Quantcast

வெண்கலச் சிற்பங்க​ளில் ஆர்வம் ​செலுத்த துவங்கிவிட்​டோமானால், அது என்றும் தணியாத தாகமாக​வே இருக்கும். அதிலும் ஒருமு​றை ​சோழர் கால ​வெண்கலச் சிற்பத்​தை பார்த்து விட்டா​லே, கண்க​ளை அவற்றினின்று அகற்றுவது மிகக் கடினம். ஆனால், இந்த ஆர்வத்துக்கு தீனியிடுவதும் அத்த​னை எளிதல்ல. ஏ​னெனில்,அ​நேகமாக ​வெண்கலச் சிற்பங்கள் ​கோவில்களில் உற்சவ மூர்த்தியின் வீதியுலா ​​போன்ற சமயங்களில் தான் ​வெளி​யே ​கொண்டு வரப்படும். அப்​பொழுதும் முழு​மையான ஆ​டை அணிகலன்கள், மலர் அலங்காரங்கள் என ​செய்யப்பட்டு சிற்பத்தின் அழ​கைக் காணவியலாத நி​லையி​லே தான் இருக்கும். விழாக்கள் இல்லாத பிற நாட்களி​லோ பாதுகாப்பிற்காக கூண்டுகளி​லே ​வைக்கப்படுகின்றன. ஆக​வே, ​வெண்கலச் சிற்பங்களின் அழ​கைக் காண​வோ, அதன் ​தோற்றங்கள் குறித்து ஆராய​வோ, அருங்காட்சியகத்திற்கு ​செல்வ​தே மிகச் சிறந்த வழியாகும். அவ்வாறு நூற்றுக்கணக்கான ​வெண்கலச் சிற்பங்க​ளை பாதுகாக்கும் ​​பேறு ​பெற்றது ​சென்​னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகமாகும். இருப்பினும், வருத்தத்திற்குரிய விஷயம் என்ன​வென்றால், இந்த சிற்பங்கள் அ​னைத்தும் கண்ணாடி கூண்டுகளில் உள்ளன, ​மேலும் ​போதிய ​வெளிச்சமும் இருப்பதில்​லை. இ​தையும் விட ​வருந்தத்தக்க விஷயம், இந்த ​வெண்கலச் சிற்பங்க​ளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. ​இவற்​றை எவ்வாறு ரசிப்பது - எ​தைப் பார்க்க ​வேண்டும், எப்படி பார்க்க ​வேண்டும் ​போன்ற ​தெளிவு இல்லா​மை​யே. அப்படி என்ன இவற்றை பற்றி படிக்க பார்க்க தனி வழி …மேலே படியுங்கள்.

இன்று, திரு பி. ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களின் மிக அற்புதமான புத்தகம் - பிரான்ஸஸ் ஆப் சவுத் இந்தியா (Bronzes of South India) - மூலமாக புகழ்​பெற்ற ஒக்கூர் ந​டேசனின் ​வெண்கலச் சிற்பத்தி​னை பற்றி காண உள்​ளோம். ​ஈசனின் ஆனந்த தாண்டவத்​தை ​வெண்கலச் சிற்பத்தில் ​​வார்க்க ஸ்தபதியால் ​மேற்​கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக ​ஒக்கூர் ந​டேசனின் சிற்பம் அறிந்து கொள்ளப்படுகிறது. ​மேலும் இந்த வடிவ​மே பிற்கால ​சோழர் காலத்தின் நடராஜ சி​லைகளுக்கும் முன்​னோடியாக விளங்கியிருக்கிறது.

okkur+natesa

இந்த ​வெண்கல சிற்பம் ​செதுக்கப்பட்ட காலம் நிபுணர்களின் கணிப்பின்படி கி.பி. 9-ல் இருந்து கி.பி. 10-க்குள் இருக்கக்கூடும். ​இதன் காலகட்டம் ஒவ்​வொருவராலும் ஒவ்​வொருவிதமாக கூறப்பட்டாலும், இது​வே முதன் முதலில் ஈசனின் ஆனந்த தாண்டவத்​தைக் குறிக்கும் நடன சிற்பமாக ஏற்றுக்​கொள்ளப்பட்டுள்ளது. சரி, இப்​போது இந்த அற்புத சிற்பம் எந்​தெந்த சிறப்பியல்புகளினால் ‘முதன் முதல் ஆனந்த தாண்டவ சிற்பம்’ என்று ​பெயர்​பெற்றது என்று பார்ப்​போம்.

இந்த சிற்பத்தில் தனித்துவம் ​பெற்ற இரு விஷயங்கள் - முதலாவது நடனமாடும் ஈசனின் உருவத்​தை சுற்றி அழகுற விளங்கும் பிர​பை. இரண்டாவது அழகிய தாம​ரை பீடம்.

lotus+base+asana

ஒவ்​வொன்றாக நாம் காண்பதற்கு முன்பு, ஆனந்த ரசத்​தை எத்து​ணை அழகாக நமது சிற்பி எடுத்துக் காண்பித்துள்ளார் பாருங்கள் - 1000 ஆண்டுகாலத்திற்கு பின்பும், கண் முன் காட்சியளிக்கும் தெய்வீக புன்ன​கை.

natesa+face
natesa+face+smile

மற்று ​மொரு சுவாரசியமான விஷயம் சிற்பத்தில் காணப்படும் ​நெற்றிக்கண் மற்றும் ​​வெவ்​வேறாக உள்ள காதணிகள். இடது காதில் ​பெரிய பத்ரகுண்டலம் உள்ளது, ஆனால் வலது காதி​லோ து​ளை ​பெரிதாகவும், அணிகலனாக ஒரு சிறிய வ​ளையம் (க்ளிப்) ​போன்று உள்ளது. (​மே​லே ​சொல்லப்பட்டுள்ள புத்தகத்தில் வலது காதில் உள்ள சிறிய வ​ளையம் பற்றி கூறப்படவில்​லை)

natesa+face+ear+ornament+suggestion3rdeye
patra+kundala+left+ear
ear+clip+rightear

ஈசனின் சி​கையலங்காரம் நாம் பல்லவ ​சோமாஸ்கந்தரில் பார்த்தது ​போன்​றே உள்ளது, ​மேலும் ஊமத்​தை மலரும் மற்றும் பி​றைச் சந்திரனும் உள்ளன. உருண்​டையாக முன்புறம் ​தோன்றுவது மண்​டை ஓடாக இருக்கலாம். அதற்கு ​மே​லே உள்ள​வை இறகுகளாலாகிய ஆபரணம் (மயிலிறகுகளாக இருக்கு​மோ?)

head+ornaments
head+ornaments+details

கழுத்தில் அணியும் ஆபரணங்கள் இரண்டும் சாதாரணமாக​வே உள்ளன. இருப்பினும் இரண்டாவது கழுத்தணியில் நடுவில் உள்ள பதக்கம் கவனத்​தைக் ஈர்க்கிறது. ​பெரிய கழுத்தணி, ருத்திராட்ச ​கொட்​​டைகளால் ஆனது, ​மேலும் அபூர்வமாக விலங்கின் (புலி) பல் பதக்கமாக உள்ளது.

neck+ornaments
neck+ornaments+tiger+tooth

விரிந்திருக்கும் முடிக்கற்​றைப் பற்றி விரிவாக பிறகு ( பின்னல் இல்லை இல்லை பின்னால் ) பார்ப்​போம், இருப்பினும் ​வெண்கலச் சிற்பங்களில் நடனமாடும் சிவ​​பெருமானின் முடிக்கற்​றை விரிந்திருப்பது இது​வே முதன்மு​றையாகும். அ​வை ஆபரணங்கள் ஏதுமின்றி சாதாரணமாக​வே உள்ளன. ​மேலும் கங்​கையின் எவ்வித உருவமும் காணப்படவில்​லை. ​வெண்கலச் சி​லைக்கு பலம் ​சேர்க்கும் விதமாக விரிந்திருக்கும் முடிக்கற்​றைகள் பிர​பையில் ​சேர்க்கப்பட்டுள்ளது சிற்பியின் அபார புத்திக்கூர்​மை​யை ​வெளிப்படுத்துகின்றது.

hair+locks+attached+to+prabha

ஈசனின் நான்கு கரங்களும் முட்டிகளில் பிரியாமல் ​தோள்பட்​டையி​லே​யே பிரிகின்றன (பல்லவர் கால ​வெண்கலச் சிற்பங்களின் இயல்பாக இது ​சொல்லப்படுகிறது. என​வே இது பிற்காலத்​தை ​சேர்ந்தது, அதாவது ​சோழர்காலத்தின் ஆரம்ப காலங்களில்). தூக்கிய திருவடிகள் பிற்கால சிற்பங்க​ளைப் ​போன்று மிக உயரத்திற்கு இன்னும் வரவில்​லை..

composition

காலில் உள்ள ​கொலுசுகள் மிக அழகாக சிறு மணிகள் ​கோர்க்கப்பட்டு உள்ளன. இ​றைவனின் ஆனந்த தாண்டவத்தின்​போது அ​வை எழுப்பும் ரீங்காரம் காதில் இனிய சங்கீதமாய் கேட்குமோ ?

the+uplifted+feet+anklets

இரட் ​டையாக உள்ள பூணூல் (யக்​ஞோபவீதம்) மற்றும் தடிமனான உத்தரீயம் (இடுப்பில் கட்டும் ஆ​டை) ஆகியவற்றுடன் ஆ​டை மிக எளி​​மையாக உள்ளது. உத்தரீயம் வயிற்றில் முடி​போட்டு கட்டப்பட்டுள்ளது. ஆ​டையில் உள்ள சித்திரம் இன்றும் கண்களுக்குத் ​தெரிகிறது.

waist+cloth+knot
waist+cloth+knot+detail

​ மே​லே உள்ள கரங்கள் மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் உடுக்​கையும் மற்​றொன்றில் அக்னியுள்ள சிறிய சட்டியும் உள்ளன - நளினமாக அந்த சட்டி​யை விரல்களின் நுனியில் ஏந்தியுள்ள​தை எத்த​னை தத்ரூபமாக ​செதுக்கியிருக்கிறார் அந்த சிற்பி பாருங்கள்.

hand+holding+drum
hand+holding+flame

​கையில் சுற்றப்பட்டுள்ள பாம்புடன் அபயஹஸ்தமளிக்கிறது கீ​​ழேயுள்ள வலது கரம்,

abaya+hasta
coiled+snake

இந்த அரு​மையான ​வெண்கலச் சிற்பத்தின் அழகுக்கு அழகு ​சேர்ப்பது கீ​ழேயுள்ள கரங்களும் ​மெல்லிய து​டைகளும். ​மேலும் பாதங்களுக்கு அடியில் உள்ள முயலகன் ஒரு ​பெரிய நாகத்துடன் வி​ளையாடுவது ​போன்ற பாவ​னை ​கொள்​ளை அழகு.

apasmara+muyalakan
beautiful+muyalakan
left+leg+on+muyalakan

இ​வைய​னைத்​தையும் விட இந்த சிற்பத்தின் உண்​மையான அழகு நாம் அதன் பின்புறம் ​சென்று பார்க்கும்​போது தான் ​தெரிகிறது.

beauty+reverse

முடிக்கற் ​றைகள் எவ்வாறு பிரிந்து விரிந்திருக்கிறது என்பது மிக அற்புதமாக ​செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணி​யை கட்டுவதற்கு உள்ள ​கொக்கி​யையும் நீங்கள் காணலாம்

arrangement+of+the+locks
perfect+symmetry

இந்த ​வெண்கலச் சிற்பம் பழ​மையானது என்பதற்கு மற்று​மொரு குறிப்பு - த​லைக்கு பின்புறம் சிரச்சக்கர​மோ, முடிக்கற்​றைக​ளை தாங்கும் விதமாக வ​ளைய​மோ இல்லாதது தான்.

​மேலும் ​கெளபீனம் கட்டப்பட்டிருக்கும் விதத்​தைப் பாருங்கள், இருப்பினும் ஒரு சிற்றா​டையும் அணிந்திருக்கிறார்.

loin+cloth+shorts

பிர ​பையில் நாம் கவனிக்க ​வேண்டிய விஷயம் - தீப்பிழம்புகள் மிகவும் இயற்​கையாக உள்ளன. பிர​​பை​யை சுற்றி இ​​வை இருந்தாலும், அக்னி ஜ்வா​லைகள் இயற்​கையாக உள்ள​தைப் ​போல் ​​மேல் ​நோக்கி​யே உள்ளன,

okkur+natesa

ஆஹா! எத்த​னை அற்புதமான உன்னத ப​டைப்பு!!

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, ஏப்ரல் 27th, 2011 அன்று 7:53 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 20 மறுமொழிகள்

rhoda
  1  

Thanks vj… lovely post with interesting details and observation. Why is Muylagan shown playing with the snake or with a snake mostly..and when he is being crushed ..why is he not in anguish?

ஏப்ரல் 27th, 2011 at 10:47
  2  

Rhoda….its maybe a way of saying that despite whatever, whoever rules ( dances) ….the dark side will continue ….but when they overstep…he comes again to cut/trample them down to size….however, there can never be total bliss - i guess…

vj

ஏப்ரல் 27th, 2011 at 10:54
rhoda
  3  

good guess i say

ஏப்ரல் 27th, 2011 at 11:35
  4  

மேய்வதற்கு ஆடுகள் இருந்தால் தானே வேலிக்கு வேலை…

திருடன் இருந்தால் தானே காவலுக்கு ஆள் தேவை…

இன்றோ துயரம் வந்தால் தானே ஆண்டவனுக்கே வேலை…

ஏப்ரல் 27th, 2011 at 11:40
  5  

Nice posting, Vj :) The Nataraja has a primitive look that shows it is an ancient one!! :) Cute description as well. Bravo!!

ஏப்ரல் 27th, 2011 at 12:05
Liesbeth Pankaja
  6  

Thanks VJ. Really nice to see all the details so close and clear.

ஏப்ரல் 27th, 2011 at 12:53
  7  

@ Shri - Primitive :-( - wouldnt say so - ” early” depiction…more apt

@ Liesbeth - Thanks, there is so much to see. infact had taken these in dec 2009. took about an hour to experiment with flash/without flash and angles to get the right results ( from beyond the glass) - then during lunch time asked the guard to switch off the focus lights…..:-)

vj

ஏப்ரல் 27th, 2011 at 12:58
injamaven
  8  

really appreciate the details

ஏப்ரல் 27th, 2011 at 20:42
  9  

Fantastic and well detailed. Thanks for introducing the first cast!

ஏப்ரல் 27th, 2011 at 21:34
Dhivakar
  10  

முன்னழகைக் காணில் முனிவர் தவம் செய்வாரோ?,
பின்னழகைக் காணில் பிரமன் தவம் செய்வானோ!!

ஏப்ரல் 28th, 2011 at 11:13
s.gurumurthy
  11  

The feathers you had shown in the bronze is that of the crane and not pecock. It is stated that Nataraja has Kokhu erahu in his head and this is seen in many bronze images.

Nataraja dress does not depict the loin cloth it a way of tying the dothi in a short level with a kacham.

This is an amazing bronze your explanation of details is intresting andshows your love for the great chola bronzes.

ஏப்ரல் 29th, 2011 at 12:17
Prasanna
  12  

And not to miss to see the cloth flying away due to centrifugal force of His rotation :)
(told already.. but still… not to miss) :)

ஏப்ரல் 30th, 2011 at 10:43
  13  

dear Mr Gurumurthy,

Thanks for the comment. However, i am not able to trace any reference to the feathers to being those of a crane. However, i do find many references in Sri. C. Sivaramurthi’s Natraja in Art, thought and Literature, to the peacock feathers that adorn the head dress of Shiva in the Nataraja form. The Sipla texts like Sritattvanidhi do define peacock feathers decorating his head.

rgds
vj

மே 1st, 2011 at 18:07
  14  

நன்றி. திவாகர் சார்..

மே 1st, 2011 at 18:07
venkata rao
  15  

siva is not wearing tiger tooth pendant it yooth of varaha murthi siva is known as varaha samhara murthi also siva conquers matyaavathara murthy bytaking form of a crane{matya samhara murthy} it is said siva wears feathers of a crane even if ihave another chace to see the bronce i would have missed some features u have brought 2 light good work

மே 10th, 2011 at 13:08
  16  

thanks mr Rao and happy to see that you like such. will bring you more

rgds
vj

மே 11th, 2011 at 5:41
  17  

The poses of shiva have always attracted the attention of artists.For a hindu,the statue of shiva is a must in house.

மே 25th, 2011 at 21:46
gopal
  18  

உங்களுடைய சிற்ப்பத்தை பற்றிய கருத்துக்கள் ஆழ்ந்து கவனிக்கத்தக்கவை . நமது பாரம்பரிய சின்னங்கள் மீது உங்களுக்கு உள்ள பற்று பாராட்டத்தக்கவை .தங்களுடைய பணி சிறக்க எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .

ஜூன் 14th, 2011 at 19:17
Ayyampet Balachandran
  19  

அன்பு விஜய்,
தங்களது வர்ணணை மிகவும் ரசிக்கும்படி உள்ளது.
Ayyampet Balachandran

ஜனவரி 27th, 2012 at 20:08
K Lakshmikanthan
  20  

Very informative article about early Natrajar with learning details about bronze sculpture.

Vijay sir i request you to write a article about comparisan of Nataraja’s different period (Centuries) sculptures , which help us to identify the period of Nataraja in temples during the visit.

Hope to see more articles like this
K.Lakshmikanthan

ஜூலை 19th, 2013 at 14:25

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி