Quantcast

இன்றைக்கு நாம் ஒரு மிக அரிய அற்புத சிலையை பார்க்கப்போகிறோம். கடம்பூர் என்றதுமே பலருக்கு பொன்னியின் செல்வன் நினைவுகள் மலரும். நாங்கள் ஒரு வருடத்துக்கு முன்னர் மேலைக்கடம்பூர் சென்றோம்.

melaikkadambur+entrance

ஒரு வார பயணத்தின் முதல் நாள் என்பதாலும், அன்றைக்கு இரவே தில்லை செல்லவேண்டும் (30 km தொலைவில்) என்பதாலும், அரக்கபரக்க சென்றோம். மழை வேறு “இதோ இப்போ வருகிறேன்” என்று பயமுறுத்திக்கொண்டே இருந்தது. கோயில் வாயில் அடையும் போதே இருட்டி விட்டது. அடுத்த நாள் பிரதோஷ பூஜைக்கு குருக்கள் தயார் ஆகிக்கொண்டிருந்தார்.

temple+getting+ready

ஒரு வருடத்துக்கு முன்பா? அப்போ ஏன் இவ்வளவு தாமதம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இரு காரணங்கள். ஒன்று திரு ராஜா தீக்ஷதர் அவர்கள் அருமையான ஆங்கில பதிவு ஒன்றில் மிகவும் அருமையாக இந்த ஆலயத்தை விளக்கி இருந்தார். அவரிடத்தில் அந்தப் பதிவை தமிழில் மொழிப்பெயர்த்து நமது தளத்தில் இட கேட்டிருந்தபோது, திடீரென அவர் நம்மை விட்டு பிரிந்தார். அவர் நினைவாக விரைவில் அதனை செய்து விடுவோம். இரண்டாவது காரணம், கடம்பூர் கோயிலில் இருக்கும் சிலை. பிரதோஷத்தன்று மட்டுமே வெளியில் வரும் இந்த சிலை, அன்று நாங்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் வெளி வரவில்லை. வெளியில் இருக்கும் பெயர்ப் பலகையை மட்டுமே படம் பிடித்தோம்.

bronze+on+temple+board

ஆனால், இணையத்தில் தேடியதில் கோயில் தர்மகர்த்தா திரு விஜய் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

கடம்பூர் கோயில்

ஆலயத்தின் ஸ்தல புராணம் பற்றிய அவரது பதிவு.

கடம்பூர் புராணம்

கடம்பூர் - அம்ரிதகடேஷ்வரார் கோயில். தற்போது இருக்கும் கற்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்து கட்டுமானம் (1075 -1120 C.E.). அதன் அற்புத வடிவம் மற்றும் சிற்பங்கள் பற்றி திரு ராஜா தீக்ஷதர் அவர்களது பதிவில் பின்னர் பார்ப்போம். நேரடியாக அந்த சிற்பம் காண செல்வோம்.

the+pala+bronze

தச புஜ ரிஷப தாண்டவ மூர்த்தி

அருகில் சென்று அதன் அற்புத வடிவத்தை பார்ப்போம்.

front+when+orb+is+fitted
reverse+with+plate+orb
view+from+left
view+from+right

இந்த சிலையின் தனித்தன்மைகள், உயர்ந்த மேடை, பின்னல் இருக்கும் பிரபை

திரு நாகசாமி அவர்கள் இதனைப் பற்றி கூறுகையில் , ” இந்த கோயிலில் குலோத்துங்கன் காலத்து, அற்புத உற்சவர் சிலைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று சிவன் நந்தியின் முதுகில் ஆடும் காட்சி, அருகில் விநாயகர், முருகர், பிருங்கி, நந்தி, பைரவர் மற்றும் பல கணங்கள் உள்ளன. இந்த சிலை வங்க தேசத்து பால வம்சத்து வெளிப்பாடை கொண்ட சிலை. இந்த சிலை சுமார் 9th – 10th நூற்றாண்டை ஒட்டி இருக்க வேண்டும். இது குலோத்துங்கனின் ராஜ குரு கொண்டு வந்ததாக இருக்கலாம். அவர் வங்க தேசத்தில் இருந்த வந்தவர். இது தமிழ் நாட்டில் கிடைத்த மிகவும் பழமையான பால கலை சிற்பம். சிதம்பரத்துக்கும் வங்க தேசத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது “

கடம்பூர் பற்றிய திரு நாகசாமி அவர்களின் பதிவு

இந்த சிலையை பால கால புத்தர் சிலையுடன் ஒப்பிட்டு பார்ப்போம். (நியூயார்க் நகர மெட்ரோபொலிடன் அருங்காட்சியக சிலை)

pala+buddha+metropolitan+museum

மேடை மற்றும் பிரபைகள் ஒத்து போவதை நாம் காணலாம்.

closeup+face
the+orb+flames

மேலும் இந்த சிலை தென்னாட்டு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்பதற்கு மகேசனின் ஊர்த்வ லிங்கம் இன்னும் ஒரு சான்று. இவ்வாறு நாம் சோழர் மற்றும் பல்லவர் கால செப்புத்திருமேனிகளில் பார்ப்பதில்லை.

திரு விஜய் அவர்கள் நாம் இன்னும் நன்றாக பார்க்க, அருகில் சென்று பின்னால் இருக்கும் தகடை விலக்கியும் படம் எடுத்து உதவி உள்ளார்.

without+the+orb

மிகவும் அழகாக காட்சி அளிக்கும் இந்த சிலை மகேசனின் அற்புத நடனத்தை பிரதிபலிக்கிறது. கைகள் தோள்பட்டையில் இணையும் பாணி மிகவும் அருமை. இதற்கு முந்தைய பல்லவர் மற்றும் சோழர் வடிவங்களில் கைகள் முட்டியில் பிரியும்.

closeup+of+reverse

இன்னும் நிறைய பார்க்க உள்ளது இந்த சிலையில். அவற்றை இந்தப் பதிவின் அடுத்த பகுதியில் விரைவில் பார்ப்போம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, டிசம்பர் 6th, 2010 அன்று 19:08 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 22 மறுமொழிகள்

Raman Sankaran
  1  

Best one i ever seen , thanks Mr Vijay

டிசம்பர் 6th, 2010 at 19:24
  2  

Amazing bronze. It is interesting to note that there was a Rajaguru of Kulottunga, hailing from Bengal. Just for curiosity, is there a Tamil speaking Bengali settlement anywhere in Tamilnadu. At the Amer Fort (Jaipur) there is a temple dedicated to Shiladevi (Durga) and traditionally the priests are Bengalis. There is a large settlement of Bengalis around the Fort.

டிசம்பர் 6th, 2010 at 19:48
Parvadha Vardhini
  3  

அற்புதமான சிலை. கண்களை அகற்றவே இயலவில்லை.
மிக்க நன்றி
வர்தினி

டிசம்பர் 6th, 2010 at 19:58
  4  

one more place to see

டிசம்பர் 6th, 2010 at 21:09
  5  

wow!! wonderful statue! Different style. Eventhough not to the level of our Cholas, this has a unique style and interesting features :) Bravo for the post, Vj :)

டிசம்பர் 6th, 2010 at 21:11
  6  

And the Buddha statue is very cute & perfect!!

டிசம்பர் 6th, 2010 at 21:13
  7  

Wonderful post! Thankyou Vijay.

டிசம்பர் 7th, 2010 at 7:09
annapoorna
  8  

unique one… very nice..

டிசம்பர் 7th, 2010 at 10:23
  9  

அழகுச் சிலை, தனித்துவமான வடிவமைப்பு, தச புஜங்கள் - கண்ணால் பார்த்திராத ஒன்றை கற்பனை கொண்டே வடிவமைத்த திறமை கொண்ட சிற்பிக்கு வந்தனம்.

சோழர் காலத்திற்கே முற்பட்ட சிற்பமா! நம்ப முடியவில்லை…

இந்தச் சிற்பத்தின் உயரம் என்ன இருக்கும்?

டிசம்பர் 7th, 2010 at 22:57
  10  

hi satheesh, date is 8th to 10th CCE , by experts. it could be closer to 10th due to the advanced style of depicting the hands joining at the shoulder blades.

for size, this will give you an idea

http://1.bp.blogspot.com/_MgH77lnk5pM/S2cDPtWRnzI/AAAAAAAAAE0/8LfrKsCeQBk/s1600-h/27012010398.jpg

anbudan
vj

டிசம்பர் 8th, 2010 at 3:46
Dhivakar
  11  

>>இது குலோத்துங்கனின் ராஜ குரு கொண்டு வந்ததாக இருக்கலாம். அவர் வங்க தேசத்தில் இருந்த வந்தவர். இது தமிழ் நாட்டில் கிடைத்த மிகவும் பழமையான பால கலை சிற்பம். சிதம்பரத்துக்கும் வங்க தேசத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது<<

Vijay! His name (Guru) is AGHORA SIVACHARI. A brilliant teacher who knows not only Vedas, also fighting skills and Dhevarams. He hails from Gowda Desa(Bengal). I have personally some craze on him and brings him in my novels too.

Dasa Bhujanga looks marvelous.

டிசம்பர் 8th, 2010 at 16:05
malarvizhikannan
  12  

very nice

டிசம்பர் 9th, 2010 at 11:06
venkata rao
  13  

had an oppurtunity to see the the bronnze in 1993 nice to see another bronze for comparision hope to see beautiful again to refresh my memory good work my blessings to u

டிசம்பர் 9th, 2010 at 20:05
Mohan
  14  

Not only marvellous statue, had in depth knowledge of science, wider Shiva placed with balance and connected only with his feet (without any additional support or additional metal to strengthen, - had clear knowledge about centre of gravity and sand casting refer http://en.wikipedia.org/wiki/Sand_casting )

டிசம்பர் 13th, 2010 at 21:26
anandhinatarajan
  15  

beautiful,excellent

டிசம்பர் 14th, 2010 at 15:04
Kathie B.
  16  

Thanks for showing so many angles. I just sent him the text from SRM’s NATARAJA book about quite similar one, but 12armed, in Dhaka.

டிசம்பர் 16th, 2010 at 21:19
Sekhar
  17  

Beautiful image of Nataraja. Does this style remind us about a Bhairava image in Dharasuram?

ஜனவரி 17th, 2011 at 15:05
  18  

Dear Sekhar

The one in Darasuram is eight armed Bairavar
Eight armed standing nude figure, wearing a garland of skulls. A big snake coils around the thighs; round ball-like eyes, protruding teeth, flame like hairs; holding a trident, parasu, sword and noose in the right arm; and with left, fire, kapala, khatvanga and bell. Behind the figure is shown an imperfectly carved hound.

http://www.tamilartsacademy.com/books/gcpuram/chapter06.html

rgds
vj

ஜனவரி 17th, 2011 at 20:41
injamaven
  19  

The best Pala Bronzes I’ve seen in photos were from Kurkihar, Bihar. Are they sure it wasn’t from around there?

ஜூன் 18th, 2011 at 20:54
Velan
  20  

Really it is more informative.

ஜூலை 20th, 2011 at 11:51
a.prathap
  21  

migavum arumayaga ulladhu vijay avargalukku nandri

அக்டோபர் 27th, 2011 at 13:30
Chandni
  22  

wonderful!! I am from Bengal and am a student of history of art. But I didnt know about this broze sculpture which relates us so closely to south India. This is a marvellous sculpture. Thank you

பெப்ரவரி 5th, 2014 at 21:50

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி