Quantcast



நண்பர் சதீஷ் குமார் அவர்கள் சென்ற வாரம் தஞ்சை செல்லும் பொது - வழக்கம் போல படங்கள் எடுத்து வருமாறு கேட்டேன் . அவரும் அருமையான பல படங்களை எடுத்து வந்துள்ளார் . அதில் ஒன்றை இன்று பார்ப்போம். முதலில் கதை !!

தக்ஷன் வரலாறு

தக்ஷன் எனும் அரசன் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக பார்வதி தேவி அவரின் மகளாகப் பிறக்க அவளை சிவனுக்கு மணம் முடிக்க தேவர்கள் தக்ஷனிடம் பெண் கேட்டு வருகையில் ஆணவத்தால் அறிவிழந்த தக்ஷன் சிவபெருமான் தனது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வேண்டவே சிவபெருமான் பார்வதியைச் சிறை எடுத்துச் சென்று மணம் புரிந்து கொண்டார். அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் மகள் தாக்ஷாயிணியை சிவன் மணந்து கொண்டதால், வேண்டும் என்றே தக்ஷன் ஒரு மகா வேள்வி நடத்த எத்தனித்து, அதற்கு தன் மாப்பிள்ளையை அழைக்காமல் அவமானம் செய்தான்.

அந்த வேள்வியைக் காண தான் செல்ல வேண்டுமெனப் பரமேஸ்வரனிடம் அனுமதி கேட்டாள் மலைமகள். பரமேஸ்வரன் அந்த நேரத்தில் தியானத்தினால் ஆலோசித்து, “இந்த வேள்வியில் என்னுடைய அம்சமாக உள்ள ருத்திரனுக்கு ஹவிர் பாகம் இல்லாமல் இந்த யாகம் நடத்த உள்ளனர். ஆகவே, என்னை அவமதிப்பதற்காகவே இந்த யாகம் நடத்தப்படுவதால் நீ செல்ல வேண்டாம்”, என்று சொல்கிறார்.

ஆனால் தந்தை பாசம் கண்ணை மறைக்க அழையா விருந்தாளியாக தாக்ஷாயிணி அங்கே போனாள். தக்ஷன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்து வேள்வியைத் தொடங்குகிறான். தாக்ஷர்யணியை எவரும் விசேஷமாகக் கவனிக்கவில்லை. சிவனுக்கு நடந்த அவமானங்களை கண்டு சகிக்க முடியாமல் அங்கேயே மறைந்து போனாள்.

அப்பொழுது, பரமேஸ்வரனுக்கு விவரம் தெரிந்து, கோபத்தில் தக்ஷ்ன் தலையைக் கொய்து - அதனை வேள்வி தீயினிலே இட்டு எரிக்கிறான் ஈசன். இதை காணும் அனைவரும் அஞ்சி நடுங்குகின்றனர்.

பின்னர், பிரம்மன் ( தக்ஷனின் தந்தை ) ஈசனிடம் சென்று வேண்டிய்தின் பெயரில் , வெட்டப்பட்ட தலைக்கு பதில் ஒரு ஆட்டின் தலையை வைத்து உயிர் பெறுகிறான் தக்ஷன்.
இவற்றை பெரிய கோவில் படிகளின் கைப்பிடியில் செதுக்கி உள்ள அழகு சிற்பங்கள்.. அருமை. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

run run run.jpg
the first part of the story.jpg

முதலில் இது இருக்கும் இடம் ( நண்பர் சதீஷ் அருமையாக படம் எடுத்துள்ளார் ) - நமக்கு சிற்பத்தின் அளவை விளக்க ஒரு பேனாவை வைத்து படங்களை பிடித்துள்ளார். கதையை விளக்க சிற்பங்களை பாருங்கள்.இரு பக்கமாக காட்சிகள் நகருகின்றன - ஒரு பக்கம் தக்ஷன் தலை கொய்தல் . மற்றொறு பக்கம் அவனுக்கு ஆட்டின் தலையை பொருத்துதல் .

the assembled guests 2.jpg
the assembled guests.jpg
shiva parvathi n nandhi + helper.jpg

முதல் தலை கொய்தல் - முனிவர்கள் அனைவரும் கூடி நிற்கும் காட்சி ( நீங்கள் பார்க்கும் பொது மிகவும் பின்னால் இருக்கும் இடம் ) - அதை அடுத்து மேல் தளத்தில் மிக அழகாக அமர்ந்திருக்கும் ஈசன், நந்தியின் மேல் ஒரு கை வைத்து அழகாக நிற்கும் உமை, அவர்களை அடுத்து ஒரு தோழிப்பெண்.

Shiva consigning dhaksha head into the fire.jpg
shiva beheading dhakshan.jpg
the fallen dhaksha and his wife grieving over.JPG
witnesses,on your mark get set go.jpg

கீழே - முக்கிய காட்சி - தக்ஷனின் தலையைக் கொய்து தீயில் இடும் ஈசன் ( அதை கண்டு முகம் திரும்பி நகரும் முனிவர். அடுத்து தலை வெட்டப்பட்டு முண்டமாக கிடக்கும் தக்ஷன் - அவன் நிலையை கண்டு கைகளை மேல உயர்த்தி அழும் தக்ஷனின் துணைவி . அதை அடுத்து இந்த காட்சியை கண்டு பார்போர் அலறி பயந்து ஓட - என்ன ஒரு அருமையான படைப்பு - முன்று பெண்மணிகள் , அவர்களை அடுத்து முன்று முனிவர்கள் - அவர்களின் தோற்றம், திரும்பி, முகத்தில் பயம் - அந்த கோர காட்சியை காட்சியை பார்த்துக்கொண்டே , ஓடும் படி செதுக்கி உள்ளான் சிற்பி.. கடைசியில் இருவர் - ஓட ஆரம்பித்தே விட்டனர். ( சிற்பத்தின் அளவை குறிக்க பேனாவை கவனியுங்கள் )

fleeing ( note the size).jpg
run run run.jpg
witnesses,on your mark get set go.jpg

சரி - அடுத்த பாகம் - மூன்று ரிஷிகள் - மற்றும் பிரம்மன் ஈசனிடம் வேண்டும் காட்சி , தக்ஷனின் தவறை மன்னித்து அவனுக்கு உயிர் பிச்சை கேட்டு நிற்கின்றனர். என்ன ஒரு அருமையான சிற்பம் - அதுவும் அந்த ஈசனின் வடிவம் - மான் , மழு , இடையில் தொங்கும் நாகம் , மிக அருமை.

the second part of the story.jpg
Revived Dhaksa with goat head.jpg
Shiva.JPG
dhaksha revived with a goats head.jpg

ஈசனும் மனம் இறங்க - கடைசி காட்சி - மேல பூத கணங்களும் விண்ணவரும் இசை முழங்க , ஆட்டின் தலையுடன் ஈசனை வணங்கும் தக்ஷன் - மற்றும் மற்ற முனிவர்கள் ஆசி பெறுகின்றனர்.

இதோ தேவாரம் குறிப்புகள்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

கடுஞ்சினத்தால் தொடங்கின யாகத்துக்கு அதி தேவதையின் தலை அற்ற விதத்தை நமது பிறவித் தொடர் அற்று ஒழி யும் வண்ணம் பாடி உந்தீபறப்பாயாக!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=81140&padhi=14&startLimit=11&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

சிறுவிதியின் தலையற்றுப் போக அதற்குப் பிரதியாக ஆட்டின் தலையைப் பொருத்தின விதத்தைப் பாடித் தனங் குலுங்க நின்று உந்தீபறப்பாயாக!

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:



மச்ச அவதாரம் திருமாலின் முதல் அவதாரம். மச்சம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப்பொருள் தரும். படைக்கும் பிரம்மன் தனது ஒரு நாள் காலக் கணக்கு( 4320 million years) முடிந்தவுடன் ,தான் படைத்த அனைத்தையும் விட்டு விட்டு உறங்குவார். அப்போது அவர் படைத்த அனைத்தும் அழியும் - வேதங்கள் தவிர. அவை பிரம்மனின் உடலினுள் வசிக்கும். பின் அடுத்த நாள் அனைத்தையும் திரும்பப் படைக்க துவங்குவார் பிரம்மன். அவ்வாறு ஒரு முறை பிரம்மன் தூங்கும்முன் கொட்டாவி விடும்போது் வேதங்கள் வெளியேறி விட்டன. அப்போது அவ்வழி சென்ற அசுரன் ஹயக்ரிவன் - அவற்றை களவாடிவிட்டான். இதை கண்டுகொண்ட விஷ்ணு அசுரனிடமிருந்து அவற்றை மீட்க எடுத்த அவதாரம் இது.

மனு என்ற அரசன் ஒரு சிறு குளத்தில் பூசை செய்யும் போது ஒரு சிறு மீனாக அவன் கையினுள் வந்து அபயம் கேட்டார். அவனும் அன்புடன் எடுத்து தனது கமண்டலத்தில் உள்ள நீரில் அந்த மீனை இட்டான். சிறு நேரம் கழித்து மீன் மள மள என்று வளர்ந்து கமண்டலத்தை விட பெரிதாக ஆவதைக் கண்டு பயந்து, அதை எடுத்து ஒரு ஆற்றில் விட்டான் மனு. அங்கும் அது வளர, பின் கடல் - அதன் பின் மகா சமுத்திரம் என்று படிப் படியே எடுத்து சென்றான். கடைசியில் வந்தது யார் என்று புரிந்து வணங்கினான். மச்ச வடிவத்தில் இருந்த திருமாலும், அவனுக்கு ஆசி புரிந்தார் - ஒரு வாரத்தில் புவி அழிந்து பிரளயம் வர இருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க ஒரு பெரிய கப்பலை கட்டி - அதில் உயர்ந்த உயிர் இனங்களை உடன் எடுத்து காத்திருக்குமாறு கூறியது மீன்.

ஒரு வாரத்திற்குள் மனுவும் அவ்வாறே செய்ய, அதற்குள் பெருமாள் ஹயக்ரிவ அசுரனை சமுத்திரத்தின் அடியில் கண்டு பிடித்து, முட்டி அழித்து ,வேதங்களை மீண்டும் பிரம்மனிடம் ஒப்படைத்தார். பிறகு கூறியவாறே பிரளயம் வர, வாசுகி என்ற பெரிய பாம்பை கயிறாக கொண்டு, தனது நெற்றியில் வளர்ந்த பெரிய கொம்பில் கட்டி, பிரளயத்தில் இருந்து அந்த மரக்கலத்தை காப்பாற்றி - மீண்டும் புவியில் உயிரினங்கள் வாழ வழிவகை செய்தார்.

இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகக் கொண்டவராகவும் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது - பொதுவாக நாம் இந்த அவதாரத்தை குறிக்கும் சிற்பங்கள் இவ்வாறே மேல் பாகம் மனித உடலுடன் கீழ் பாகம் மீனின் உருவுடனும் (மீன் பாடி***) காண்கிறோம். ( இதோ ஸ்ரீரங்கம் கோவில் தூணில் )

macha cycle stand.jpg

ஆனால் இங்கே (ஹோய்சாலர் (போசளர்) காலம் பேலூர் ஹலேபிட் ஹோய்சாலேஷ்வர கோயில் சிற்பம் ) அழகிய மீனின் தலையும் மனித உடலுடன் சிலை உள்ளது - கயல் விழி என்று கேள்விபட்டுள்ளோம் - அது விழியே கயல் போல இருக்கும் என்ற கற்பனை - இங்கே கயலுக்கு விழி….

fish avatar belur.jpg
machaavataramhalebid.jpg

திரு சந்திரா அவர்கள் மற்றும் நண்பர்கள் இந்த சிற்பத்தை வராகம் என்று கருத, இதோ அங்கே இருக்கும் வராக அவதார சிற்பங்களையும் இணைக்கிறேன்.

varaha.jpg
varaham  halebid.jpg

( ***மீன் பாடி என்பது சென்னையில் அனைவருக்கும் தெரிந்த வாகனம் - மரீனா கடற்கரை சாலையில் சாலையை விட ஒரு ஜாண் மேலே பறக்கும் விமானம் அது - ஓட்டுனர் உரிமம் தேவை இல்லை, வண்டிக்கு எந்த வித எண்ணும் தேவை இல்லை )

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

 Page 103 of 139  « First  ... « 101  102  103  104  105 » ...  Last »