Quantcast

சென்ற ஆண்டு இந்த CAG அறிவுப்பு வெளிவந்த சில நாட்கள் பல பத்திரிகைகள் தாட் பூட் என்று சத்தம் போட்டுவிட்டு வழக்கம் போலவே மீண்டும் தங்கள் சினிமா / அரசியல் என்று யதார்த்தங்களுக்கு திரும்பிவிட்டன !! அந்த அறிவிப்பின் ஆழமான கருத்து - நமது கலை பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டிய ஆசி எப்படி தனது வேலையை சரியாக செய்ய தவறுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்துகிறோம்.

“From 3rd - 12th November, London’s leading Asian art dealers, auction houses and academic and cultural institutions will unite to present an exciting programme of gallery receptions, auctions, lectures, symposia and museum exhibitions. Sample of the magnificent selection of Asian antiques from: India; Islam; China; Japan; the Himalayas and Korea, spanning some 5000 years of culture - including ceramics, furniture, glass, jade, jewellery, manuscripts, metalwork, paintings, screens, stone carvings and textiles. Below please find a selection of offerings from some of London’s leading galleries, including Asianart.com galleries and other members of Asian Art in London. ” ….இந்த ஏலத்தை பற்றி தனது இணையத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளதை பார்க்கலாம்.

முதல் காட்சியாளர் யார் ? ஆர்ட் ஒப் தி பாஸ்ட் - Art of the Past, 1242 Madison Avenue,New York, NY 10128, USA

இதன் உரிமையாளர் தான் சுபாஷ் கபூர் - இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று இன்டர்போல் உதவியுடன் அதே ஆண்டு - அதாவது 2011 பிரான்க்புர்ட் விமானநிலையத்தில் அக்டோபர் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். மேலே நாம் பார்க்கும் ஏலம் குறித்த அறிவிப்பின் காட்சி நாட்கள் நவம்பர் மாதம் !!

குறிப்பாக இரண்டாவதாக இருக்கும் சிலை பற்றி தான் நமது இன்றைய பதிவு !!

02

இதே சிற்பம் திரு கிரிட் மன்கொடி அவர்கள் இணையத்தில் வெளியிடும் திருடு போன சிலைகள் பற்றிய வலைத்தளத்தில் பார்த்த நினைவு …கரி தலை மூன்றாம் வெளியீடு என்ற தலைப்பில் பார்க்கவும்.

Karitalai3rd-message-img2

ஆம் அதே சிலைதான் - ஆசி பாதுகாக்கப்பட்ட இடம் !!


” The temple of Vishnu’s Boar incarnation at Kari Talai is a large complex of the eleventh century, under the protection of the Archaeological Survey of India.

Nine sculptures were stolen from this remote site during the night of 16/17 August 2006. They are a Vishnu Torso, a Divine Couple, Ganesha, Amorous Princely Couples and Apsaras………………The sculptures were stolen from a centrally protected site. ASI has records of all these sculptures……….”

இந்த சிலைத் திருடுவது தமிழகம் மட்டுமே சார்ந்த ஒன்றில்லை - இந்திய எல்லைகளையும் தாண்டி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கம்போடியா என்று பல நாடுகள் தங்கள் கலை பொக்கிஷங்களை இழந்துள்ளன. முப்பது ஆண்டு காலம் தொடர்ந்து நடை பெற்றுவரும் திருட்டு ! அரசாங்கம் இதற்கென சரியான குழு அமைத்து அதில் கை தேர்ந்த வல்லுனர்களை அமர்த்தி விரைவில் செயல்பட வேண்டும் - இல்லை என்றால் இப்படி ஏதோ ஒன்றிரண்டு அப்படி இப்படி கண்ணில் பட்டால்தான் ! எனினும் திரு கிரிட் போன்ற சான்றோர் தங்கள் பணியை மனம் தளராமல் செய்து வருவது கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

தொடர்புடைய இடுகைகள்:

காண்பிக்க பதிவுகள் ஏதும் இல்லை.

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, ஆகஸ்ட் 18th, 2014 அன்று 12:09 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 3 மறுமொழிகள்

  1  

ninjavouchers.co.uk…

Poetry In Stone « Blog Archive » Kapoor Files- Art of the Loot Part 18- London - Fall season 2011…

ஜூலை 16th, 2015 at 6:09
  2  

lsi-b2b goa package…

Poetry In Stone « Blog Archive » Kapoor Files- Art of the Loot Part 18- London - Fall season 2011…

ஜூலை 27th, 2015 at 15:16
  3  

Manali…

Poetry In Stone « Blog Archive » Kapoor Files- Art of the Loot Part 18- London - Fall season 2011…

ஜூலை 27th, 2015 at 15:17

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி