Quantcast

பகுப்பு வாரித் தொகுப்புகள்: ‘சிற்பம்’

சேரன்மாதேவி - நண்பர் பிரதீப் சக்ரவர்த்தி கண்டிப்பாக நீங்கள் அங்கே போக வேண்டும் என்று சொல்லும்போதே எதிர்பார்ப்புகள் அதிகமாயின. திருநெல்வேலி என்றதுமே வறண்ட பிரதேசம் என்ற நினைப்பு பொய்யாகும் அளவிற்கு டிசம்பர் மாதத்தில் சாலையின் இரு புறங்களிலும் பச்சைக் கம்பளம் அதில் வளைந்து வளைந்து சாலையுடன் போட்டியிட்டது தாமிரபரணி. சிறிய சிறிய கிராமங்கள் - மனிதனின் ஓட்டத்தையும் மீறி அப்படியே ஸ்தம்பித்த நிலையில் (நல்லதா கெட்டதா?) வெள்ளந்தி மனிதர்கள் , முதியோர் சிறார் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் முகத்தில் கள்ளங் கபடமற்ற அந்த சிரிப்பு - கால வெள்ளத்தில் பின்னோக்கி பயணம் செய்வது போன்ற உணர்வு.

ஊரை நெருங்கியதும் ஒரு புதிய பாலம் வந்தது . அண்மையில் அமைக்கப்பட்டதால் ஆற்றங்கரை கோயிலுக்கு அதன் மேலே சென்று ஊருக்குள் புகுந்து தான் வழி பிரிய வேண்டும் என்றனர். சிறிய கிராமம், நடுவில் பெரிய கோவில் ஒன்று இருந்தும் முதலில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பக்தவத்சல பெருமாள் கோயிலை பார்த்துவிட்டு வருவோம் என்று நண்பர் அரவிந்த் கூறினார். வழி கேட்டுக்கொண்டே சென்றோம் - ஒன்று இரண்டு இடங்களில் வழிப் பலகைகள் வைத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும், பாதை குறுகியது, இருபக்கமும் கருவேல முட்செடிகள், நமது கிராமங்களில் சுகாதார முறைகள் பற்றி படமும் கூடவே காற்றில் வந்தது. முடிவில் ஆற்றங்கரை ஓரத்தில் பெரிய மதில் சுவர் தெரிந்தது. நமக்கு மிகவும் பரிச்சயமான தொல்லியல் துறையின் நீல அறிவிப்புப் பலகையை காணவில்லை. அதன் இடத்தில அழகிய அறிவிப்புப் பலகை இருந்தது.

asi+tamil+board

வெளிக் கோபுரம் மொட்டை கோபுரம் தான், எனினும் அழகாக இருந்தது.

entrance+half+gopura
gopura

பல கல்வெட்டுகள் இருந்தும் அறிவிப்புப் பலகை கூறிய படி ராஜேந்திர சோழரின் கல்வெட்டு முக்கியமானது. சோழர் ஆதிக்கம் இது வரையிலும் இருந்ததற்கு சான்று. சற்றே அதிகமாக இருந்தாலும் அழகாகவே இருந்தன வெளி மண்டபத்து சிற்ப வேலைப்பாடுகள்.

beautiful
geometry
intricate
pillared+sanctum+outside

அதிலும் இந்த சிம்மத் தூண் மிக அருமை.

pillar

இன்னொரு சிறப்பான சிற்பம் இந்த நரசிம்ம வடிவம் - அமர்ந்த கோலத்தில் தலையில் ஆதிசேஷன் அழகாக குடை பிடிப்பது அருமை.

beauty
poetry
size

உள்ளே சென்றோம். ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் நின்ற கோலத்தில் …

sri+bhaktavatsala+perumal

பாண்டிய நாட்டு கோயில்களை பற்றி மேலும் பார்த்து தெரிந்துக்கொள்ள அர்த்த மண்டபத்தின் மேலே ஏறி விமானத்தை பார்க்க வேண்டும் என்றோம். வெளியே அழைத்துச் சென்று அங்கேயா என்றார்கள். குறைவாக எடை போட்டு விட்டோம் , மண்டபத்தின் உயரம் மிக அதிகம், அவர்களிடம் இருந்த இரும்பு ஏணி செங்குத்தாக நின்றால் தான் மேல் தளத்தை தொட்டது. என்ன செய்வது என்று சுற்றி முற்றி பார்த்தால் கூட வந்த அரவிந்தை காணவில்லை, தொல்லியல் துறை நண்பரையும் காணவில்லை. கருங்கல் மண்டபத்தில் எப்படி மாயமாக மறைந்தார்கள் என்று வியந்து நின்றபோது மேலும் ஒரு அதிர்ச்சி. தரையின் அடியில் இருந்து குரல்கள் - சுற்றி பார்த்தால் ரகசியம் தெரிந்தது..

secret

தொடரும் …

மறுமொழி அளிக்கவும் »

முதலில் கொட்டும் மழையின் நடுவில் லண்டன் பேருந்து ஓட்டுனரிடம் அருங்காட்சியகம் போக வழி கேட்டது பெரிய தவறு. அன்றோ ஏதோ சாலையில் மராமத்துப் பணி நடக்கின்றதால் (அங்கும் !!!) பல சாலைகள் டைவேர்சண் வேறு - கூடவே சுமைதாங்கி போல முதுகில் புதிதாக வாங்கிய கிரிக்கெட் மட்டை வேறு. நட்ட நடு காட்டில் கண்ணை கட்டி விட்டது போல எங்கோ ஒரு இடத்தில இறக்கி விட்டுவிட்டு பேருந்து தன பாதையில் சென்று விட்டது. இங்கும் அங்கும் சுற்றி நாலு பேரிடம் வழி கேட்டு அவர்கள் தங்கள் பங்குக்கு நாலு பக்கம் வழி காட்டினர். முடிவில் செலவை பார்க்காமல் கைபேசியின் ஜி பி எஸ் மூலம் பார்த்து சென்றால் அது வேறொரு அருங்காட்சியகம் (Museum of London)!! நான் செல்ல வேண்டியது - British Museum!!.

மீண்டும் பேருந்து மற்றும் ரயில் பயணம் . முடிவில் பிரம்மாண்ட தோற்றத்துடன் இருந்த அருங்காட்சியகத்தை அடைந்தேன். வாயிலிலேயே தொல்லை - வாயிற் காப்போன் முதுகில் ”அது என்ன” என்று கேட்டான். முடிவில் தனது இத்தனை வருட சர்வீசில் பல வினோத மனிதர்களை பார்த்ததாகவும் ஆனால் இன்று தான் கிரிக்கெட் மட்டையுடன் அருங்காட்சியகம் வந்த ஒருவரை சந்திப்பதாக கூறி உள்ளே செல்ல அனுமதி கொடுத்தான். ஆனால் அன்று அவர்களுடன் எனது மோதலுக்கு இது ஒரு துவக்கம் தான். நாள் முழுவதும் அரைமணிக்கு ஒரு முறை அருங்காட்சியக காப்பாளருடன் சண்டை. எதற்கு…மேலே படியுங்கள்.

செப்புத் திருமேனிகள் நிறைந்த அறை என்றவுடன் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். அதுவும் இந்த சிற்பம்..

london+display
shiva+parvathi

shiva+parvathi

பெயர் பலகை 11th C CE என்றது , அதுவும் சிவ பார்வதி கல்யாணம் - அதாவது கல்யாண சுந்தர மூர்த்தி என்றது. நாம் முன்னரே இந்த காலத்து சோழ கல்யாண சுந்தர முர்த்தி பார்த்தோம். நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.

front
side
together

முதலில் இந்த சிற்பம் சோழர் சிற்பத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் உயரம், உடல் தோற்ற்றம், முக பாவம் அனைத்தும் பதினோராம் நூற்றாண்டு சோழர் சிலைகளை போல நறுக்கென்று இல்லாமல் இருப்பது தெரிகிறது. புகழ் பெற்ற பல்லவர் கால வடக்களத்தூர் கல்யாண சுந்தர மூர்த்தி சிலையின் நல்ல படங்கள் கிடைத்தால் நன்றாக ஒப்பிடலாம். என்னை பொறுத்த மட்டில் இந்த சிலை கண்டிப்பாக 9th C CE இருக்க வேண்டும்.

dress
shiva+face

பார்வதியின் கழுத்தில் இருக்கும் தாலி போன்ற அணியை நாம் இதுவரை பார்த்ததில்லை. மேலும் கல்யாண சுந்தர மூர்த்தி வடிவங்களுக்கே உரியதான ’கைப் பிடித்தல்’ இல்லாததால் இதனை நாம் ஆலிங்கன முர்த்தி என்றே அழைக்க முடியும்.

செப்புத்திருமேனியின் அழகை முழுவதும் ரசிக்க முன்னழகு மட்டும் அல்ல, பின்னழகும் பார்க்க வேண்டும் என்று கூறுவார். அருங்காட்சியகங்கள் இதை மனதில் கொண்டு சிலைகளை பார்வையாளர் சுற்றி வந்து பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும். இந்த சிலையின் பின்னழகை படம் பிடிக்க நான் பட்ட பாடு…..

first+glance+from+rear
closer+rear

தற்செயலாக கண்ணாடியின் மீது சாய்ந்துவிட்டேன், உடனே அலாரம் மணி அடிக்க , மீண்டும் காவலர்களுடன் போராட்டம் - சிலையின் பின் புறம் எதற்கு படம் பிடிக்கிறாய் என்று பல கேள்விகள்.

ஆனால் அதற்க்கு கிடைத்த பலன்…ஆஹா.

முன்னழகைக் காணில் முனிவர்தாம் தவம் செய்வரோ
பின்னழகைக் காணில் பிரமன் தான் தவம் செய்வனோ (மாணிக்கவாசகர்)

beauty+rear
embrace

பொதுவாக சிவன் உமையை அணைத்து பிடிப்பதே ஆலிங்கன மூர்த்தி என்பர் , எனினும் இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு தம்பதியினரிடையே இருந்த பரஸ்பரம் - அன்யோன்னியம் , இன்று நம் இளைய காதல் ஜோடிகள் பாணியில் , என்னே அந்த கலைஞனின் திறன் !!

மறுமொழி அளிக்கவும் »

 Page 3 of 135 « 1  2  3  4  5 » ...  Last »