Quantcast

நண்பர் சாஸ்வத் போன்ற கட்டிளம் கா​ளைகள் நமது வரலாற்றுசின்னங்களின் மேல் காட்டும் அக்கறை மனதிற்கு பெரிதும் ஆறுதல் அளிக்கிறது. இன்று நம்மை அவர் தன்னுடன் எசாலம் கூட்டிச் செல்கிறார் - அப்படி அங்கே என்ன ஸ்பெஷல் ? மேலே படியுங்கள்

மார்கழி மாதத்தின் ஒரு காலைப்பொழுதில் சோழர் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஓரிடத்தைக் காண ஒரு சிறிய குழுவாக பல சரித்திரங்களைக் கண்ட முக்கிய சாலை வழியே நாங்கள் சென்றோம்.

அன்று காலை நாங்கள் சந்திக்கும்போது திரு. அரவிந்த் அவர்கள் நாங்கள் காணவிருந்த நான்கு கோவில்களைப் பற்றி விவரித்தார். சென்னையிலிருந்து ஒரே நாள் பயணத்தில், ஒன்றுக்கொன்று வெறும் 5 கி.மீ. தொலைவிற்குள் அந்த நான்கு கோவில்களும் அமைந்திருக்கின்றன. நாங்கள் செல்லவிருந்த இடங்களின் பட்டியலில் “எசாலம்” என்கிற பெயரைக் கண்டதும் எனக்குள் பெரும் பரபரப்பு. அது ஒரு முழுமையான கற்றளி (விமானத்தையும் சேர்த்து - இது சற்று அரிதாகும்), மேலும் மிகுந்த அழகுடைய வீணாதார தக்ஷிணாமூர்த்தியும் அங்குள்ளது என்பதைத் தவிர வேறென்ன எதிர்நோக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. கோவிலைப் பற்றி சொல்வதற்கு முன்பு எசாலத்தைக் காண நான் ஏன் இத்தனை பரபரப்புடன் இருந்தேன் என்று சொல்லிவிடுகிறேன்.

ஒருஆட்சியாளர் நிறுவிய கோவிலைப் பற்றி அக்கோவில் கூறும் விவரங்கள் மிகவும் குறைவேயெனக் கூறலாம். கங்கைகொண்ட சோழபுரத்தில் அதனை கட்டிய முதலாம் ராஜேந்திரசோழரைப் பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை. தன் தந்தையைப் போல் அல்லாது “கங்கை வரை கைப்பற்றிய சோழன்” என்பதே ஒரு புதிராக உள்ளது. ஏனெனில், இக்கோவிலில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் முதலாவதே அவரது இரண்டாவது மகன் வீரராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தியதுதான். அவர் யார்? அவரது குறிக்கோள் என்ன? அவரது தூண்டுதல் யார்? - இவையனைத்தும் மிகவும் கடினமான கேள்விகளே!

இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய உதவும் இடங்களில் ஒன்று தான் ஈசாலம். பலஅற்புதமான அழகிய வெண்கலச் சிலைகளுடன் ஒரு தானசாஸனச்செப்பேடு கண்டெடுக்கப்பட்டது இங்குதான்.

Esalam_plates
esalam_seal

இந்தச் செப்பேட்டினை மொழிபெயர்த்த டாக்டர். நாகசுவாமி அவர்கள், “ஆகஸ்டு 11, 1987ல் தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தின் அருகே உள்ள ஈசாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள ராமநாதேஸ்வர திருக்கோவிலின் புனரமைப்புப் பணிகளை நடத்தும்போது, அக்கோவிலின் உள்ளே பல வெண்கலச் சிலைகள், கோவில் பாத்திரங்கள் மற்றும் செப்பேடு ஒன்றையும் கண்டெடுத்தனர்” என்று கூறுகிறார். இந்தச் செப்பேட்டில் உள்ள விவரங்கள் முக்கியமானவை, சுவாரசியமானவை. அதன் முழுமையான விவரங்களை மேலேயுள்ள சுட்டியில் காண்க. மேலே செல்வதற்கு முன் சில முக்கிய செய்திகளை இங்கேஅறிந்து கொள்வோம். இந்த சாஸனம் ராமநாதேஸ்வரர் எனும் பெயர் கொண்ட சிவபெருமானுக்கு காணிக்கையாக புதிய தேவதானம் உருவாக்கப்பட்டதின் விவரங்களைக் கூறுகிறது. இந்தக் குறிப்பின் மூலம் நாம் இவ்விடத்தைப்பற்றி அறியும் முக்கியத் தகவல் என்னவென்றால் இது ஒரு சாதாரண கோவில் அன்று. இக்கோவில் ராஜேந்திர சோழரால் கட்டப்பட்டு அவரது குருவும், தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் முதன்மை குருக்களும் (இவர் கங்கைகொண்டசோழபுரத்தின் முதன்மை குருக்களாகவும் இருந்திருக்கக்கூடும்) ஆகிய சர்வசிவ பண்டிதருக்கு அளிக்கப்பட்டது. சோழர்களில் மிகுந்த பலம் பொருந்திய மன்னனால் கட்டப்பட்டு தனது ஆசானுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட இக்கோயில் அரசாங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக நாட்டிலுள்ள சிறந்த கைவினைஞர்கள் இங்கு வேலை செய்ய அழைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது இக்கோவிலைக் கண்டால் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

கோவிலின் முகப்பிலிருந்து பார்க்கும்போது நமக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஒரு சிறிய கோபுரம், இக்கால வடிவமைப்பில் கண்ணைப் பறிக்கும் நிறங்களில் நம்மை வரவேற்கிறது.

esalam_1

உள்ளே சென்றபின் தான் அழகிய சோழர் கோவிலைக் காண்கிறோம்.

நம் கண்களில் முதலில் தென்படுவது பெரிய உருண்டையான விமானமும் ( அபுதாபிக்கு வந்துவிட்டோமோ ?), அனைத்துப் பக்கங்களிலும் அழகிய வேலைப்பாடமைந்த பலிபீடமும்தான்.

esalam_2
esalam_3

சட்டங்களில்அழகிய வேலைப்பாடுகளும், ஆடும் மங்கையரும் கொண்ட கருங்கல் ஜாலி கோவிலின் முகப்பில் அமைந்துள்ளது.

esalam_4

மேலும் உள்ளே செல்லும் வழி இடதுபுறத்திலுள்ளது.

esalam_5

கோவிலின் சுவர்கள் முழுதும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

esalam_6

கோவிலைச் சுற்றி கோஷ்ட தேவதைகள் அமைந்துள்ளனர் - முறையே விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை

esalam_7
esalam_8
esalam_9
esalam_10
esalam_11

அடுத்த பகுதியில் தொடரும் …

எசாலம் செப்பேடு படங்களுக்கு நன்றி - திரு ராமன் அவர்கள்.
தமிழாக்க உதவி - திருமதி பர்வதவர்தினி

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, மார்ச் 13th, 2013 அன்று 10:05 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 11 மறுமொழிகள்

  1  

அரிய தகவல்களை அறிய செய்தமைக்கு நன்றி…

மார்ச் 13th, 2013 at 13:39
injamaven
  2  

It was indeed a wonderful Temple tour day!

மார்ச் 13th, 2013 at 16:45
sankaranarayanan
  3  

I spent a day here. The villagers described me about the find. They said that the sand looked Golden in colour. They thought that it contains Gold ( Thanga baspam) and mixed it with water and drank. The entire village folks consumed the sand.

மார்ச் 13th, 2013 at 21:04
Kyle Tortora
  4  

Hello Vijay,
I enjoyed reading thru some of your blog posts. I am the owner of Lotus Sculpture. We sell Hindu and Buddhist sculpture thru our website http://www.lotussculpture.com.
I was hoping/imagining that there are some ways we can work together as we both have obvious interests in similar subjects…
Maybe you could be a guest blogger on my site and I can help bring people to your site? I am open to ideas…
Warm regards,
Kyle

ஏப்ரல் 18th, 2013 at 3:40
  5  

thanks - have seen your site - wonderful work. please drop me a mail via the contact us form and we will be in touch. rgds vj

ஏப்ரல் 18th, 2013 at 12:12
Nithyasree
  6  

புதிதாக கட்டிய வீட்டிற்கு ஒரு முருகன் பெயர் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது சோமஸ்கந்தர் என்று சர்ச் செய்த போது , எதேச்சையாக உங்கள் வலைபக்கத்தை பார்த்து வியந்து போனேன். உங்களின் அணைத்து தொகுப்புகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
கல்கியை படித்த நாள்முதல் ஓவியத்திலும் & சிற்பத்திலும் அதீத ஆர்வம் மிகுந்தது. ஆர்வமிருந்தாலும் பல இடங்களுக்கு போய் பார்த்து ரசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வலைத்தளம் ஏன் மனக்குறையை தீர்த்தது.
உங்களின் முயற்சிக்கு வாழ்த்த்துகள்.
நித்யஸ்ரீ

ஏப்ரல் 26th, 2013 at 12:38
  7  

Mikka nandri Nithyasree madam. anbudan vj

ஏப்ரல் 29th, 2013 at 10:32
  8  

In Bengal and India Copper plate inscriptions (tamarashasana), usually record grants of land or lists of royal lineages carrying the royal seal, a profusion of which have been found . These inscriptions were legal documents such as title-deeds they were etched on a cave or temple wall, were then secreted in a safe place such as within the walls or foundation of a temple, or hidden in stone caches in fields. The earliest authenticated plates were issued by the Pallava dynasty kings in the 4th century A.D. The use of copper plate inscriptions increased and for several centuries they remained the primary source of legal records. This is the first copperplate record of a grant by the Sena Dynasty .

ஏப்ரல் 30th, 2013 at 0:21
  9  

The copper plates were of various sizes and there was no uniformity on the inscriptions. It is very puzzling, nay baffling, to understand how scholars agreed on the contents of the copper plates. First, these plates did not convey clearly the authorship of each of the compositions inscribed on them. Second, the language and notations used are from over 400 years back. The words and notations are either outdated, not in use any more or have a different meaning in the current context. Third, many of the plates are missing and therefore it was impossible to arrive at the original sequencing of the copper plates. In the mean time there were reports of discovery of copper plates and palmleaf manuscripts from various locations across entire Southern India. In addition what’s found on the copper plates must be corroborated with the findings from history of the region as well as with the inscriptions across various temples. In short the amount of research needed to understand the complete landscape of the new findings is humongous . The challenge of fully understanding the contents will continue for decades to come. While the scholars continue to pour in their brilliance on these research topics, the common man happily bathes in the new spirituality and philosophy offered by the compositions of Annamacharya.

மே 2nd, 2013 at 1:13
Ramachandran V
  10  

Excellent article. So informative. This find makes us more proud our ancient Tamil Culture. Thank you very much for your fantastic Presentation and wealth of information and photos. During my next trip to India i shall visit the temple.

ஆகஸ்ட் 5th, 2015 at 14:54
N.MANIKANDAN
  11  

Thanks to saying about temple

பெப்ரவரி 11th, 2017 at 0:07

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி