Quantcast

சரியான பாட்டுக்கு மன்னர் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கிறார் !

எவ்வளவு பொன் ?

ஆயிரம் பொன் ?

ஒண்ணா ரெண்டா ! ஆயிரம் பொன் ! சொக்கா !!

தமிழர் எவருக்குமே தருமியாக நாகேஷ் அவர்களின் இந்த வசனத்தை மறக்க வாய்ப்பேயில்லை. ஆனால் இன்று நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா ? ஒரு மன்னன் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் அளிக்கும் நிகழ்ச்சி மெய்யாக நடந்திருக்குமா. அந்த நாளைய தங்கத்தின் விலையை மனதில் வைத்திருந்தாலும் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் என்பது இந்தக் காலத்து சினிமா ஸ்டார்களுக்கும் கிரிக்கட் வீரர்களுக்கும் கிடைக்கும் சம்பளத்தை காட்டிலும் மிகப் பெரிதாக இருந்திருக்கும். ஆயிரம் ஆண்டுக்கு முன் நமது நாட்டின் செழுமை , வளங்கள் அனைத்தையும் மனதில் கொண்டாலும் இது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது.

தமிழர் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்க வேண்டிய திரு ராஜ ராஜ சோழர் காலத்தில் தான் முதன் முதலில் தங்க நாணயங்கள் அச்சிடப்பட்டன. அதுவரையிலும் ரோமானிய தங்க காசுகள் தான் புழக்கத்தில் இருந்தன. அப்படி இருக்கையில் அந்த அற்புத ஆட்சியில் ஒரு புலவருக்கு ஆயிரம் பொன் வழங்கும் செல்வம் இருந்ததா ?

நம்மில் பலருக்கும் இந்த ஐயம் வந்திருக்கும். அதனால் நாணயஇயல் நிபுணர் திரு ராமன் அவர்களை சந்திக்கும் போது அவரிடத்தில் கேட்டு தெளிவு பெற்றேன். ஆனால் முதல் கேள்வி அந்த தங்க காசு பார்க்க கிடைக்குமா ? எந்த காசு ? ராஜ ராஜா சோழர் காலத்து தங்க காசு?

gold+coin

அதை எடுத்து வர சென்ற பொது மேஜையில் சிறு கிழி ஒன்று இருப்பதை பார்த்தேன். சிறிய அளவு என்றாலும் அழகிய வடிவம், கச்சிதமான மூடி என்று மிகவும் அழகாக இருந்தது.

அது தான் பொற்கிழி என்றார் திரு ராமன்.

another+view+open+container
opened
porkizhi+coin+container

ஆஹா. அந்நாளில் இதில் தான் காசுகளை போட்டு தருவார்களோ ? மிகவும் சிறியதாக உள்ளதே. இதில் எத்தனை காசுகளை போடமுடியும் என்ற கேள்விகள் எழுந்தன.

காசை எடுத்து கையில் தந்தார்.

rrc gold

தங்கக் காசு, சோழர் கால தங்கக் காசு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அச்சிட்ட காசு. உடலில் மயிர் கூச்சலிட உள்ளங்கையில் பக்தியுடன் வாங்கியது தான் தெரியும் - எவ்வளவு சிறியது , கையில் எடையே தெரியவில்லை - அவ்வளவு மெல்லிய தகடு போல இருந்தது.

goldcoin
size

கண்ணையும் மனதையும் பிரித்த அந்த பொற்காசு , ஐயத்தையும் தீர்த்தது, இப்படி இருப்பின் ஆயிரம் பொன் என்ன, பத்தாயிரம் பொன் கூட தாராளமாக பரிசளிக்கலாம் !!

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, ஏப்ரல் 11th, 2011 அன்று 13:56 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 15 மறுமொழிகள்

  1  

Nice one..i too have touched this urn and the gold coin thanks to Raman sir :)

ஏப்ரல் 11th, 2011 at 14:05
  2  

ஆஹா ! அந்தக் காசை கையில் தொடும்போது உங்களுக்கு ஏற்பட்ட பரவசத்தை எங்களுக்கும் வார்த்தை வழியே கடத்தியிருக்கிறீர்கள். 1000 பொற்காசு சந்தேகமும் தீர்ந்தது. அருமையான தகவல். அந்தக் காசில் எழுதியிருந்த எழுத்துக்கள் என்ன ?

ஏப்ரல் 11th, 2011 at 15:14
  3  

hi Shri…yes it truly an amazing moment

@பின்னோக்கி - பரவசம் !! இந்த அருமையான காசின் விளக்க பதிவை விரைவில் இடுகிறேன்…

நன்றி
விஜய்

ஏப்ரல் 11th, 2011 at 18:05
  4  

மன்னரின் சந்​தேகத்​தைத் தீர்ப்பவருக்கு பரிசு ஆயிரம் ​பொற்காசுகள்! எங்களின் மனதில் பல காலமாக இருந்த ஐயத்​தைத் தீர்த்து ​வைத்த நண்பர் விஜய் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்!!!

நம் ​வேந்தர் ராஜ ராஜ​ ​சோழர் அச்சிட்ட தங்கக் காசு - அத​னை ஸ்பரிசிக்கும் ​தருணம், வாழ்வின் மிக அற்புதமான ​நொடிப் ​பொழுதல்லவா! ​கேட்கும்​போ​தே ​மெய்சிலிர்க்கிறது!

நன்றி
வர்தினி

ஏப்ரல் 11th, 2011 at 19:34
Annapoorna
  5  

Used to wonder what is “Porkizhi”.. this cute little pot answered it… lucky u to have touched thalaivar’s coin :)

ஏப்ரல் 11th, 2011 at 19:38
  6  

The king is considered to be munificent …if he offers wine/toddy to the poet..and pours it till he reaches high…
Wine and toddy was out of reach of poor poets then…
This is what i have gleaned while i researched alcohol in Sangam literature.
The jar was called mattu…
so porkizhi and mattu deadly combination!

ஏப்ரல் 11th, 2011 at 21:51
  7  

thanks PV - next time you go to chennai - let me know. Will arrange with Raman sir.

@ Annapoorna - Touch is putting it mildly - ” held with reverence “..cute little pot :-)

@ Vairam…Hmm…oru Quarter cutting + kungumachimizhla kosumutta sizela kaasu….

vj

ஏப்ரல் 12th, 2011 at 7:21
Dhivakar
  8  

Thoughtful post. Many people wonder how 1000 gold coins as a prize a reality one. And timely explanation you gave. Congrats!

ஏப்ரல் 12th, 2011 at 10:55
  9  

Thanks to Dhivakar sir..this question was posted in one of the forums where he had placed the link.

“தமிழ் வணிகர்கள் திரைகடல் ஒடித் தங்களின் குறைந்தவிலையில் வாங்கிய பொருட்களை
வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்றுச் செல்வவளம் பெருக்கினர். அச்செல்வதைப்
பயன்படுத்தி ரோமாபுரி கிரேக்கம் போன்ற நாடுகளில் இருந்து தங்கத்தையும்
பவளத்தையும் இறக்குமதி செய்தார்கள். இந்தியா பழங்காலத்தில் தங்க நாணயங்களை
இறக்குமதி செய்தபோது வடபுலத்தில் மன்னரின் உருவத்துடன் காசைப்
பயன்படுத்தியதாகவும் தமிழகத்தில் அம்மன்னரின் உருவத்தின் மேல் கோடுகிழித்து
அதன் பின்னரே பயன்படுத்தியதாகவும் குறிப்புள்ளது. இதுபறி கூடுதல் தகவல் உண்டா?
நாகராசன்”

The reply from Raman sir is: A coin with a King’s face is cut ( there are many such examples in the chennai museum) - this is done when the said king is dead but the coin is still legal tender in the state. meaning the cut was not made for use in India but could have been done in its issue state - and later found its way into India.

tks
vj

ஏப்ரல் 12th, 2011 at 14:57
  10  

முற்றிலும் புதிய செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. மேலதிகத் தகவல்களுக்கும், இனி வரப்போகும் பதிவுக்கும் காத்திருக்கிறேன்.

ஏப்ரல் 12th, 2011 at 15:19
vishwaksenan
  11  

Dear Vijay, There is one reference about gold coins prior to Rajarajan and after Tiruvilayadal Puranam. The Poet Kadiyalur Uruthirankannanar who wrote Perumpanatrupadai was awarded 16,00,000 goldcoins by Chola Karikalan. There is only literary evidance and no coins available. And the coin you have seen has some letters around. Did you have any explanations or meaning for them?

ஏப்ரல் 12th, 2011 at 20:14
  12  

dear Vishwaksenan Sir,

There are reference to Pon/ gold coins - but as of date - the earliest self issued gold coinage by a tamil kind ( found so far) is of Sri Raja Raja Chola period. The general consensus is that prior to that they would have used Roman coins as legal tender.

rgds
vj

ஏப்ரல் 13th, 2011 at 7:33
  13  

ஓராயிரம் பொற்காசுகள் கொண்ட குடுவை, அந்தக் காசுகள் எங்கே? யாரிடம் உள்ளன?

ஏப்ரல் 13th, 2011 at 8:33
  14  

Aaah! I am so jealous. Would that I too could hold something like this in my hands. :) Lucky you. Great pics too.

ஏப்ரல் 13th, 2011 at 9:00
venkata rao
  15  

nice any idea about weight of the coin

ஏப்ரல் 19th, 2011 at 17:21

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி