Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: செப்டம்பர், 2013

சிலை திருட்டு பற்றிய தொடரும் இந்த ஆய்வின் அடுத்த பாகம் - அமெரிக்க அதிகாரிகள் கபூர் / ஆர்ட் ஆஃப் பாஸ்ட் கிடங்கை சோதனை இட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சிலைகளை கைப்பற்றி வெளியிட்ட ஒரு புகை படத்தை கொண்டு இன்று தொடர்கிறது…

121205newyork_lg

முந்தைய பதிவுகளைப் போலவே இன்று இந்திய காவல் துறை வெளியிட்ட திருடப்பட்ட சிலைகளின் “புகை” படங்களை கொண்டே துவங்குவோம். முந்தைய பதிவுகளில் வெளியிட்ட படங்களை டிக் செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கு பார்க்கப் போகும் சிலைகளுக்கு சிகப்பு அம்புக்குறி

idol_wing

இந்த படங்களில் இல்லாத இன்னும் ஒரு சிலை பற்றி ஹிந்து நாளேட்டில் வந்த செய்தி - சண்டிகேஸ்வரர் சிலை.

07SepTHPPR01_Idol__1203368e

இங்கே நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்த இந்த செய்தியில் மொத்தம் 26 சிலைகள் திருடு போய் உள்ளன. அவற்றில் நமக்கு கிடைத்துள்ள படங்கள் 16 காவல் துறை வெளியிட்டில் மற்றும் ஹிந்து பேப்பர் 1 - மொத்தம் 17 தான். இன்னும் 9 சிலைகளை பற்றி எந்த தகவல்களும் இல்லை.

இப்போது நாம் பார்க்கப்போவது.

1. ஸ்ரிபுரந்தன் தனி அம்மன் .

அமெரிக்க புகைப் படத்தில்.

thaniamman

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்.

idols_foreign(1)_page2_image13

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

thaniamman_ice
thanimann_compare

2. சுத்தமல்லி அஸ்திர தேவர்
அமெரிக்க புகை படத்தில்.

astradevar_suthamalli

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்.( இந்த படம் தப்பாக வெளியிடப்பட்டுள்ளது - கண்ணாடி பிம்பம் போல - இடம் வலம் மாறி ..)

idols_foreign(1)_page2_image5

சரி செய்யப்பட்டது.

idols_foreign(1)_page2_image5flip

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

astradevar_ice
astradevar_compare

3. சுத்தமல்லி சிவகாமி அம்மன்

அமெரிக்க புகை படத்தில்.

uma_sripuranthan

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்

idols_foreign(1)_page2_image4

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

uma_ice_1
uma2_compare

4. சண்டிகேஸ்வரர்

அமெரிக்க புகை படத்தில்.

chandi

ஹிந்து பேப்பர் படம்

07SepTHPPR01_Idol__1203368e

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

chandi_compare

5. ஸ்ரிபுரந்தன் சிவகாமி அம்மன்

அமெரிக்க புகை படத்தில்.

sripurathan uma2

நமது அதிகாரிகள் வெளியிட்ட படம்

sripurathan_uma

அடுத்தடுத்து வைத்து பார்த்தால்..

uma_ice_2
uma_compare

நல்ல படங்களுடன் இவற்றை கொண்டு எளிதாக சிலைகளை மீட்டு விடலாமே …

மறுமொழி அளிக்கவும் »

இன்றைக்கு இன்னும் ஒரு சிலை திருட்டை அடையாளம் காட்ட போகிறோம். அதற்காக மீண்டும் காவல் துறை வெளியிட்ட அறிக்கையை காண்போம். பட்டியலில் முதல் படம்.

idol_wing

சிவகாமி அம்மன் / தனி அன்னம் என்று பெயர் கொண்ட படம். இதோ அருகில்.

Suthamalli_Sivagami

இப்போது மீண்டும் ஆர்ட் ஆஃப் பாஸ்ட் பட்டியல் ஒன்றை பார்ப்போம். மார்ச் 2011 வெளிவந்த பட்டியல் - அதாவது சிலைகள் திருடு போய் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, காவல் துறை படங்களை வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் !!

march2011

பட்டியலில் 10 ஆம் எண் இருக்கும் சிலை - பெயர் தேவி உமா பரமேஸ்வரி

catalogue1
catalogue2

என்ன அருமையான புகைப்படங்கள். வித விதமான கோணங்களில் படம் எடுத்துப் பதிவு செய்துள்ளனர்.

uma2
uma2 rev
uma 2 close
uma 2 base
uma 2 closecc

இரு சிலைகளையும் ஒன்றாய் சேர்த்து பார்ப்போமா?

compare1
compare2

இன்னும் நுண்ணியமாக பார்க்கும்போது குட்டு வெளியாகிறது.

compare3
compare31

ஒவ்வொரு பாகமும் அச்சு அசல்..

compare4
compare41

கால்கள் மற்றும் அடிபாகம்.

compare5
compare6

என்ன கொடுமையடா இது - இப்படி பகிரங்கமாக கொள்ளை அடித்த சாமி சிலையை விற்கும் அவலம் !! நமது ஆலயங்கள் சிறு முயற்சி எடுத்து தங்கள் சிலைகளை படம் பிடித்து வைத்திருந்தால் இந்த திருட்டுகள் நடக்குமா. அந்நிய சந்தையில் தான் இவற்றை வாங்க யாரேனும் முன் வருவார்களா? அரசின் ஒரு சிறு முயற்சி, தொடரும் இந்த திருட்டை தடுக்க இயலும். படம் பிடித்துப் பட்டியல் இணையத்தில் பதிவேற்ற வேண்டியது தான் - இவர்கள் கொட்டம் அடங்கும் அல்லவா !!

தொடரும்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 3  1  2  3 »