Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘அஜந்தா’

திருமதி லட்சுமி சரத் அவர்களின் இந்த இடுகை பார்த்தவுடன் நான் முன்னர் மின்தமிழில் இட்ட மடல் நினைவுக்கு வந்தது

http://backpakker.blogspot.com/2008/09/india-through-my-eyes_21.html

ஏப்ரல் மாதம் 1819 ஆம் ஆண்டு , ஜான் ஸ்மித் ( John smith) என்ற சென்னை (
அப்போது மதராஸ் )ரெஜிமேன்டை சார்ந்த ஆங்கிலேய கேப்டன் - தனது
சகாக்களுடன் அடர்ந்த காடுகளில் புலி வேட்டையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் ஒரு குதிரை லாடம் போன்ற பள்ளத்தாக்கில் பல குகைகளை கண்டார்.
ஆம் - அவர்தான் அஜந்தா குகைகளை மீண்டும் கண்டு பிடித்தவர்.

அவர் அதனுடன் நிறுத்தவில்லை - அற்புத ஓவியங்களை உடைய அச்சுவரில் தனது
கையெழுத்து மற்றும் தேதியை கிறுக்கினார். இதோ அந்த வரலாற்று அம்சம்
பொருந்திய அவரது கையெழுத்து

johnsmith ajanta 2.jpg
johnsmith ajantha.jpg

- ஒரு சிறு கிறுக்கல் ஒருவரை சரித்திரத்தில் இடம்பெற செய்தது.

இந்த செயலை பின்பற்றி தானோ இன்று பல ரோமியோக்கள் ( tanjore s.mani ???)
தங்கள் பெயர்களை வரலாற்றில் பல சாகசங்களை புரிந்து அவற்றை கல்லில்
செதுக்கிய நமது ஒப்பற்ற அரசர்களுக்கு சமமாக இடுகின்றனர்.

big temple mani.jpg
gkc vandalism.JPG

கங்கை கொண்ட சோழபுரத்தில் - நமது கிறுக்கன் கைவரிசை -. பரிட்சையில்
ஒரு வரி கூட எழுத மாட்டார்கள் -இங்கே சாசனம் எழுதுகிறார்கள். இவர்களை
மாறு கால் மாறு கை வாங்கவேண்டும்

மறுமொழி அளிக்கவும் »

எல்லோரா ஒரு மேலோட்டம் சென்ற மடலில் பார்த்தோம். அப்போது அஜந்தா, இதோ வருகிறது

ajanta1.jpg
ajanta2.jpg
ajanta4.jpg
ajanta9.jpg

 

அடர்ந்த காடுகளின் நடுவில் குதிரையின் குளம்பு போன்ற வடிவம் கொண்ட மலை சரிவில் - ஒரு பக்கம் அழகிய நீர்வீழ்ச்சியின் வனப்பு … அந்த ரம்மியமான இயற்கை கொஞ்சும் எழில் வனத்தில் தங்களது மடத்தை அமைத்தனர் அந்த பெளத்தர்கள்…. இயற்கையின் அழகுக்கு போட்டியாக கல்லில் தங்களது கலையை குடைந்தனர், அதனுள் எண்ணில் அடங்க எழில் கொஞ்சும் சிற்பங்கள்

அது போதாதென்று பல் வேறு வண்ணங்களில் அழியா ஓவியங்களை தீட்டி … இந்த ஒப்பற்ற பொக்கிஷத்தை - காலத்தினால் அழியாப் புகழை நம் மண்ணுக்கு தந்த விட்டு சென்ற அந்த அன்பு உள்ளங்களுக்கு நாம் என்ன கை மாறு செய்யப்போகிறோம். ???

ajanta6.jpg
ajanta7.jpg
ajanta8.jpg

 

ஆயனர் ( சிவகாமியின் சபதம் ) இதனை பார்க்க எவ்வளவு இன்னல்களை சந்தித்தார் …….இதனுள் அப்படி என்ன இருக்கிறது…. வரும் மடல்களில்….

மறுமொழி அளிக்கவும் »

 Page 2 of 2 « 1  2