Quantcast

பகுப்பு வாரித் தொகுப்புகள்: ‘சிற்பம்’

mural sravanabelagola.jpg

யானை என்றாலே நமது சிற்பிக்கு அதித ப்ரியம்…அதிலும் வெள்ளை யானை என்றால் கேட்க வேண்டுமா… அதிலும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் வெள்ளை யானை என்றால்..அப்பப்பா ….ஐராவதம் ….வஜ்ராயுதம் கொண்ட இந்திரனின் யானைக்கு முப்பத்தி மூன்று தலைகள்…ஒவ்வொரு தலைக்கும் ஏழு தந்தங்கல்…இதை எப்படி சிற்பம் / ஓவியத்தில் சித்தரிப்பது ….இங்கே ஒரு ஓவிய முயற்சி பாருங்கள்…

 

erawan museum thailand.jpg

இதில் என்ன வியப்பு என்றால் ஐராவதம் தாய்லாந்து மற்றும் கம்போடியா , விஎத்னம் போன்ற இடங்களில் மக்கள் இன்றும் மிக நேர்த்தியாக வழிபடுகின்றனர் …அங்கே இராவடி என்று ஒரு ஆறு உள்ளது…இங்கே பாருங்கள் தாய்லாந்தில் இராவடி என்னும் ஒரு அருங்காட்சியகத்தில் மிக பிரம்மாண்டமான சிலை..சிலையில் ஐராவதத்திர்க்கு மூன்று தலைகள் வைத்து கம்போடியா சிற்பி செதுக்கிய வண்ணம் மிகவும் அருமை…இம்மாதிரி வடிவங்கள் அங்கு நிறைய உண்டு…

 

இதோ சிலவற்றை பாருங்கள்…

beng malea - siam reap cambodia.jpg
prasat preau vihear cambodia.jpg
indra siam reap cambodia.jpg
indra1.jpg
what phu khmer.jpg
indra onairavartasiam reap cambodia.jpg
siam reap cambodia.jpg

 

இந்தியாவிலும் பல இடங்களில் இந்திரனின் ஐராவதத்திர்க்கு சிலை இருந்தும் ஒரு தலை கொண்ட சிற்பங்களே அதிகம்…இதோ சோமநாதபுரம் மற்றும் மும்பை அருகே உள்ள பாஜா குடவரை சிற்ப்பங்கள்..

bhaja caves long shot.jpg
cave19 bhaja buddist vihara near mumbai.jpg
indra baja caves.jpg
kesava temple somnathpur.jpg

 

தஞ்சை பெரிய கோவில் புகழ் பெற்ற ஓவியங்களிலும் ஐராவதம் வரும்….அதை வேறொரு இழையில் பார்ப்போம்

மறுமொழி அளிக்கவும் »

 

magneticeye.jpg

சித்திரம் - சிலை - இரு தெய்வீக கலைகள் - இவை இணையும் போது வார்த்தைகள் நிற்கின்றன. (கோனார்க் கோவில் சிலையை கண்டு தாகூர் Here the language of stone surpasses the language of man என்று கூறினார்). இங்கே உள்ள படைப்பை அவர் பார்க்கவில்லை ..பார்த்திருந்தால் !!

 

 

beauty+beyond+comparison

எல்லோரா குடவரையில் ….இந்த அறிய சிலைஒவியம் பாருங்கள் - ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், மங்கி சிதைந்தும் அந்த ஒரு கண்ணில் எத்தனை ஈர்ப்பு சக்தி.. அப்பப்பா மெய் சிலிர்க்கிறது. ரிஷப சிவன்

மறுமொழி அளிக்கவும் »

 Page 135 of 139  « First  ... « 133  134  135  136  137 » ...  Last »