Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ பிரம்மா’

அந்த காலத்தில் தந்தையும் மகனும் சிற்பிகளாய் இருப்பது பலருக்கு கண்ணுறுத்தலாக இருந்திருக்கும் போல ! தந்தை செய்த சிற்பத்தில் மகன் குறை கண்டுபிடிப்பதும் அதனால் தந்தை தன கையை தானே வெட்டி எறிவது போல பல ( கட்டுக்) கதைகள் எதோ ஒரு ஒற்றில் கேட்டால் பரவாயில்லை - ஊருக்கு ஊர் இதே கதையை அந்த ஊரில் உடந்தை சிற்ப்பத்துடன் ( உள்ளே தேரை இருந்தது தான் அந்த குறையாம் !) இந்த கதையை சொல்லி சொல்லி பரப்பி விடுகிறார்கள். ஆனால் நல்ல வேலையாக இந்த முறை புதிதாக ஒரு கதையை கேட்டோம் !

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் வழி கேட்டுக்கொண்டு - அதற்க்கு ஊர்காரர்களுக்கு வழி தெரியவேண்டுமே ! தட்டி தடவி, திருமலாபுரம் என்று இன்று அழைக்கப்படும் திருமலைப்புரம் ( திருநெல்வேலி - கல்லிடைக்குறிச்சி அருகில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது) சென்றடையும் போதே பொழுது சாய்ந்துக் கொண்டு இருந்தது.

finished+cave+long

பெரிய குன்றில் ஒரு புறம் உள்ள பாறை முகத்தில் வெட்டிய குடவரை பளிச்சென்று தெரிகிறது. அதன் முன்னே அந்த சிற்பி / மன்னன் நின்று பார்க்கும் பொது தங்கள் மனக்கண்ணில் அவர்கள் கைவண்ணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இருப்பார்களா ?

facade
finished+cave

சின்ன குடவரை தான். இரு தூண்கள் - இரு அரை தூண்கள் ( வட திசை நோக்கி ஒரு முடிவுற்ற குடவரை உள்ள்ளது - தெற்கு நோக்கி ஒன்று முடிவு பெறாத நிலையிலும் உள்ளது. அந்த முடிவு பெறாத குடைவரையை வைத்து தான் இந்த கதை வளர்கிறது - அதை பின்னர் பார்ப்போம் )

முதல்லில் வடக்கு குடைவரையை இன்னும் அருகில் சென்று பார்ப்போம். தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.

fluted+pilaster

அருமையான குடவரையில் நடு நாயகமாக தாய்ப்பாறையில்f செதுக்கிய நந்தி இருந்திருக்க வேண்டும். பாவம், அதன் கால்கள் மட்டுமே நமக்கு எஞ்சி உள்ளன. எவ்வளவு கடினமான வேலைப்படாக அது இருந்திருக்கவேண்டும் ! அடுத்த குடைவரையை பார்க்கும் பொது இது பற்றி நமக்கு மேலும் புரியும்.

back+hoof
hoof+nandhi
nandhi+defaced

இந்த குடைவரையின் காலம் சுமார் ஏழாம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு கணக்கிடப் படுகிறது. இது பாண்டியர் பாணியில் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் தாய்பாரையில் செதுக்கப்பட்டிருப்பது, விநாயகர் சிற்பம் இருப்பது மற்றும் உள்ளே இருக்கும் மற்ற சிற்ப்பங்களின் பாணியை கொண்டும் இவற்றை நாம் அறியலாம்.

இரு வாயிற் காவலர்களில் இடது புறம் இருப்பவர் முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறார்.

sanctum+doorguardians
left+guardian
monolithic+linga
moustache
right+guardian
ganesha

உட்சுவர்களில் நான்முகன் , பெருமாள் மற்றும் சிவபெருமானின் அருமையான ஆடல் சிற்பம் உள்ளது.

brahma
natesa
vishnu

ஆடல் சிற்பம் என்றால் புகழ் பெற்ற நடராஜர் வடிவம் அல்ல - ஆனால் சதுர கோணத்தில், கையில் நடன நூலை பிடித்து அவர் ஆடும் அழகு மிக அருமை. அவருக்கு இருபுறமும் பூத கணங்கள் உள்ளது - வலது புறம் உள்ள கணம் சிதைந்து விட்டது - இடது புறம் இருப்பவர் சங்கீதம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியமானவர். இந்த ஆடல் காட்சி மற்றும் பூதகணத்தை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

shiva
painting+traces

இங்கே குறிப்பிட வேண்டியது இந்த சிற்பங்களின் அளவு - மேல் பாகம், முகம் - அணிகலன் எல்லாம் அழகாக இருந்தாலும் - இடுப்பு மற்றும் கால்கள் சற்றே அளவில் குறைவாக இருப்பது சற்று அழகு குறைவாக காட்சி அளிக்கின்றன.

சுவர்களில் ஒரு சில இடங்களில் ஓவியங்கள் இருந்த தடயங்கள் தெரிகின்றன. இந்த குடைவரைகள் முழுவதும் அந்த நாளில் ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்திருக்கும் !! இன்னும் ஒரு புதமை இங்கே மும்மூர்த்திகளின் வடிவங்களின் நடுவில் இடத்தை பிரிக்க தூண்களை போலவே கல்லில் செதுக்கி இருப்பது.

painting+traces
relilefs

பொழுது சாயும் நேரம் ஆகா, விடு விடு என்று அடுத்த குடைவரையை காண சென்றோம். அதற்குள் பெரிய கூட்டம் சேர்ந்துவிட்டது. எதோ பாரதிராஜா போல நாங்களும் படம் எடுக்கு வந்திருக்கிறோம் என்று நினைத்தார்களோ என்னமோ ! அந்த குடவரையில் பார்ப்பதுக்கு ஒன்றுமே இல்லை. அதை பூட்டி வைத்துள்ளனர் - சாவி இங்கே இல்லை, என்றெல்லாம் சொன்னார்கள்.

unfinished+cave
unfinished+cave+facade
unfinished+cave

வெளியில் உள்ள அரைகுறை சிற்பத்தை ( விநாயகரா??) பார்க்கும் பொது அவர்கள் சொல்வதில் தப்பு இல்லை என்று தான் தோன்றியது. நாங்கள் அந்த பூட்டிய கதவின் கம்பிகளுக்குள் தலையை திருப்பி திருப்பி உள்ளே பார்க்க முயற்சி செய்த எங்களை பார்த்து அவர்களுக்கு கருணை பிறக்கு - தொல்லியல் துறை தொலைபேசி என்னை தந்தார்கள். உடனே போன் செய்து வழக்கம் போல ” எனக்கு ஆசி இல் @#@#@#@#@# சாரை தெரியும் ” என்று ஒரு இரு பிரமுகர்களின் பெயரை சொல்லியவுடன் அவர் ” இதோ வருகிறேன் என்றார் !”

relief

அப்படி அவர் வருவதற்கு காற்று நிற்கும் பொது தான் அந்த ஆடு மேய்ப்பவர்கள் அந்த ” கதையை” சொன்னார்கள். முதல் குடைவரையை செதுக்கிய சிறப்பிக்கு மிகவும் சுட்டியான மகன் ஒருவன் இருந்தானாம். அவன் தன தந்தைக்கு தினமும் வீட்டிலிருந்து ” காபி ” எடுத்து வருவானாம். அவனுக்கு தந்தையின் கலையை கற்க பெரும் ஆசை. அதன்படி அவன் அப்பாவுக்கு காபி வைத்துவிட்டு அவர் செதுக்குவதை பார்த்து மனதில் பதிந்து - மலையின் அடுத்த பக்கம் சென்று அதே போல செதுக்க துவங்கினானாம். தந்தைக்கு இது தெரியாமல் இருக்க தந்தை சுத்தியால் உலையை அடிக்கும் அதே தருணத்தில் தானும் அடிப்பானாம். அப்படியே பல காலம் செல்ல - ஒரு நாள் தந்தை திடீரேனே செதுக்குவதை நிறுத்த - மகனின் உளியின் ஓசை அவருக்கு கேட்டு விட்டது. என்ன கடக்கிறது என்று பாக்க சத்தம் வந்த இடத்தை நோக்கி அவர் செல்ல - அங்கே தனது வேலையை யாரோ காப்பி அடிப்பதை கண்டு கோபம் கொண்டார். கோபம் கண்ணை மறைக்க கல்லின் மேலே குடிந்து வேலை செய்வது தன மகன் என்று தெரியாமல் சுத்தியல் கொண்டு அடித்து கொன்றுவிட்டாராம் !!

அப்போது சாவி வந்துவிட்டது, உள்ளே சென்று நிறை பெறாத அந்த குடவரையில் ” ஒன்றுமே இல்லாத ” சுவர்களில் அந்த காலத்தில் எப்படி இந்த கல்லை குடைந்தார்கள் என்று அறிய உதவுகிறது. குறிப்பாக அந்த தாய்பாரை நந்தி …இங்கே அதற்க்கு நடுவில் எப்படி கல்லை விட்டு சுற்றி குடைந்து வருவது தெரிகிறது.

tech2
tech3
tech4
techniques

குடவரையில் எப்படி கல்லை குடைந்து இன்னும் ஆழம் செல்கிறார்கள் என்றும் அறியலாம். ஒன்று நாம் கவனிக்க வேண்டும் - இங்கே கல்லில் உள்ள உளி பட்ட மார்க்குகள் மல்லை குடைவரைகளில் நாம் முன்னர் நாம் கண்ட மார்க்குகளை விட சற்று வேறுபட்டு காட்சி அளிக்கின்றன.

படங்கள்: அர்விந்த் வெங்கட்ராமன்

மறுமொழி அளிக்கவும் »

இந்து மதம் என்பது இந்து மகா சமுத்திரத்தை விட மிகவும் ஆழமானது. அதனாலேயே பலரும் அதனை புரிந்துக்கொள்ள எத்தனிப்பதில்லை. அப்படியே முயற்சிக்கும் பலரும் அதன் தோற்றம் எழுத்து வரலாறு ஏன் கேள்வி வழி வரலாற்றையும் கடந்து நீடிப்பதால் தோல்வியுற்றே திரும்புகின்றனர். அப்படி இருக்கையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மேலை நாடுகளின் கலை வல்லுனர்கள் இந்திய இந்து மதக் கலைசின்னங்களைப் பற்றி சற்று தாழ்வாகவே பார்த்ததில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. அதன் பின்னர் மெதுவாக நமது கலையை பற்றி புரிதல் வளர்ந்து இன்று ஒரு நல்ல மதிப்பை பெற்று இருந்தாலும், பொதுவாக அவர்கள் மனதில் அவற்றைப் பற்றிய கேள்விகளே அதிகம். அதை நாம் குற்றம் சொல்லக் கூடாது. இந்தியக் கலையானது அதை ஒட்டிய கதைகளை பிரதிபலித்தது. அதை புரிந்துக்கொள்ள அந்த கதைகளை மட்டும் அல்லாமல் அவற்றை சார்ந்து ஓடிய தத்துவங்களின் புரிதலும் தேவை படுகிறது. அப்படி இல்லாமால் வெறுமனே வந்து கோரை பற்களுடன், கொய்த தலைகளை ஏந்திய கைகளையும், மண்டையோட்டு மாலைகளையும், பூத கணங்கள் சூழ , பத்து கரங்களில் கொடிய ஆயுதங்கள் கொண்ட உருவங்களையெல்லாம் பார்க்கும்போது அவர்களுக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம் தவறாக இருந்ததில் தப்பில்லைதானே !

அதே மண்ணில் பிறந்து வளர்ந்த நமக்கே, முத்தொழில்களில் அழிக்கும் கடவுள் என்று சிவனை பார்க்கும்போது, இடுகாட்டில் , உடல் முழுவதும் சாம்பலை பூசி, பேய்களுடன் ஆடும் அவனது கோலத்தை ரசிப்பது சற்று கடினமே. அவனது லிங்க ரூபம் அதனை ஒட்டிய கருத்துக்கள் பக்கம் போகவே தேவையில்லை. அதுவும் இந்த காளாமுகர், காபாலிகர் , பாசுபதர், பைரவர் வழிபாடு என்று இப்படிஅடுக்கிக் கொண்டே போகலாம்.

எனினும் எப்படி இருந்திருக்கலாம் என்ற கேள்வி கிளம்புவதை ஆதரிக்கும் இந்த மதத்தின் தத்துவார்த்த பின்புலம் அழகு.

சிற்பக்கலையில் ஒரு சில இடங்களில் பழைய கோட்பாடுகள் அங்காங்கே தென்படுகின்றன. திரு கணபதி ஸ்தபதி அவர்களின் அருமையான நூலை கொண்டு சிலவற்றை ஆராயாலாம் Indian Sculpture and Iconography .

ஹளபேடு கோயிலில் எங்கும் சிற்பம் தான். அதில் ஒரு சிவ பைரவர் ரூபம் நமது ஆராய்ச்சிக்கு இன்று உதவுகிறது.

shiva+halebidu

ஹோய்சலர்களின் கலை - ஒரு சிறு இடம் கூட விடாமல் எங்கு பார்த்தாலும் ஏதாவது இருக்கும். அரக்க பரக்க வரும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று பார்க்க கூட நேரம் இல்லாமல் வெளியே ஆம்னி பஸ் ஹார்ன் சத்தம் கேட்டு ஓடி ஓடிப் பார்ப்பதே அதிகம். அப்படி இருக்கையில் இந்த சிலையை நின்று பார்ப்பவர் சற்று அதிர்ச்சி அடைவது சிவனின் இடது கையில் இருக்கும் ஆயுதத்தை கண்டு.

closeup+katvangam

என்ன இது என்று யோசித்துக்கொண்டே , இதெல்லாம் இந்த நூலில் இருக்குமா என்ற சந்தேகத்துடனேயே புரட்டினேன்.

அங்கே


” கட்வங்கம் : இந்த தடி கால் துடை எலும்பினால் செய்யப்பட்டது. அதன் மேலே ஒரு மண்டையோடு பொருத்தப்பட்டு இருக்கும். தடியை சுற்றி ஒரு பாம்பு மண்டையோட்டின் கண் துவாரத்தின் வழி வெளியே வந்து படம் எடுத்து ஆடும். சில இடங்களில் தடி மரத்தால் ஆனதாகவும் இருக்கலாம். பொதுவாக காபாலிக வடிவங்களில் இதனை காணாலாம். இது சிவனின் ஆயுதம். இது சில யோகிகள் மற்றும் ரிஷிகள் கையிலும் இருக்கும். தடி இரண்டு முக தூரமும், இரண்டு விரல் தடிமனும், மண்டையோடு ஐந்து விரல் அகலமும் ஏழு விரல் நீளமும் இருக்க வேண்டும் “

அது மட்டும் இல்லை கூடவே படமும் அப்படியே அச்சில் எடுத்தவாறு இருந்தது. நண்பர் ஓவியர் திரு ராகவேந்திர பிரசாத் அவர்கள் உதவியுடன் இதோ நமக்கு இன்னும் தெளிவான படம்.

katvangam

இந்தி பற்றி விவாதிக்கும் பொது நண்பர் திரு சுவாமிநாதன் அவர்கள் சோமநாதபுரம் நான்முகன் சிற்பம் ஒன்றைக் கொடுத்து உதவினார். அங்கே இன்னும் ஒரு அபூர்வ வகை ஆயுதம்.

Brahma+somnathput

பிரம்மாவின் வலது கையில் உள்ள கருவியை உற்று பாருங்கள்.

Brahma+ladle

மீண்டும் பிரசாத் உதவியுடன்

suruvam

படைக்கும் கடவுளின் கையில் இருக்கும் இது என்ன என்பதே அவரது கேள்வி.

மீண்டும் நூலைப் புரட்டினேன்.

“சிறுக்’ , ’சுருவம்’ : இவை கரண்டிகள். பிரம்மனின் கருவிகள். யாக சாலையில் யாக குண்டத்தில் தீக்கு நெய்யை உற்ற உதவும் கருவிகள் இவை. யாகம் முடியும் கடை நாளில் பூர்ணஹுதி என்னும் வழக்கில் பல்வேறு காணிக்கைகளை யாக குண்டத்தில் போட இந்தக் கருவிகள் உதவும். ’சிறுக்’ என்பது கட்டையால் ஆன கரண்டியாகும். சுருவம் சற்று வேறுபடும். சதுர வடிவில் இருக்கும் இதன் தலையில் பசு , யானை மற்றும் இதர பிராணிகளின் தலைகளின் வடிவங்கள் அலங்கரிக்கும். இவற்றின் அளவு ஒரு முழமாக இருக்கும். ”

மிகவும் அருமையான வடிவம். அது எழுப்பும் கேள்விகளும் அதிகம். எனினும் தற்போது எனது தேடல் யானை தலையுடன் இருக்கும் ஒரு சுருவம்!!

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 6  1  2  3  4  5 » ...  Last »