Quantcast

இந்தியாவின் தேர்தல் முடிவுகள் வெளி வந்துவிட்டன - சமீப காலத்து தேர்தல் சரித்திரத்தில் முதல் முறையாக பெரும் பலத்துடன் ஒரு கட்சி, கூட்டணி அரசியல் என்ற சங்கிலியை உடைத்து தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. நாட்டை வல்லரசாக மாற்றும் நோக்கம் முதலிடம் பெற வேண்டும் என்றாலும் நமது கலைச்செல்வங்களைப் பாதுகாப்பதிலும் களவு போனவற்றை முறையே விரைவில் திரும்பப் பெறுவதிலும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு மதவாத நோக்கம் அல்ல — நாகப்பட்டினம் புத்தர், ராஜஸ்தான் பளிங்கு ஜினர் சிலை போன்றவை சோழ நடராஜருடன் நாடு திரும்ப வேண்டும். பல அருங்காட்சியங்கள் தங்களிடம் இருப்பது திருடப்பட்ட பொருள் என்று தெரிந்தும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றன. - நமது பாரம்பரிய செல்வங்களை முறைப்படி பட்டியல் இடப்படவில்லை - கட்டிக்காக்க வேண்டிய அதிகாரிகள் எந்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியவில்லை.

சென்ற வாரம் CBS News இந்த செய்தியை ஒளிபரப்பியது - அமெரிக்காவில் கபூர் தொடர்பான புலனாய்வில் கிடைத்த துப்பு கொண்டு அவர்களை குயீன்ஸ் என்ற ஒரு வைப்பு கிடங்கியை சோதனை செய்தபோது…

“A CBS News crew was with HIS agents in March when they followed an informant’s tip and searched a storage facility in the New York City borough of Queens. They found hundreds of items worth an estimated $8 million.

The items were allegedly stolen by Indian dealer Subhash Kapoor, a man international authorities say has been smuggling artifacts for decades. He is currently on trial after pleading not guilty to looting and smuggling charges.”

அப்போது வெளியான படங்களில் ஒரு சிற்பம் கண்ணில் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.

kari3
kari4
nair07

இதே சிற்பம் திரு கிரிட் மன்கொடி அவர்கள் இணையத்தில் வெளியிடும் திருடு போன சிலைகள் பற்றிய வலைத்தளத்தில் பார்த்த நினைவு …

Karitalai-4th-message--img2

ஆம் அதே சிலைதான் - ஆசி பாதுகாக்கப்பட்ட இடம் !!


” The temple of Vishnu’s Boar incarnation at Kari Talai is a large complex of the eleventh century, under the protection of the Archaeological Survey of India.

Nine sculptures were stolen from this remote site during the night of 16/17 August 2006. They are a Vishnu Torso, a Divine Couple, Ganesha, Amorous Princely Couples and Apsaras………………The sculptures were stolen from a centrally protected site. ASI has records of all these sculptures……….”

இந்த சிலைத் திருடுவது தமிழகம் மட்டுமே சார்ந்த ஒன்றில்லை - இந்திய எல்லைகளையும் தாண்டி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கம்போடியா என்று பல நாடுகள் தங்கள் கலை பொக்கிஷங்களை இழந்துள்ளன. முப்பது ஆண்டு காலம் தொடர்ந்து நடை பெற்றுவரும் திருட்டு ! அரசாங்கம் இதற்கென சரியான குழு அமைத்து அதில் கை தேர்ந்த வல்லுனர்களை அமர்த்தி விரைவில் செயல்பட வேண்டும் - இல்லை என்றால் இப்படி ஏதோ ஒன்றிரண்டு அப்படி இப்படி கண்ணில் பட்டால்தான் ! எனினும் திரு கிரிட் போன்ற சான்றோர் தங்கள் பணியை மனம் தளராமல் செய்து வருவது கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, மே 19th, 2014 அன்று 12:02 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 4 மறுமொழிகள்

  1  

[...] the new government has taken over, Vijay makes an important point that it should pay attention to safeguarding India’s national treasures and in recovering it from [...]

ஜூன் 16th, 2014 at 11:13
  2  

lsi-delhi to kerala package…

Poetry In Stone « Blog Archive » Kapoor Files- Art of the Loot Part 16- the raid on a warehouse…..

ஆகஸ்ட் 7th, 2015 at 15:36
  3  

HWW Blog…

Poetry In Stone « Blog Archive » Kapoor Files- Art of the Loot Part 16- the raid on a warehouse…..

ஆகஸ்ட் 7th, 2015 at 16:39
  4  

kashmir Package…

Poetry In Stone « Blog Archive » Kapoor Files- Art of the Loot Part 16- the raid on a warehouse…..

ஆகஸ்ட் 7th, 2015 at 16:59

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி