சமயத்துக்கு வந்ததான குறிப்பு, இந்தப் பக்கத்திலேதானே? என் அறியாமையைப் பொருட்டற்க.

ஏப்ரல் 29th, 2010 at 15:59
  3  

sir, That inscription is in the upper cave which we saw earlier

http://www.poetryinstone.in/lang/en/2010/03/18/pallava-cave-temple-at-thiruchirappalli-rockfort-lalitankura-pallavesvara-griham.html

https://www.tamilvu.org/courses/diploma/a061/a0612/html/a06123l1.htm

பாண்டியர்களின் குடைவரைகளில் பல்லவர்கள் படைத்தது
போன்ற புராணக்கதை உணர்த்தும் சிற்பத் தொகுதிகள்
இடம்பெறவில்லை. தனித்தனிச் சிற்பங்களே பெரும்பாலும்
இடம்பெற்றுள்ளன. ஐந்து கடவுள் வணக்கமான “பஞ்சாயதனம்”
எனும் அமைப்பில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்
சிவன், திருமால், கணபதி, முருகன், துர்க்கை ஆகிய
இறையுருவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆறு கடவுள்
வணக்கமான “சண்மதம்” என்னும் மரபும் பின்பற்றப்பட்டு
இறையுருவங்கள் படைக்கப்பட்டுள்ளன. இம்மரபில் சிவன்,
திருமால், கணபதி, முருகன், துர்க்கை அல்லது சூரியன், பிரம்மா
ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில குடைவரைகளில்
இவ்விரு மரபும் இணைந்த நிலையில் இறையுருவங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 29th, 2010 at 16:02
Kathie B.
  4  

Yeah, nothing there to see, was there? I almost couldn’t find either cave the 1st time I was there in ‘95. People wouldn’t help, or didn’t know.
Of course it’s the upper one that blows you away!

ஏப்ரல் 30th, 2010 at 5:36
Parvadha Vardhini
  5  

அருமையான பதிவு. அடுத்த முறை நான் மலைக்கோட்டை செல்லும் போது நிச்சயம் இந்தக் குடவரையைக் காண விரும்புகிறேன். மிகவும் நன்றி.

ஏப்ரல் 30th, 2010 at 17:42
Kathie B.
  6  

Dear VJ, This is a lot to ask but could you add
my Picasa albums as a link to this site? I have photos of most murthis except the ganas & step animals, in both caves.
- injamaven

ஏப்ரல் 30th, 2010 at 21:01
  7  

sure, kathie. adding yours and arvind’s as well

மே 3rd, 2010 at 6:45
  8  

great post as usual!

மே 3rd, 2010 at 16:21
saarrankan
  9  

You do good job. Actually, we tamil become lower level in the world because of our lack of interest to aware about our treasures how we were in the past. I am very much happy that you recover several imprtant places in India. I appreciate your research activities should extend to other countries where Chola ruled such as Sri Lanka, kadaram etc.

மே 5th, 2010 at 9:53
  10  

thanks saarrankan… indonesia and cambodia are covered as well - you can use the relevant tags or search within the site. Srilanka is on the anvil..

rgds
vj

மே 5th, 2010 at 12:15
  11  

Yes! that’s what people say! CASTING PEARLS BEFORE SWINE! this is the proverb that comes to my mind when somebody is very ignorant about our own monuments!

மே 18th, 2010 at 11:09
kirthika
  12  

thanks a lot ……….enaku ippadi oru azhagana idathathi arimugam seythu vathatharku……

ஜூன் 18th, 2011 at 7:06

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி