Quantcast

நண்பர்கள் செய்த சிறந்த புலனாய்வு மூலம் இன்று நமக்கு இவை தெரிய வந்துள்ளன. அவர்கள் எடுத்துக்கொடுத்த படங்களை கொண்டு இந்த ஆய்வு. இதை படித்து முடித்தவுடன் இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. அப்படி எழவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

மீண்டும் காவல் துறை வெளியிட்ட படங்களைப் பார்ப்போம். இரண்டு நடராஜர் வடிவங்கள் காணாமல் போன பட்டியலில் உள்ளன. ஒன்று சுத்தமல்லி மற்றொன்று ஸ்ரிபுரந்தன்.

idol_wing

இதோ சுத்தமல்லி

Suthamalli_natraja

இது ஸ்ரிபுரந்தன்

idols_foreign(1)_page2_image15
sripuranthan nataraja

இரண்டு நடராஜர் வடிவங்களும் கிட்ட தட்ட ஒரே போல இருந்தாலும் - ஆடல் அரசனை சுற்றி இருக்கும் பிரபாவளியை பார்த்தாலே இரண்டு வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமை தெரிகிறது.

Slide1

இப்போது கடந்த சில மாதங்களாக சர்ச்சையில் சிக்கி உள்ள ஆஸ்திரேலியா நடராஜர் இவற்றில் ஒன்றை போலவே - ஒத்து இருப்பதாக தகவல் வந்துள்ளன.

171994
171994_Back

மீண்டும் பிரபாவளி மூலம் இதனை ஸ்ரிபுரந்தன் வடிவத்துடன் தான் ஒத்து பார்க்க வேண்டும் என்பது தெரிகிறது.

Slide2

அதே போல நண்பர்கள் வெளியிட்ட பதிவில், எதோ ஒரு இந்திய அறையில் இதே போன்ற ஒரு சிலையை படம் பிடித்து சிலை திருடர்கள் 2006 ஆம் ஆண்டு அடுத்து கபூருக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

26fz8
shiva-natraja2

அதே போல ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் இந்த படத்தை தனது பட்டியலில் இந்த சிலையை விற்கும் பொது இட்டுள்ளது.

1-m5835

நாம் பல முறை கூறிய ஒன்று, நடராஜர் வடிவம் பற்றிய சர்ச்சை கிளம்பியவுடன் - தமிழகத்தில் நூற்றுக்கணக்கான நடராஜர் சிலைகள் உள்ளன என்றும் அவை பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். அதனால் குழம்ப வேண்டாம் என்று ஒரு வாதம் எழுந்துள்ளது. உண்மை தான், எனினும் மேலோட்ட பார்வைக்கு மட்டுமே அந்த வாதம் சரி. ஒரு முறை அனைத்துப் படங்களையும் பொறுமையாக பார்த்தால் சாமானியருக்கும் விளங்கும் - ஏன் என்றால் இவை லாஸ்ட் ’வாக்ஸ்’ முறை கொண்டு செய்யப்பட்டவை - ஒவ்வொன்றும் தனக்கே உரிய ஒரு தனித்தன்மையுடன் இருக்கும்.

இந்த சிலையின் தனித்தன்மை என்ன தெரியுமா. தூக்கிய திருவடி அருகில் உள்ள தீப் பிழம்பை பாருங்கள் - அடியில் இருந்து மூன்றாம் பிழம்பு. உடைந்து இருப்பது தெரிகிறதா ? எல்லா படங்களையும் பாருங்கள்.

broken
front_broken
rev_broken

ஆடல் வல்லானின் கை இதனை நமக்கு சுட்டிக்காட்டுவது போலவே இருக்கிறது.

இதனை உறுதிப் படுத்த சில நிமிடங்கள் போதும் - நல்ல படம் இருந்தால் !!!

ஆனால் ஒன்று நிச்சயம் இது சுத்தமல்லி சிலை இல்லை. ஸ்ரிபுரந்தன் சிலை - இந்த சிலையிலும் அடித்தள பீடத்தை அகற்றி உள்ளனர்.

அப்படி இருக்க - சுத்தமல்லி நடராஜர் எங்கே?

அதைத் தேட இணையத்தில் இது கிடைத்தது - இன்னும் ஒரு நடராஜர் சிலை. ஆர்ட் ஆஃப் பாஸ்ட் பட்டியல் மார்ச் 2011.

item_8
newer one
newer one closeup face

மீண்டும் ப்ரபாவளி கொண்டு இது சுத்தமல்லி சிலை இல்லை என்று அறியலாம். அப்போது இது எந்த ஆலயத்தில் இருந்து திருடப்பட்டது? சுத்தமல்லி ஸ்ரிபுரந்தன் போல இன்னும் சில பல கோயில்களில் இந்த கூட்டம் தம் கைவரிசையை காட்டியுள்ளார்களா? திருடு போய்விட்டது என்று கூட தெரியாமல் நாம் குருடர்களாக உள்ளோமா ? இந்த கேள்விகளுக்கு யார் பதில் தேடுவார்கள்?

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், செப்டம்பர் 12th, 2013 அன்று 12:30 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 3 மறுமொழிகள்

mohan hariharan
  1  

we the silent tamilians ,do not have words to express our gratitude to you and to your team for the excellent work going on in Poetry in Stone
With no exaggeration, a virtue of a typical Tamilian,let me tell you, may your tribe increase !

செப்டம்பர் 17th, 2013 at 9:53
கயிலைமாமணி சுந்தரராச அடிகளார்
  2  

இன்றைய தமிழத்தில் உள்ள ஆட்சியாளர்களும் முந்தையவர்களும்,தங்கள் அரசியல் ஆதயங்களைமட்டுமே பார்க்கிறார்கள்.ஆகவே சிலை திருட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை.தங்களைப் போன்றவர்கள் சுட்டிக்காட்டும் திருட்டுக்கான ஆதாரங்களை ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

டிசம்பர் 16th, 2013 at 16:26
  3  

[...] that since 2009 has publicly named the alleged thieves who stole the Shiva; Vijay Kumar’s careful analysis of the links between the stolen Shiva and the one at the NGA; and our first report last June [...]

மார்ச் 10th, 2014 at 22:57

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி