Quantcast

உலகில் பலவற்றை நாம் வென்றாலும் காலத்தை வெல்வதென்பது கடினம். அப்படி காலத்தை வென்று அழியாப் புகழ் பெறுவது என்பது அதனை விட கடினம். அப்படி காலத்தை தனது கை வண்ணத்தாலும் , செயல் வண்ணத்தாலும் , வென்று ஒவ்வொரு தமிழனையும் ஆயிரம் ஆண்டுகள் சென்றும் அவனது பெயரை கேட்டவுடன் ஒரு தனி மதிப்பை தானே பெரும் வல்லமை - நமது் ராஜ ராஜ சோழருக்கு உள்ள தனிச் சிறப்பு. ஒவ்வொரு முறை அவர் எடுப்பித்த பெரிய கற்றளியான தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை பார்க்கும் போதும், அமரர் கல்கியின் அற்புத வர்ணனையுடன் பொன்னியின் செல்வனை ஓவியர் மணியம் அவர்களின் ஓவியங்களுடன் அருண்மொழியை மனக்கண்ணில் சித்தரித்த ஆயிரம் ஆயிரம் ரசிகர்களின் தணியா தாகம் அவரது நிஜ உருவத்தை காட்டும் ஓவியம் அல்லது சிற்பம் பார்க்கவேண்டும் என்பதே. பல முறை இந்த ஆவலை தணிக்க வந்த விடைகள் - பெரிய கோயில் ஓவியம் , சாராபாய் அருங்காட்சியகத்தில் இப்போதும் உள்ள அழகான செப்புத் திருமேனி, ஆனாலும் என்ன, தெள்ளத் தெளிவாக இதுதான் உடையார் ராஜ ராஜ சோழர் என்று சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்க முடியவில்லையே.. அப்படி இருக்கையில், ஒரு தேடலில் இந்த ஆய்வுக் கட்டுரை என் கண்ணில் பட்டது The Problem of Portraiture in South India, Circa 970-1000 A.D.,Author(s): Padma Kaimal

அதில் ஒரு சிறு குறிப்பு இருந்தது. திருவிசாலூர் ஆலயத்தில் உள்ள சிற்பம் மற்றும் அங்கே உள்ள கல்வெட்டு பற்றி . அதை பார்க்கும் முன்னர் ஒரு முறை ராஜ ராஜரின் மெய் கீர்த்தி தனை மீண்டும் ஒரு முறை கண்ணால் காண்போம்

swastirsritirumagal
magalpolaperunila

ராஜ ராஜா சோழர் மற்றும் அவரது பட்ட மகிஷி லோகமாதேவி அவர்களின் சிற்பம் கல்வெட்டு குறிப்புடன் என்று இருந்தது

உடனே ஒருபுறம், அந்த சிற்பபத்தின் நல்ல படத்தை கண்டு பிடிக்க நண்பர்களை நாடினேன், மற்றொரு புறம் அந்த முழு கல்வெட்டின் பிரதியை தேடினேன் .

சிவயோகநாத ஆலயம் திருவிசாலூர் - கல்வெட்டு , அதற்கு மேலே உள்ள சிற்பத்தில் உள்ள இரு உருவங்கள் - உடையார் ராஜ ராஜர் மற்றும் அவர்தம் பட்டமஹிஷி லோகமாதேவி , அவர்கள் இந்த ஆலயத்தில் செய்த பூஜை மற்றும் கொடுத்த கொடை 458 காசு பொன்.”

கும்பகோணம் அருகில் இருக்கும் கோயில் இது, நண்பர் திரு லக்ஷ்மி நாராயணன் உடனே சென்று படம் பிடித்து தருகிறேன் என்று ஒரே வாரத்தில் படத்தை எடுத்துத் தந்தார். (நலிந்து கிடக்கும் பல கோயில்களின் படங்கள் அவரது தளத்தில் காணலாம், http://picasaweb.google.com/slnvasu)

படம், பொறுமையாக வருகிறது, அதற்கு முன்னர் சில வரிகள். திருவிசாலூர் ஆலயத்தின் காலம் முதலாம் ஆதித்யர் வரை செல்கிறது. கல்வெட்டில் கண்ட கொடை விஷயம் - ஹிரண்ய கர்ப்பம் ( பொன்னால் செய்த பசுவின் உள்புகுந்து வெளி வருவது - இனி பிறப்பே வேண்டாம் என்பதை வேண்டும் - பிறவா வரம் பெற செய்யும் யாகம் ) பற்றிய குறிப்புகள், ராஜ ராஜ சோழர், லோகமாதேவி அனைத்தும் இருந்தாலும் ( இந்த கல்வெட்டின் பிரதி திருவலஞ்சுழி ஆலயத்திலும் இருக்கிறது - குறிப்புக்கு நன்றி நண்பர் அர்விந்த் ). இது உடையாரின் கடைசி ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு. அதாவது 29 ஆம் ஆட்சி யாண்டு ( 1014).

முழு விவரம் இங்கே

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_23/aditya_2_karikala.html
No.42 (Page No 20)
(A. R. No. 42 of. 1907)

The inscription registers an agreement given by the mahasabha of vemgarrur alias Solamattanda-chaturvedimangalam a Brahmadeya in Manni-nadu, to the temple of Tiruvisalur-Mahadeva. A sum of 458 kasu was endowment to the temple and deposited with the assembly by queen Dantisaktivitankiyar alias lokamahadeviyar on the occasion of the performance of tulabhara by the king and of hiranyagarbha by herself in the temple. As interest on this amount they undertook to measure out annually 229 kalam of paddy at the rate of 1 tuni and 1 padakku on every kasu per year, and with this paddy the ur-variyam and kudumbu committees of the year were to meet the daily requirements of akkaradalai offering to the god, of which the details are given as follows:

Items required Equivalent in paddy

Rice – 2 nali … … One kurini and 2 nali

Tupparuppu(dol)—1 nali … …. 5 nali

Cow’s milk – 4 nali …. ….. ….. 1 padakku

Ghee –1 ulakku … …. ….. 1 kuruni

Sugar – 12 ½ palam … …. …. 1 kuruni and 2 nali

Plantain fruits –20 (?) …. …. ….. 6 nali

Arecanut … 10}

Betel leaves … 40} …. ….. …. 2 nali and 1 nali

Earthen pot …. …., …. 1 nali, 1 uri and 2 ¾ sevidu

Firewood …. …. ….. 1 nali
Remuneration to person preparing the offering … 1 nali

நாம் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த சிற்பம் இதோ.

rrc+loka

அருகில் சென்று பார்ப்போம்.

is+this+rrc
loka+madevi

இந்த ஆலயத்தில் நிறைய சிற்பங்கள் இல்லை. இதை தவிர இன்னும் இரண்டு புடைப்புச் சிற்பம் தான். மற்றவை எல்லாம் சிலைகள். அப்படி இருக்க, இவர்கள் சாமானியர் அல்ல, பொதுவாக பெரிய கொடை அளிக்கும் முக்கியமான சிலருக்கே இந்த வகை சிற்பங்கள் நிறுவப்படும்.

நிற்கும் ஆண், வயதில் சற்று முதிர்ந்து காணப்படுகிறார். (பொதுவாக மற்ற சோழ அரச சிற்பங்கள் அரசர்களை அமர்ந்த நிலையில் தான் காட்டுகின்றன ). அருகில் இருக்கும் அம்மையார், சற்று வயதில் சிறி்யவராக இருந்தாலும் யௌவன வயது யுவதி என்று சொல்ல முடியாது. ஆண் எந்த வித ஆபரணம் அணியவில்லை - தலையில் கிரீடம் இல்லை - அணிகலன் இல்லாத வெறும் சடை குடுமி, இரு காதுகள் நீண்டு இருந்தாலும் (முன்னர் கனத்த குண்டலங்கள் அணிந்தமையால் இருக்குமோ?) இப்போது வெறுமனே உள்ளன, இடுப்பில் வெட்டி போல ஒன்று, காலில் வீரக்கழல் இல்லை. அம்மையார் இதற்கு சற்று மாறாக கழுத்தில் ஹாரம், தலையில் சுட்டி என்று சில ஆபரணங்கள் அணிந்து , நல்ல சீலை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இருவருமே பக்திப் பரவசத்தில் கை கூப்பி நிற்கும் காட்சி அருமை.

இங்கே தான் நாம் சற்று யோசிக்க வேண்டும். அப்படி பெரிய கொடை கொடுக்கும் நபர், ஏன் இப்படி நகை ஒன்றுமே அணியாமல் இருக்க வேண்டும். கல்வெட்டின் படி 29 ஆம் ஆட்சி யாண்டு . உடையார் ராஜ ராஜா சோழர் சிவபாத சேகரன் என்று தன்னை அழைக்க தொடங்கி விட்டார். தீட்சை பெற்று சிவனடியார் ஆகவே மாறிவிட்டார் என்றும் ஒரு வாதம் உண்டு.

அவர்கள் பூஜிக்கும் சிவன்

shiva

சிவலிங்கம், அழகே பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. லிங்கத்தின் முன்னர் அபிஷேகம் செய்யும் சங்கு. அப்படி என்றால் இருவரும் தாங்களே அபிஷேகம் செய்து பூ அலங்காரம் செய்து வணங்கி நிற்கின்றனர் என்று கொள்ளலாம்.

இவற்றைக் கொண்டு பார்த்தால் இது மாமன்னர் ராஜ ராஜர் மற்றும் பட்டமகிஷி தந்தி சக்தி விடங்கி லோகமாதேவி என்று கருத முடிகிறது.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு. பொன்னியின் செல்வனின் வந்தது போல - ராஜ ராஜரின் மைந்தன் ராஜேந்திரனின் அன்னை வனவன் மாதேவி ( வானதி ) வேறு - இந்த லோகமாதேவி வேறு. இதை கல்வெட்டுகளில் வானவன்மாதேவி திருவயிறு் உதித்த ராஜேந்திரன் என்று வருவதை கொண்டு அறியலாம்.

மேலும் ஆராய இந்த சிற்பத்தினை தீவிர ஆராய்ச்சியாளர்கள் கையில் விட்டு விடுகிறேன்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20th, 2010 அன்று 12:00 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 27 மறுமொழிகள்

  1  

Interesting..im beginning to relook at sculptures and history and inscriptions these days

ஆகஸ்ட் 20th, 2010 at 12:17
Shanthi Palaninathan
  2  

Thank you vijay for the interesting article.the word Raja rajan surely gets our utmost attention

ஆகஸ்ட் 20th, 2010 at 12:43
  3  

thanks lakshmi

Shanthi Madam, of course yes. feel a strong connect with him.

vj

ஆகஸ்ட் 20th, 2010 at 13:28
annapoorna
  4  

“Its a dream for us, to be able to envision him in flesh and blood” very true…….

ஆகஸ்ட் 20th, 2010 at 14:32
  5  

For the first time I am seeing this inscribed sculpture and I was not aware that such a thing was in existence, thanks a lot for taking this out to the attention of art lovers. The next step would be to compare this with bronze and other so called sculptures of Raja Raja, though it would be not an easy task however might be interesting, what do you say?

ஆகஸ்ட் 20th, 2010 at 14:38
Dhivakar
  6  

Two things Vijay:

The inscription mentioned in the year that is last part of RRC life. He might have asked / ordered the sculptor to do exactly how he looked like. As he had already been initiated into Dheeksha, there were no necessary to show him as a crowned Emperor. May be, in later years Kulottunga-2 (?!) also followed this in CDM Temple.

2. This particular matter would have gone into the scholars thought already. There are plenty of scholars who breath on RRC. How they have kept quiet so far.

But these type of sculptures have so far not come out to outsiders. We have to bring more such from every places.

ஆகஸ்ட் 20th, 2010 at 15:55
Parvadha Vardhini
  7  

மிகவும் அருமை. உண்மை தான், நாம் அனைவரும் நம் மனங்கவர்ந்த மாமன்னர் ராஜராஜசோழர் எப்படியிருப்பார் என்பதை அறிய மிக ஆவலாக உள்ளோம்

ஆகஸ்ட் 20th, 2010 at 16:10
venkata rao
  8  

very good work it is not new to find kig&queen shown worshipping THE LORD to whom they made some kaanikkai in koneri raja puram temple completely renovated by sebianmaaadevi i h nmeee ofhusbbn kandirathiya both r shwn worshppinnng the king is much mooore sparsely dressed so also the queen who is wearing less jewells suited to the occasion no harm in taking him as RRC till we find more eidence good work

ஆகஸ்ட் 20th, 2010 at 19:28
prasanna
  9  

We can see Raja raja (The supreme emperor of south India) in two places and in both the places he is so humble!!! Hail Raja raja. (hasnt he posed like a warrior anywhere)?

ஆகஸ்ட் 21st, 2010 at 14:11
anandhinatarajan
  10  

THE great king with simple dress.in thiruvaalankadu(near AAduthurai) Siva padakesari (wearing siva’s sandle in head)is with beard and moustache like saint.He is kulothunan 2 i think.
anandhi

ஆகஸ்ட் 23rd, 2010 at 7:25
rhoda
  11  

thanks for the awesome post vijay…
i remember hearing in our south indian architecture class that from 1012 - 1014 that Rajendra and Raja Raja ruled together. Could be one more reason for his simple attire?

ஆகஸ்ட் 24th, 2010 at 10:48
  12  

hi rhoda, co ruling doesn’t necessarily mean that. but its interesting to know that Rajendra appointed his son Rajadhiraja as co regent pretty early into his rule 1018 ( co ruled till 1044) - maybe he didnt want his son to wait in the wings for as long as he did !!

vj

ஆகஸ்ட் 25th, 2010 at 7:20
  13  

dear mr Rao

thanks for your insightful messages. Would you have a good photograph of this sculpture. Please do share with us.

rgds
vj

ஆகஸ்ட் 25th, 2010 at 7:21
  14  

coming your way shortly saurabh.

cheers
vj

ஆகஸ்ட் 25th, 2010 at 7:27
Pradeep
  15  

Excellent detective work. in Tanjore this weekend and will try and look this up, how far away from kumbakonam is it?

Vijay, what does SRB say about this temple in his books?

ஆகஸ்ட் 26th, 2010 at 8:32
  16  

hi pradeep,

have sent u the ctc number. good luck and happy hunting. need to look up SRB for this temple. will update

vj

ஆகஸ்ட் 26th, 2010 at 8:38
Sudhakar
  17  

A good find. You guys really rock. This helps us to remind the greatness of our civilization. Thanks:)

ஆகஸ்ட் 30th, 2010 at 13:19
  18  

posting a wonderful comment for Ms. Pankaja as we had a few exchanges on this:


By the way, about this possible portrait sculpture of Rajaraja Chola, Raja taught me that when a lingam is depicted decorated with a wreath in the way seen in the sculpture of the donor-couple it is specifically a mala of vilva leaves, not a flower mala. This is also often seen in the sphinx-purushamriga reliefs. And a question, is there a clear connection between the inscription you mention and this relief of the donor couple? Where is this relief situated on the shrine? And who constructed this particular shrine? It is clearly an early Chola shrine. I also can’t make out from the photos (I have also checked the other photos in the Picasa album of your friend) where and how is it inserted in the wall? If it is original with the rest of the construction it is more likely to be the donor who build this particular shrine, or the part of the shrine where this relief is found, don’t you think? If this is known (I will also check our own references about this) it may very well be a Chola king, possibly Rajaraja. Anyway it is definitely a portrait sculpture of a donor, most likely (from the stone color etc) contemporeneous with the construction. The other small relief probably represents a human also, maybe? Do you know anything about the sthala purana of this temple?

ஆகஸ்ட் 31st, 2010 at 10:59
  19  

can you email a clear photograph of the inscription No.42 (Page No 20) (A. R. No. 42 of. 1907) i have tried the link but its dead. I am interested in the conquest of twelve thousand island, which many scholars agree as maldives..

ஆகஸ்ட் 31st, 2010 at 20:50
  20  

hi editor !, do you know to read tamil - the ref is முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்.

you can see most of the main Meikeerthi’s - prasithi’s here. RRC’s is in pg 36 of the pdf file.

http://pm.tamil.net/pmfinish.html#dt0134

a short version would be as under

ஸ்வஸ்தி ஸ்ரீ

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

தனக்கே (தநக்கே) உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை (வெங்கை) நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களை ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு

செப்டம்பர் 1st, 2010 at 7:11
Pradeep
  21  

Nayak kings also wore a veerakhazhal, they calld it the sahithya raya pendarem

செப்டம்பர் 3rd, 2010 at 13:43
  22  

இருமொழிகளில் வலைப்பூ இருப்பதும், வாசகர்களின் அறிவு திறத்தையும் எண்ணி வியப்படைகிறேன்.

செப்டம்பர் 23rd, 2010 at 2:00
  23  

ஜெகதீஸ்வரன், நமது கலைச்செல்வங்களை அனைவர் பார்வைக்கும் எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம். இரு மொழி அதற்க்கு பெரும் உதவி. விஜய்

செப்டம்பர் 23rd, 2010 at 7:20
Ramesh
  24  

Just saw this. Brilliant. This is adding to the list of temples I need to visit on coming back to India next week.

நவம்பர் 16th, 2010 at 13:06
vishwaksenan
  25  

Dear VJ. I just have a doubt and kindly clarify me about the sculpture you have mentioned in Tiruvisalur temple. The no. of inscriptions obtained from Tiruvisalur is 94 starting from the period of Varaguna. The no. of Chola kings in this temple’s inscriptions are 12, Pandia 1 and Krishnadevaraya the last. How do you identify the figure is RRC. Kindly clarify, please. Dont mistake me for raising question and requesting clarification.

ஏப்ரல் 15th, 2011 at 21:01
  26  

Dear Vishwaksenan Sir,

Firstly it is not my identification, but those of the scholars mentioned in the post. Secondly, the inscriptional reference is to show that there was definitely a large ceremony performed by the Emperor and hence he would have been closely associated with the functioning of the temple. The aspects of the portrait sculpture can also be compared to those identified with his depiction in the Big temple Fresco Paintings - in particular the scan ornaments and hair style

anbudan
vj

ஏப்ரல் 16th, 2011 at 19:04
dev
  27  

அரிய தகவல்கள், நன்றி

திருவிசாலூர் தவறு;
திருவிச நல்லூர், திருவிசலூர் -

http://wikimapia.org/3114588/NCN043-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-thiruvisanalloor-Thiruvisainallur-Tiruviyalur-thiruvisaloor-thiruvisalur

தேவாரப் பாடல் உள்ளதா தெரியவில்லை;
ஷாஹாஜி ராஜபுரம் என்ற பெயரும் முன்பு இதற்கு உண்டு

தேவ்

செப்டம்பர் 22nd, 2011 at 16:28

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி