Quantcast

இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் ரியாலிட்டி ஷோ, டாலேண்ட் ஷோ என்று களை கட்டுகிறது. பலர் தங்கள் திறமைகளை வெளிக் காட்டி பலருடன் போட்டியிட்டு வெற்றி பரிசைத் தட்டி செல்வதென்பது கலைக்கும் வெற்றியே. அப்படி தூண்களை வடிப்பதில் ஒரு போட்டி வைத்தால் ? அப்படி ஒரு அணிவகுப்பை நாம் இன்று பார்க்கப் போகிறோம். நண்பர் அரவிந்துடன் நெல்லை சென்ற பொது நெல்லையப்பர் ஆலயத்தில் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் தான் சென்றோம். ( இருட்டுக்கடை மூடி இருந்தது !)

nellaiappar+sanctum

வெளித்தோற்றத்தில் வாயிற் காவலர்கள் ( ஆலயம் ஏழாம் நூற்றாண்டாக இருந்தாலும் நாம் பார்க்கும் தூண்களின் காலம் சுமார் பதினைந்தாம் நூற்றாண்டு / அதற்கு மேல் -) சுமார் தான் என்று சொல்ல வாய் எடுத்த பொது …

doorguardian

முழு வடிவம் கண்டு வாய் அடைத்துப் போனோம்.

doorguardian+left
monolith

ஒரே கால்லால் ஆன தூண் - இல்லை இல்லை தூண்கள் கொண்ட சிற்பம். ஒவ்வொரு தூண் வடிவமும் ஒரு விதம் - ஒரு தூண் அல்ல. வினோத தூண்களின் அணிவகுப்பு என்றே சொல்ல வேண்டும்.

row+pillars

அதிலும் இவை தான் புகழ் பெற்ற நாத தூண்கள் ! இத்தனை காலம் பக்தர்கள் பலரின் பலப்பரிட்சையை வென்று சங்கீதம் எழுப்பும் தூண்கள்.

massive

ராட்சஸ தூண்கள் என்றால் இவை தானோ !

size

அளவால் மட்டும் சொல்ல வில்லை, வேலைப்பாட்டைப் பாருங்கள்.மயக்குகிறது.

cluster
design
different+shapes
pillar+cluster

இவை ஒரே கல் என்றால் நம்ப முடியவில்லையா ? நன்றாகப் பாருங்கள் - கல்லில் ஓடும் நரம்புகள் தெளிவாக தெரிகின்றன.

grain+of+stone
stone+grain

பார்த்துக் களைத்து இருந்த பொது இன்னும் சில கண்ணில் பட்டன. ஆஹா, இவை அந்த ராட்சஸ தூண்களுக்கு சளைத்தவையல்ல என்று நகர எத்தனிக்கும்போது

simple

.

mind+boggling

நல்ல கச்சேரியில் வித்வான் கடைசியில் தன்னுடைய சிக்நேசர் தில்லானா பாடி கைதட்டுதல் பெறுவது போல ஒன்றிரண்டு இங்கும்..

தூணின் அடியில் பாருங்கள்.

something

கல்லை ஒவ்வொரு சிறு தூண் வடிவமாகக் குடையும் போதே, நடுவில் கொஞ்சம் விட்டு அதனை ஒரு பந்து போல செதுக்கி உள்ளான் ( உருளி !!) - இதனை வெளியில் எடுக்க முடியாது ( உள்ளேயும் போட முடியாது !!)

stone+ball

இரண்டு என்று சொன்னேனே ! இதோ

mind+boggling

கண்டுபிடித்தீர்களா ?

designer+pillar
designer+pillar+notice

பெரிய கல்லில் எண்ணில் அடங்கா சிறு தூண்களை , அதுவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் , அதுவும் வெவ்வேறு சங்கீத ஒலிகளை எழுப்பும் வண்ணம் செதுக்குவது போதாது என்று அந்த மகாகலைஞன் உள் தூண் ஒன்றில் ஒரு சிறு அணிலை செதுக்கி நம்மை ஆச்சரியத்தில் ஸ்தம்பிக்க வைத்தான். தூண் போல நாமும் பல மணிநேரம் கழிந்தது தெரியாமல் நின்றோம்.

stone+squirrel

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஜனவரி 19th, 2012 அன்று 16:27 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 22 மறுமொழிகள்

Kathie
  1  

that really is amazing. Do they let you test the musical pillars? Play a tune?
It’s a little like building a ship in a bottle, I think. Love the squirrel!

ஜனவரி 19th, 2012 at 16:59
vishwaksenan
  2  

அற்புதம், பிரமிப்புத்தான் உண்மையில். அந்த சிற்பிக்கு எத்தனை கொடுத்தாலும் தகும். எப்படிப் பட்ட கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள் இந்தத் தமிழகத்தில்? நெல்லைக்குச் சென்றும் இதைக் காணாமல் வந்தது பற்றி இப்போது வருத்தம்தான்.

ஜனவரி 19th, 2012 at 19:50
Chris
  3  

As usual, very nice article Vijay, thanks for all your blogs with so much information. Is there any name for the stones that make these different metalic sound? We used to have an old Chola temple in a neighbouring village(Kandirathirtham, near Thiru Mazhapaadi)) with statues that make different sound on different parts of it’s body.

Regards
Chris

ஜனவரி 19th, 2012 at 21:13
Ayyampet Balachandran
  4  

அன்பு நண்புர் விஐய்,
நாம் பார்க்கும் தூண்களின் காலம் சுமார் பதினைந்தாம் நூற்றாண்டு / அதற்கு மேல் என்று குறிப்பிட்டு விட்டு, அதை கட்டிய அரசுர்கள் பெயர் குறிபிடாதது சற்று ஏமாற்றமாகவுள்ளது. தயை செய்து பெயர் குறிபிடுங்கள்-Ayyampet Balachandran.

ஜனவரி 19th, 2012 at 21:56
Ayyampet Balachandran
  5  

அன்பு நண்புர் விஐய்,
நாம் பார்க்கும் தூண்களின் காலம் சுமார் பதினைந்தாம் நூற்றாண்டு / அதற்கு மேல் என்று குறிப்பிட்டு விட்டு, அதை கட்டிய அரசர்கள் பெயர் குறிபிடாதது சற்று ஏமாற்றமாகவுள்ளது. தயை செய்து பெயர் குறிபிடுங்கள்-Ayyampet Balachandran.

ஜனவரி 19th, 2012 at 21:57
Muthu Muthusubramanyam
  6  

You said: “the sight below us away”; did you mean to say “the sight blew us away”?

ஜனவரி 19th, 2012 at 22:52
Parvadha Vardhini
  7  

அரு​மை அரு​மை! தூண்களும் அரு​மை, அ​தை நீங்கள் எடுத்துக் காட்டிய விதமும் மிக அரு​மை!!!

ஜனவரி 20th, 2012 at 0:02
  8  

Thanks Mr Muthu. hv amended ( auto spell checkers !! playing havoc)

rgds
vj

ஜனவரி 20th, 2012 at 5:01
rhoda
  9  

நானும் போனேன் ஆனால் அனில் பார்க்கலையே !!! Awesome post…yep the pillars are astounding there :-)

ஜனவரி 20th, 2012 at 9:55
  10  

Dear Chris,

Quote from” Indian sculpture n iconography - by Sri Ganapthy stapathi” - Stones of good quality, without blemish, may be quarried from mountains, picked up near the sea, near river beds, in sacred spots, in forests, near temples, or near teans. Stones with white or golden streaks are auspicious. It is essential that the stone has resonance: non- resonant stones should be totally discarded. Stones which emit a long, deep sound like that of a bell are known as male stones or aan silai, and this kind is used for making the linga nala. Stones which have a long vibration like that of a brass vessel are called female stones or penn silai, and these may be used for making the shakti part or the pedestal ( avaudaiyar) below the lingam. Stones that are crude and uneven, with little resonance, are called neutral stones or ali silai. These may be used only to make the lowest part of the lingam known as adara silai or Brahma silai. This Brahma silai encloses the Brahma bhagam of the Lingam which is set under the level of avudaiyar, at the floor level of the sanctum. In case neutral stones are not available, the entire lingam, including the Brahma silai can be made of male and female stones”.

So the resonance of stones was an essential part of selection process not only of the material but also the subject to be carved. The musical pillars are an extension of this tradition where the inherent quality of the stone are enhanced by their metrics.

rgds
vj

ஜனவரி 20th, 2012 at 9:58
  11  

dear Balachandran,

The core sanctum has been sung - so the popular version is to date the whole complex to the 7th C CE. There are inscriptions ( chola?) between the 10th and 12th C CE around the sanctum. But the pillar styling and design was a trend that did not exist in that period. The earliest date would be around 1560 which would give it Nayak patronage.

rgds
vj

ஜனவரி 20th, 2012 at 11:25
  12  

Wonderful! I didn’t notice the balls or the squirrel (weren’t pointed out by our guide), when I saw these five years ago. Interestingly each set of pillars has a different instrument carved on it, and the each set of pillars sound out the sa ri ga ma pa da ni of that instrument. I could hear the variation in the dhvani, but the rest may be a factor of imagination. These musical pillars are common in Vijayanagar temples, including the Vithala temple in Hampi (which you’re not allowed to tap).

ஜனவரி 20th, 2012 at 12:00
Ayyampet Balachandran
  13  

அன்பு நண்புர் விஐய்,
மிக்க நன்றி.உடனடியாக தூண்களின் காலம் பற்றிய விவரமளிதற்கு-Ayyampet Balachandran.

ஜனவரி 20th, 2012 at 22:56
  14  

The design on these pillars are very similar to the ones I have seen in Hampi (vittala temple) and in Tirupathi (inner most prakara).
Am I right in concluding that these pillars must be attributed to vijayanagar sculptors (or Nayak Patrons) ? Also did you check to see if there is a hollow tunnel running all the way to the top to the pillar, maybe the ball was dropped into. :)

ஜனவரி 21st, 2012 at 9:18
  15  

hi Prasad,

True, defn not assignable to 7th C CE and to Neduseer Pandian as commonly quoted on the net. Btw, on the ball - this is also a favorite trick - we see it in Perur ( was there not there now) and even in one of the Yaali’s in Krishanpuram - called Uruli. To answer urs - the pillars are monolith and top and bottom are single piece - no way to introduce a stone ball from anywhere

rgds
vj

ஜனவரி 21st, 2012 at 18:57
dev
  16  

எசமான் ஒரு வளியா எங்கூரு பக்கம் பாக்க ஆரமிச்சிருக்காக; நெம்ப சந்தோசம்

தேவ்

ஜனவரி 23rd, 2012 at 14:35
Lalitha Raghupathy
  17  

Amazing.Unless Pointed I would not have noticed the beautiful Squirrel
Lalitha R

ஜனவரி 26th, 2012 at 20:24
  18  

Love the squirrel….you have a great blog here.

பெப்ரவரி 4th, 2012 at 3:48
  19  

thanks Janit. Keep visiting

பெப்ரவரி 22nd, 2012 at 16:29
Alwarappan
  20  

sir, i met you at this time

ஏப்ரல் 14th, 2012 at 11:46
Alwarappan
  21  

U r sit at suryan sannathi and draw the doorguardian meeting just 1 min at the time of pradhosam

ஏப்ரல் 14th, 2012 at 11:50
Kannan
  22  

Ur blogs are really great and useful…

ஏப்ரல் 27th, 2012 at 21:05

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி