Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: ஜூன், 2013

ஒரு சில சிற்பங்கள் மற்றும் பார்த்தவுடனே நம்மை கவரும் - அது போன்ற ஒன்று தான் இந்த அர்த்தநாரி வடிவம். பார்த்த மட்டத்தில் மனதை பறிகொடுத்தேன்.

vridhagirisvarar vriddachalam

சிற்பிக்கு “விடை”யே விடை என்ற பதிவில் அதனை உபயோகம் செய்த பொது எனக்கு இந்த அதிர்ச்சியான தகவல் தெரிய வில்லை. இந்த சிலை களவு பொய் விட்டதென்று….

சிலை திருட்டு பற்றிய பதிவுகள் குறிப்பாக இந்த பதிவை பார்த்த நண்பர்கள் செப்புத் திருமேனிகள் மட்டும் தான் களவு போகின்றன என்று நினைப்பார்கள். இதை ஒட்டி இன்று ஹிந்து பேப்பரில் வந்த செய்து என்னை மிகவும் கவர்ந்தது ஆஸ்திரேலியா நடராஜர் பற்றி . அந்த பதிவில் இன்னும் ஒரு இணைய தளம் பற்றி குறிப்பு இருந்தது. Chasing Aphrodite சென்று பார்த்த பொது அந்த பதிவில் இருந்த ஒரு கோஷ்ட சிற்ப்பத்தை பார்த்தவுடனேயே மனதில் சுருக் என்று பட்டது !!

220.2004##S

மேலும் இந்த சிற்பம் வாங்கிய விதம் பற்றி கிடைத்த தகலவல் இதோ….

aradhanareshwara-prov
ardhanarishvara-receipt

Quote: Ardhanarishvara

In 2004, the Gallery purchased this Chola-period sculpture from Kapoor for more than $300,000. The 44-inch stone figure represents Ardhanarishvara, the androgynous form of Shiva and Parvati. It comes from Tamil Nadu, home to some 2500 important temples to Shiva. The image of Ardhanarishvara was likely in a niche on an external wall.

Kapoor provided two documents with the sculpture.

One is a receipt dated 1970, purportedly from Uttam Singh and Sons, the Delhi “copper and brass palace” that sold the sculpture to a private collector.

The second document purports to be a 2003 “Letter of Provenance” on letterhead from Art of the Past, Kapoor’s Madison Ave. gallery. It is signed by “Raj Mehgoub,” who claims to be the wife of a diplomat who lived in Delhi from 1968 to 1971.”

உடனே எனது புத்தகங்களை தேடி அலசினேன். குறிப்பு கிடைத்தது..


Early Cola Architecture and Sculpture
; 866-1014 A.D.
Douglas E. Barrett - புத்தகம் வெளி வந்த ஆண்டு 1974 . !! அப்போதும் இந்த சிலை கோயில் கோஷ்டத்தில் இருந்ததற்கான ஆதாரம் இதோ…

in_temple

சாமானிய கண்ணுக்கே இரு படங்களும் ஒரே சிலை தான் என்றும் ஆதாரமாக காட்டப்படும் ரசீதுகள் கண்துடைப்பே என்றும் தெள்ளத் தெளிவாக உள்ளது. இவற்றறை கொண்டு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்த இந்த அற்புத சிலையை மீட்டு கொடுக்க வேண்டுகோள்.

மறுமொழி அளிக்கவும் »


ஹோ சி மின்ஹ் அருங்காட்சியகத்தில் சம்பா சிற்பங்களிடம் மனதைப் பறிகொடுத்த
நாள் முதலே மிசோன் கோயில்களுக்கும் தனாங் சம்பா சிற்பங்கள் அருகாட்சியகத்துக்கும் போக வேண்டும் என்ற ஆவல் மனதை ஆட்கொண்டு விட்டது. அதிர்ஷ்டவசமாக சென்ற வாரம் அந்த நெடுநாள் ஆசையும் நிறைவேறியது. மறக்க முடியாத இரண்டு நாட்கள்…

உதயகாலையில் ஆதவனின் கிரணங்களில் மிசோன் காண முடிவு செய்து விடியற் காலை நாலரை மணிக்கே அலாரம் வைத்து புறப்பட்டேன். தங்கியது தானங் அருகே ஹோய் ஆன் என்ற அழகிய இடத்தில - அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணம் - கோடை காலம் என்பதால் அதற்குள் நல்ல வெய்யிலே வந்து விட்டது. எனினும் ஆள் நடமாட்டமே இல்லை - அழகிய புல் தரை கொண்ட சைட் - மலை அடிவாரத்திலேயே காரை நிறுத்த வேண்டும். கொஞ்சம் மலை ஏறி இறங்கினால் ……

Myson

இந்த செங்கல் கோயில்களை பற்றிய பதிவிற்கு இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் காக்க வேண்டும். இன்னும் நிறைய வேலை பாக்கி உள்ளது - படிக்க பல விஷயங்கள் உள்ளன. எனினும் என் கண்ணிற்கு மிகவும் பிடாத சிற்பம் ஒன்றை இன்றைக்கு உங்களுக்கு படைக்கிறேன்.

அங்குள்ள கோயில்களில் உள்ளேயே ஒரு தற்காலிக அருங்காட்சி போல வைத்துள்ளனர் - வெளியில் பெரிதவலில் ஒரு அருங்காட்சிகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. எனினும் இன்றைக்கு நாம் காணும் சிற்பம் தரையில் ஒரு பெயர் பலகை கூட இல்லாமல் இருக்கிறது. எத்தனை பேருக்கு இந்த அருமை தெரியுமோ?

tymphanum

ஆம் இது ஒரு அற்புத புடைப்புச் சிற்பம். ராவண அனுக்ரஹ மூர்த்தி. பத்தாம் நூற்றாண்டு என நான் கணிக்கிறேன். இதனைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு குறிப்பு கிடைத்தது. ஆனால் அருமையான குறிப்பு.

Champa and the Archaeology of Mỹ Sơn (Vietnam) என்ற நூலில் இந்த வடிவம் கண்டெடுக்கப்பட்ட பொது எடுத்த படம்.

ravana

நூலில் உள்ள ஆங்கில குறிப்பு : Tympanum depicting Ravana shaking Mt. Kailash. Recovered at My Son. Present location unknown ( photograph Musee Guimet Archive, undated)

நண்பர் ஓவியர் திரு முரளிதரன் உதவியுடன் இதனை மேலும் ரசிக்க ஒரு முயற்சி. இன்றைய நிலையில் சிற்பமாக வடிவமைக்கப்பட்ட இறைவனின் உடல் பாதிக்கு மேல் சிதைந்து விட்டது.

_MG_7769p1s

இந்த வடிவத்தில் பிள்ளையார் வருவது கவனிக்க வேண்டிய ஒன்று. அருமையான நந்தி. கம்போடியா சிற்பம் முன்னர் நாம் பார்த்த போதும் அங்கேயும் பிள்ளையார் இருந்தார்.

ganesha

இந்த சம்பா சிற்பத்தில் ஒரு விமானம் முழுமையாக இருப்பது வினோதமான ஒரு அம்சம். அதற்கு அடியில் ஒரு பெரிய யானை உள்ளது. மேலே காட்டு மிருகங்கள் உள்ளன ( ஒன்று குகையில் இருப்பது போலவும் உள்ளது )

vimana

இராவணனின் வலிமையை மிகவும் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளது. ஏதோ பறவை ஒன்று இறக்கையை விரிப்பது போல விரியும் கைகள் உள்ளன. காலை மாற்றி மாற்றி கயிலையை தூக்க முயற்சிக்கும் காட்சியை காட்ட அவனுக்கு மூன்று கால்கள் போல வடித்தாலும் - அவை இரு விதமாக அவன் திரும்பத் திரும்ப முயற்சிப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சியே !

ravana+shiva
tymphanum

முகம் உள்புறம் திரும்பி இருக்கும் வண்ணம் வடிப்பது மிகவும் கடினம். இதை நாம் எல்லோரா காட்சியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஆனால் சம்பா சிற்பியின் முழு திறமையை காண இராவணின் பத்து தலைகளை காட்ட அவன் உபயோகித்த பாணி தான் இந்த சிற்பத்தின் உன்னதம்.

heads+ravana

இவ்வாறு அதுவும் புடைப்புச் சிற்பத்தில் வடிப்பது மிகவும் கடினம் - பத்து தலை சிற்பத்தில் கட்டுவது மிகும் கடினம். அதனை புகழ் பெற்ற மல்லை ராஜசிம்ஹா பல்லவனின் சிற்பிகளே ஓலக்கநெஸ்வர ஆலயத்தில் சரியாக செய்யவில்லை என்று தான் நான் சொல்வேன்.

சம்பா சிற்பிக்கு தலை வணங்குகிறேன். இந்த பதிவை முடிக்கும் தருணத்தில் நண்பர் முரளி ஓவியத்தையும் முடித்து விட்டார் ….கலை என்றும் அழிவதில்லை….

RavanaP1s

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »