Quantcast

தஞ்சை பெரிய கோயிலை பற்றி எழுதும்போதெல்லாம், சோழர் கலையில் அப்படியே சொக்கி நின்று விடுவோம். எனினும் அங்கு சில மற்ற கலைச்சிற்பங்கள், காலத்தில் பிந்தைய படைப்புகளையும், நாம் பார்க்க வேண்டும். பொதுவாக பல்லவர் சோழர் கலையையே நான் மிகையாக வர்ணிக்கிறேன் என்ற (உண்மை) கூற்று இருந்தாலும், அவ்வப்போது இங்கொன்றும் அங்கொன்றுமாய் - ஸ்ரீரங்கம் சேஷ ராயர் மண்டபம், பேரூர் கனக சபை சிற்பங்கள் என்று நாயக்கர் காலத்து நல்ல சிற்பங்களை எடுத்துக் காட்டிக்கொண்டு தான் இருக்கிறேன். அதே போல இன்று பெரிய கோயில் வளாகத்தில் நாயக்கர் கால பணிகளை பற்றி ஒரு பதிவு. சுப்பிரமணியர் ஆலயத்தில் இருக்கும் ஒரு சிறு தொட்டி பற்றிய பதிவே இது.

பெரிய கோயில் வளாகத்தில் சுப்ரமணியர் ஆலயத்தை கண்டுபிடிப்பது வெகு சுலபம். விமானத்தை சுற்றி வரும்போது, மூன்றில் ஒரு பங்கு கடந்தால் பின்னர் தெரியும் அழகிய ஆலயமே அது. பெரிய கோயில் கட்டி சு்மார் அறுநூறு ஆண்டுகளுக்கு பின்னர் எடுப்பிக்கப் பட்டாலும் அப்படியே கலை அம்சம் பொருந்த ஒத்து நிற்கும். பிரிட்டிஷ் லைப்ரரி படங்களை கொண்டும் இணையத்தில் உள்ள படங்களை கொண்டும் அதன் அழகை ஒரு முறை பார்ப்போம்.

subramanya+temple+go+around+it

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது இந்த சுப்பிரமணியர் ஆலயத்தை சுற்றி வரும்போது தெரியும்

look+to+your+left

கருப்பு வெள்ளை புகைப் படம் என்றாலே அதற்கு ஒரு தனி அழகு தான்.

anitque+photo2
antique+photo
antique+photo3

இப்போது, கண்ணில் படுகிறதா , நாம் இன்றைக்கு பார்க்கப் போகும் தொட்டி. இதை தான் ’மெனக்கெடுவது’ என்று பெரியவர்கள் சொல்வார்களோ? அபிஷேக நீர் வெளி வந்து சொட்டுவதற்கு இப்படி ஒரு படைப்பா. அருகில் சென்று பார்ப்போம்.

just+a+sink
take+a+closer+look
take+another+look

அந்த கோமுஹத்தில் - இல்லை இல்லை யாளி முகத்தில் தான் என்ன ஒரு வேலைப் பாடு. அந்த வளைவு, வளைவை இன்னும் நேர்த்தியாக வெளிக்காட்டும் கோடுகள்.

what+a+beauty
what+a+spout

அது சரி, கீழே உள்ள தொட்டியை பாருங்கள்.

the+sink
the+sink+front
the+sink+otherside

கம்பீர சிங்கங்களை கால்களாக கொண்டு, ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த அற்புதத் தொட்டி ஒரு கதையை வேறு சொல்கிறது.

purushamrigam
bheema
purushamrigam+catching+bheema

என்ன கதை. நம் பதிவுகளை விடாமல் படித்திருந்தால் இந்நேரம் கண்டு பிடித்து இருப்பீர்கள்.

பாதி பீமனை நீ சாப்பிடலாம் ..

படித்துவிட்டீர்களா ? பீமனின் கையில் இருப்பது என்ன

bheema
whats+bheema+having+in+his+hand

பிடி படும்போது கையில் ஒன்றுமே இல்லையே..அதனால்தானே பிடி பட்டான்.

purushamrigam+catching+bheema
bheema+hand+is=empty

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, ஜூலை 23rd, 2010 அன்று 15:42 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 10 மறுமொழிகள்

  1  

Nice one Vj :) beautiful photos with explanations :)

ஜூலை 23rd, 2010 at 15:47
Kathie B.
  2  

These Purushamrigas are charming. But in the last photo, there still seems to be something in Bhima’s hand. Also, don’t you always think of Bhim as a real beefy guy? I went back and read the great story. Thanks for all of it

ஜூலை 24th, 2010 at 3:12
Sekhar
  3  

Thanks Vijay

As an ardent fan of Kalki and Temple architecture, I got introduced to your blog from the reference in The Hindu.
The information on the details was a great one which will force us to look more every time we see them.

ஆகஸ்ட் 1st, 2010 at 7:03
  4  

welcome sekhar. kalki’s writing is truly inspiring. keep visiting

rgds
vj

ஆகஸ்ட் 1st, 2010 at 8:59
  5  

Respected Poetry in Stone team,

As you know well the late Mr.Raja Deekshithar respected your commitment and work for the tradition very much. I think it would be in order to respect his work and contribution to the understanding of the tradition and history of Indian art and culture and to show this by referring to the great work he did. As I think you know he discovered, researched and published first the earlier unknown and un-recognized tradition, art-history and mythology of the Sphinxes of India, the purushamriga. As a student and research assistant of Raja Deekshithar I am well aware of his correspondence with you. So it would be the correct approach to give due credit to his work and contribution in your blogs. Raja Deekshithar, his family, and I as his student and research assistant, deeply respect your effort and contribution towards the preservation of the great art, traditions and history of India in general and Tamil Nadu in particular. What you are doing and contributing is great. Raja Deekshithar, as your elder and superior in knowledge and experience, deserves a right place and appreciation for his work. And, as you know without any doubt, it is the correct academic approach to give right reference to work done by and contributions from others. I have no doubt you know the URL to Raja Deekshithar’s website http://www.sphinxofindia.rajadeekshithar.com
Photos of this same narrative panel of Bhima and the Indian sphinx or purushamriga can be found in hist contribution about the Sphinx of India in Chola art, and in the photo gallery of his website. I have no doubt you will do the right thing and refer your readers to Raja Deekshithar’s contribution as found in his website and other publications and videos.
I also hope and am looking forward to meet you all during my next stay in India. I have introduced Raja’s sons to the great work you are doing and they are eager and enthusiastic to meet you all as well. Of course I have send them the wonderful emails you have written on the occasion of their father’s passing.

Looking forward,

warm regards, Liesbeth Pankaja

ஆகஸ்ட் 4th, 2010 at 19:47
  6  

dear madam,

I have replied to you in private. If you are in agreement with it, please do let me know, so that i can publish my reply.

rgds
vj

ஆகஸ்ட் 5th, 2010 at 8:31
  7  

Dear Ms. Pankaja,

Thanks for highlighting the contributions of Sri Raja Deekshitar - i greatly appreciated his work on melaikkadambur and infact had sought his permission to get it on poetryinstone as a guest post.

regarding your current comment - without getting into much arguments on the sphinxes concept - the legend of purushamriga and vyagra padar - are very much part of our folklore and even traditions in vogue - this race included

http://www.hindu.com/fr/2005/02/25/stories/2005022500770300.htm

I take your comment to further popularise the findings of his - but to say that in the sense conveyed in ur initial comment is at best an emotional one. Though i have read his sphinxes article, did not see every collection in his gallery. after you comments, did find this sculpture in his gallery and am happy to find many more. I have added his link in the original post mentioned in this post and a tribute to his work - provided a link in my links as well.

again to clarify - i don’t claim any of these to be detailed research works, nor are they all my findings/discoveries - i am just documenting these with easy explanations to provide an early reader an insight into the beauty of temple sculpture, thereby trying to put them on course to more serious reading. Whenever i use or build on the earlier works of scholars - they do carry a clear credit like in this case.

http://www.poetryinstone.in/lang/en/2009/08/12/the-mystery-behind-the-horns-of-pallava-door-guardians.html

in the current post - what is shown is a simple story board on the purushamriga legend and anyone who had read the mahabaratha knows this. so do not see your point to claim exclusivity.

rgds
vj

ஆகஸ்ட் 12th, 2010 at 8:25
Siva Pillai
  8  

கண்டு படிடிக்கச் சிக்கலாக உள்ளதே

பல தடவை தஞ்சை போயிருந்தும் மணிக்காணக்காக பார்த்தும் இப்படி கோமுஹத்தைப் கவனிக்க வில்லையே என்பது கவலையாக இருக்கிறது.
கண்டிப்பாக அடுதட்த தடவை, உங்கள் முயற்சிப்குப் பாராட்டுகள்

ஆகஸ்ட் 26th, 2010 at 15:16
  9  

நான் இரண்டு முறை தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஆவுடையாரையும், பெரிய நந்தியையும் தவிற வேறெதையும் பார்க்கவில்லை.

உங்கள் வலைப்பூவை பார்க்கும் போதுதான் நான் எவ்வளவு கோமாளித்தனமாக இருந்திருக்கிறேன் என தெரிகிறது.

என்னைப்போலதான் பலரும் இருப்பார்கள். அவர்களுக்கும் சிற்பங்களின் கலை திறனை, ரசிக்கும் முறையை சொல்லித் தந்திருக்கின்றீர்கள்.

இனி ஒவ்வொரு கோவிலிலும் கடவுளை தேடாமல், கலையை தேடப்போகிறேன்.

நன்றி!

செப்டம்பர் 23rd, 2010 at 2:04
  10  

ஜெகதீஸ்வரன், பெரிய கோயிலில் மட்டும் அல்ல , பல சிறிய ஆலயங்களிலும் பல அற்புத சிற்ப்பங்கள் உள்ளன. புள்ளமங்கை பற்றிய பதிவுகளை படியுங்கள்.

விஜய்

செப்டம்பர் 23rd, 2010 at 7:18

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி