Quantcast

புலி கால் முனிவர் பற்றி கூறும் பொது இந்த மூன்று கால் முனிவரும் நினைவிற்கு வந்தார்.

பிருங்கி முனிவர் - மறந்தும் புறந்தொழாத் தீவீர சிவ பக்தர். ( அதனால் சிவனைத் தவிர வேறு யாரையுமே வழிபட மாட்டார், சிவனின் மனைவியான சக்தியாக இருந்த போதிலும் கூட)

ஒருமுறை சிவனை நேரில் வழிபட கைலாயம் சென்ற முனிவர், தம்பதி சமேதராய் இருந்த சிவனையும் பார்வதியையும் கண்டு திகைத்தார். சிவனை மட்டுமே அன்றுவரை வணங்கி வந்த முனிவர் ,சக்தியையும் வணங்குவது தமது பக்திக்கு இழுக்கு என எண்ணித் தம்மை ஒரு வண்டாக உருமாற்றிக் கொண்டார். பறந்து சென்று, மும்முறை சிவனை மட்டும் வலம் வந்தார். பார்வதி தேவியை வணங்காமல் திரும்பும் அவரை கண்டு கடுஞ்சினம் கொண்டாள் சக்தி. தன்னை வணங்காத முனிவருக்கு தன் சக்தி மட்டும் எதற்கு என்று எண்ணி தன் சக்தியை எடுத்துக்கொண்டால்.

தமது சக்தியைத் இழந்த முனிவர், வெறும் எலும்புக் கூடாய் மாறி நிலையாக நிற்க கூட முடியாமல் குடை சாய்ந்தார் - அவ்வாறு கீழே விழப் போன அவரை, சிவன் தனதுகோலைக் கைப்பிடியாய்த் தந்து காப்பாற்றினார்.

( இது மீண்டும் நடை பெறக்கூடாது என்று தானோ என்னமோ அப்பனின் ஒரு பாதியை வாங்கிக்கொண்டாளோ - சிலர் இந்த கதை வேறு விதமாக சொல்வார்கள் - முனிவர் வருவதை கண்டு அவரது நோக்கத்தை அறிந்த சக்தி ஈசனிடம் மிக அருகில் அமர - முனிவர் அப்போதும் அப்பனை மட்டும் சுத்தி வந்தார் - உடனே உமை ஈசனின் ஒரு பாதியை எடுத்து அம்மை அப்பன் என்று அர்த்த நாரியாய் மாற - அவர் வண்டாக மாறி ஈசன் இருக்கும் பக்கம் மட்டும் குடைந்து சுற்றி வந்ததாக கூறுவர் )

அதன் பிறகு ….அது வேறு கதை . இப்போது சிற்பத்தை பார்போம். இவரது சிற்பத்தை எங்கெல்லாமோ தேடினின் - கடைசியில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோவில் வெளி மண்டப தூணில் நமக்காகவே மூன்று கால்களுடன் காட்சி தந்தார் - மிக அரிய சிலை. எலும்பு உருவம் அவ்வளவு சரியாக சித்தரிக்க படவில்லை -

thiruchendur.jpg
tiruchendur bringi rishi.JPG
closeup of bringhi rishi.JPG

எலும்பு உருவத்தையும் மூன்று கால்களையும் பார்க்க மற்ற இடங்களில் உள்ள படங்களை இணைக்கிறேன்.

7667.jpg
bringhi+rishi.JPG
bringi.JPG
lord_vishnu_brahma_hanuman_and_a_threelegged_shaivite_pg46.jpg

படங்களுக்கு நன்றி - அர்ச்சனா ரகுராம்
http://archanaraghuram.wordpress.com/2008/05/31/temple-dairies-part-1/
மற்றும்
*http://www.kamat.com/kalranga/mythology/7667.htm*
South Indian shrines illustrated By P. V. Jagadisa Ayyar

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:



சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படம் வெளி வந்து ஒரு கலக்கு கலக்கிவிட்டு சென்று விட்டது

http://www.youtube.com/watch?v=xjVm1sYuESc

எனினும் அந்த படத்தின் துவக்க பாட்டில் ஒரு விஷயத்தை நான் பார்த்தேன். ( மீண்டும் நான் எங்கும் செல்லவில்லை - இன்னும் சிற்பத்தில் தான் உள்ளேன் ) இதை அப்படியே விட்டு சிற்பத்திற்கு செல்வோம்.

சரி நாம் மல்லை சென்று பல வாரங்கள் ஆகிவிட்டன. இதோ இன்று சென்றுவிடுவோம், ஒரு மிக விநூதமான சிற்பம். அனைவரின் கண் முன்னரே இருந்தும் பலரும் கவனிக்காமல் செல்லும் சிற்பம். ஆம், உலகிலேயே மிக பெரிய மல்லை தவம் சிற்பம். ( சரி, வாடிக்கையாளர்கள் பலரும் நாம் தான் ஏற்கனவே பலமுறை அந்த தவத்தை பார்த்துவிட்டோமே - என்று சொல்வது கேட்கிறது ) எனினும் - இந்த இடுகையை படித்து பார்த்து முடித்த பின் இத்தனை முறை அங்கு சென்றும் இதை நாம் எப்படி விட்டோம் என்று சொல்வீர்கள், பின்னர் முதலில் சிவாஜி படத்தை இதனுள் கொண்டு வந்ததற்கும் விடை கிடைக்கும். .

சரி, படங்களை பாருங்கள் - தொலைவில் இருந்து மெல்ல நகிர்ந்து நாம் அருகே செல்கிறோம். முக்கிய நபர்கள் - இருவர். இல்லை , அவர்களுக்கு நடுவில் இருக்கும் ….யார் அது

mallai penance1.jpg
mallai penance 2.jpg
mallai penance 3.jpg
mallai penance 4.jpg
mallai penance 5.jpg
mallai penance 6.jpg
belly lion face.jpg

குட்டி பூத கணம் - அதன் வயிற்றில் சிங்க முகம். அற்புத வேலை பாடு.இப்போது பாட்டை இங்கே கொண்டு வந்ததன் அர்த்தம் புரிந்ததா.

tiger belly in rajini song.jpg
tiger in the belly.jpg

இதை சிற்பி என் செதுக்கினான். பல்லவ சிற்பியின் விளையாட்டு தனமா இது ? இல்லை வேறெங்கும் இது போல சிங்க தொப்பை கொண்ட பூத கணம் உண்டா? ஆம் உண்டு, நம் அமெரிக்க தோழி காதி அவர்கள் உதவியால் - ஆனால் அது அடுத்த இடுகையில்.

மீண்டும் ஒரு முறை வினோத தொப்பையை ரசியுங்கள்.

mallai penance 44.jpg
mallai penance suplm 2.jpg
mallai penance suplm3.jpg
mallai penance suplmn 4.jpg

இத்தனை முறை மல்லை சென்றும் இதை எப்படி பார்க்கவில்லை என்று தினருங்கள், அடுத்த முறை எங்கு சென்றாலும் உர்த்வ முகம் என்று அழைக்கப்படும் இந்த வினோத பூத கனத்தை தேடுங்கள்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

 Page 91 of 135  « First  ... « 89  90  91  92  93 » ...  Last »