Quantcast

நேரம் போனது தெரியவே இல்லை. உடன் வந்திருந்த அப்பா அம்மா மற்றும் அண்ணன் காட்டிய சைகைகளும் மனதில் ஏறவில்லை. அப்படி ஒரு மயக்கம் - காஞ்சி கைலாயநாதர் கோயிலில் அப்படியே லயித்து விட்டேன். மதியம் ஆகிவிட்டது - அப்போது திடீரென கைபேசி அலறியது.

“விஜய், காஞ்சியில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் திருமால்புரம் ரயில் நிலையம் அருகில் இருக்கிறேன். சீக்கிரம் வாரும் ” என்றார் நண்பர் திரு சங்கரநாராயணன். அங்கே ஒரு முற்கால சோழர் கோயிலை தேடி செல்வதாக முந்தைய நாள் திட்டம் போட்டிருந்தோம். சங்கரை பார்த்துவிட்டு அவர் பின்னால் தொடர்ந்த சில வினாடிகளில் போகும் பாதையில் பாதை மட்டும் இல்லை, அப்படி ஒன்று இருந்ததற்கான தடயம் கூட இல்லை என்று புரிந்தது. பெற்றோரையும் , அண்ணனையும் வண்டியுடன் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டு சங்கருடன் அவரது வாகனத்தில் பயணம் தொடர்ந்தது. அப்போது எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் சென்ற எனக்கு பல அதிர்ச்சிகள். திருமால்புரம் இன்ப அதிர்ச்சி ( அதை அடுத்த பதிவில் பார்ப்போம்). ஆனால் அன்று மாலை நாங்கள் கண்ட காட்சி…

சரி, அப்படி எங்கே போனோம், எதை பார்த்தோம்.வரலாற்றில் பல முக்கிய போர்களை பார்த்த மண் - அது சரி, புள்ளலூர் என்றவுடன் பானிபட் போல நமக்கு சட்டென்று சரித்திர பாடம் நினைவுக்கு வருவது கடினம், எனினும் கல்கியின் சிவகாமியின் சபதம் படித்தவர்களுக்கு ? உடனே சிவகாமியும், குண்டோதரனும், புலிகேசியும் , கண்ணபிரானும், ஆயன சிற்பியும் நினைவுக்கு வருவார்கள்.

சிவகாமியின் சபதம்/காஞ்சி முற்றுகை/புள்ளலூர்ச் சண்டை

அதற்குப் பின்னரும் திப்புவின் காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து அவனது மகத்தான வெற்றிகளில் ஒன்றாக இந்த போர் கருதப்படுகிறது. அதை பற்றி திரு முத்தையா அவர்களின் ஆங்கிலப் பதிவு

The story of Two Obelisks.

சரி, இடம் தெரிந்துவிட்டது,. அங்கே ..

where+am+i

எனது படம் சுய விளம்பரத்துக்காக இல்லை, காரணமாகத்தான் உள்ளது. நான் எங்கே நிற்கிறேன். அடுத்த சில படங்களை பார்த்தல் உங்களுக்கே புரியும்

where+am+i2

இன்னும் சற்று தொலைவில் சென்று பார்ப்போம்.

the+front+view

புள்ளலூர் அருகே சோழர் காலத்து கோயிலை தேடிச் சென்ற எங்களுக்கு, சங்கரின் பார்வையில் தொலைவில் , மரக்கிளைகளுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் இந்த விமானம் தென்பட்டது. அங்கே ஊர்க்காரரை கேட்டதற்கு, அதுவா - அது எங்க ” மொட்டை கோபுரம் ” என்றார்

அருகில் சென்றவுடன் தன அதன் முழு பிரம்மாண்டம் விஷவரூபம் எடுத்தது.

brick+vimana
fantastic+structure
scale

விமானத்தின் அடியில் இருந்து பல செங்கல்கள் உருவப் பட்டாலும் ..

base+stripped+bricks
entrance

முதிர்ந்த போர் வீரரை போல, வீரத்தழும்புகள் பல உடலில் ஏந்தி இருந்தாலும், தலை சற்றும் சாயாமல் நேசி நிமிர்த்தி விண்ணோக்கி சென்ற விமானத்தின் கம்பீரம் மனதை கொள்ளையிட்டது . ஆறு தளங்கள் உடைய அற்புத செங்கல் விமானம்

first+tier
second+tier
third+tier
third+tier
fourth+tier
fifth+tier
sizth+tier+sudai+narasimhar
sudhai+narasimhar
top+shikara

விமானத்தின் மேல் தளங்களில் சில சுதை சிற்ப்பங்கள் தெரிந்தன. பல்லவர் காலத்து கட்டுமானம் போல உள்ளது.

narasimhar+sudai
who+could+it+be

தன்னைச் சுற்றி சிதைவுகள், குப்பை, முள்செடி , ஆயிரம் ஆண்டுகள் புறக்ணிக்கபட்டதன் விளைவினால் மேலே பல மரக்கிளைகள், எனினும் அதன் அகத்தின் அழகு குன்றவில்லை. இன்றைய அறிவியல் வளர்ச்சி, நவீன கருவிகள், புதிய கட்டுமான பொருட்களின் கண்டுப்பிடிப்பு என்று அவ்வளவும் இருந்தும் - இந்த தனி விமானம் தனது பெருமையை நமக்கு உணர்த்தியது. ஒரு சோகம் கலந்த பெருமிதம், விமானத்தின் உள்ளே சென்றவுடன் ஒரு தெளிவு…

engineering+marvel
insideview+of+vimana

நம் முன்னோர்களின் அறிவு முதிர்ச்சி மற்றும் அறிவியல் தேர்ச்சி கண்முன்னே கண்டதும் ஒரு பெருமிதம் - விமானத்தின் உட்புறம் சென்று மேலே பார்த்தவுடன் ஒரு மெய் சிலிர்ப்பு. அப்படி ஒரு அற்புதம், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும், கேட்பாரற்று குப்பையில் கிடந்தாலும், தங்கள் பணியை இன்றும் செவ்வனே செய்து, தாங்கள் காப்பாற்றிய மூலவர் சிலை இல்லை என்றாலும் எங்கும் எதிலும் கலந்திருக்கும் அந்த தெய்வீக உணர்ச்சியை உனர்த்தும் இந்த கற்களின் பணியை கண்டு கண்கள் கலங்கின. ஒரு இணையற்ற
கலை பாரம்பரியத்தை ஈர்ந்த மண்ணில் நானும் பிறந்துள்ளேன் என்ற பெருமிதம். இவை நமது குலதனங்கள் , போற்றி கொண்டாடப்பட வேண்டிய இவை இப்படி இருப்பதை கண்டு மனம் வெந்தது. ஆர்வலர்கள் சிலர் கூடினால் எதுவும் முடியும். இன்பத்திலும் துன்பம்!!!

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை செவ்வாய்க் கிழமை, ஜனவரி 4th, 2011 அன்று 10:38 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 23 மறுமொழிகள்

  1  

Nice posting, Vj. This temple reminds me of Mathur Vishnu Temple near Aiyampettai.

ஜனவரி 4th, 2011 at 11:14
Innamburan
  2  

‘அந்த தெய்வீக உணர்ச்சியை உனர்த்தும் இந்த கற்களின் பணியை கண்டு கண்கள் கலங்கின.’
படிக்கும்போதே, கண்கள் கலங்கின. பார்த்தபோது, உங்கள் உணர்வு புரிகிறது.

ஜனவரி 4th, 2011 at 13:33
  3  

what a find..but sad..is there anyway the ASI will work on it ..india is full of monuments like this..i sometimes pity the ASI also..

ஜனவரி 4th, 2011 at 15:48
Mani
  4  

Hi Vijay, your work is amazing, for 3 years this blog is running successfully and i wish it celebrates 1000th year like tanjore temple. this service cannot be valued with tangible things.

“let noble thoughts come to us from all sides “

ஜனவரி 4th, 2011 at 17:26
  5  

Taken note of this Vijay/ Sankaranarayanan. I will visit and also check if Dr Satyamurthy can accompany and take an online estimation of restoration. Sad :( As Sriram said, reminds Vepathur Perumal temple, which REACH is now working upon!
I have seen Thirumalpur railway station. where exactly is this place from the railway station?
Chandra

ஜனவரி 4th, 2011 at 23:11
Mouli
  6  

Very sad Vijay.

ஜனவரி 5th, 2011 at 13:48
venkata rao
  7  

with birks remo ved from base the temple appears to me as a temple car as u observed it might be a early pallava temple beautifl ithink many temples would have appeared like this before being converted to KATRALI by cholas

ஜனவரி 5th, 2011 at 17:21
  8  

I am sad….

ஜனவரி 6th, 2011 at 18:46
Pradeep Chakravarthy
  9  

chandra, is the pallava period “face” still present in the top leftside of the back wall in the Vepathur temple?

ஜனவரி 7th, 2011 at 13:51
  10  

நம் முன்னோர்களின் அறிவு முதிர்ச்சி மற்றும் அறிவியல் தேர்ச்சி கண்முன்னே கண்டதும் ஒரு பெருமிதம் - விமானத்தின் உட்புறம் சென்று மேலே பார்த்தவுடன் ஒரு மெய் சிலிர்ப்பு. அப்படி ஒரு அற்புதம், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும், கேட்பாரற்று குப்பையில் கிடந்தாலும், தங்கள் பணியை இன்றும் செவ்வனே செய்து, தாங்கள் காப்பாற்றிய மூலவர் சிலை இல்லை என்றாலும் எங்கும் எதிலும் கலந்திருக்கும் அந்த தெய்வீக உணர்ச்சியை உனர்த்தும் இந்த கற்களின் பணியை கண்டு கண்கள் கலங்கின.//

கண்கள் கலங்கின, என்றாலும் சந்திராவின் பின்னூட்டம் கொஞ்சம் ஆறுதலை அளிக்கிறது. உங்கள் பணியும், சந்திராவின் பணியும் மேன்மேலும் சிறக்கட்டும். வாழ்த்துகள்.

ஜனவரி 8th, 2011 at 18:54
  11  

thanks for all the prayers. lets hope something can be done to save this treasure!!

vj

ஜனவரி 8th, 2011 at 19:05
Latha Venkat
  12  

What a fantastic find! I can literally feel and sense your excitement and extreme passion which is conveyed through your writing. The dilapidated piece of majestic Hindu Art for some reason reminds me of the Angor Wat temples, probably because of all the foliage. Vandalism and nature seems to have consumed most of the temple. Gone are the hands and minds that created this aesthetic piece of art and hope for the sake of future modern engineering can restore the temple to cherish the old. Thank You.

ஜனவரி 12th, 2011 at 19:28
  13  

This temple could have a surprise inside it. Waiting for confirmation. Keeping fingers crossed

vj

ஜனவரி 14th, 2011 at 8:31
  14  

Very nice….will like to c more of it

ஜனவரி 14th, 2011 at 23:09
  15  

hope to read more post of urs

http://thingsinblacknwhite.blogspot.com/

ஜனவரி 14th, 2011 at 23:10
  16  

thanks for visiting Sneha.

rgds
vj

ஜனவரி 17th, 2011 at 13:45
meera
  17  

Totally amazing!

ஜனவரி 19th, 2011 at 11:29
  18  

We have lot of fantastic arts in our temples but now a days one by one are getting destroyed.

பெப்ரவரி 1st, 2011 at 16:11
Suganthy Krishnamachari
  19  

Hi,
Very interesting blog. Keep up the good work!
Suganthy Krishnamachari

பெப்ரவரி 26th, 2011 at 22:33
  20  

Hi Vj,
This would have been an impressive structure during its time. Not heard of many brick temples of Chola or Pallava period, can you throw some light on other similar structures.
One typo in article, the Pallava king involved in Pullalur war was Mahendravarman not Narasimhavarman to the best of my knowledge. Is this correct?
Regards,
Saurabh

பெப்ரவரி 28th, 2011 at 10:55
  21  

dear Saurabh

The references abound - the grand old lady Sembian Madevi is said to have converted so many brick temples to stone !!

Regarding father or son - let me check the right references…But the popular version (maybe influenced by Kalki’s references in his work Sivagamiyin Sabatham) is that it was the Son who beat back the invading army. But will defn check.

rgds
vj

பெப்ரவரி 28th, 2011 at 10:59
B.PHIRABU
  22  

Dear Friends all,
I am feels shame of all about your comments
what your all taking is about my own village PULLALUR because our village people do not have any idea what your all think about. I also try to find secrete and their history of my village temples since from chilled wood. I will help as much as possible.
B.PHIRABU

மார்ச் 1st, 2011 at 16:34
  23  

dear Phirabu

Thanks for writing in. The first and foremost is to ensure that the temple premises are kept clean- the Sivan temple Vimana has vegetation growing on it, which will eventually destroy it. In the Vishnu temple ( the one under worship - which is in better shape) - most of the inscriptions have been painted over ( dark green color) - please do not allow inscriptions to be touched - they are the record of the authenticity of the age of the temple. Lastly, regarding the structure about which i have written about - we are taking steps to see how it can restored. Please stay in touch with Mr Chandra of REACH foundation ([email protected] )

anbudan
vj

மார்ச் 2nd, 2011 at 8:54

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி