Quantcast

பொதுவாக கோவில் கோபுரங்களில் சுதை வடிவங்களையே பார்க்க முடியும் - கல் சிற்பங்களை பார்ப்பது கடினம் - அதிலும் அரிய புராண கதைகளை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட சிறு புடைப்புச் சிற்பங்களை காண்பது மிக அரியது . அதனால் தான் திருக்குறுங்குடி கோயில் கோபுரத்தில் இப்படி ஒரு அரிய மகாபாரதக் கதையை கண்டபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

Thirukurungudi.jpg

இந்த முறை சென்றபோது புனரமைப்புப் பணிகளின் காரணமாக சவுக்கு சாரம் கட்டி இருந்ததால் நானும் அரவிந்தும் மேலே ஏறிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

Thirukarunkudi268

நாம் முன்னரே அங்கு உள்ள ஒரு அரிய கருடனின் கதையை பார்த்துள்ளோம். அதே போல இதுவும் ஒரு மிக அரிய வடிவம்.

அமர்சித்ரா கதைப் புத்தங்களில் படித்த நினைவு இருந்ததால் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இது வரை இதனைக் கல்லில் இப்படிச் செதுக்கி நாங்கள் பார்த்ததில்லை.

IMG-20120208-00111
IMG-20120208-00113
IMG-20120208-00114
IMG-20120208-00115
IMG-20120208-00116

இந்தக் கதை ஒரு பிற்சேர்க்கை என்றே நினைத்து வந்தேன்.

bhima+hanuman+tirukkurungudi

ஒரு சிறு குரங்கு போல அமர்ந்து இருக்கும் அனுமன், வலிமை வாய்ந்த பீமன் தனது கதாயுதத்தால் ஏதோ ஒரு சிறு குச்சியை வழியில் இருந்து ஒதுக்குவது போல அனுமனின் வாலை தள்ளி விட முயற்சி செய்கிறான்.

என்ன கதை இது ?

பீமன், திரௌபதிக்காக சௌகந்திக மலரைக் கொண்டுவரச் செல்கிறான் . அப்போது வழியில் ஒரு குரங்கு படுத்துக் கிடப்தை காண்கிறான். குரங்கின் வால் தனது பாதையில் குறுக்கே இருப்பதை கண்டு வாலை நகர்த்துமாறு குரங்கை அதட்டுகிறான். பீமனுக்கு தனது உடல் பலத்தில் இருந்த பெரும் நம்பிக்கை அங்கே ஆணவமாக மாறுகிறது. அதனை சரி செய்ய அனுமன் தன தம்பியுடன் விளையாடுகிறார்.

வயதானதால் தன வாலை தன்னால் நகர்த்திக்கொள்ள தனக்கு சக்தி போதவில்லை என்றும், முடிந்தால் பீமனை தாண்டி குதித்து செல்லச் சொல்கிறார் . மேலும் ஆத்திரம் அடைகிற பீமன் தாண்டி செல்ல மறுக்கிறான்.

நீ யார் என்று அனுமன் கேட்க, பீமன் , தான் குந்தியின் புதல்வன், சத்ரியன் என்றெல்லாம் சொல்கிறான்.

அப்போது என்னை எளிதாக நீ தாண்டி குதித்துவிட்டு போகலாமே என்று அவனை அனுமன் கிண்டல் செய்கிறார்.

அதை கேட்டு மிகவும் கோபம் அடைந்த பீமன், கடலையே தாண்டி குதித்த அனுமன் தனது அண்ணன் என்றும், இந்த சாதாரண வாலைத் தாண்டி குதிக்க ஒரு நொடி ஆகாது என்றும் கூறுகிறான்.

அப்படியானால் தன வாலை எடுத்து ஓரமாக ஒதுக்கி விட்டு செல்லுமாறு அனுமன் கூற, பீமன் வாலை நகர்த்த முயற்சிக்கிறான். தன முழு பலத்தை கொண்டு முயற்சித்தும் அவனால் அந்த வாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

எதிரில் இருப்பது வெறும் குரங்கு அல்ல என்று உணர்த்த பீமன், தன கர்வம் அடங்கி வணங்குகிறான்.

’நான் தான் உன் அண்ணன் அனுமன்’ என்று தனது விஸ்வரூபத்தை காட்டுகிறார் அனுமன். மேலும் பீமன் தேடி வந்த மலரை அடைய எளிய வழி ஒன்றையும் கூறுகிறார். தன அண்ணன் தன்னை அணைக்கும்போது பீமன் தன உடல் புத்துணர்வு பெறுவதை உணர்கிறான். அனுமன் அவனுக்கு வரம் அளிக்கிறார். தாம் மேற்கொள்ளும் மகாபாரதப் போரில் தமதுகொவெற்றிக்கு உதவ வேண்டுகிறான் பீமன். அப்படியே அவரும் வரம் அளிக்கிறார். ”அர்ஜுனின் தேரின் மேலே பறக்கும் கொடியில் நானே அமர்ந்து உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருகிறேன்” என்று அனுமன் அபயம் அளிக்கிறார்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, பெப்ரவரி 13th, 2012 அன்று 12:52 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 6 மறுமொழிகள்

Karthik
  1  

As usual excellent vijay. does similar sculpture exist in angorwat ??

பெப்ரவரி 14th, 2012 at 10:50
Pravin
  2  

Beautiful story set in ageless stone. And captured by VJ for eternity in the internet!

பெப்ரவரி 15th, 2012 at 17:19
  3  

thanks Pravin

பெப்ரவரி 22nd, 2012 at 16:28
  4  

As far as i am aware, have not seen such depiction anywhere else. but will continue to search

பெப்ரவரி 22nd, 2012 at 16:28
  5  

You cannot get anything if you do nothing. Active college students approach everything. In fact, the essay writing service reached good social just because of years of experience.

பெப்ரவரி 25th, 2012 at 14:20
pk.karthik
  6  

Nice story Vijay.There is also a similar story on how Hanuman meets Arjuna and takes his posistion in the flag.Due to this Arjuna is also called Kapidwaja(Monkey Flag).I have read a story some where which states that Hanuman and Sanjaya witnessed the Gitoupadesa with Arjuna.

ஏப்ரல் 19th, 2012 at 21:30

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி