Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘கருடன்’

பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘நமது ‘ ஆர்வத்தை தூண்டும் இடங்கள் கிடைப்பது கடினம். அப்படி இருக்க ‘பாத்தாம்’ சென்ற போது இங்கே ஒரு இந்துக் கோவில் இருக்கிறது என்றவுடனே பட்டியலில் அடுத்து இருந்த ஷாப்பிங் ஒரு படி இறங்கி இதற்கு இடம் விட்டது. நாகா கோயில் என்று அங்கு இருப்பவர்கள் அழைக்கிறார்கள். அடர்ந்த மரங்களுக்கு இடையே ஒரு கோபுரம் - இல்லை இரு கோபுரம் ! இல்லை ஒரே கோபுரம் இரண்டாய் பிளந்து ! இல்லை, பின்னர் தான் திருக் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் ” கோபுர கலை மரபு ” நூலில் படித்தது நினைவுக்கு வந்ததது. பொதுவாக நமது ஆலயங்களின் வெளியில் இருக்கும் கோபுரம் என்பது ஒரு வகை நம் எண்ணங்களை சுத்தப்படுத்தும் - தேயினுள் நுழைவதை குறிக்கும். இந்த காட்சியை கீழே இருக்கும் படத்தை பார்த்தால் புரியும்.

side+entrance

இதுவே கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது நாம் பார்க்கும் கோபுர வாயில்களாக மாறிஉள்ளது. இங்கே ஜாவா தீவுகளிலும் இந்தோனேசியா பாலி போன்ற இடங்களில் இன்றும் அப்படியே உள்ளன.

உள்ளே சென்றோம். அங்கே இடது புறத்தில் ஒரு சிறு ஆலயம். திரிபுரசுந்தரி சுந்தரி ஆலயம். பூஜைக்கு இன்னும் அரை மணி நேரம் ஆகும் மேலே சென்று அங்கே இருப்பதை பார்த்துவிட்டு வாருங்கள் என்றார் பூசாரி.

சிறிது தொலைவு நடந்ததும் அழகான படிக்கட்டுகளின் மேலே ஒரு கோபுரம் தென்பட்டது.

main+entance

இந்த ஆலயத்தை பற்றி இன்னும் படித்து தெரிந்துக்கொள்ள வில்லை. எனினும் எதிரே அழகிய வாயிற் காப்போன், மேலே தோரணத்தில் கருடன் என்று எடுத்தவுடனேயே அழகிய சிற்பங்கள்.

Gopura
door guardian
door guardian 2
garuda+lintel

உள்ளே சென்றவுடன் ‘நமது ‘ தென்னாட்டு பாணியில் பிள்ளையார். அது என்ன தென்னாட்டு பாணி ? மேலே படியுங்கள்.

ganesha+entrance

அடுத்து எதிரில் தோன்றிய காட்சி மலைக்க வைத்தது. ஏற்கனவே ஒரு சிறு மலை மீது ஏறி இருந்த நாங்கள் எதிரே ஒரு பெரிய மலை போல உயர்ந்த கோயிலை பார்த்து அதிர்ந்து போனோம். வெளியில் இருந்து ஒன்றுமே தெரியவில்லை !

central+shrine

உள்ளே இப்படி ஒரு பிரம்மாண்ட விமானம் இருக்கும் என்று நினைக்க வாய்ப்பே இல்லை. இரு புறத்திலும் இரு இந்தோனேசியா பிள்ளையார் சிலைகள். கைகளில் முறையே மழு, பூ மொட்டு, சுவடி மற்றும் மோதகம்

inner+ganesha
shrine
ganesha
ganesha (2)

நடுவில் நாகங்கள். இது என்னவாக இருக்கும் என்று யோசித்தோம்.

many+snakes
reverse+snakeheads
two+main
who

சுற்றி ஏதாவது தென்படுகிறதா என்று சென்று பார்த்தோம்.

backside
claws+turtle+folds+snake
coils+snake
dhani

ராட்சச பாம்பின் சுருள்கள் - அடடே , பாற்கடல் கடையும் காட்சி போல உள்ளதே ! நாலு பக்கமும் பெரிய நகங்களை கொண்ட கால்கள் பாம்பின் உடலின் கீழே தெரிந்தன. பின்னால் இரண்டு வால்கள் தென்பட்டன.

dhani

ஆமாம். அதே தான். மீண்டும் முன் பக்கம் வந்து பார்த்தோம்.

sides
snake+turtle
two+main
two+tails

கீழே இருக்கும் முகம் குர்ம வடிவம். அதற்க்கு மேலே வாசுகி.

பொதுவாக இருபக்கமும் தேவர்களும் அசுரர்களும் நின்று கடையும் விதமே பார்த்த நமக்கு - இது ஒரு புதுமை. மேலும் பின்புறம் சற்று உயரத்தில் கருடனும் அவருக்கு மேலே ஒரு பறவையும் உள்ளன.

backside
claws+turtle+folds+snake
garuda
garuda+swan+ontop

மேலே - உச்சியில் தங்க முலாம் பூசிய வடிவம் ஒன்று நடனம் ஆடும் வண்ணம் உள்ளது. கம்போடிய வடிவங்களில் விஷ்ணு இப்படி இருப்பார்.

top
dancing+figure

அங்கோர் வாட் சிற்பக் காட்சி

எனினும் கைகளில் ஒன்றும் இல்லாததால் முடிவாக சொல்ல சற்று கடினமாக உள்ளது . மேலும் இதனை சிவன் கோயில் என்றும் சொல்கிறார்கள். .

இப்படி பிரமித்து நின்று விட்டு அருகில் ஆதி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி ஆலயம் சென்று அருமையான பூஜையை தரிசித்து விடை பெற்றோம்.

சிங்கை வந்தால் பாத்தாம் கண்டிப்பாக சென்று வாருங்கள். அங்கே நண்பர் திரு Dhani Hariadi
சேவை அற்ப்புதம்

PT. TITA PANORAMA INDAH TOURS & TRAVEL

Komplek TanjungPantun Blok P No. 4 Batam Island 29453, Indonesia.
Phone:+62 (778) 3306999
Fax: +62 (778) 456 797
Mobile Number: (+62) 81372788887

மறுமொழி அளிக்கவும் »

நண்பர்களே இன்று நண்பர் திரு பிரதீப் சக்ரவர்த்தி அவர்கள் நம்முடன் ஒரு அருமையான பதிவை பகிர்கிறார். சரித்திரம், முக்கியமாக கல்வெட்டுகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தும் இவரது கோயில் வாகனங்களை பற்றிய நூல் அறிமுகம் முன்னர் பார்த்தோம்.

அதை அடுத்து அவர் தஞ்சாவூர் பற்றிய ஒரு அற்புத நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார் Thanjavur A Cultural History. வரும் நாட்களில் இவரிடத்தில் இருந்து இன்னும் பலவற்றை எதிர்பார்க்கலாம். நமக்காக அவர் ஒரு விசேஷ பதிவை தருகிறார். இதோ

திருமயம் புகழ் பெற்ற யாத்திரை தலம் - மதுரை அருகில் இருக்கும் இந்தத் தலத்தை பற்றி நான் ஹிந்து பேப்பரில் விரிவாக முன்னர் எழுதி இருந்தேன். பலமுறை அந்தப் பக்கம் பயணிக்கும் போது சென்று வருவேன்.

Sayana+perumal.jpg

விஜய் சிற்பங்கள் பற்றி இடும் பதிவுகளை வாசித்து விட்டு, நானும் ஒரு சிற்பி கல்லில் எப்படி பல காட்சிகளை கொண்ட நாடகத்தை இயற்றுகிறான் என்பதை, அவரைப்போலவே, இந்தப் பதிவில் விளக்க முயற்சிக்கிறேன். நாம் மூலவரை பார்ப்போம். பிரம்மாண்ட சிற்பம் பத்தடிக்கும் மேலே இருக்கும் - தாய் பாறையில் குடைந்து வடிக்கப்பட்ட இதன் காலம் சுமார் 7ஆம் நூற்றாண்டு என்றும் பெரும்பிடுகு முத்தரையர் என்ற முத்தரையர் தலைவருடைய அன்னை பெருந்தேவி என்பவர் உபயம் என்றும் தெரியவருகிறது. மேலும் வெளியில் கட்டுமானக்கோயிலின் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

பெருமாள் ஆதிசேஷனின் மீது பள்ளிகொண்டிருக்கும் காட்சி. நாபியில் இருந்து பிரம்மா தோன்றுகிறார்.

நண்பர் அசோக் அவர்களின் அற்புத உதவியுடன் ( தூண்களை மாயமாக மறைத்துவிட்டார் - copyright image)

Tirumaiyam_Anantasayanam
brahma+emerging+from+navel+on+lotus

குப்தர் காலத்து சிற்பி போல இங்கேயும் சேஷனின் உடலை சாதாரணமாக சுருட்டி இருப்பது போல காட்சி அமைத்துள்ளார்கள் - மற்ற இடங்களில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக இருக்கும் ஆதிசேஷனின் உடலை போல அல்லாமல் காட்சி ஆரம்பித்து விட்டது.

அசுரர் மீது தனது விஷத்தை துப்பும் காட்சி - விஷம் அக்னி பிழம்புகளாய் சீறிச் செல்கிறது.

venom+shown+as+streaks+of+fire
venom+shown+as+streaks+of+fire1

அவ்வளவு பலத்துடன் விஷத்தை கக்கிய பாம்பின் தலை மிகவும் தத்ரூபமாக கொத்திவிட்டு பின்னால் அசைவதை போல சிற்பி வடித்துள்ளது மிகவும் அருமை.

closeup+of+venom
recoiling+heads+of+sesha

காட்சி நகரும் திசையை நமக்கு உணர்த்தும் வகையில் மேலே நித்யசூரிகள் பறந்து வருகின்றனர். எம்பெருமானின் திருமுகத்திற்கு மேலே சிற்பி - இயற்கையாகவே அமைந்த கல்லின் வளைவை தனது சிற்பத்தின் ஒரு அம்சமாக உபயோகித்து, மேலே பறந்து வருபவர்களுக்கும் கீழே நடக்கும் காட்சிகளுக்கும் ஒரு இடைவெளி நிறுவ முயற்சிக்கிறானோ? பறந்து வருவோரை குறிக்க அவர்களது கால்களின் அமைப்பை, அப்படி வடிக்கும் போதும் கவனமாக, கடவுளின் முகத்திற்கு முன் கால்கள் இல்லாத படி வடித்திருப்பது அருமை.

celestials

ஒரு பக்கம் கருடனும் சித்திரகுப்தனும் உள்ளனர். சிலர் இது குடைவரையை நிறுவிய அரசனின் சிலையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

Garuda+extreme+left+as+you+see
Garuda+extreme+left+as+you+see1

அந்தப் பக்கம் பார்க்கும் போது இயற்கையாக வரும் கல்லின் வளைவை கொண்டு இரு அசுரர்களும் கொஞ்சம் தொலைவில் இருக்கின்றனர் என்று நமக்கு உணர்த்துகிறான் போல.

demons+madhu+kaithba

ஒரு பக்கம் சாயும் வண்ணம் அசுரர்களை செதுக்கி அவர்கள் சீக்கிரமே மாண்டு அழியப்போகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறான் அந்த சிற்பி.

இதே கதை பல்லவ சிற்பி வடித்த முறையும் முழு கதையையும் படிக்க

பிரம்மாவின் அருகில் மான் தலையுடன் இருப்பது யார்?

deer+head

நன்றி படங்கள்: Flickr : lomaDI, Prof Swaminathan and http://senkottaisriram.blogspot.com/2008/04/thirumayam-near-pudukkoottai-tamil-nadu.html

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »