Quantcast

அளவுக்கு மீறினால் அமிர்தமும் கெடுதிதான்…ஒருவேளை நமது நாட்டின் கலை பொக்கிஷங்களின் அவல நிலைக்கும் இது தான் காரணமோ? வேறெப்படி தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்றும் இன்றோ நாளையோ என்று தத்தளிக்கும் சேரன்மாதேவி ராமஸ்வாமி கோயிலின் நிலையை சொல்வது? நிகரிலி சோழ விண்ணகர் - இணையற்ற விண்ணகர் என்ற பெயர்கொண்ட இந்த அற்புத ஆலயம் கூடிய விரைவில் இடிந்து விழுந்தது என்ற செய்தியை பதிப்பிக்க பல நாளேடுகள் போட்டி போடும், பலர் தங்கள் ஆதங்கத்தை ஊடகங்களில் வெளிப்படுத்துவார்கள், அரசாங்கம் ஒரு குழு அமைக்கும் ….ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ வழக்கப்படி எல்லோரும் எல்லாம் மறந்து மீண்டும் வெற்றி நடிகனின் நூறாவது படம், நடிகையின் கிசு கிசு என்று ” இயல்பான ” வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம். இழப்பு யாருக்கு ? வரும் சந்ததியினரின் சொத்து இது, சிதைய விட யார் நமக்கு உரிமையை கொடுத்தது ?

வெளியில் அனுமனின் சிலை, வாய்பொத்தி அண்ணலின் அணைப்பின் பூரிப்பில் நின்றது. எனினும் உள்ளே போனபோது வெறும் சிலை வடிவமாக பார்த்த எங்களுக்கு வெளியில் வரும்போது சிலை வேறு விதமாக பேசியது.

entrance+pillar+sculpture
rama+hanuman

உள்ளே நுழைந்தவுடன் வெளி பிரஹாரம் ஒன்றும் விசேஷமாக இல்லை, பல ஆலயங்களில் பார்த்த காட்சி போல தான் இருந்தது.

entrance

உள்ளே செல்லச் செல்ல, கண் முன்னே தோன்றிய காட்சிகள் பிரமிக்க வைத்தன.

Vimana+right
main+vimana+consort+shrine
view

தினம் தினம் காணும் காட்சி அல்லவே - பத்தாம் நூற்றாண்டிற்கும் முந்தைய பாண்டிய விமானம் எந்த வித பின்னாளைய ” புதிப்பிப்பும் ” அல்லாமல் பார்ப்பது மிகவும் கடினம்.

நண்பர் பிரதீப் முன்னரே உதவியதால் எவைகளைப் பார்க்கவேண்டும் என்பதும், மற்றும் அங்கே ஊர் நபர்களின் உதவியும் எளிதில் கிடைத்தது.

அஷ்டாங்க விமானம் - ஒரு சிலவே தமிழ் நாட்டில் உள்ளன. பெருமாள் நின்ற கோலம், அமர்த்த கோலம், கிடந்த கோலம் என்று காட்சி அளிக்கும் மூன்று தள விமானம்.

நின்ற கோலம் மட்டுமே இன்று வழிபாட்டில் உள்ளது. அங்கே அற்புத செப்புத்திருமேனிகளை தரிசித்தோம்.

mainshrine+bronzes
ramar

மேலே செல்கிறீர்களா என்று சற்று தயக்கத்தோடு கேள்வி வந்ததன் அர்த்தம், குறுகிய படி , மற்றும் சட சட வென படையெடுத்த வவ்வால்களின் கூட்டம் புரிய வைத்தது.

stairs

வீட்டு மாடியிலும் நவீன உணவகங்களிலும் உயரத்தே பார்த்த தோட்டம் நமக்கு இங்கே விமானத்தில் உள்ள தோட்டத்தை பார்த்து பகீர் என்றது

trees+everywhere+on+vimana
urgent+need+for+repairs
vegetation
vimana
roof+garden

உள்ளே இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது

only+support

மேலே உள்ள முக்கிய தூண் உடைந்து அதன் பாரத்தை ஒரு மரத் தூண் தாங்கி நின்றது. அது உடைந்தால் என்ன நடக்குமோ ?

only+support+beam+cracked

ஆனால் இதை அனைத்தையும் பொருட்படுத்தாமல் உள்ளே அமைதியாக தம்பதிகள் சமேத அமர்ந்திருந்த சுதையாலான சுவாமி- ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சிலைகளை கண்டு மிரண்டு தான் போனோம். ( சுதை - எளிதாக சரி செய்து விடலாம் - யாராவது உதவ முன்வர வேண்டுமே )

seated+first+floor

என்ன அருமையான வேலைப்பாடு, வண்ணம் மிக்க சுதை வடிவங்கள்.

devi+painting+outlines
intricate+stucco+work
perumal

இன்னும் ஒரு தளம் மேலே ஏறினோம். ஆஹா, இங்கு ஆனந்தமாக பள்ளிகொண்ட பெருமாள். தேவிகள் இருவர் முகத்தில் மட்டும் எதோ ஒரு கவலை தெரிந்தது ?

top+tier+sesha+sayana
sayana+perumal

திரும்ப வெளியில் வரும்போது மறுபடியும் ஹனுமனை பார்க்கும்போது - ஏதாவது செய்யுங்கள் என்று தன அண்ணலுக்கு தெரியாமல் சொல்வது போல ஒரு எண்ணம். எதற்காக அப்படி …அவர் காதில் விழுந்தால் பதில் …” எனக்கு உலகமடா !!” என்றல்லவோ இருக்கும்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, ஜனவரி 13th, 2012 அன்று 14:40 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 12 மறுமொழிகள்

Pradeep
  1  

http://www.thehindu.com/arts/history-and-culture/article2369180.ece

ஜனவரி 13th, 2012 at 14:49
  2  

hi pradeep, i have already linked ur article link

rgds
vj

ஜனவரி 13th, 2012 at 14:57
  3  

Really Sad state of affairs. “Too much is too many…maybe it the bane of our heritage treasures” Seems very appropriate.

Dont feel the importance till we loose it forever

ஜனவரி 13th, 2012 at 15:08
vishwksenan
  4  

Dear Vijay. There is one Rathnavel Pandian Centre of Arts and Culture which was founded by Justice Rthnavel Pandian who takes more care about Thirupudaimaruthur Temple. If we found someone who can take this matter to the Centre and request some thing can be done to save the temple, instead of requesting HR and CE.

ஜனவரி 13th, 2012 at 20:04
  5  

Truly, what a beautiful temple. and how dreadful that it will just disappear bit by bit. This is the story of many of our temples - many in villages, where the Lord is spared and offered hardly a glass of milk. There should be some sort of heritage protection, by HRCE too, other than just sealing the undiyal poottu.

ஜனவரி 14th, 2012 at 11:14
Ram
  6  

May we write to ASI for thier support i think its only way possible or to TVS Trust

ஜனவரி 14th, 2012 at 12:07
Kannan
  7  

Thank you for writing about this ramaswamy temple. Our forefathers worshipped there and we go there atleast once a year.. loved it every time.. lots of parrots as well!
we couldnt go around the temple as there were too many bushes..
Thanks again vijay, hats off for all your work..

ஜனவரி 14th, 2012 at 14:52
Kathie
  8  

lovely Ramar and pillar murthis

ஜனவரி 15th, 2012 at 20:00
Ayyampet Balachandran
  9  

“இணையற்ற விண்ணகர் என்ற பெயர்கொண்ட இந்த அற்புத ஆலயம் கூடிய விரைவில் இடிந்து விழுந்தது என்ற செய்தியை பதிப்பிக்க பல நாளேடுகள் போட்டி போடும், பலர் தங்கள் ஆதங்கத்தை ஊடகங்களில் வெளிப்படுத்துவார்கள், அரசாங்கம் ஒரு குழு அமைக்கும் ….ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ வழக்கப்படி எல்லோரும் எல்லாம் மறந்து மீண்டும் வெற்றி நடிகனின் நூறாவது படம், நடிகையின் கிசு கிசு என்று ” இயல்பான ” வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்” தங்களது சால்லொண்ண துயரத்தை அந்த பெருமாள் உணர்ந்து ஏதேனும் செய்ய மாட்டாரா? விஐய்க்கு பெருமாளே அருள்புரியும்.

ஜனவரி 16th, 2012 at 22:44
  10  

What a beautiful temple and really beautiful pictures too.

பெப்ரவரி 4th, 2012 at 4:00
Alwarappan
  11  

first time i saw u r blog

ஏப்ரல் 9th, 2012 at 19:29
Uma
  12  

Please send this information to Chief Minister of Tamil Nadu. Something good may happen to the temple..

ஏப்ரல் 19th, 2012 at 18:01

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி