Quantcast

முந்தய பதிவுகள், மாதங்களில்: பெப்ரவரி, 2014

உலகெங்கிலும் இந்த சிலைத் திருட்டு வழக்கை பலரும் ஆவலுடன் தொடரும் இந்தத் தருவாயில் இந்த “வினோதமான ” கேள்வியை முன்வைக்கிறோம்.

நாம் முன்னரே பார்த்த ஸ்ரீபுரந்தன் நடராஜர் மற்றும் உமை .

இங்கே நாம் கவனிக்க வேண்டியது இரண்டு கோயில்களின் சிலைகள் களவு போயின - ஆனால் ஒரே கோயிலில் தான் திருட்டு நடந்தது. சுத்தமல்லி கோயில் பாழடைந்து இருந்தமையால் ஸ்ரீபுரந்தன் கோயிலுக்கு சிலைகள் ” பாதுகாப்பு ” கருதி எடுத்து வரப்பட்டன.

idol_wing
nataraja and sivakamasundari

நண்பர் சேசிங் அப்ரோடைடி வலை தளம் உதவியுடன் இன்று நமக்கு சிலை திருடர்கள் சிலையை திருடியவுடன் எடுத்த படங்கள் - தமிழகத்தில் ஒரு வீட்டில் எடுத்த படங்கள் கிடைத்துள்ளன.

shiva-natraja1
26fz8

தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் நடராஜர் சிலை படைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்

171994
171994_Back

சாமானியருக்கே இது புரிந்து விடும். சிலை நிறம் மாறியுள்ளது. இந்த பச்சை நிறம் படினா என்று அழைக்கப்படுகிறது. இது வெண்கல சிலை பல நூற்றாண்டுகள் பூமிக்கு அடியில் இருக்கும்போது தானாக வரும். இரும்பு துரு பிடிப்பது போல - ஆனால் இந்த “துரு ” சிலைக்கு நல்லது. மேலும் எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இந்த படினா சிலையை கவசம் போல காக்கும். பொதுவாக தினமும் பூஜை - அபிஷேகம் என்று கோயிலில் இருக்கும்போது இந்த மாதிரி வராது. நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம் - இந்த கோயில்கள் பல காலம் பூட்டி இருந்தனவே ? பூஜை நடந்திருக்காதே என்று. நல்ல கேள்வி - ஆனால் இதற்க்கு உமை பதில் அளிக்கிறாள்.

compare1
artofpast2008_3
artofpast2008_1
artofpast2008_2

இந்த படங்கள் ஆர்ட் ஒப் தி பாஸ்ட் 2008 பட்டியலில் உள்ள படங்கள். அதே ஆண்டு தான் ஆஸ்திரேலியா இந்த நடராஜர் சிலையை ஐந்து மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. இதில் இருந்து நடராஜர் சிலை வண்ணம் மாற்றப்பட்டது என்று தெளிவாக தெரிகிறது.

ஆம் - இன்றைய காலத்தில் இந்த பச்சை நிறத்தை அமிலங்கள் கொண்டு ஒரே நாளில் ஏற்படுத்த முடியும். நீங்கள் புதிய சிலை வாங்கப் போகையில் எந்த வண்ணத்தில் வேண்டும் என்று ஸ்தபதியிடம் சொன்னால் -அவர் கருப்பு பச்சை தங்க நிறம் என்று எந்த நிறத்தில் வேண்டும் என்றாலும் மாற்றி கொடுக்க முடியும்.

ஆனால் இயற்கையாக பல நூற்றாண்டு எடுக்கும் படினாவுக்கும் இன்ஸ்டன்ட் படினாவுக்கும் வித்தியாசம் உண்டு. மேலோட்ட பார்வைக்கு இந்து தெரியாது - ஆனால் மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் ஐந்து மில்லியன் கொடுத்த சோழர் கால சிலையை வாங்கும் முன்னர் அது உண்மையிலேயே ஆயிரம் ஆண்டு சிலையா அல்லது நேற்று செய்து வண்ணம் ஏற்றப்பட்ட சிலையா என்று சோதித்துப் பார்த்து தானே வாங்க வேண்டும் ??

அடுத்தது - இப்படி ஐந்து மில்லியன் சிலைக்கு வண்ணம் ஏற்றுவது மிகவும் நுண்ணிய வேலை - சரியாக செய்யவில்லை என்றால் சாயம் வெளுத்து விடும். இதற்கு தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் இருக்கிறார்கள். மேலும் லண்டன் நகரம் தான் இதற்கு பெயர் போன இடம். நமது பத்தூர் மற்றும் சிவபுரம் நடராஜர் சிலைகள் மீட்டது அவை பராமரிப்புக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து லண்டன் வந்தபோது இன்டர்போல் உதவியுடன் செயல் பட்ட இந்திய அரசின் நடவடிக்கை தான்.

அடுத்து நாம் பார்க்க வேண்டிய ஒன்று - இந்த சிலை திருட்டு பற்றியகுற்றப் பத்திர்க்கை . Subhash Chandra Kapoor vs Inspector Of Police on 3 April, 2012


The said idols were presented before the Sea Customs Authority, Chennai so as to export it to xxxxxxxx Gallery and was cleared by customs on 6.3.2008 and were exported by ship to Hong Kong. They were further redirected to one xxxxxxxxxxxxxxxx Company at U.K. by direction from the petitioner. “

இந்த டைம்ஸ் ஒப் இந்திய பதிவிலும் இந்த நிறுவனம் பெயர் உள்ளது

அப்படி என்றால் இந்த நடராஜர் நிறம் மாறியது லண்டனிலா ??

ஏன் நடராஜருக்கு மட்டும் பச்சை நிறம் …அந்த நிறத்தில் வேண்டும் என்று யாரவது கேட்டார்களா ?

மறுமொழி அளிக்கவும் »

நெஞ்சு பொறுக்குதில்லையே. கடவுள் என்று போற்றி வழிபடப்பட்ட எங்கள் விநாயகரை களவாடி அயல் நாட்டினருக்கு கலைப் பொருள் என்று பொய் சொல்லி விலைக்கு விற்றுவிட்டானே என்று கதறிக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு பெரும் அவமானம். நமது நாட்டின் பண்பாடு கலை கலாசாரம் அனைத்துமே சூறையாடப்படும்போது பெரிய பொறுப்பான பதவியில் இருக்கும் இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பி இருக்கும்போது இப்படி ஒரு அடி.

டோலேடோ அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த விநாயகர் சிலை திருட்டுப் பொருள் என்று தக்க ஆதரங்களுடன் பதிவு ஏற்கனவே செய்துவிட்டோம்.

மேலும் அதே போல அவர்கள் இடத்தில இன்னும் ஒரு பொருள் - பாலர் காலத்து வராஹ முர்த்தி சிலை இருப்பதையும் சென்ற பதிவில் பார்த்தோம்.
அப்படி இருக்க இன்று அந்த அருங்காட்சியகத்தில் இருந்து இப்படி ஒரு திடுக்கிடும் அறிக்கை


Subhash Kapoor Acquisitions Under Review

Subhash Kapoor, a second generation antiquities dealer and owner of Art of the Past Gallery on Madison Avenue in New York City, was arrested in Germany on Oct. 30, 2011 and extradited to India on July 14, 2012 to face charges of illegal exportation, criminal conspiracy and forgery. Art of the Past was in business for 35 years, selling Asian antiquities to a large roster of Museum clients, including the Toledo Museum of Art.

The Toledo Museum of Art, like many museums across the country, acquired objects from Mr. Kapoor in the period from 2001-2010. The most significant of the eight acquired by the Toledo Museum of Art from Mr. Kapoor is a Ganesha figure. After the 2006 Ganesha purchase, Mr. Kapoor gifted 56 small terracotta idols to the Museum. The purchased items have been on public display. The gifted items have never been on public display.

On July 18, 2013 the Museum received a copy of an Indian police report that includes photographs of 18 metal idols stolen from Sripuranthan Village in Tamil Nadu. One of the images of a Ganesha figure closely resembles the Ganesha purchased by the Museum in 2006 from Art of the Past. At the time of purchase consideration, the Museum received a provenance affidavit and the curator personally spoke to the listed previous owner. The object was also run through the Art Loss Registry with no issues detected.

On July 24, 2013 TMA Director Brian Kennedy sent a letter to the Consulate General of India in New York, Mr. Sugandh Rajaram, requesting his assistance in researching the Ganesha’s provenance with Indian officials. To date, the Museum has received no response. On February 17, 2014 a letter was sent to Dr. S. Jaishanka, Ambassador of India to the United States, soliciting his assistance. The Museum has not been contacted by Immigration and Customs Enforcement or any other U.S. or foreign government agency in regards to this object and others the Museum purchased from Art of the Past or gifted by Mr. Kapoor.”

அதாவது அவர்கள் சென்ற வருடம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி இந்த சிலை பற்றி அமெரிக்கில் உள்ள இந்தியாவின் கோன்சுலட் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி ஒரு பதிலும் கிடைக்க வில்லையாம்

counsulate_letter

மீண்டும் இந்திய தூதருக்கு சென்ற வாரம் கடிதம் எழுதி உள்ளனர். அதற்கும் பதில் வந்த அறிகுறியே இல்லை !!!

ambassador_letter

சந்தேகம் இல்லாமல் ஏற்கனவே தக்க ஆதாரங்கள் கொண்டு இது அதே சிலை தான் என்று நிருபித்து விட்டோம்.

Vinayagar Toledo
trunk now
trunk now museum image

விநாயகர் சிலை ஆலயத்தில் இருந்தபோது ( புதுவை பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் உபயம் 1994 ஆம் ஆண்டு) எடுத்த படங்கள் நமது காவல் துறையிடம் 2009 முதல் உள்ளன !!! இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவார்கள் இவர்கள் ? இல்லை இந்த விநாயகரையும்சிவபுரம் சோமஸ்கந்தர் மாதிரி அனாதையாக அமெரிக்காவில் விட்டு விட எண்ணமோ ?

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »