Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘சோழ’

அளவுக்கு மீறினால் அமிர்தமும் கெடுதிதான்…ஒருவேளை நமது நாட்டின் கலை பொக்கிஷங்களின் அவல நிலைக்கும் இது தான் காரணமோ? வேறெப்படி தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நின்றும் இன்றோ நாளையோ என்று தத்தளிக்கும் சேரன்மாதேவி ராமஸ்வாமி கோயிலின் நிலையை சொல்வது? நிகரிலி சோழ விண்ணகர் - இணையற்ற விண்ணகர் என்ற பெயர்கொண்ட இந்த அற்புத ஆலயம் கூடிய விரைவில் இடிந்து விழுந்தது என்ற செய்தியை பதிப்பிக்க பல நாளேடுகள் போட்டி போடும், பலர் தங்கள் ஆதங்கத்தை ஊடகங்களில் வெளிப்படுத்துவார்கள், அரசாங்கம் ஒரு குழு அமைக்கும் ….ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ வழக்கப்படி எல்லோரும் எல்லாம் மறந்து மீண்டும் வெற்றி நடிகனின் நூறாவது படம், நடிகையின் கிசு கிசு என்று ” இயல்பான ” வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம். இழப்பு யாருக்கு ? வரும் சந்ததியினரின் சொத்து இது, சிதைய விட யார் நமக்கு உரிமையை கொடுத்தது ?

வெளியில் அனுமனின் சிலை, வாய்பொத்தி அண்ணலின் அணைப்பின் பூரிப்பில் நின்றது. எனினும் உள்ளே போனபோது வெறும் சிலை வடிவமாக பார்த்த எங்களுக்கு வெளியில் வரும்போது சிலை வேறு விதமாக பேசியது.

entrance+pillar+sculpture
rama+hanuman

உள்ளே நுழைந்தவுடன் வெளி பிரஹாரம் ஒன்றும் விசேஷமாக இல்லை, பல ஆலயங்களில் பார்த்த காட்சி போல தான் இருந்தது.

entrance

உள்ளே செல்லச் செல்ல, கண் முன்னே தோன்றிய காட்சிகள் பிரமிக்க வைத்தன.

Vimana+right
main+vimana+consort+shrine
view

தினம் தினம் காணும் காட்சி அல்லவே - பத்தாம் நூற்றாண்டிற்கும் முந்தைய பாண்டிய விமானம் எந்த வித பின்னாளைய ” புதிப்பிப்பும் ” அல்லாமல் பார்ப்பது மிகவும் கடினம்.

நண்பர் பிரதீப் முன்னரே உதவியதால் எவைகளைப் பார்க்கவேண்டும் என்பதும், மற்றும் அங்கே ஊர் நபர்களின் உதவியும் எளிதில் கிடைத்தது.

அஷ்டாங்க விமானம் - ஒரு சிலவே தமிழ் நாட்டில் உள்ளன. பெருமாள் நின்ற கோலம், அமர்த்த கோலம், கிடந்த கோலம் என்று காட்சி அளிக்கும் மூன்று தள விமானம்.

நின்ற கோலம் மட்டுமே இன்று வழிபாட்டில் உள்ளது. அங்கே அற்புத செப்புத்திருமேனிகளை தரிசித்தோம்.

mainshrine+bronzes
ramar

மேலே செல்கிறீர்களா என்று சற்று தயக்கத்தோடு கேள்வி வந்ததன் அர்த்தம், குறுகிய படி , மற்றும் சட சட வென படையெடுத்த வவ்வால்களின் கூட்டம் புரிய வைத்தது.

stairs

வீட்டு மாடியிலும் நவீன உணவகங்களிலும் உயரத்தே பார்த்த தோட்டம் நமக்கு இங்கே விமானத்தில் உள்ள தோட்டத்தை பார்த்து பகீர் என்றது

trees+everywhere+on+vimana
urgent+need+for+repairs
vegetation
vimana
roof+garden

உள்ளே இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது

only+support

மேலே உள்ள முக்கிய தூண் உடைந்து அதன் பாரத்தை ஒரு மரத் தூண் தாங்கி நின்றது. அது உடைந்தால் என்ன நடக்குமோ ?

only+support+beam+cracked

ஆனால் இதை அனைத்தையும் பொருட்படுத்தாமல் உள்ளே அமைதியாக தம்பதிகள் சமேத அமர்ந்திருந்த சுதையாலான சுவாமி- ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சிலைகளை கண்டு மிரண்டு தான் போனோம். ( சுதை - எளிதாக சரி செய்து விடலாம் - யாராவது உதவ முன்வர வேண்டுமே )

seated+first+floor

என்ன அருமையான வேலைப்பாடு, வண்ணம் மிக்க சுதை வடிவங்கள்.

devi+painting+outlines
intricate+stucco+work
perumal

இன்னும் ஒரு தளம் மேலே ஏறினோம். ஆஹா, இங்கு ஆனந்தமாக பள்ளிகொண்ட பெருமாள். தேவிகள் இருவர் முகத்தில் மட்டும் எதோ ஒரு கவலை தெரிந்தது ?

top+tier+sesha+sayana
sayana+perumal

திரும்ப வெளியில் வரும்போது மறுபடியும் ஹனுமனை பார்க்கும்போது - ஏதாவது செய்யுங்கள் என்று தன அண்ணலுக்கு தெரியாமல் சொல்வது போல ஒரு எண்ணம். எதற்காக அப்படி …அவர் காதில் விழுந்தால் பதில் …” எனக்கு உலகமடா !!” என்றல்லவோ இருக்கும்.

மறுமொழி அளிக்கவும் »

நண்பர் திரு. ஷங்கர் பல மாதங்களுக்கு முன் தான் குடைவரையில் பார்த்த ஒரு ஓவியத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் பெரிய அளவு படத்தை நேர்த்தியாக எடுத்து அனுப்பி வைத்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ அதை எடுத்துப் பார்க்க நேரம் அமையவே இல்லை. ஆனால் அதற்கு இப்படி ஒரு வேளை வரும் என்று நான் சற்றும் எதிர்ப்பாக்கவில்லை.

நண்பர் திரு. ராமன் அவர்கள் பழைய புத்தகக் கடை ஒன்றில் பழைய புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பார்த்தால் எனக்கு உதவும் போல தெரிகிறது என்றும் கூறினார். அது மட்டும் அல்லாமல் அதில் ஒன்றிரண்டை வருடி (ஸ்கான்) செய்தும் அனுப்பிவைத்தார். அதிலே ஒன்று அழகிய செப்புத் திருமேனி, மற்றொன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ஓவியப் படம், இரண்டுமே சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை!! இவற்றைப் பார்த்தவுடன் நிச்சயம் நமக்கு தேவை என்று அவரிடம் தெரிவித்தேன்.

சென்னை சென்ற சமயம் நானும், நண்பர் அரவிந்தும் அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வந்த பொழுது, சில படங்களின் பின்புறத்தில் திரு நந்திக்கரை என்று பென்சிலால் எழுதிய எழுத்துக்கள் கண்ணில் பட்டன.

thirunandikkarai2

உடனே ஷங்கரை தொடர்பு கொண்டு சமீபத்தில் அவர் சென்ற பொழுது அவர் எடுத்து வந்த அத்தனைப் படங்களையும் கேட்டேன். அவரும் உடனே அனுப்பிவைத்தார். ( திரு நந்திக்கரை - கன்னியாக்குமரி மாவட்டம் - திருவட்டாரில் இருந்த சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு - நாகர்கோயிலில் இருந்து நாற்பது கிலோமீட்டர் )

cave+facade

குடைவரையில் தற்போதைய உட்புறத் தோற்றம். (முதல் முறை அவர் படம் அனுப்பிய பொழுது பார்க்க முடியாததன் காரணம் இனி உங்களுக்கு புரியும்)

faint+lines
inside+of+the+cave

குடைவரையின் காலம் 8th CE ( அபிஷேக நீர் வெளியேறும் அமைப்பைக் கொண்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படுகிறது )

provision+abolution+water
sanctum

கைவசம் இருந்தும் நான் முதல் முறை காணத்தவறிய சுவர் ஓவியம்

faint+lines
faint+relief
Ganesha+painting+outline

பழைய புத்தகக் கடையில் கிடைத்தப் படங்களை பார்த்தவுடன் திறந்தன என் விழிகள்

thirunandikkarai3
thirunandikkarai7
thirunandikkarai9

அழகான விநாயகர் ஓவியம், மேலே ஒரு அருமையான கணம் ( பார்த்தால் காஞ்சி கைலாசநாதர் ஓவியங்களின் பாணியிலேயே உள்ளது ) இருந்தும் சுமார் அரை நூற்றாண்டு காலத்தில் நாம் இழந்திருப்பது …

மற்றுமொரு ஓவியம் இருந்தது, அதற்கான பொருத்தத்தையும் தேட கிடைத்தது…

inside+of+the+cave
lost+portions
closeup
compare1
outlines

இப்பொழுது படங்களை பாருங்கள்..

thirunandikkarai5
thirunandikkarai8

என்ன அழகான அருமையான ஓவியங்கள். இந்த பொக்கிஷங்களை முறையாக பாதுகாக்காமல் இப்படி அழிய விட்டு விட்டோமே!

மேலும் இரண்டு ஓவியங்கள் படங்களில் உள்ளன. அனால் தற்போது குடைவரையில் காணக் கிடைக்கவில்லை.

thirunandikkarai1
thirunandikkarai6

இங்கே சித்தரிக்கப்பட்டுள்ள காட்சி என்னவென்று தெரியவில்லை.

இந்த குடைவரையில் மேலும் ஒரு சரித்திர நிகழ்வின் முக்கிய தடயமும் உள்ளது.

inscription+left
inscription+leftside
inscription+right
inscription+rightside

உடையார் ஸ்ரீ இராஜ ராஜ சோழர் பிறந்தது ஐப்பசி சதயமா அல்லது சித்திரை சதயமா என்ற விவாதம் சில காலமாக உலவிக் கொண்டிருக்கிறது.

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், தங்கள் திருவாரூர் நூலில் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டைக் கொண்டு இதனை தெளிவு படுத்தி உள்ளார். அது திரு இராஜேந்திர சோழரின் கல்வெட்டு, அதில்

” நாம் பிறந்த ஆடி திருவாதிரையும்
நம் அய்யன் பிறந்தருளிய ஐப்பசி சதயமும் .. ”

inscription
kbsir+article

என்று வருகிறது.

இந்த திரு நந்திக்கரை குடவரையில் உள்ள திரு ராஜ ராஜரின் கல்வெட்டு


185. On the east wall of the rock-cut iva shrine. Belongs to
the eighteenth year of Rajaraja I and records grant to the temple
for the celebration of a festival in Aippasi, Satabhisha, the birth-
day of the king. See Trav. Arch. Ser. t Vol. I, pp. 291-2.”

தான் பிறந்தது ஐப்பசி தான் என்று தெளிவு பட எடுத்துக் கூறுகிறது.

இந்த ஓவியத்தின் புகைப்படங்களுக்கு உரியவர் யார்? அவை எப்படி பழைய புத்தகக் கடைக்கு சென்றன என்பது தெரியவில்லை. யாரேனும் அறிந்திருந்தால் நிச்சயம் தொடர்பு கொள்ளவும்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 42  1  2  3  4  5 » ...  Last »