Quantcast

chandesabigtemple.jpg

அமெரிக்கா நண்பர் ஒருவர் இந்த படத்தை அனுப்பி( தஞ்சை பெரிய கோவில் சிற்பம்), இது என்ன சிற்பம், கிருஷ்ணா லீலையா(கம்ச வதமா) என்று கேட்டார்.

இந்த சிற்பத்தின் மிச்சம் இரு காட்சிகள் உண்டு — இப்போது படங்கள் இல்லை - கிடைத்தும் இடுகிறேன். மூன்று காட்சிகளை கொண்ட படத்தின் நாடு காட்சி இது. இது சண்டேஸ்வரர் கதை…..சிவாலயங்களில் அனைத்து சொத்துக்களுக்கும் இவர் பெயராலேயே பதிவு செய்யப்படும். இவரது கதை மிக விநோதமானது. சிற்பத்தில் ஒருவர் தடி கொண்டு மற்றொருவரை அடிப்பது போல உள்ளது. அடிப்பவர்தான் சண்டேஸ்வரர், அடி வாங்குபவர் அவரது தந்தை ???

 

இவரை பற்றி ஞானசம்பந்தர் இவ்வாறு பாடுகிறார்.

கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே

 

சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி , நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற , சிவ பூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச , அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும் , முக்கண் மூர்த்தி யான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித் தருளியதை அறிவுசால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ ?

 

இவரது இயற் பெயர் வீசாரசர்மன். பிறப்பிலேயே சிவநெறி / சிவ பக்தி மிகுந்த குழந்தை ….நண்பர்களுடன் ஒருநாள் விளையாடும் போது பசுமாட்டை பராமரிக்கும் ஒருவன் அவற்றை அடிக்கிறான் - இதில் சினம் கொண்டு அவனை சபித்து , இனி நானே பசுக்களை கவனித்து கொள்கிறேன் என்று சிறுவன் கூற, அவனது அன்பான அரவணைப்பில் பசுக்கள் எல்லாம் மிக அதிகமாகவே பால் கறக்கின்றன. ….. பசுக்களின் உரிமையாளருக்கு கொடுத்த பின்னும் பால் மிச்சம் இருக்கிறது…. அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.

 

அப்போது பக்தி நிலையில் வீசாரசர்மன் ஆற்று மணலில் சிவலிங்கம் ஒன்றை பிடித்து அதற்க்கு மிச்சம் இருந்த பால் கொண்டு அபிஷேகம் செய்கிறான். இதை மூடன் ஒருவன் வீசாரசர்மனின் தந்தை இடத்தில் கூற, அவரும் உண்மையை அறிய அடுத்த நாள் வீசாரசர்மனை பின் தொடர்கிறார்.

 

பாலை மண்ணில் இடுவதை கண்டு அவனது பக்தியை அறியாது - கூச்சல் இடுகிறார் (தஞ்சை பெரிய கோவில் சிற்பத்தின் முதல் காட்சி இது - படம் இல்லை மன்னிக்கவும் ) … ஒரு கம்பு கொண்டு ஓங்கி முதுகில் இடுகிறார் - பக்தி நிலையில் வீசாரசர்மன் இதை உணரவில்லை ….. எனவே பால் குடத்தை காலால் இடருகிறார் - அப்போது சினம் கொண்ட வீசாரசர்மன் தந்தை என்றும் பாராமல் பக்தி பரவசத்தில் அருகில் இருக்கும் தனது மாடு மேய்க்கும் கொலை எடுத்து தனது தந்தையின் காலின் மேல் எறிகிறான். அது மாயமாக கோடரி ( மழு ) யாக மாறி அவரது காலை வெட்டியது.

 

chandesaanugramurhtigangaikondacholapuram.jpg

உடனே எம்பெருமான் சிவ பூஜைக்கு இடையூறு விளைவித்தது தந்தை என்றும் பாராமல் அவரை தண்டித்த வீசாரசர்மன் தனது மகனாகவே பாவித்து … அந்த தூய பக்திக்கு பரிசாக தனது விரிசடையிலிருந்து கொன்றை மாலையை எடுத்து சண்டேகேஸ்வரருக்கு அணிவித்தார்.

நண்பர் திரு ஸ்ரீவத்சன் அவர்கள் சற்று முன்னர் இந்த முழு சிற்பத்தின் படத்தை அனுப்பி நாங்கள் இந்த தளத்தை உருவாக்க முக்கிய குறிக்கோள் ஒன்றை வெற்றி பெற செய்தார். அவருக்கு எங்கள் மனமார்த்த நன்றி..இதேபோல் பலரும் தங்கள் படங்களை தந்து இந்த தளத்தை இன்னும் அழகு செய்ய மீண்டும் எங்கள் வேண்டுகோள்.

Chandesa compete panel from bigtemple thanks to Srivatsan.jpg

இந்த சிற்பத்தை கிழ் இருந்து மேல் பார்க்க வேண்டும். முதலில் சண்டேசர் மெய்த மாடுகள், இரண்டாவது அவர் தனது தந்தையை தாக்கி உள்ளார், தந்தை கீழே விழுந்து விட்டார், அதற்க்கு மேலே - ஈசனின் அருளை மெரும் சண்டேசர்

அந்த சிற்பத்தை மிகவும் அழகாக ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் நிறுவினான்…..சிலர் இந்த சிற்பம் ராஜேந்திரன் கங்கை வெற்றிகளை சிவபெருமானின் கரத்தால் வெற்றி மாலை பெறுவது போல் அமைத்தது என்று கூறுகின்றனர்.( அகிலனின் வேங்கையின் மைந்தன்..) அப்பா என்ன ஒரு அபாரமான சிற்பம்…ஒவ்வொரு முகமும் அருமை…அடி பணியும் பக்தன்…ஆட்கொள்ளும் கடவுள்..அருளிக்கும் அன்னை

longshot.jpg
chandesaanugramurhtigangaikondacholapuram.jpg
closer.jpg
what grace.jpg
bestowing flowers.jpg

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

ஒரு நகைச்சுவையான செய்தி இந்த படத்தை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது

tirumullaivoil.JPG

( modern!!!!) பெண்களின் கூந்தல் பற்றி எனது ஆசிரியர் சொல்வார் - இந்த காலத்தில் பெண்களின் கூந்தல் நீண்டு வளர்ந்து கழுத்து வரையிலும் வரும் என்று….அந்த நாளில் கூந்தல் என்றால் எது வரை என்று இந்த படத்தில் பாருங்கள் - திரு முல்லைவையில் கோவில் தூண் - நாட்டிய மங்கை….. என்ன ஒய்யாரமாய் நாட்டியம் பயிலும் அழகி….இப்போதெல்லாம் உடையே இடை வரை தான் என்னும் பொது இது போல கற்பனையில் தான் பார்க்க முடியும்…இல்லை இது போல் பழைய சிற்பங்களில் தான் கண்டு களிக்க முடியும்…

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: 

தொடர்புடைய இடுகைகள்:

 Page 165 of 165  « First  ... « 161  162  163  164  165