Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘கம்போடியா’


ஃபூனன் (கம்போடியா) பற்றிய ஒரு புத்தகத்தில் சுவையான ஒரு படத்தை பார்த்தேன். ஒரு சிற்பக் கரு உருவானது. இந்தச் சிற்பத்தைக் கண்டவுடன் ஏனோ சட்டென தாளவனூர் சிற்பம் நினைவுக்கு வந்தது. இந்த இரண்டு சிற்பங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரு இனிய அதிர்ச்சி! இரண்டும் ஒன்றுதானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்தச் சிற்பங்கள் இதோ:

makara thorana sambor prey kuk.jpg
the makarathorana and koodu combo

Mr. Andy Brouwer ( www.andybrouwer.co.uk/blog/) என்ற நண்பர் எடுத்தப் புகைப்படங்கள்,சம்போர் ப்ரெய் குக் - கம்போடியா - அவர் அனுமதி பெற்று அவருக்கு ஒரு சிறப்பு நன்றியுடன் இங்கே படைக்கப்படுகின்றன.மகர தோரணங்கள் என்றழைப்பர். சாதாரணமாகப் பார்த்தால் ஏதோ வாயில்தோரணங்களாகவும் அலங்காரத்துக்காகவும் செதுக்கியதாகத்தான் தோன்றும். ஆனால் அதை உற்று நோக்க ஏராளமான வித்தைகள் உள்ளே தெரியும்.

இரண்டு சிற்பங்களும் இருவேறு இடங்கள். ஒன்று நம் பல்லவதேசத்தில் உள்ள தாளவனூர். இன்னொன்று கம்போடியா நாடு.

mahendra dhalavnur makara thorana.jpg
makara thorana sambor prey kuk detail.jpg

கடல் கடந்த நீண்ட இடைவெளி உள்ள இந்த இருவேறு சிற்பங்களின் ஒற்றுமை நம்மை வியக்கவைக்கிறது. இது அலங்காரத்துக்காக மட்டுமே செதுக்கப்படவில்லை. தன் சிற்பத் திறமையை முழுதும் கொட்டி இவைகளை அந்தச் சிற்பி வடித்திருக்கிறான் என்ற வகையில் அந்த மகரதோரணத்தில் அப்படி என்ன விசேஷம் என்று ஆராய்ந்தோமானால் நிறைய விஷயங்கள் தெரியவரும். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் கதையில் வரும் பாடலில் இந்த மகர தோரண முக்கியத்துவம் குறித்து விவரங்கள் கிடைக்கும்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=1071&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.

(மகர தோரணங்களும், வளம்மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பில்லாத பலகொடிகளும், மாலை களும் ஆகிய இவற்றை அழகு பொருந்த நிரல்பட அமைத்து, நகரம் முழுமையும் உள்ள நீண்ட தெருக்கள் எல்லாவற்றையும் நன்மை பொருந்த அணிசெய்து, குற்றம் இல்லாத தேவலோகமே கீழ் இறங்கிய தாம் எனக் கூறுமாறு அழகு செய்வித்தார் சிவநேசர்.)

குற்றம் இல்லாத தேவலோகத்தில் மகரதோரணம் என்பது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்துகொள்ளும்போது, அந்த சிற்பியின் கைவண்ணத்தைக் காண்கிறோம். ஒரு நகரத்தையோ அல்லது அரண்மனையோ அல்லது தொழப்படுகின்ற கோயில்களோ கல்லில் செதுக்கப்படவேண்டும் என்று வரும் பட்சத்தில் அது சிறப்பான தேவலோகத்துக்கு இணையாக சிற்பி கருதுகிறான். அங்கு மகரதோரண வாயில் என்பது இன்றியமையாத ஒன்று என்று சிற்பிக்குப் புலனாகிறது. மகரதோரணத்தில் இந்தப் புனிதம் கெடாதபடி சிற்பியின் கைவண்ணம் மிளிர்கிறது.

இப்படிப்பட்ட கடின வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் பிற்காலச் சோழர்கள் தங்கள் கோயில்களில் அருமையாய் பிணைத்தனர். தாராசுரம் கோயில் படி சுவரில் உள்ள இந்த மகரத்தை பாருங்கள்.

darasuram handrail

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஞான சரஸ்வதி சிற்பத்தில் மிக அருமையான இரு மகரங்களை பார்த்து மகிழுங்கள். நன்றி நண்பர் திரு மோகன்தாஸ் அவர்கள்.

gkc gyana saraswathi
gkc gyaana saraswathi
gkc saraswathi
gkc - look at the arches
gkc makara closeup
gkc makara

மேலும் மகரங்களை பற்றி திரு உமாபதி ஸ்தபதியார் அவர்கள் இடத்தில கேட்ட பொது - சிலாகித்துப் போய் விளக்குகிறார். “ஆறு வெவ்வேறு விதமான சிற்பங்களை உள்ளடக்கி, அவைகளுக்குச் சுற்றி அலங்காரம் செய்வதைப் போல செடிகொடிகளையும் பக்கவாட்டுகளில்அழகோடு செதுக்கிக் காட்டவேண்டும். மிகக் கஷ்டமான சிற்பவேலை மட்டுமல்லாமல் கூரிய புத்தியோடு செயல்பட்டால் ஒழிய மகரதோரண சிற்பங்களை அவ்வளவு எளிதில் செதுக்கிவிடமுடியாது.!” அவர் மேலும் நமக்கு விளக்க அனுப்பிய படம் இதோ.

darasuram makara

வேறெங்கெஙகு இத்தகைய மகரதோரணங்கள் செதுக்கியிருக்கிறார்கள் என்று மற்ற இடங்களிலும் ஒருமுறை பார்க்கவேண்டும். ஆராயவேண்டும்.

மறுமொழி அளிக்கவும் »திரு K P. உமாபதி ஸ்தபதியுடன் நம் நண்பர் திரு சதீஷ் உரையாடியதன் விளைவுதான் இந்தப் பதிவு.. உரையாடலின் போது அவர் நம்முடன் பகிர்ந்ததை வைத்து ஒரு சிற்பியின் பார்வையில் சிற்ப ரசனை ,அதில் அவர் எதை , எவற்றை எப்படி எல்லாம் ரசிக்கிறார் என்பதை எடுத்துக் காட்டும் முயற்சி.

மல்லை படங்கள் திரு ஸ்ரீராம், அசோக் , மற்றும் எனது சமீபத்திய பயணத்தில் எடுத்தவை - கம்போடிய சிற்பங்கள் திரு கோகுல் ( சிங்கப்பூர் நண்பர் - கிரிக்கெட் ரசிகர் ).

Mallai Varaha panel

பல முறை நாம் பார்த்த வடிவம்தான் இந்த வராஹ சிற்பம், நாம் முன்னரே பாசுரங்களையும் வைத்து அலசியது என்றாலும் (( பாசுரங்களையும் வைத்து அலசியது))இப்போது ஒரு புதிய பார்வையில் பார்க்கிறோம், இல்லை படிக்கிறோம்

முதலில் முழு சிற்பத்தையும் பார்ப்போம். அதுவும் அசோக் உதவியுடன் சிற்ப நுணுக்கங்களை விளக்கு போட்டு பார்ப்போம்.

varahaPanel(hands)2

புரிகிறதா ? மல்லை சிற்பி ஒரே சிற்பத்தில் எத்தனை எத்தனை விதமான கை வடிவங்களை உயிரோட்டத்துடன் கருங்கல் குகையில் செதுக்கி நமக்கு அவனது ஆற்றலை காட்டுகிறான் பாருங்கள்.

பட்டியலிட்டு ஒன்றொன்றாய் பார்ப்போம். பொறுமையாகப் பாருங்கள். செதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உருவமும் ஒரே அளவில் இல்லை, எனினும் ஒரு குறிப்பிட்ட உருவத்தின் அளவுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணையானவை.

varahaPanel(hands) index
index 1
index 2
index 3
index 4
index 5
index 6
index 6 closeup
index 7
index 8
index 9
index 10
index 11
index 12
index 13
index 14
index 15

இன்னும் முடியவில்லை. என்னடா கைகளை கட்டி விட்டு கடைசியில் இரண்டு கால்களா என்று பார்க்கிறீர்களா? . முக்கியமான படங்கள் - முடிவில் வந்த இரண்டு படங்கள்.

index 14
index 15

பல்லவ சிற்பிகளின் அற்புத திறனை அங்கோர்வாட் சிறப்புடன் ஒப்பு நோக்கும் ஒரு முயற்சி.

நண்பர் கோகுல் அவர்களுக்கு நன்றி - அங்கோர்வாட் அழகிகளுக்கும். பல்லவ சிற்பத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் - சம்பந்தம் இல்லை, வேற்றுமை. கண்டு பிடியுங்கள் பார்ப்போம். குனிந்து பாருங்கள்.

agkorian relief sculpture
angkorian sculpture

சரி படத்தை பாருங்கள். கால்களை பாருங்கள்.

the depiction of the feet of an angkorian sculpture
the depiction of the feet of angkorian panel

ஒரு ஓவியத்தை தீட்டும் போது நாம் ஒரே பரிமாணத்தில் கொண்டு வருவது போல அவர்கள் சிற்பத்தையும் செதுக்கி உள்ளனர். ஆனால் பல்லவ மகா கலைஞனோ நேரில் நிற்கும் பாணி என்ன ஒருவர் திரும்பி சுவரை பார்க்கும் பாணியை கூட கால்களில் கொண்டு வந்து விட்டான்.

மேலும் சில படங்கள் - உங்கள் ரசனைக்கு

boomadevi's upper garment fallen loose
varaha eye and snout
varaha right leg on naga hood
varaha tusk

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 6  1  2  3  4  5 » ...  Last »