Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘சண்டேஸ்வரர்’


இன்றைக்கு நாம் மீண்டும் புள்ளமங்கை பிரம்ம புரீஸ்வரர் ஆலயம் செல்கிறோம். சிற்ப புதையல்கள் நிறைந்த ஆலயம், ஒவ்வொரு முக்கிலும் சிற்பம். எங்கும் சிற்பம், எதிலும் சிற்பம். சுற்றி சுற்றி நம்மை திணற வைக்கும் கலை பெட்டகம் . அவற்றில் ஒரு அற்புத சிற்பக் கொத்தை நாம் இன்று சதீஷின் உதவியுடன் பார்க்கிறோம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் போது - யார் படைப்பாளி யார் படைப்பு. புரியவில்லையா . மேலும் படியுங்கள்.

லிங்கோத்பாவர் சிற்பம். சைவ ஆலயங்களில் ஆகமங்களில் முக்கிய இடம் பெற்று விமானத்தின் பின்னால் இடம் பிடித்த சிற்பம்.

அதற்கு முன்னர், யாரையும் புண்படுத்த இந்த பதிவை இடவில்லை, சிற்பத்தை சிற்பமாக பார்ப்பதே எங்கள் நோக்கம். அதற்கு எவ்வளவு தூரம் கதை வேண்டுமோ அதை மட்டுமே இங்கு இடுகிறோம்

Ligothbhavar panel pullamangai

இந்த சிற்பக் கொத்தில் பார்க்க நிறைய உள்ளது

so much to see

அவற்றை முறையே பிரித்து ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

முதலில் லிங்கோத்பாவர்

closeup of the panel

ஒருநாள் நான்முகனுக்கும் ( அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் ) திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவ்வாறு அவர்கள் வாதமிட, அங்கே தீ பிழம்பாகிய ஜோதி வடிவம் ஒன்று எழுந்தது. அதன் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று ஒரு அசரீரி வானத்தில் கூறியது. பிரம்மா அதன் முடியைக் காண அன்னமாகி மேலே பறந்து சென்றார் . திருமாலும் வராக(பன்றி) வடிவில் பூமிக்குள் சென்று அடியை தேடினார். மிகவும் முயன்றும் பல காலம் கழிந்தும் இருவருக்கும் எந்த பலனும் கிட்டவில்லை . பறந்து சென்ற பிரம்மா வழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ உச்சியிலிருந்து தான் புறப்பட்டு பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறியது. உடனே போட்டியில் ஜெயிக்க குறுக்கு வழி வகுத்த பிரம்மா தாழம்பூவைத் தன் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார். திருமால் பலகாலம் முயன்றும் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார்.

அப்போது அதில் இருந்து வெளி வந்தார் சிவன், தங்கள் அகந்தையால் எதிரில் இருப்பது ஈசன் என்றும், அவன் ஆதி அந்தன் என்பதையும் உணராதது பிழை என்று ஒப்புக்கொண்டனர். எனினும் பொய் சொன்ன பிரம்மாவின் தலையை கொய்தான் ஈசன். மேலும் அவருக்கு இனி தனி வழிபாடு இல்லை என்றும், தாழம் பூ இனி தெய்வ வழிபாட்டிற்கு உகந்த பூவல்ல என்றும் கூறினார். அவ்விருவர் அகந்தையையும் போக்கி சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

இரண்டாம் திருமுறை - பாடல் எண் - 9

http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=2&Song_idField=2025009&padhi=025

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

சரி, இப்போது சிற்பம்.

மேலே பறக்கும் பிரம்மா , கிழே பூமியை குடையும் வராஹம். நடுவில் சிவன் ( மிகவும் சிதைந்த நிலையில்) பிளந்துக்கொண்டு வெளி வருகிறார்.

closeup of flying brahma
flying brahma
vishnu as varaaham
shiva emerging from the pillar

இந்த சிற்பத்தின் இரு புறமும் பிரம்மன் மற்றும் திருமாலின் அற்புத சிற்ப வடிவங்கள்

vishnu - on the other side
Vishnu closeup
brahma -on one side
closeup of brahma
brahma closer
brahma - what a beauty

கதையில் சற்று தாழ்ந்தாலும், பிரம்மனின் முகத் தோற்றம் அப்பப்பா அபாரம். ஒரு படைப்பாளி தன்னை படைத்தவனை படைக்கும் பொது - யார் படைப்பாளி யார் படைப்பு. தலைப்பு புரிந்ததா .

பொறுங்கள், இது ஒன்றும் நாடகம் அல்ல, தலைப்பு வந்தவுடன் முடிய, இன்னும் உள்ளது.

மிக அரிய சிறிய சிற்பங்கள்.

the left side bottom row panel
the left side first row panels
the right side first row panels
the right side lower row panel

நாம் முன்னரே கங்கை கொண்ட சோழபுரத்தில் சண்டேச அநுகிரஹ முர்த்தி வடிவம் பார்த்தோம். இப்போது அதன் எறும்பு அளவு சிற்பம். ஈசன் அன்புடன் சண்டேசரின் தலையில் பூ சுற்றும் காட்சி.

miniature panels - chandesaanugraha murthy

அடுத்து, ஆதி சேஷனின் மடியில் துயிலும் திருமால், தேவி மற்றும் ஒருவர்.

mahavishnu on adisheshan with lakshmi and an attendant

அடுத்து, சிவன் பார்வதி - பார்ப்பதற்கு கங்காதரா வடிவம் போல உள்ளது

shiva paarvati - is it a gangadhara

அடுத்து மூன்று பேர், யார் இவர்கள்.

three attendants

அடுத்து மிக அற்புத மகா சதாசிவ வடிவம் ( இல்லை பிரம்மனா)

shiva - mahasadhashiva or brahma

முடிவில் ( இல்லை இன்னும் யாளி வரிசை உள்ளது - அடுத்த பதிவில் பார்ப்போம் ) -

shiva parvathi and a ghana

ஆஹா , அம்மை அப்பன் , கீழே ஒரு பூத கணம், எப்படி தான் உயிரோட்டத்துடன் வடித்தார்களோ, அம்மை அப்பன் அமர்ந்திருக்கும் ( ஒரு காலை மடித்து ) தோரணை அபாரம். இந்த சிற்பங்களை இன்னும் போற்ற முடிவில் சதீஷ் டச்

to give you an idea of the size of these miniatures

அருகில் இன்னொரு சிற்பம் - அதன் அளவை குறிக்க கார் சாவி …

படங்கள்: திரு சதீஷ், மற்றும் வரலாறு.காம்

மறுமொழி அளிக்கவும் »


பெரிய கோவில் சண்டேசர் சிற்பம் பார்த்தோம், அப்போது கங்கை கொண்ட சோழபுரம் சண்டேசர் சிற்பம் ஒன்றும் பார்த்தோம். ஆனால் அந்த அற்புத சிற்பத்தை முழுவதும் காண இந்த இடுகையில். ( சிற்பத்தை சார்ந்து இருக்கும் )சண்டேசர் கதையை விளக்கும் சிறு சிற்பங்களை பார்க்க மறவாதீர்கள்)

பல நண்பர்களுடன் நான் சிற்ப கலை பற்றி விவாதிக்கும் பொது, கல்லைப் பொறுத்த வரையிலும் பல்லவ சிற்பமும்/ சிற்பியும் முதன்மை பெற்றவர்கள் என்று வாதாடுவேன். ஏனெனில் ,பிற்கால சிற்பங்களை போல அல்லாமல், பல்லவ சிற்பி எந்த வித சட்ட திட்டங்களினுள்ளும் இல்லாமல், தனது சிற்பங்களை தனது கற்பனை திறனைக் கொண்டே செதுக்குவான். அதனால் அவனது கலையில் ஒரு உயிரோட்டம் இருக்கும், இந்த சிற்பத்தை பார்க்கும் பொது ,அப்படி பட்ட ஒரு திறமை உள்ள பல்லவ சிற்பி ,தப்பித்து கங்கை கொண்ட சோழ புறத்தில் வேலை செய்தான் போல உள்ளது. சிற்பக் கலையில் இதை போல வேறு சிலை இல்லை .. கல்லில் கவிதை இதுவே

breathing life.jpg
chandesaanugramurhtigangaikondacholapuram.jpg
electric wires.jpg
longshot.jpg
the full panel.jpg

திரு நாகசுவாமி ஐயா அவர்களின் வர்ணனை இதோ ( ஆங்கிலம் அதை நான் மொழி பெயர்கிறேன் )

நான்கு கைகளுடன் அரியணையில் அமர்ந்து இருக்கும் ஈசன், மேல் இரண்டு கரங்களில் மழு, மான், மற்ற இரண்டு கரங்களை கொண்டு அன்புடன் சண்டேசருக்கு மாலை அணிவிக்கும் காட்சி, என்ன ஒரு அரவணைப்பு, என்ன ஒரு அன்பு - அதை பிரதிபலிக்கும் சிலை, கரம் கூப்பி சிரம் தாழ்த்தி அதை பணிவுடன் பெரும் சண்டேசர்,உமையுடன் சண்டேசரை ஈசன் ஆட்கொள்ளும் அரிய காட்சி. அவர்களின் உருவங்கள், கால், கை, அணிகலன்கள், அனைத்தும் நம்மை பரவசபடுதுகின்றன . திரு சிவராமமுர்த்தி அவர்கள் - இந்த அற்புத சிலை, ராஜேந்திர சோழன் பெற்ற வெற்றிகளை அவன் ஆடியில் இட்டு அவனே தனக்கு கொடுத்த பரிசுகளாக கொள்ளாலாம்’ என்கிறார். இந்த சிற்பத்தை ஒட்டி உள்ள சிறு சிற்பங்களில் சண்டேசரின் கதையைக் காணலாம்.

லிங்கத்தை வழிபடும் சண்டேசர், பசுக்கள், அதை ஒட்டி சண்டேசரின் தந்தை மரத்தின் மறைவில் நின்று ஒளிந்து பார்ப்பது , பூசையை தடுப்பது, கோபத்தில் சண்டேசர் மழுவை தனது தந்தை மீது எறிவது. கடைசியில் இருவருக்குமே ஈசன் தனது ஆசியை வழங்குவது.

bestowing flowers.jpg
chandesaanugramurhtigangaikondacholapuram.jpg
closer.jpg
delightful.jpg
divine.jpg
majestic.jpg
sheer poetry.jpg
spectacular.jpg
splendid fluid grace.jpg
what grace.jpg

http://www.tamilartsacademy.com/books/gcpuram/chapter06.html

படங்கள் - ரவாஜெஸ், மோகன்தொஸ் ( பிலிக்கர் நண்பர்கள் ), சாத்மீகா ( பொன்னியின் செல்வன் குழுமம் )

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »