Quantcast

நண்பர் திரு. ஷங்கர் பல மாதங்களுக்கு முன் தான் குடைவரையில் பார்த்த ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் பெரிய அளவு படத்தை நேர்த்தியாக எடுத்து அனுப்பி வைத்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ அதை எடுத்துப் பார்க்க நேரம் அமையவே இல்லை. ஆனால் அதற்கு இப்படி ஒரு வேளை வரும் என்று நான் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை.

நண்பர் திரு. ராமன் அவர்கள் பழைய புத்தகக் கடை ஒன்றில் பழைய புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்த்தால் எனக்கு உதவும் போல தெரிகிறது என்றும் கூறினார். அது மட்டும் அல்லாமல் அதில் ஒன்றிரண்டை வருடி (ஸ்கான்) செய்தும் அனுப்பிவைத்தார். அதிலே ஒன்று அழகிய செப்புத் திருமேனி, மற்றொன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ஓவியப் படம், இரண்டுமே சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை!! இவற்றைப் பார்த்தவுடன் நிச்சயம் நமக்கு தேவை என்று அவரிடம் தெரிவித்தேன்.

சென்னை சென்ற சமயம் நானும், நண்பர் அரவிந்தும் அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வந்த பொழுது, சில படங்களின் பின்புறத்தில் திரு நந்திக்கரை என்று பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் பட்டன.

thirunandikkarai2

உடனே ஷங்கரை தொடர்பு கொண்டு சமீபத்தில் அவர் சென்ற பொழுது அவர் எடுத்து வந்த அத்தனைப் படங்களையும் கேட்டேன். அவரும் உடனே அனுப்பிவைத்தார். ( திரு நந்திக்கரை - கன்னியாக்குமரி மாவட்டம் - திருவட்டாரில் இருந்த சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு - நாகர்கோயிலில் இருந்து நாற்பது கிலோமீட்டர் )

cave+facade

குடைவரையில் தற்போதைய உட்புறத் தோற்றம். (முதல் முறை அவர் படம் அனுப்பிய பொழுது பார்க்க முடியாததன் காரணம் இனி உங்களுக்கு புரியும்)

faint+lines
inside+of+the+cave

குடைவரையின் காலம் 8th CE ( அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பைக் கொண்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படுகிறது )

provision+abolution+water
sanctum

கைவசம் இருந்தும் நான் முதல் முறை காணத்தவறிய சுவர் ஓவியம்

faint+lines
faint+relief
Ganesha+painting+outline

பழைய புத்தகக் கடையில் கிடைத்தப் படங்களை பார்த்தவுடன் திறந்தன என் விழிகள்

thirunandikkarai3
thirunandikkarai7
thirunandikkarai9

அழகான விநாயகர் ஓவியம், மேலே ஒரு அருமையான கணம் ( பார்த்தால் காஞ்சி கைலாசநாதர் ஓவியங்களின் பாணியிலேயே உள்ளது ) இருந்தும் சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் நாம் இழந்திருப்பது …

மற்றுமொரு ஓவியம் இருந்தது, அதற்கான பொருத்தத்தையும் தேட கிடைத்தது…

inside+of+the+cave
lost+portions
closeup
compare1
outlines

இப்பொழுது படங்களை பாருங்கள்..

thirunandikkarai5
thirunandikkarai8

என்ன அழகான அருமையான ஓவியங்கள். இந்த பொக்கிஷங்களை முறையாக பாதுகாக்காமல் இப்படி அழிய விட்டு விட்டோமே!

மேலும் இரண்டு ஓவியங்கள் படங்களில் உள்ளன. அனால் தற்போது குடைவரையில் காணக் கிடைக்கவில்லை.

thirunandikkarai1
thirunandikkarai6

இங்கே சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி என்னவென்று தெரியவில்லை.

இந்த குடைவரையில் மேலும் ஒரு சரித்திர நிகழ்வின் முக்கிய தடயமும் உள்ளது.

inscription+left
inscription+leftside
inscription+right
inscription+rightside

உடையார் ஸ்ரீ இராஜ ராஜ சோழர் பிறந்தது ஐப்பசி சதயமா அல்லது சித்திரை சதயமா என்ற விவாதம் சில காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், தங்கள் திருவாரூர் நூலில் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டைக் கொண்டு இதனை தெளிவு படுத்தி உள்ளார். அது திரு இராஜேந்திர சோழரின் கல்வெட்டு, அதில்

” நாம் பிறந்த ஆடி திருவாதிரையும்
நம் அய்யன் பிறந்தருளிய ஐப்பசி சதயமும் .. ”

inscription
kbsir+article

என்று வருகிறது.

இந்த திரு நந்திக்கரை குடவரையில் உள்ள திரு ராஜ ராஜரின் கல்வெட்டு


185. On the east wall of the rock-cut iva shrine. Belongs to
the eighteenth year of Rajaraja I and records grant to the temple
for the celebration of a festival in Aippasi, Satabhisha, the birth-
day of the king. See Trav. Arch. Ser. t Vol. I, pp. 291-2.”

தான் பிறந்தது ஐப்பசி தான் என்று தெளிவு பட எடுத்துக் கூறுகிறது.

இந்த ஓவியத்தின் புகைப்படங்களுக்கு உரியவர் யார்? அவை எப்படி பழைய புத்தகக் கடைக்கு சென்றன என்பது தெரியவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொள்ளவும்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 8th, 2012 அன்று 19:00 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 8 மறுமொழிகள்

Pandiyan
  1  

//இந்த பொக்கிஷங்களை முறையாக பாதுகாக்காமல் இப்படி அழிய விட்டு விட்டோமே!
ஆம். நம் கைகளாலேயே நம் கண்களைக் குத்திக் கொண்டது போல உணர்கிறேன்.

//” நாம் பிறந்த ஆடி திருவாதிரையும்
நம் அய்யர் பிறந்தருளிய ஐப்பசி சதயமும் .. ”
ராஜேந்திரர் பிறந்தது ஆடி திருவாதிரையா? சதாசிவ பண்டாரத்தாரின் ‘பிற்கால சோழர் வரலாறு’ புத்தகத்தில் மார்கழி திருவாதிரை என படித்த ஞாபகம்.

ஜனவரி 9th, 2012 at 17:18
விஷ்வஸேனன்
  2  

அன்பு விஜய், ஓவியமும் விவரங்களும் அருமை. ஆனால் ஓவியம் அத்தனை தெளிவாகத் தெரியவில்லை. என் பார்வைக் கோளாறு என்று நினைக்கிறேன். சரி, ராஜேந்திரன நட்சத்திரம் திருவாதிரைதான் ஆனால் மாதம் ஆடியா? மார்கழி என்று திருவொற்றியூர் கல்வெட்டு சொல்கிறதே. கொஞ்சம் எனக்குத் தெளிவுபடுத்துங்களேன்

ஜனவரி 9th, 2012 at 18:36
Ram
  3  

ur discovery is great there are lots of Raja Raja Cholan’s details in Nenjil Nadu hope one day will uncover them

ஜனவரி 9th, 2012 at 18:42
  4  

Dear Raj and Viswaksenan sir,

I will check the ref once again for Rajendra’s. reg the paintings - click on the images in the post, they will expand to their full size

rgds
vj

ஜனவரி 9th, 2012 at 18:56
  5  

Thanks to Sps sir and PS groups, have updated the post with the information - Raj/Viswaksenan sir

rgds
vj

ஜனவரி 9th, 2012 at 19:11
Ayyampet Balachandran
  6  

Dear Vijay,
What a great loss to our treasure .Please display other photos to our POETRY STONE.
- Ayyampet Balachandran

ஜனவரி 11th, 2012 at 21:46
Kathie
  7  

great, scholarly work going on here!
too bad the painting’s almost totally gone

ஜனவரி 19th, 2012 at 17:08
ragavendar
  8  

Dear vijay and friends,
Like the above place thirunanthikarai we have lost lot of golden and precious places in our state,goverment has to take necessary steps to protect these monuments and has to create a new website about these places and has to create toursim to these places so that many will get employment.Local peoples has no aware of these places thats why these places been totally lost, so goverment has to create awarness on these places.

ஜனவரி 29th, 2012 at 12:50

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி