Quantcast

தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சி மாறியதுமே முந்தைய ஆட்சியின் பொது அமலாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தடு ( தடம்) மாறும் ஏளனத்தை தினம் தினம் நாம் பார்க்கின்றோம். ஆனால் அந்தக் காலத்து மன்னர் ஆட்சியில் இது எப்படி இருந்தது என்ற கேள்வி எழுகிறது ..இன்றோ மக்கள் ஆட்சி. மக்கள் பிரதி நிதி நடைமுறை பற்றிய திட்டங்களே இவை என்ற கருதும் பொது அன்றைய மன்னர் ஆட்சியில் மன்னன் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று இருந்திருக்க வேண்டும். அவர் கூறினால் எதிர் மறை விவாதம் கிடையாது. எனினும் அவர்கள் எப்படி நடந்துக்கொண்டனர் என்பதை தெரிந்துக்கொள்ள மீண்டும் திருகழுகுன்றம் செல்ல வேண்டும். பலரும் சென்ற இடம் என்றாலும் அங்கு பலருக்கு தெரியாத ஒரு அற்புதம் இருக்கிறது. நாம் முன்னரே பார்த்த மலை மேல் உள்ள ஆலயத்துக்கு செல்லும் வழியில் உள்ள பல்லவர் காலத்து குடவரைக் கோயில்.

பாதி வழி ஏறியபின் மூச்சிரைக்க மேலே போகலாமா வேண்டாமா என்று சற்று நம்மை ஆசுவாசப் படுத்த நிற்கும் இடம் - மேலே செங்குத்தான அடுத்த வரிசை புதிய வழியில் படிக்கட்டு கண்ணை கட்ட, மலையை சுற்றி பழைய பாதை ஒன்றும் இருக்கிறது. அதில் சென்று திரும்பியதும் இடது புறம் மலையில் குடையப்பட்ட அற்புத ஒரு கல் மண்டபம் தெரிகிறது.

cave
grill+doors
view+from+top

தொல்லியல் துறை பாதுகாப்பில் இருக்கிறது என்றாலும் எப்போதுமே பூட்டப்பட்டே இருக்கிறது - இது நல்லதா கெட்டதா என்று சொல்ல முடியவில்லை.

குடைவரை தூண்கள் மற்றும் சில அம்சங்களை வைத்து இது மகேந்திர பல்லவரின் காலத்திற்கு அடுத்து என்று கருதப்படுகிறது. ( 630 CE பின்னர் ) . குடைவரை அமைப்பு இதோ.

tirukalukundram+layout

உள்ளே கருவறையில் அருமையான லிங்கம் உள்ளது. ( பின் சுவரில் சோமாஸ்கந்தர் வடிவம் இல்லை )

linga+central shrine

அடுத்து இருபுறமும் கருவறை காவலர்கள் ( புடைப்புச் சிற்பம் )
.

central+shrine
doorguardian+left
doorguardian+right

தூண்கள் நாம் இதுவரை கண்ட மகேந்திர குடைவரைகளை விட சற்றே மெலிந்து காட்சி அளிக்கின்றன. மேலும் கருவறைக்கு இருபுறமும் நான்முகன் மற்றும் பெருமாளின் சிற்ப்பங்கள் வருகின்றன.

Brahma
vishnu
brahma+closeup
vishnu+closeup

முக மண்டபத்தில் இரு பக்கமும் தேவர்கள் இருவர் உள்ளனர். இவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை.

celestial+left
celestial+left+closeup
celestial+right
celestial+right+closeup (5)

சரி இப்போது கல்வெட்டுக்கு வருவோம் ( Epigraphica Indica Vol 3 )
363 பக்கம்

ஸ்வஸ்திஸ்ரீ கோவி ராஜகேஸரிபரம்மர்க்கு யாண்டு இருபத்தி ஏழாவது
களத்தூர் கோட்டத்துட்டன் கூற்று திருக்கழுக்குன்றத்து ஸ்ரீமூலஸ்தானத்துப் பெருமான் அடிகளுக்கு இறையிலியாக ஸ்கந்தசிஷ்யன் குடுத்தமையப்படியே பாதாவிகொண்ட நரசிங்கப்பொட்டரையரும் அப்பரிசே ரக்‌ஷித்தமையில் ஆண்டுரையான் குணவான் மகன் புட்டன் (புத்தன்) விண்ணப்பித்தினால் பூர்வராஜாக்கள் வைத்தபடியே வைத்தேன் இராஜகேசரிபரம்மன் இத்தர்மம் ரக்‌ஷித்தான் அடி என் முடி மேலினே

அதாவது ” போற்றி! வளம் பெருகட்டும்!! அரசர் ராஜகேசரிவர்மரின் 27ஆம் ஆண்டுக் காலம், ஸ்கந்தசிஷ்யன் இந்த நிலங்களை கொடையாகவும், களத்தூர் கோட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் உள்ள மூலத்தானவருக்கு பாத காணிக்கையாக அளிக்கப்பட்டதால் புனிதமான இந்த நிலத்துக்கு வரிப்பணம் செலுத்த தேவையின்றியும் ஏற்கனவே பூர்வ ராஜாக்களாலும், வாதாபியை வென்ற நரசிங்க பொட்டரையர் உறுதி செய்ததாலும், ராஜகேசரி வர்மனாகிய நானும் ஆந்துரையைச் சேர்ந்த குணவான் மகனாகிய புத்தன் வேண்டுகோளுக்கிணங்க உறுதி செய்கிறேன்.இந்தக் கொடையை பாதுகாக்கும் ஒவ்வொருவர் பாதமும் என் சிரத்திலும் பதியட்டும்.

ஸ்கந்தசிஷ்யன் கொடுத்த கொடையை , நரசிம்ம பல்லவர் உறுதி செய்ய ( 630 CE) , இருநூற்றி அறுபத்தி எழு ஆண்டுகள் பின்னர் வந்த சோழ அரசன் 897 CE யில் என்ன ஒரு பெருந்தன்மையுடன் முன்னர்வர்களை மதிப்புடன் வாதாபி கொண்டான் என்ற அடைமொழியை கூட விடாமல் கல்வெட்டாக செதுக்கி உறுதி செய்கிறான் !!! அதுவும் இத்தர்மத்தை பாதுகாப்போர் கால் பாதங்களை தன் தலையினில் பதித்துக் கொள்வதாக கல்வெட்டில் எழுதியுள்ள பணிவும்.. ஆகா.. ! அரசர் போற்றி! ஆண்டான் போற்றி!!

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

போகும் வழி எல்லாம் நல்ல மழை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் அடைந்ததுமே சரியாக நமக்கென்றே நின்று ஆதவன் பளீர் என்று தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கினான். மழையில் நனைந்த வரலாற்றுச் சின்னம் கண்முன்னே பளீர் என்று ஜொலித்தது.

rainsoaked

ஆரம்பமே அங்கு இருந்த ‘ அதிகாரிகளுடன்’ வாக்கு வாதத்தோடுதான். கருவறையை படம் பிடிக்க மாட்டோம், நாங்கள் செய்யும் பணி இது என்று என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க வில்லை, தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் புகைப்படம் எடுக்கலாம், பணம் கட்ட தேவை இல்லை என்று அதட்டியதும் சிட்டாய்ப் பறந்து விட்டனர். வெளியில் எடுத்து முடித்த பின்னர், மீண்டும் அவர்களது தொல்லை துவங்கியது. இம்முறையும் தோல்விதானோ என்று மனம் தளரும் தருவாயில் ஒரு அதிர்ச்சி. உள்ளே ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி, ஒரே கூட்டம், வீடியோ படமே எடுத்துக் கொண்டு இருந்தது அந்தக் கூட்டம். அவர்கள் எடுக்கும் பொது நாங்கள் ஏன் எடுக்கக் கூடாது என்று சத்தம் போட்டு, அவர்களையும் மீறி படம் எடுக்க துவங்கினோம். அப்போது பார்த்து மின் தடை !!

முடிந்த வரை எது எதுவெனப் பார்த்துப் பார்த்துத் தடவி தடவி படங்களை எடுத்தோம். ஆஹா அந்த வாயிற் காவலர்கள் தான் என்ன ஒரு கம்பீரம். இவர்கள் இங்கே இருக்க ”அவர்கள்” அங்கே எதற்கு என்று தோன்றியது.

door_guardian_l
door_guardian_r

அப்பப்பா ! எத்தனை பெரிய சிலை

giant

கால்களுக்கு அடியில் கருப்பாக தெரிகிறதே ? அது என்ன ?

black+speck
black+speck+check

ஆம், நமது கேமராவின் மூடி…

cannon

இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம் - சுவரின் அந்த பக்கம் இன்னும் ஒரு சிற்பம் - புடைப்புச் சிற்பம். ஆனால் இரண்டிற்கும் உள்ள அளவு வித்யாசமமானது அதை வடித்த கலைஞனின் திறமையை வெளிப்படுத்தியது. பொதுவாக வரையறுக்கப்பட்ட அளவிற்கு வரைவதோ வடிப்பதோ சுலபம். அதையே மிகவும் பெரிது படுத்தியோ அல்லது சிறிது படுத்துவதோ கடினம் - அங்க அமைப்பு சரியாக வராது.

gkc_miniature

மின்தடையின் காரணமாக வெளிச்சம் குறைவு. முக்கியமான இடம் சரியாக படம் எடுக்க முடியவில்லை.
எனினும் கதை விளங்கியது. பல முனிவர்கள் முன்னிலையிலும், பிரம்மன் முன்னிலையிலும் மீனாக்ஷி திருக்கல்யாணம நடக்கிறது.

brahma+consort

கல்யாண சுந்தரராக சிவன், மணப்பெண்ணுக்கே உரித்தான வெட்கத்துடன் மீனாக்ஷி, பெண்ணை தாரை வாற்றுக் கொடுக்கும் பெருமாள் மற்றும் லக்ஷ்மி

marriage

உடனே நினைவுக்கு வந்தது நாம் முன்னரே பார்த்த செப்புத் திருமேனி.

bronze

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை அபாரம்

shiva+parvathi
closeup+shiva+parvathi
prasad+sketch
shiva+uma

லட்சுமி நிற்கும் பாணி.

lakshmi

பெருமாள் சற்றே முன்ப்பக்கம் குனிந்து இருப்பது போல உள்ளது

shiva+vishnu

ஆனால் மீனாட்சியின் அந்த இடது கை, சற்றே வெட்கத்துடன் கலந்த புன்முறுவல்

parvathi
meenakshi

இன்னும் அபாரம் பெருமாளின் கடி வஸ்திரம் ( சிவனுக்கு அப்படி இல்லை !)

garments

நாம் சென்ற பதிவில் பார்த்தது போல

detail_3

செப்புத்திருமேனியுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

vishnu

ஒன்று கல் புடைப்புச் சிற்பம், மற்றொன்று செப்புத்திருமேனி , இருந்தும் இரண்டிலும் கலைஞன் தனக்கே உரிய கலையுணர்ச்சியில் சிற்ப விதிகளை வெளிகொணர்ந்த விதம் அருமை.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

 Page 4 of 135  « First  ... « 2  3  4  5  6 » ...  Last »