Quantcast

புள்ளலூர் பற்றிய சென்றைய பதிவினை இதற்கு முந்தைய பதிவு போல நினைத்துப் படிக்கவும்

கதிரவன் தலைக்கு மேலே வந்ததும் சங்கருக்கு தெரியவில்லை. நல்ல பசி. சில மாதம் பழக்கம் தான் அவருடன் பழக்கம் - மடல் மற்றும் அவ்வப்போது தொலை பேசியில் பேசிய தொடர்பு மட்டுமே . எனினும் அந்த சில மாதங்களில், ஒவ்வொரு வாரமும் திங்கள் வந்ததுமே ஒரு எதிர்பார்ப்பு, சங்கர் இந்த வாரம் எந்தக் கோயிலுக்கு சென்று அதில் உள்ள அற்புத வடிவங்களை பற்றி கூறுவார் என்று. சனி ஞாயிறு என்றாலே இந்த ஆர்வலர் அடிக்கும் லூட்டி , அப்பப்பா ? எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறாரோ ! சென்னை பயணம் என்றவுடன் அவருடன் ஒரு ஞாயிறு முழுவதும் இல்லை - அரை ஞாயிறு தான், காஞ்சி அருகில் உள்ள திருமால்புரம் செல்வோம் என்று பேசிக்கொண்டோம். இன்னும் நன்றாக அவரது ஆர்வம் தெரிந்திருந்தால் காஞ்சியிலே ஒரு கட்டு ஃபுல் மீல்ஸ் முடித்துவிட்டு வந்திருப்பேன்.

இடம் மட்டுமே தெரியும், அதுவும் அந்த ஊரில் உள்ள ரயில் நிலையம் தான் தெரியும். அதன் அருகில் சந்தித்தோம். பிறகு ரோடு என்ற பேரில் ஒரு கோடு கூட இல்லாத தடத்தில் உருண்டு சென்றோம். இதை விட சாலை மோசமாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற கோட்பாட்டை மீண்டும் மீண்டும் மாற்ற வைத்த பாதை, அருகில் பச்சை பசேல் என்ற வயல் வெளிகள் வரத்துவங்கின. அப்போது திடீரென ASI பச்சை வேலி கண்ணில் பட்டது. கதவில் பெரிய பூட்டு வேறு தொங்கியது. வேலியை சோதித்துப் பார்த்தோம். யாரோ நல்ல கான்ட்ராக்டர் போல இருந்தது. ஒரு இடத்தில கூட புகுந்து செல்ல முடியவில்லை ( அது சரி - நாம புகுந்து செல்ல நகர வாயில் வேண்டுமே !!) . உள்ளே சிறு கற்றளி - அப்படி ஒன்றும் பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. விமானம் கூட இல்லை.

அருகில் இருந்த ஊர் வாசிகளிடம் கேட்டுப் பார்த்தோம் - பொதுவாக அவர்களிடத்தில் சாவி இருக்கும் . இங்கே அதுவும் இல்லை. சரி, இவ்வளவு செய்துவிட்டோம், இது கூடவா செய்ய மாட்டோம். இரும்புக் கதவை ஏறி குதித்தேன். ஒரு கூட்டமே கூடி விட்டது ( இலவச சர்க்கஸ்??) . சங்கர் முயற்சிக்கும்போது எங்கள் மீது கருணை பிறந்து ஒருவர் தனது சைக்கிள் தந்து உதவினார். ( உடனே சென்று விட்டார் - அதன் மீது ஏறிய சங்கர் உள்ளே குதித்த பின்னர் திரும்பும்போது வெளியே எப்படி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.. சார், வாங்க முதல்லே வேலையை முடிப்போம் - வி கிராஸ் தி பிரிட்ஜ் வென் வி கம் டு இட் !

அருகில் சென்றோம். அழகிய புல்வெளி தரை நடுவில் சிறு கோவில். பின்புறமாக பாதை சென்றது

entry+from+backside
first+glance+was+dissappointing

தொலைவில் இருந்து பார்த்துவிட்டு ரொம்ப சின்ன கோயில், இங்கே அப்படி என்ன இருக்கப் போகிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டோம்.

first+look+front

இப்படி ஒரு சிறு கோவிலுக்கு பராந்தகர் (907 - 955 CE) முதல் பொன்னியின் செல்வர் உட்பட பலரும் கொடை கொடுத்துள்ளனரே ? சரியான இடத்திற்கு தான் வந்துள்ளோமா ?

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/parantaka.html
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/rajaraja_1.html

அருகில் சென்று பார்த்ததும், எங்கும் எதிலும் கல்வெட்டுகள். இன்னும் பல புதையல்கள் அதனுள் அடக்கி உள்ள இந்த கோயிலை புதிய மதிப்புடன் அணுகினோம்.

inscriptions
inscriptions2
not+plain+walls

பல நுண்ணிய சிற்பங்கள், தோரணம் மற்றும் மேலே பூத வரி என்று பல கண்களில் பட துவங்கின. அவை அனைத்தும் அடுத்த சில பதிவுகளில் பார்ப்போம். முதலில் பூத வரி என்றவுடன் மனதில் ஒரு ஆசை, நமது நண்பர் புலித்தொப்பை இருப்பாரோ என்று ஒரு முதல் தேடுதல் பணியை மேற்கொண்டோம்.

view+from+the+side
view+from+the+side+not+plain

அருமையான பூத வரி. ஆனால் நம் நண்பர் ?

gana+row
gana+row2
gana+row3

அதோ அங்கே, இருப்பது அவரா ?

is+he+our+friend
no+false+alarm

இல்லை , தலை கீழாக நின்று சிறக்கும் ஒரு கணம் தான் அது !!

இன்னும் சற்று தேடிய பொது., ஆஹா, நம் நண்பர் தான்,

oh+i+can+spot+something
oh+i+can+spot+something2
spot+tiger+belly

ஆனால் ஒன்றில்லை , இரண்டு பேர்.

two+tiger+bellies
tiger+belly+number1
tiger+belly+number2

இதுவரை நாம் ஒரு கோயிலில் ஒரு புலித்தொப்பை பார்ப்பதே அரிது. இங்கோ இருவரை பார்த்த ஆசை, பேராசையாக மாறி இன்னும் கிடைக்குமா என்று தேடினோம்.

backwall
tiger+belly+number3
tigerbelly3

ஆஹா, இங்கே இன்னும் ஒன்று.

tiger+belly3

மூன்று , ஒரே இடத்தில. இன்னொன்று இருக்குமோ ? இதோ.

tiger+belly+number4
tigerbelly4

புலித்தொப்பை தாகம் அடங்கி விட்டது. நால்வரை பார்த்த பெருமிதம். சரி அடுத்த பதிவில் அங்கே இருக்கும் மற்ற சிற்பங்களை பார்ப்போம்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, ஜனவரி 10th, 2011 அன்று 12:47 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 25 மறுமொழிகள்

  1  

Hi vj,
any story or tradition behind these tiger belly ganas?
-Saurabh

ஜனவரி 10th, 2011 at 13:07
  2  

hi Saurabh

That’s what i have been searching for - no references till date

rgds
vj

ஜனவரி 10th, 2011 at 13:24
Mouli
  3  

Haa Vijay… Ur back to the gana with the tiger belly :-)
Btw, any idea when these ganas started appearing with the tiger bellies? Pallava or from Chola?

Regards,
Mouli

ஜனவரி 10th, 2011 at 13:26
  4  

@ Mouli,

The earliest found is the one next to Shiva in the Mallai Penance panel

vj

ஜனவரி 10th, 2011 at 13:31
  5  

Cute ones! they are very happy as well!! simling, dancing, turning, laughing etc :)

ஜனவரி 10th, 2011 at 14:06
  6  

ஏகாந்தமான கோவிலில் துணைக்கு மற்ற கணங்களுடன் ஆடிப் பாடி கொண்டாடிக் கொண்டிருக்கும் புலித் தொப்பை கணங்கள் மிகவும் அருமை.

ஜனவரி 10th, 2011 at 15:43
  7  

Dear Vijay

I was searching for the ruined vishnu temple in thirumalpuram. thought that it was lost for ever.

In the mean time Dr Rajavelu sir suggested me to visit this temple which is called locally as Komar koil and we finally found this is the same as the thirumalpuram we are searching.

all credit to Dr Rajavelu sir

regards

sankar

ஜனவரி 10th, 2011 at 17:05
  8  

Hello VJ ..

Great Research as usual… I believe these tiger belly gana is called keertimukha !

Saw a similar Kind of gana during my visit to Velacherry Temple !

http://www.cliftonuu.org/sermons/Kirtimukha.pdf

ஜனவரி 10th, 2011 at 19:03
Kathie B.
  9  

what a treat! Aren’t they a ‘hoot’. I have quite a collection now. What’s “Ayarathil oruvan”? since I’m accused of it. . . . ‘Kabanda’ or Udaramukha. ‘Kirtimukha’ is a stand-alone face, I think. Bravo!

ஜனவரி 10th, 2011 at 20:16
  10  

hi swami

Keerthi muka is different concept. Normally represented on the sides of the Gopuram - seen in madurai here : http://www.facebook.com/photo.php?pid=472389&l=a63433c99d&id=1806006874

ஜனவரி 11th, 2011 at 7:23
  11  

Hi Kathie - Aayirathil oruvan ( one in a thousand) was a popular movie of yesteryears - the name was taken by a recent movie loosely based on the chola/pandya closing years - the unlikely hero was a bad mouthed coolie - whose lewd tongue was unpalatable.

ஜனவரி 11th, 2011 at 9:15
  12  

I met someone who had done some research on the shivagunas - wonder abt the significance of these

ஜனவரி 11th, 2011 at 10:21
Dhivakar
  13  

Belly Gana’s are more available in Coastal AP temples. Since situated amidst thick forests, the Kings olden days used to fix Crystal in the belly for lighting purpose. In Pancharamam’s temples built during 9th/10th c, these are available.

But very gud series Vijay.. keep it up in same tone..

ஜனவரி 11th, 2011 at 15:42
Kathie B.
  14  

really, Dhivakar sir? Do you have any photos of those in AP? I’d love to see, or names of the temples?

ஜனவரி 12th, 2011 at 6:08
rhoda
  15  

crystals for lighting….wow!! are we getting closer to the verdict..??? and the false alarm gana…he is super cute too. sticking out his tongue pulling his mouth wide open and hanging upside down…for a second you can almost see him swinging :-) great post vj

ஜனவரி 12th, 2011 at 14:31
Pradeep Chakravarthy
  16  

another nice one in Velachery as well…

ஜனவரி 12th, 2011 at 16:21
  17  

yes, Pradeep - got the photos from our friend :-)

ஜனவரி 12th, 2011 at 16:23
Srinivasan Varadarajan
  18  

I,m a Game Producer and Director. Researching about chola period when i came across this blog. How do we go to this place..any suggestions.

ஜனவரி 13th, 2011 at 16:40
  19  

Dear Mr Varadarajan

Welcome to poetryinstone. we have written extensively about cholas and pallavas as well. Please explore by searching inside the site with relevant tags. Need to focus this year on Pandyas !!

Tirumalpuram is a railway station between kanchipuram and arakkonam. it will be on your left if you are driving from kanchi. once you go past the station, after about 300 yards, the road will curve to the right. At that place, turn left - there is no road, but a via duct that goes under the railway track - will join a road on the otherside - about 3kms on that track you will get to this site

rgds
vj

ஜனவரி 13th, 2011 at 16:50
Srinivasan Varadarajan
  20  

Thanks Vijay, Will try to go there for a few photo sessions in near future. Well planning a mystery adventure game with ponniyin selvan as a reference. so photosessions are important for modeling the Backgrounds in game.
[email protected]

ஜனவரி 15th, 2011 at 20:00
  21  

Great - But these predate the period of PS. Best choices would be Nageshwaran Koil in kumbakonam and temples around kudantai, udayarkudi etc

ஜனவரி 17th, 2011 at 11:30
Ayyampet J.Balachandran
  22  

Hi vj,
Thirumalpuram tiger belly ganas quiet different to pullamangai belly ganas.

பெப்ரவரி 14th, 2011 at 21:48
  23  

Tirumalpuram must be slightly earlier than Pullamangai and hence the differences

rgds
vj

பெப்ரவரி 15th, 2011 at 7:01
Ayyampet J.Balachandran
  24  

Dear Vj,
How long earlier Thirumalpuram to Pullamangai? Please answer.

பெப்ரவரி 15th, 2011 at 22:24
  25  

dear balachandran,

Pullamangai is a padal petra stalam - so it is contemplated that the temple existed in some form prior - you can read more here http://www.varalaaru.com/Default.asp?articleid=647. But the current stone structure is during the period of Parantaka.

similarly Tirumalpuram also has inscriptions of Parantaka.

However, in terms of the stylistic improvements and advanced orientation of the kosta figures, we can infer that Pullamangai ( as it stands today) follows tirumalpuram.

rgds
vj

பெப்ரவரி 16th, 2011 at 7:45

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி