Quantcast

சிதைந்த பல்லவர் கால ஓவியங்களை அவற்றின் புராதன வசீகரத்துடன் வெளிக்காட்டும் முயற்சியில் இன்று மீண்டும் ஒரு பயணம். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்து சோமாஸ்கந்தர் ஓவிய பதிவுகளுக்கு - - பதிவு 1, பதிவு 2,. பதிவு 3, தாங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் எங்களை அடுத்து மீண்டும் திருமதி சுபாஷினி பாலசுப்ரமணியம் ( ஓவியர் திரு மணியம் மற்றும் திரு மணியம் செல்வன் அவர்களின் வழித்தோன்றல் என்றால் சும்மாவா?) அவர்களின் உதவியுடன் இன்னும் ஒரு கடினமான அதே சமயத்தில் ஆனந்தமான பணியை மேற்கொண்டு உங்கள் முன் வருகிறோம்.

பொன்னியின் செல்வன் குழும நண்பர்களுடன் பனைமலை சென்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. எனினும் இன்றுவரை அதை பற்றிய பதிவை நான் இடவில்லை. சிற்பங்களை அவைகளுள் இருக்கும் அற்புத வடிவத்தை கண்டிப்பாக சரியான முறையில் வெளிக்காட்டினால் தான் முறையாக இருக்கும் என காத்திருந்தேன். ஆனால் இன்றும் பசுமையான நினைவுகள். செஞ்சி அருகே ஒரு சிறிய மலைதான் பனை மலை.

first+glimpse

ஆஹா, மேலே ஏறும் போதே ராஜ சிம்ஹாபல்லவரின் ஆலயம் - தாளகிரீசுவரர்’.

surreal+vimana

ராஜ சிம்மர் என்றாலே விமானங்களின் அழகுதான் முதலில் நம்மை ஈர்க்கும். காலத்தை வெல்லும் கொள்ளை அழகு

Panaimalai_Vimaanam
stunning

அனால் இந்த பொக்கிஷம் முத்துச் சிப்பியை போல உள்ளே ஒரு அரிய முத்தை உள்ளடக்கி வைத்துள்ளது.

ராஜ சிம்மர் தனது காலத்தில் தனது படைப்புகளான ஆலயங்கள் அனைத்தையும் தலைமுதல் கால் வரை
ஓவியங்களை கொண்டு அழகுக்கு அழகு சேர்த்தார். இதனை நாம் முன்னரே காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் பார்த்தோம். இங்கேயும் அதே போல ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். நமது துரதிஷ்டம், இன்று எங்கோ இங்கும் அங்கும் ஒரு சில இடங்களில் மட்டும் எச்சங்களே மிஞ்சி உள்ளன. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல - தூரிகையின் ஒரு சில கோடுகளிலேயே பல்லவ ஓவியனின் கைத்திறன் நம்மை சொக்க வைக்கின்றது

விமானத்தின் உட்புறமோ, கருவரையிலோ இன்று ஓவியங்கள் எவையும் பிழைக்க வில்லை. எனினும், விமானத்தை சுற்றி வரும் பொது, வலது புறம் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் சிவலிங்கத்தை கொண்ட ஒரு சிறு சன்னதி உள்ளது. மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கஷ்டப் பட வேண்டும். ஆனால் அதைக் கண்டும், அஞ்சி ஏறவில்லை என்றால் போச்சு!….அதனுள் தான் புதையல் உள்ளது.

the shrine from outside.jpg

ஏறிவிட்டீர்களா ? முதல் பார்வையில் ஒன்றுமே இல்லையே என்று நினைக்க வேண்டாம். வலது புறம் சுவற்றை நன்றாக பாருங்கள். கண்டிப்பாக தெனிந்தியாவில் இவளை போன்ற அழகி வேறெங்கும் இல்லை.

umai+on+the+side
umai+on+the+side+highlight

இன்னும் நன்றாக அருகில் சென்று பாருங்கள்.

inside+the+cell
meditant.eu-panamalai-3973
meditant.eu-panamalai-3974
pallava+painting
traces+of+umai
umai

உமை அம்மை - பார்த்த கணத்தில் நம்மை சொக்கி அடிக்கும் மதி வதனம். மேலே வர்ணிக்க வார்த்தைகள் வராது.

meditant.eu-panamalai-3971
meditant.eu-panamalai-3977

காலத்தின் கோலத்தில் பல இடங்களில் உடைந்தும் அழிந்தும் போன நிலையிலும், அந்த ஓவியனின் தூரிகை தீட்டிய கோடுகள், வண்ணங்கள் - அவை ஒன்று சேர்ந்து உமையின் முகத்தில் வெளிக்கொணரும் உணர்வு அலை, நிற்கும் நளினம். .

umai panamalai

மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதால், ஓவியத்தில் பல இடங்களில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை - மேலே வண்ண குடை தவிர , இன்னொரு பக்கம் இருப்பது ஒரு பல்லவக் குடைவரைக் கோயிலின் தூண் போல தெரிகிறது.

pillar

வலது புறம் உமை இருக்க, நடு சுவரில் மிகவும் மெல்லிய ஓவியச் சுவடுகள் தெரிகின்றன.

traces

அருகில் சென்று ஆராயும்போது அவை சிவபெருமான் முப்புரம் எரித்த பின்னர், மகிழ்ச்சியில் ஆடிய ஆளிதன்றிட (Alidhanrita) நடனம் என்று தெரிந்துக் கொண்டோம். இதை அடுத்த பதிவில் மேலும் காண்போம். ஆனால் இந்த வடிவம் ராஜ சிம்ஹரின் பல சிற்பங்களில் நாம் பார்க்க முடியும், காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் இதே போல சிவன் அவர் ஆட உமை பார்க்கும் காட்சி இருக்கிறது - “திரிபுராந்தகி சமேத திரிபுராந்தகாய நமஹ”

panel+kanchi+kailasanthar

உமை ( திரிபுராந்தகி) இங்கும் பனை மலை போல இருப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

umai+kanchi+kailasanathar

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, இந்த ஓவியத்தை சுபாஷினி வரையத் துவங்கினார்.

sketch_1
sketch_2

வண்ணங்கள் மெதுவாக தோன்றின.

photo(1)

போன முறை ஜகதீஷ் படங்களை தந்து உதவியது போலவே, இம்முறை திரு பிரான்க் ரோந்டோட் என்பவர் உதவினார். வெகு நாள் வரை பனைமலை ஓவியத்தின் நல்ல புகைப்படம் இணையத்தில் இல்லை, அப்போது திரு பிரான்க் அவர்களின் தலத்தில் நல்ல படங்களை கண்டு, நமது முந்தைய பதிவையும் என்ன செய்ய இந்த படங்கள் தேவை என்றும் விளக்கினேன். அவரும் உடனே படங்களை நமக்கு தந்து உதவினார். இவை நமக்கு மிகவும் உதவின - ஏனெனில், இவை பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள் - அதற்கு பின்னர் சில இடங்களில் ஓவியம் சிதைவு அடைந்துள்ளது !!

மேலும் பொன்னியின் செல்வன் குழு நண்பர்கள் சௌராப் , சாஸ்வத் , ஸ்ரீராம் , ஸ்ரீ என்று பலரும் தங்கள் படங்களை கொடுத்து உதவினர்.

மெதுவாக ஓவியம் வளர்ந்தது…

photo(7)

தொடரும்

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19th, 2011 அன்று 12:15 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 19 மறுமொழிகள்

Shash
  1  

So, _that’s_ where her left hand goes in the original…

“the most beautiful of maidens in all of land south of the Vindyas.” That’s not even an exaggeration!

ஆகஸ்ட் 19th, 2011 at 12:28
  2  

எத்த​னை ​கோடி இன்பம் ​​வைத்தாய் இ​றைவா!!இந்த அற்புத அழகு வடிவங்க​ளைக் காணும் ​பேறு கி​டைத்தால் அ​தைவிட பரவசம் அளிக்கக் கூடியது என்ன உள்ளது. இந்தப் பதிவின் ​தொடர்ச்சி​யை ஆவலுடன் எதிர்பார்க்கி​றோம்.

ஆகஸ்ட் 19th, 2011 at 13:06
Sivaram Kannan
  3  

Beautiful. Still regret missing out that trip. Atleast I could enjoy a bit reading about it.

ஆகஸ்ட் 19th, 2011 at 13:12
sankaranarayanan
  4  

Dear Vj = Pl add the year also in posts so that people can undertsnad the antiquity. Rajasimha 700-729 helps us to undertsnad that it is 1300 year old painting.

ஆகஸ்ட் 19th, 2011 at 14:34
  5  

Lovely paintings recreated!! i am jealous! :)

ஆகஸ்ட் 19th, 2011 at 14:35
  6  

hi Shankar,

Thanks - infact the previous posts on Kanchi kailasanthar and even the shore temple dwelt much on the antiquity - and since they are hyper linked presume new readers might also be in the flow - trying to keep the size of posts down for online reading !!!

anbudan
vj

ஆகஸ்ட் 19th, 2011 at 14:45
  7  

thanks shash, siva - we knew the circumstances, that you could come to meet and send us off was itself a nice gesture, shri - wait for the next part ….

cheers
vj

ஆகஸ்ட் 19th, 2011 at 14:46
dev
  8  

பனை மலை - தாள கிரி
சுவாமி திருநாமம் ‘தாளகிரீசுவரர்’

பதிவு வேறொர் உலகுக்கு அழைத்துச் செல்கிறது.

பணியில் ஈடுபட்டோர் அனைவருக்கும் ஆசியும், பாராட்டுகளும்

தேவ்

ஆகஸ்ட் 19th, 2011 at 19:12
  9  

Dev sir,

The tamil virutal university refers to the spellings as cited in the post. Are your wrong as well?

rgds
vj

ஆகஸ்ட் 19th, 2011 at 19:22
injamvaven
  10  

Still hoping to see that hidden Umai to compare w this one. Beautiful job of reconstruction in the sketches, Subhashini. Maybe I’ll get there someday.

ஆகஸ்ட் 19th, 2011 at 19:42
injamvaven
  11  

in western guidebooks ‘Sengi’ is usually spelled ‘Gingee’, in case there’s any confusion

ஆகஸ்ட் 19th, 2011 at 19:47
dev
  12  

விஜய் சார்,

சரியான பெயர்கொண்ட உங்கள் பழைய பதிவைப் (24/01/2011) பாருங்கள் -

ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சித்திரங்கள்தான் ..ஆனால் !

சிலர் இயற்கையாகவே நேரில் இருப்பதை விட புகைப்படங்களில் பல மடங்கு அழகாக காட்சி அளிப்பர். அவர்களை ஆங்கிலத்தில் போடோசனிக் என்று அழைப்பார்கள். அதைப்போல ராஜசிம்ஹ பல்லவரின்
மல்லை கடற்க்கரை கோயில், *பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம்*, மற்றும் காஞ்சி கைலாயநாதர்
ஆலயம் - புகைப்படங்கள் எடுப்பதற்கென்றே கட்டி விட்டார் போலும்.

************************************

விழுப்புரம் வட்டத்தில், விழுப்புரம் - செஞ்சி செல்லும் சாலையில் நேமூர் என்ற ஊரிலிருந்து கிழக்கே
7 கி.மீ. தொலைவில் உள்ளது எசாலம். இவ்வூருக்கு அருகே பிரம்மதேசம், எண்ணாயிரம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்கள் அழகிய திருக்கோயில்களுடன் விளங்குகின்றன. மேலும் இவ்வூருக்கு அருகில் பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் மண்டகப்பட்டு, தளவானூர் ஆகிய ஊர்களில் உள்ளன.
பல்லவர் கால ஓவியங்கள் உள்ள *பனைமலை தாளகிரீசுவரர்* கோயிலும் அருகே அமைந்து இப்பகுதி முழுவதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் விளங்குகிறது.

http://tinyurl.com/3p6qfwz

********************************************

பனை மரம் - தால(ள) வ்ருக்ஷம்
ஓலைச் சுவடி - தாள கோசம்
பனை மலை - தாள கிரி

‘தாள முத்து’ என்றும் பெயர் உண்டு

’வரலாறு’ வலை மனையிலும் ’தலகிரி’ என்று தவறாகப்
பதிவாகியுள்ளது.

இணையத்தில் வெட்டி ஒட்டும் திருப்பணி மிகுதி; தவறாகப் பெயர்களைப் பதிவு செய்தால் அவை நிலைத்து விடும் அபாயம் உண்டு; சரியான பெயர்களில் தேடுவோருக்கும்
உங்கள் அரிய முயற்சிகள் தென்படாமல் போகும்.
அதனால்தான் திருத்தம் செய்கிறேன்.

தவறாக எண்ண வேண்டாம்

அன்புடன்
தேவ்

ஆகஸ்ட் 19th, 2011 at 23:01
  13  

thanks Dev sir, no issues. we are all learning and blessed to have people like you to guide us. will amend

anbudan
vj

ஆகஸ்ட் 20th, 2011 at 8:00
Ragavendar
  14  

Dear Vijay,

The region of NarasimhavarmanII (Rajasimha)
is 700-728 only. one of the friend in the above named sankaranarayanan mentioned 700-729 but it is wrong.

ஆகஸ்ட் 23rd, 2011 at 0:59
  15  

hi Ragavendar

Noted. Reigns of rulers are very unclear - more their last year of reign. Do note that Parameshwara II starts from 728 CE - but would you like to share how the dates of reigns of Narasimhavarman II been computed.

rgds
vj

ஆகஸ்ட் 23rd, 2011 at 7:58
Alexander Shechtman
  16  

Can you please write how Talagirishwara temple can be reached. The Google map does not give the location of Panamalai lake, only Gingee.

Thank you

செப்டம்பர் 7th, 2011 at 10:02
  17  

dear Mr Shechtman,

You can refer here

http://wikimapia.org/#lat=12.1042215&lon=79.3785918&z=17&l=0&m=b

http://wikimapia.org/9959900/Panamali-Thalagrieswar-Temple-Built-by-Pallavas

rgds
vj

செப்டம்பர் 7th, 2011 at 15:32
Ragavendar
  18  

Dear VJ,
As per your question for the region of
Narasimhavarma -II refer the book of (Pallavar varalaaru) by Maa.Raasamanikanar a great writer,history researcher and well educated person.He entirely researched the histoy of pallavas by their Copper plates and inscriptions and concluded the region of Rajasimha is 700-728.This has been accepted by many other researchees and scholars.

டிசம்பர் 26th, 2011 at 13:54
injamaven
  19  

Thanks, all, for the dates

மே 1st, 2012 at 19:50

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி