Quantcast

டிசம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு நானும் அரவிந்தும் ஒரு சுவாரசியமான பயணம் மேற்கொண்டோம். கார் போன போக்கில் சென்ற எங்களுக்கு பல சிதிலமடைந்த கோயில்கள் சோர்வூட்டின. அப்படி பல பக்தி ஷேத்ராடனங்களின் வரைபடத்தில் கூட இல்லாத கோவில்களில் ஒன்று புதுக்கோட்டை மூவர் கோயில் அருகில் இருக்கும் முசுகுந்தன் கோயில். செழுமையான பச்சை வயல்களுக்கு நடுவில் அமைந்த ஒரு அமைதியான கிராம சூழலில், அரை அடி ஆழ சேற்றில் முட்டி வரை இறங்கி கடினப்பட்டு சிற்பங்கள் எதுவுமே இல்லாத ஒரு தூண் மண்டபத்தை அடைந்தோம். இதற்கா இவ்வளவு சிரமப்பட்டோம் என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றோம். அந்த தூண்களின் வகைபடுத்தல், யாரோ சிக்கலான ஒரு புதிரை சேர்க்க முயற்சி செய்தது போல வெவ்வேறு கால, இடம் , பாணி என்று பல வித்தியாசமான தூண்களை ஒன்று சேர்த்து அமைத்திருப்பது புரிந்தது.

உள்ளே கருவறையானது இருட்டாகவும் ஈரமாகவும், எலிகள் நிறைந்தும் இருந்தது. அத்துடன் புகைப்பட கருவியின் ப்ளாஷ் தேவையான ஒளியை தர இயலவில்லை. இது போன்ற வசதியற்ற சூழலிலும், வெற்று வயிறிலும் என்னடா இப்படி புகைப்படம் எடுக்க கூட முடியவில்லையே என்று இப்படி அப்படி காமெராவை காட்டி கிளிக் செய்தபோது - அர்த்தமண்டபத்தின் ஒரு பகுதியை ஒளியேற்றியது. பார்ப்பதற்கு கனமான தூண் போன்ற ஒன்று ஒரு மணல் மூட்டையின் மீது இருப்பதாக புகைப்பட கருவியில் தெரிந்தது. மீண்டும் அருகில் சென்று இருட்டில் காமெராவை காட்டி படம் எடுத்தால் அங்கே..

muchukunda_linga

அங்கு வீற்றிருப்பது. பிரம்மாண்டமான ஒரு சிவலிங்கம்.

linga_muchukunda
size

மேன்மை ஸ்தபதி ஸ்ரீ உமாபதி ஆச்சார்யாவை அப்போது தான் சந்தித்து எனது அறியாமையால் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன் “அவரை பொறுத்த வரை சிற்ப வேலையில் எந்த உருவம் மிகவும் கடினமானது என்று”. உடனடியாக சற்றும் எதிர்பாராத பதில் வந்தது = “சிவலிங்கம்”. அவர் அப்போது தான் சிவலிங்க படிமவியலில் (Iconography) இரண்டு நாட்கள் அமர்வு நடத்தியதாக தெரிவித்தார். அவர் எங்களை கிண்டல் செய்கிறாரோ என்று சந்தேகம் வந்தது. சாதாரணமான ஒரு சிவலிங்கம் செய்வதில் என்ன சிரமம் இருக்க போகிறது! இந்த “சாதரணமான” உருவத்தின் மீது ஒரு பதிவை எழுதுவதற்கான துணிவை திரட்டி முடிவெடுக்க எனக்கு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது.

முதலில் ஹிந்து படிமவியலில் சர்ச்சைக்குரிய பாடம் இது என்பதால் நான் சிறிது துணிந்தும் கவனமாகவும் எழுத வேண்டியதாக இருக்கிறது. இந்தியா மட்டும் அல்லாது தென்மேற்கு ஆசிய நாடுகளில் - அதாவது மத்திய வியெட்னாம், கம்போடியா போன்ற நாடுகளிலும் பிரசித்தி பெற்று விளங்கும் இந்த உருவத்தில் அப்படி என்ன சிறப்பு? அதுவும் 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே இவை அங்கு பரவ காரணம் என்ன ! என்ன நம்ப முடியவில்லையா?

நான்கு அடி உயரத்தில் கம்பீரமாக நின்று அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் அந்த கற்தூண்? அருகில் சென்று நோக்கினால் தெரிகிறது - இது தூண் இல்லை சிவலிங்கம் என்றும், இந்த இடம் இந்திய அருங்காட்சியகம் இல்லை - ஹோ சீ மின்ஹ் , வியெட்னாம் அருங்காட்சியகத்தில் உள்ள 6ஆம் நூற்றாண்டு “பு நான்” காலத்தியது.

linga_vietnam

இது சிவலிங்கம் போன்று வியெட்னாமில் இருக்கும் ஒரு உருவம் அல்ல. ஆகம சாஸ்திரத்தின்படியும் படிமவியல் சட்டப்படியும், துல்லியமாக செதுக்கப்பட்ட சிவலிங்கமே. இங்கு நாம் பார்க்கும் லிங்கம் நம் ஊரில் கோவில்களில் உள்ள லிங்கம் போலவே ஆவுடை எனும் பீடத்துடன் தான் இருக்கிறது. மேலும், லிங்கத்தில் மூன்று பாகங்கள் இருக்கிறது. சதுரமாக இருக்கும் அடிப்பாகம் ப்ரஹ்ம பாகதயும், நடுவில் இருக்கும் எண்கோணமான பகுதி விஷ்ணு பாகத்தையும், உருளையாக இருக்கும் மேல் பகுதி ருத்ர பாகத்தையும் குறிக்கிறது. கீழே வட்டமாகவும் மேலே முட்டை வடிவத்திலும், நடுவில் துளையுடனும் இருக்கும் ஆவுடையுடன் சேர்க்கும் பொது ப்ரஹ்ம பாகம் ஆவுடையின் கீழேயும், விஷ்ணு பாகம் ஆவுடையின் உள்ளேயும், ருத்ர பாகம் ஆவுடையின் மேலே பார்க்க கூடிய வகையிலும் இருக்கும். இதன் அளவு, விகிதம் மற்றும் ப்ரஹ்ம சூத்திரத்தின் வரிகள் எழுதபட்டிருக்கும் நுணுக்கங்களைஆய்வு செய்ய சுவாரசியமாக இருக்கும் போதிலும், இந்த லிங்கத்தின் ப்ரஹ்ம பாகத்தின் மேலே ஒரு முகம் செதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற லிங்கங்கள் முகலிங்கம் என்பார்கள். பொதுவாக வட இந்தியாவில் இதை போல வடிவங்களை நாம் பார்க்க இயலும் ( ஆனால் அங்கே முகம் இன்னும் பெரிதாக இருக்கும் ), வட ஆந்திராவில் பஞ்ச ஆராம லிங்கங்கள் இப்படிப்பட்டவைதான் (சாமல்கோட், திராட்சாராமம், பீமாவரம், அமராவதி போன்ற தலங்கள்)

இன்னும் நாம் தலைப்புக்கே வரவில்லையே ! உலகிலேயே மிக பழமையான லிங்கங்களில் ஒன்று பிரசித்தி பெற்ற திருப்பதி அருகில் உள்ள காளஹஸ்தியிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடிமல்லம் என்ற இடத்தில உள்ளது. சுமார் 2nd C BCE இருந்து 1st C BCE காலத்தை சேர்ந்த வசீகரமான இந்த லிங்கம் சரியாக 5 அடி உயரம் கொண்டது. வெறும் லிங்கம் மட்டும் இல்லை, அதில் நம்மை வியக்க வைக்கும் சிற்பங்களும் உண்டு.

sanctum

கூர்ந்து கவனிப்போருக்கு இது ஒரு மிக பழமையான தூங்கானை ( கஜ ப்ரிஷ்டம்) வடிவ கருவறை என்பதை புரியும். (இருப்பினும் கோவிலை காட்டிலும் லிங்கம் பழமையானது)

1973-74 இல் வெளியான ASI Review வின் புகைப்படம் ஒன்றை உங்களுக்கு வைக்கிறேன். அதில் தெரியும் லிங்கத்தின் கீழ் பகுதி அப்போது நயமற்ற ஒரு ஆவுடையாரால் மறைக்கப்பட்டு இருப்பது தெரியும். இதுவே அந்த உருவம் பரசுராமர் என்ற ஸ்தல புராணம் உருவாக காரணமாக இருந்து இருக்காலம். .

asi review 1973-74

அந்த புராணங்களை முழுவதுமாக தூக்கி போட முடியாத வகையாக அந்த உருவம் வலது கரத்தில் (செம்மறி ??)ஆடு ஒன்றை அதன் பின்னன்கால்களிலும், சிறிய வாய் கொண்ட சொம்பு ஒன்றை இடது கையிலும் பிடித்து இருப்பதாய் இருக்கிறது. ஒரு கோடரி இடது தோளிலும் தொங்குகிறது.

siva

ஆயினும் அறிஞர்களின் ஒருமனதாக கருத்து - இது ஒரு விகாரமான ராட்சசன் மீது நிற்கும் சிவன் என்பதே (கோடரியும் - பரசு அவர் ஆயுதமும் தானே ). அந்த ராட்சசன் மண்டியிட்டவாறும் தனது எடையை கால் முட்டி மீது கைகளை பதித்து தாங்கி நிற்கிறான். இவன் முகம் நாம் நடராஜர் இடத்தில் பார்க்கும் அந்த அழகிய முயலகன் போன்று காணப்படவில்லை - வௌவால் போன்ற காதுகளும், கன்னங்களில் ஆழமான கோடுகளுடன் பற்களை காட்டி கோராமாக இருக்கிறான். ஆனால் அவன் சிகை அலங்காரமும் அணிகலன்களும் அருமையாக செதுக்கப்பட்டு இருக்கிறது.

muyalagan

இந்து படிமவியல் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முதன்மை நூலாய் இருக்கும் திரு கோபிநாத் ராவ் அவர்களின் Elements of Hindu Iconography நூலிலிருந்து இந்த அறிய உருவத்தையும், அணிகலன்களை பற்றியும் வடிவமைப்பை பற்றியும் ஆராய சில படங்களை உபயோக படுத்துகிறேன்.

ornamentation_gopinath_rao

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பழமையான லிங்கமானது நிச்சயமாக ஒரு ஆண் குறி வடிவம் தான்.

gopinath_rao
guimallam_linga
reverse

அந்த தண்டு ஏன் ஏழு பட்டைகளை கொண்டுள்ளது என்பதும் நாம் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய ஒன்றே.

பின்னங்கால்களை கொண்டு ஒரு (செம்மறி??) ஆட்டினை பிடித்து இருக்கும் இந்த தனிப்பட்ட விதம், இதை வேட்டை ஆடப்பட்ட மிருகமாகவும், பிற்காலங்களில் இருக்கும் மான் இல்லை என முடிவு செய்ய வைக்கிறது. மேலும் ஆர்வமூட்டுவது இடுப்பில் ஆடை (மிருக தோல் இல்லை !) இருக்கும்போதிலும், ஆண் குறியை நன்றாக பார்க்க முடிகிறது. அந்த ஆடை மெல்லியதானதாக இருக்கக்கூடும் என்பது பொதுவான கருத்து. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று ஆண் குறி ஊர்த்துவ முகமாக இல்லை. (இதற்கு உங்களில் சிலர் கூகுளார் உதவியை நாட போகிறீர்கள் தானே !)

இந்த வடிவம் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பொதுவாக தென்னிந்தியாவில் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்து வடிவங்கள் கிடைப்பதில்லை. இதற்குப் பொதுவாக சொல்லப்படும் காரணம் கல் ஈம சடங்குளுடன் சார்ந்து இருப்பதால் அதுவரை கல் கொண்டு சாமி சிலைகள் செய்வது இல்லை என்பதே. மரம் அல்லது சுதையால் தான் செய்தார்கள் - அப்படி செய்த வடிவங்கள் சில காலம் மட்டுமே இருக்கும். அப்படி இருக்க இந்த வடிவம் இந்த கால வரைக்கு சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே எப்படி செதுக்கப்பட்டது? மேலும் செதுக்கிய வடிவத்தின் அழகு, முறை கொண்டு பார்க்கும் பொது ஒரு மேலான கலை தெரிகிறது. இது ஒன்றும் ஏனோ தானோ என்று யாரோ சும்மா ஒரு கல்லை எடுத்து விளையாட்டிற்கு செதுக்கிய சிலை அல்ல - கைத் தேர்ந்த சிற்பி ஏதோ சில பல விதிகளை கொண்டு செதுக்கிய சிலை.

மேலும் முதன் முதலில் யார் சிவனின் முகத்தை பார்த்தாலும் மனதில் எழும் கேள்வி - இது நம்ம ஊரு சிலை போல இல்லையே என்பது தான். அப்படி இருந்தால் இது எங்கிருந்து வந்தது?

இன்னும் பல கேள்விகள் உங்கள் மனதில் எழும் என்பது உறுதி - கண்டிப்பாக பின்னூட்டமாக போடுங்கள்…

படங்கள் நன்றி : திரு. வசந்தா பெர்னாண்டோ , திரு காமன் பலம் மற்றும் ASI Review 1973 -74 and Elements of Hindu Iconography

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: ,

தொடர்புடைய இடுகைகள்:

காண்பிக்க பதிவுகள் ஏதும் இல்லை.

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, மார்ச் 6th, 2013 அன்று 11:08 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 12 மறுமொழிகள்

  1  

/// இந்த “சாதரணமான” உருவத்தின் மீது ஒரு பதிவை எழுதுவதற்கான துணிவை திரட்டி முடிவெடுக்க எனக்கு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது. ///

இது மேலும் வியப்பை தருகிறது…

மார்ச் 6th, 2013 at 13:09
injamaven
  2  

Looks a lot like Bharhut style, doesn’t it. Great post!

மார்ச் 6th, 2013 at 19:24
GRS
  3  

What are your thoughts on Greek and Baudha influence on Hindus to create temples?

மார்ச் 10th, 2013 at 3:46
Satish
  4  

Comparing Linga with Phallus is a western concept which, unfortunately many of us have accepted. I dont buy in this as the westerners do not have any insight into our philosophy. Linga is the representation of Jothiswaroopam, the all luminous, formless form of the Brahmam. Hope all of us know the Lingothbhava concept, where Shiva stands as a pillar of fire and Brahma and Vishnu goes in search of his head and feet. Even today, Linghothbhava has the shiva form depicted inside a linga, which is representation of the supreme in human form insite the pillar of fire (or jothi or whatever we want to call). The cut in the Linga form is just a representation and if it resembles a phallus, its a coincidence.

Coming to the article, its wonderful and thanks a lot for the pictures..I have heard about Gudimallam but never got my eyes on this beautiful linga. This again proves my above statement. Mr. Gopinaths representation has the cross section shown with seven sides. And its unfortunate that you have said that

“It is important to notice that this early Linga is definitely a representation of a Phallus”

Agni is represented with Seven hands, and said to have seven tongues. Sun is said to have seven horses. All these are depiction of the seven colours of light and I will rather go with the seven sides of the lingam to represent the agni form rather than the phallus.

Regards,
Satish

மார்ச் 14th, 2013 at 12:25
  5  

[...] Shiva Rathri was just over, it is a good time to look into the iconography of the Shivalingam at Gudimallam For starters it is the most controversial of subjects in Hindu Iconography and being very much the [...]

மார்ச் 15th, 2013 at 12:32
தேவ்
  6  

சிவபெருமானுக்குரிய வில் ‘பிநாகம்’;
புராணம் அவரைப் பிநாக பாணியாகக் காட்டுகிறது.
‘நமஸ்தே அஸ்து தந்வநே’ - ருத்ர ப்ரச்நம்.
சிமைய நெடுஞ்சிலை உடைய பரம்பொருளாகச் சைவர் சிவனை வழிபடுகின்றனர். ஆக லிங்கத்தில் இருப்பவரைச் சிவபெருமானாகவே கருத இடமுள்ளது

தேவ்

ஏப்ரல் 1st, 2013 at 17:48
Prabhakar
  7  

Good one Vijay… such a passion in sculptures.. thnx fr sharing :)

ஜூன் 28th, 2013 at 18:18
Selvaraj V M Muthuraja
  8  

Revered Sir, Need to get in touch with you
for guidance in making maragatha
Somaskanda linga. Grateful for an email
from you, so that I can write back in detail.
Thank you for the privilege of your time.
Selvaraj M

டிசம்பர் 31st, 2013 at 20:51
k
  9  

அருட் பெரும் ஜோதி
pillar of fire…that’s what it means and not a phallus.

It’s only sad to see even people like are mislead under western influence and know completely nothing about our religion.

பெப்ரவரி 7th, 2014 at 23:04
  10  

சிவன் தனது மகன் முருகன் பிறப்பதற்கு முன்னரே தேவர்களால் எச்சரிக்கப்பட்டான் என்பதை மாபாரதமும் இராமாயணமும் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பரசுராமனே சிவன் என்படற்கும் பல சான்றுகள் உள்ளன. பரிபாடலும் கலித்தொகையும் பிற பாடல்களும்கூட உறுதிப்படுத்துகின்றன. செவ்வாய் முருகனின் அடையாலமே ஆடு; இது சோதிடத்திலும் மேஷம் எனக் காட்டப்படுகிறது; முருகனைக் கொலைசெய்ய முயன்ற வரலாற்றைப் பரிபாடலும் கந்தபுராணமும் உறுதிப்படுத்து கின்றன. அதனையே இங்கு சிற்பத்தில் ஆடு எனக் காட்டியுள்ளனர். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவனே செஞ்சடை வானவனின் மகன் என்பதைப் பல இடங்களில் காணலாம். செங்குட்டுவனே அர்ச்சுனனாக இமையவனுக்கு எத்ராகச்சென்று சிவனோடு போரிட்டவன். இந்த வரல்ற்றை மாபாரதம் மறைத்துவிட்டது. ஆனால் சிலப்பதிகாரத்தில் அவர்களுக்கிடையே போ நடந்ததை உறுதிசெய்வதைக் கலாம். மாஆரதத்தில் துர்யோதனனே பரசுராமன் என்பதை உணர்த்தும் தகவல்கள் உள்ளன. கிளைக்கதைகளில் யமதக்கினியின் மகனாகக் காட்டுவது ஐயத்துக்கு உரியது. யமதக்கினியான அலெக்சாண்டனின் வளர்ப்பு மகனே பரசுராமன். வரலாற்றில் அவனைப் பிம்பிசாரன் எனக் காணலாம். முழுமையான வரலாற்றைக் காண விரும்பினால் http://nhampikkai-kurudu.blogspot.com என்ற வலையை googlesearch ல் தேடிக் காணவும். பல கட்டுரைகள் அந்த வலைப்பதிவுகளில் உள்ளன. அனைத்துமே பரசுராமன், அவனால் கெடுத்துக் குருவுற்ற கரிகால்சோழனின் த்ங்கை, அப்பெண்ணுக்குப் பிறந்த செங்குட்டுவன் என மேலும் பலௌடையவரலாற்றோடு இராமாஅணத்தில் இராவணனாகக் காட்டப்படுபவனே பாண்டியன் செழியன் என்பதையும் ரிக்வேத புராண இதிகாசச் சான்றுகளுடன் பழந்தமிழ்[சங்க]ப் பாடல்களின் இடுகைகளையும் காணலாம்!

மார்ச் 26th, 2014 at 20:11
Shivakumar
  11  

On what basis they decided that it is 2000 years old?

ஆகஸ்ட் 23rd, 2014 at 14:09
Kushabrao Vishwanath Pendor
  12  

These pictures denotes SALLAGAGRA SHAKTI a super natural generator power of GONDI religion and culture . After the Aryans invader they have named it as SALIGRAM and SHIVLINGA .
SALLAGAGRA is combine super natural generator power where SALL represent male power and GAGRA represent the female power . Bottom part GAGRA represent female generator part and upper salla represent male generator part . SALLAGAGRA form is donor -accepter in character ..
According to Gondi religion and culture every living an nonliving things are generated from SALLAGAGRA power .
This super natural power is PERSAPEN a Gond’s main daity .
Smallest form of SALLAGAGRA is proton electron which consists an atom where proton-donor is salla and electron-accepter is GAGRA . In living being male is salla and female represent GAGRA . .In largest form universe is salla and earth is GAGRA.
In the sculpture seven shafts represent the seven clans of GOND community . Goat represent the sacrifice of PERSAPEN god worship .lower torso is clothed in white colour for stop or suck power .

மார்ச் 13th, 2017 at 23:51

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி