Quantcast

நண்பர்களே இன்று நண்பர் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்கள் நம்முடன் ஒரு அருமையான பதிவை பகிர்கிறார். சரித்திரம், முக்கியமாக கல்வெட்டுகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தும் இவரது கோயில் வாகனங்களை பற்றிய நூல் அறிமுகம் முன்னர் பார்த்தோம்.

அதை அடுத்து அவர் தஞ்சாவூர் பற்றிய ஒரு அற்புத நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார் Thanjavur A Cultural History. வரும் நாட்களில் இவரிடத்தில் இருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கலாம். நமக்காக அவர் ஒரு விசேஷ பதிவை தருகிறார். இதோ

திருமயம் புகழ் பெற்ற யாத்திரை தலம் - மதுரை அருகில் இருக்கும் இந்தத் தலத்தை பற்றி நான் ஹிந்து பேப்பரில் விரிவாக முன்னர் எழுதி இருந்தேன். பலமுறை அந்தப் பக்கம் பயணிக்கும் போது சென்று வருவேன்.

Sayana+perumal.jpg

விஜய் சிற்பங்கள் பற்றி இடும் பதிவுகளை வாசித்து விட்டு, நானும் ஒரு சிற்பி கல்லில் எப்படி பல காட்சிகளை கொண்ட நாடகத்தை இயற்றுகிறான் என்பதை, அவரைப்போலவே, இந்தப் பதிவில் விளக்க முயற்சிக்கிறேன். நாம் மூலவரை பார்ப்போம். பிரம்மாண்ட சிற்பம் பத்தடிக்கும் மேலே இருக்கும் - தாய் பாறையில் குடைந்து வடிக்கப்பட்ட இதன் காலம் சுமார் 7ஆம் நூற்றாண்டு என்றும் பெரும்பிடுகு முத்தரையர் என்ற முத்தரையர் தலைவருடைய அன்னை பெருந்தேவி என்பவர் உபயம் என்றும் தெரியவருகிறது. மேலும் வெளியில் கட்டுமானக்கோயிலின் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

பெருமாள் ஆதிசேஷனின் மீது பள்ளிகொண்டிருக்கும் காட்சி. நாபியில் இருந்து பிரம்மா தோன்றுகிறார்.

நண்பர் அசோக் அவர்களின் அற்புத உதவியுடன் ( தூண்களை மாயமாக மறைத்துவிட்டார் - copyright image)

Tirumaiyam_Anantasayanam
brahma+emerging+from+navel+on+lotus

குப்தர் காலத்து சிற்பி போல இங்கேயும் சேஷனின் உடலை சாதாரணமாக சுருட்டி இருப்பது போல காட்சி அமைத்துள்ளார்கள் - மற்ற இடங்களில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக இருக்கும் ஆதிசேஷனின் உடலை போல அல்லாமல் காட்சி ஆரம்பித்து விட்டது.

அசுரர் மீது தனது விஷத்தை துப்பும் காட்சி - விஷம் அக்னி பிழம்புகளாய் சீறிச் செல்கிறது.

venom+shown+as+streaks+of+fire
venom+shown+as+streaks+of+fire1

அவ்வளவு பலத்துடன் விஷத்தை கக்கிய பாம்பின் தலை மிகவும் தத்ரூபமாக கொத்திவிட்டு பின்னால் அசைவதை போல சிற்பி வடித்துள்ளது மிகவும் அருமை.

closeup+of+venom
recoiling+heads+of+sesha

காட்சி நகரும் திசையை நமக்கு உணர்த்தும் வகையில் மேலே நித்யசூரிகள் பறந்து வருகின்றனர். எம்பெருமானின் திருமுகத்திற்கு மேலே சிற்பி - இயற்கையாகவே அமைந்த கல்லின் வளைவை தனது சிற்பத்தின் ஒரு அம்சமாக உபயோகித்து, மேலே பறந்து வருபவர்களுக்கும் கீழே நடக்கும் காட்சிகளுக்கும் ஒரு இடைவெளி நிறுவ முயற்சிக்கிறானோ? பறந்து வருவோரை குறிக்க அவர்களது கால்களின் அமைப்பை, அப்படி வடிக்கும் போதும் கவனமாக, கடவுளின் முகத்திற்கு முன் கால்கள் இல்லாத படி வடித்திருப்பது அருமை.

celestials

ஒரு பக்கம் கருடனும் சித்திரகுப்தனும் உள்ளனர். சிலர் இது குடைவரையை நிறுவிய அரசனின் சிலையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

Garuda+extreme+left+as+you+see
Garuda+extreme+left+as+you+see1

அந்தப் பக்கம் பார்க்கும் போது இயற்கையாக வரும் கல்லின் வளைவை கொண்டு இரு அசுரர்களும் கொஞ்சம் தொலைவில் இருக்கின்றனர் என்று நமக்கு உணர்த்துகிறான் போல.

demons+madhu+kaithba

ஒரு பக்கம் சாயும் வண்ணம் அசுரர்களை செதுக்கி அவர்கள் சீக்கிரமே மாண்டு அழியப்போகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறான் அந்த சிற்பி.

இதே கதை பல்லவ சிற்பி வடித்த முறையும் முழு கதையையும் படிக்க

பிரம்மாவின் அருகில் மான் தலையுடன் இருப்பது யார்?

deer+head

நன்றி படங்கள்: Flickr : lomaDI, Prof Swaminathan and http://senkottaisriram.blogspot.com/2008/04/thirumayam-near-pudukkoottai-tamil-nadu.html

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், பெப்ரவரி 10th, 2011 அன்று 19:46 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 12 மறுமொழிகள்

Kathie B.
  1  

could that be Rishyasringa who enabled the Ramayana births? [also in the famous 'drought' seduction purana?]

பெப்ரவரி 10th, 2011 at 20:18
  2  

hi, kathie…rishya singar - kalaikottu muni was a unicorn :-(

பெப்ரவரி 10th, 2011 at 20:26
  3  

Hi,
Been to Thirumayam but was not able to take photograph of the sculpture though I was with an HR&C official. This panel is perhaps the most detailed Sheshasayi panel in India as we claerly see the story depicted with movements in stone. Thanks for giving a detailed account.
I like the venom fire depiction of this as this feature is most clear in this panel among all other similar panels in India which I have seen.

பெப்ரவரி 11th, 2011 at 9:28
  4  

Deer head person picture is not very clear, I just wanna know if you are sure that this is deer headed and not other animal. You are well versed in iconography however I am just thinking if this could be Jamvan (bear headed) but as you did not proposed this possibility so I assume that you are pretty sure that this is a deer faced icon. Correct?

பெப்ரவரி 11th, 2011 at 9:31
  5  

Hi Saurabh,

Yes - the depiction reminded me of the computer game Pacman :-)

regarding deer head - am sending you the original resolution image

rgds
vj

பெப்ரவரி 11th, 2011 at 9:33
Kathie B.
  6  

please send to me also. I don’t think that rsi’s always a unicorn. [?] Know he is at Hampi, but e.g. In my book retelling Mbh. artist gives him 2 antlers.

பெப்ரவரி 11th, 2011 at 19:53
  7  

Nice start and detailed account…

But Vj, in an earlier post no mention of unicorn for Rishyasingar!
http://www.poetryinstone.in/lang/en/2009/03/05/seduction-of-the-deer-headed-sage.html

பெப்ரவரி 11th, 2011 at 20:31
  8  

hi kathie, sending u

satheesh - just noticed. need to update !!

vj

பெப்ரவரி 11th, 2011 at 20:53
Pradeep Chakravarthy
  9  

Dr.Padhmanabhan from the Sanskrit Department suggests it may be Jatabharathar.

பெப்ரவரி 14th, 2011 at 12:18
  10  

Hi Pradeep,

Thanks - So a Brahma rishi, but very difficult to even fix a form for them. any reason or ref in particular he gave for this identification

rgds
vj

பெப்ரவரி 15th, 2011 at 7:02
Dhivakar
  11  

Good Post. Especially on analysing dhivyasoories, etc., well narrated.

பெப்ரவரி 15th, 2011 at 16:43
Kathie
  12  

Daksha, has a sheep’s head, shown next to Brahma who was also enraged Lord Shiva

பெப்ரவரி 1st, 2012 at 9:40

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி