Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘அருங்காட்சியகம்’

சென்ற வாரம் ஆஸ்திரேலியா நமது இரண்டு கலைப்பொக்கிஷங்களை திரும்பக் கொடுத்தது. எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இது. எனினும் இன்னும் ஆயிரம் ஆயிரம் பொக்கிஷங்கள் திருடுபோய் உள்ளன - இவை அனைத்தையும் திரும்பப் பெற ஒரு மாபெரும் முயற்சி தேவை.

10612956_10201655290263148_8867630180603903533_n

திரும்ப வந்த சிலைகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே நம் நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். இன்னும் பல பொக்கிஷங்கள் அதே அருங்காட்சியகத்தில் சரியான ஆவணங்கள் இல்லாதாதால் மாட்டிக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் பொய்யான தஸ்தாவேஜுகள் கொண்டு விற்கப்பட்டுள்ளன.

அர்தனாரி சிலை - விருத்தாசலம் கோயிலில் இருத்தும் நடராஜர் திருமேனி முழு ஆதரங்களுடன் எங்களால் நிருபணன் செய்ய பட்டதனால் மட்டுமே திரும்ப வந்துள்ளன. அருங்காட்சியகங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி - உலகம் சுருங்கி வருகிறது - பல ஆர்வலர்கள் இணையம் மூலம் இணைத்து செயல் பட்டு இந்த திருட்டுகளை வெளி கொண்டு வருகிறோம். இணயும் அவை உண்மையை மூடி மறைக்க முடியாது.

நண்பர்கள் பலரும் இந்த முயற்சியில் நாங்கள் எப்படி இணையலாம் - எப்படி உதவ முடியும் என்று கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்று ஒரு எடுத்துக்காட்டு..

அர்தனாரி சிலை பற்றிய தகவல்களை முதல் முதலில் பகிரங்கமாக நாங்கள் வெளி இட்டவுடன் பல பத்திரிகைகள் பின்ன்தொடர்ந்தன - ஆஸ்திரேலியா வானொலி , தி ஆஸ்திரேலியன் , The தி ஹிந்து , தி ஹிந்து

இதனைக் கண்ட அமெரிக்க தோழி ஒருவர் - நம் நாட்டின் கலை பற்றி அலாதி பிரியமும் தேர்ச்சியும் பெற்ற ஆர்வலர் தானே உதவ முன்வந்தார் . ஜூன் 2013 மாதம் அவர்களிடத்தில் இருந்து ஒரு குரியர் வந்தது. சென்ற பத்து ஆண்டுகளில் சுபாஷ் கபூர் ஆர்ட் ஒப் பாஸ்ட் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களை எல்லாம் தேடி பிடித்து வெட்டி செய்த சேகரம் அது.

அதை பிரித்து பார்த்தவுடனே ஒரு அதிர்ச்சி…

art of the past advertisement

மறக்க முடியாத சோழர் திருமேனி ஆயிற்றே. முதல் முறை பார்த்தவுடனே மயங்கியவன் ஆயிற்றே. அதுவும் ஓவியமாக தீட்டி எனது அறையில் தினமும் கண்விழிக்கும் பொது பார்க்கும் சிற்பம் ஆயிற்றே.

உடனே தமிழக காவல் துறை இணையதளத்தில் சென்று பார்த்தேன் . மூன்றாவது உள்ள சிலை நெருடியது.

idol_wing

கோப்பை இணையத்தில் ஏற்றும் பொது படந்தின் அளவில் யாரோ தவறு செய்து விட்டனர். சரி செய்து கிடைத்த படம் இதோ.

checking2

ஆம் அதே சிலை தான். ஸ்ரிபுராந்தன் உமை

compare

அதே நிறத்தில் இன்னும் ஒரு தோழி 2006 ஆம் ஆண்டு ஆர்ட் ஒப் பாஸ்ட் விற்பனை பட்டியல் தேடி அனுப்பினார்கள்.

photo(4)
1
2

சிங்கை ACM அருங்காட்சியகம் இந்த திருமேனியை 2007 ஆம் ஆண்டு வாங்கியது தெரிய வெந்தது.

provenance 2007

உடனே இந்திய காவல் துறை மற்றும் அருங்காட்சியகத்திற்கு தகவல் தெரிவித்தோம். அனைத்து ஆதாரங்களையும் உடன் அனுப்பினோம். பதில் வரும் என்று நம்பிய எங்களுக்கு ஏமாற்றம் தான்.

அதிஷ்டவசமாக அமெரிக்க நீதிமன்றத்தில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கபூரின் மேனேஜர் கொடுத்த வாக்குமூலம் திருட்டை பகிரங்கமாக்கியது.


“During the period from on or about January 2005 to November 2006, one Uma Parameshvari (known at the “$650,000 Uma for Singapore”), owned by the Central Government of India, was stolen from the Sivan Temple in India’s Ariyalur District. During the period January 2006 to on or about January 2007, defendant and other co-conspirators shipped the $650,000 Uma for Singapore, from India to the United States. On or about February 2007, defendant and other co-conspirators arranged for the sale and transport of the $650,000 Uma to the Asian Civilisations Museum in Singapore.”

உடனே சிங்கை அருங்காட்சியகம் சிலையை காட்சியில் இருந்து நீக்கியது. மேலும் அது கபூரிடத்தில் இருந்த மேலும் பல கலைப்போருல்களை வாங்கிய தகவலும் வெளிவந்தது.

இந்த இழுவை தந்திரம் திருட்டு பொருளை வாங்கி விட்டு திணறும் உலகில் உள்ள பல பிரபலமான அருங்காட்சியகங்கள் பழக்கம் போல உள்ளது. இதில் இந்த கலை கோமான் சொல்வதை கேளுங்கள்


” Art consultant ————– suggests that there may also be alternatives to repatriation, even if an artefact is found to have been illegally removed.

She says: “Sometimes, the lawful owners of the artefacts do not have the resources to build climate-controlled environments, to conserve and restore old artefacts, to present exhibitions that attract large visitorships, or to fund scholarship on these artefacts.

“In this context, I would say that it should be an option for the museum to discuss having the artefacts stay on in a loan arrangement and perhaps to present these works jointly in public exhibitions or publications.”
- See more at: http://www.straitstimes.com/the-big-story/case-you-missed-it/story/sniffing-out-booty-20140214#2″

இந்தியா ஒரு வல்லரசு - அதற்கு தனது குல தனங்களை பாதுகாக்க வாக்கு இல்லாமல் இல்லை - இவை எங்கள் தெய்வங்கள் - ஆயிரம் ஆண்டுகள் தங்கள் ஆலயங்களில் அழகாக இருந்த இவர்களை - சரியான படி ஆய்வுகள் மேற்கொள்ளாமல் - பல கோடி ரூபாய் பணம் வாரிக் கொடுத்து - அப்புறப்படுத்தி - திருட்டை ஆதரித்து - இன்று அவற்றுக்கு குளிர் சாதனம் எங்களால் மட்டுமே கொடுக்க முடியும் என்று சொல்வது மிகவும் கேவலமாக உள்ளது. இவை திருமேனிகள் - கருவறைக்குள் இருந்த தெய்வங்கள் - இவற்றுக்கு உங்கள் குளிர் சாதன பெட்டி தேவை இல்லை. எங்கள் அன்பு இதயங்கள் போதும்

ஆஸ்திரேலியாவை போல சிங்கையும் கூடிய விரைவில் அணைத்து களவு பொருட்களையும் திரும்ப கொடுக்கும் என்று நம்புவோம். மேலும் முன்னர் நாம் பார்த்த சோமஸ்கந்தர் சிலையை பற்றிய விவரங்களையும் சிங்கை ACM வெளியிட வேண்டும். இதுவரை இந்த சிலை அவர்கள் கபூரிடத்தில் வாங்க வில்லை என்று மட்டுமே சொல்லி வருகின்றனர். சரியான விவரங்கள் தராமல் இருப்பது மேலும் ஒரு கொள்ளை கூட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை தடுக்கிறது.

acm somaskanda

மறுமொழி அளிக்கவும் »

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் - அப்படி பல வருடங்களுக்குப்பின் சிவபுரம் சிலைகளை திருடிய ஸ்தபதி செய்த நகலே நமக்கு ஒரு முக்கிய துப்பு தந்துள்ளது.

இந்த சிவபுரம் சிலை திருட்டு பற்றிய முதல் பாகத்திலும் மற்றும் இரண்டாம் பாகத்திலும் களவு போன ஆறு சிலைகளில் இரண்டு சிலைகளுக்கும் அமெரிக்காவில் உள்ள நோர்டன் சைமன் அருங்காட்சியகத்துக்கும் உள்ள தொடர்பை நிரூபித்தோம். நடராஜர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பினார் எனபது மட்டுமே அனைவருக்கும் தெரியும். இன்றும் மற்ற ஐந்து சிலைகள் காணவில்லை என்று தான் காவல் துறை தஸ்தாவேஜுகள் சொல்கின்றன. சென்ற இரு பதிவுகள் மூலம் சிவபுரம் சோமஸ்கந்தர் திருமேனி இன்றும் அமெரிக்காவில் உள்ளது என்பதை முக்கிய குறிப்புகளுடன் நிரூபணம் செய்தோம்.

மற்ற நான்கு சிலைகள் என்னவாயின ? தொலைத்த இடத்தில தானே தேட வேண்டும் - காவல் துறை பதிவு செய்த குற்றப் பத்திரிகையின் படி சோமஸ்கந்தர் உடன் இன்னும்“Thirugnanasambandar, Pillaiar and two Amman” கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் இந்த சிலைகள் 1954 - 1956 இடைப்பட்ட தருவாயில் திருடப்பட்டன. ஸ்தபதி உதவியுடன் நகலை கோயிலுக்கு கொடுத்துவிட்டார்கள். . “The trustees of the temple wanted to repair the idols and this work was entrusted to Ramasamy Sthapathy of Kumbakonam in the year June 1954. In the year 1956 Thilakar of Kuttalam and his brother Doss induced Ramasamy Sthapathy to part with the original Natarajar and 5 other idols and to substitute the same with fake idols. “

துரதிஷ்ட வசமாக திரு ஸ்ரீனிவாசன் அவர்களது நூலில் நடராஜர் / சோமஸ்கந்தர் படங்களை போல ஒரிஜினல் அம்மன் சிலைகளின் படங்கள் இல்லை. இவை இல்லாத பட்சத்தில் எதை கொண்டு தேட முடியும் ?

அதற்க்கு விடை - பாண்டி பிரெஞ்சு இன்ஸ்டிடுட் 15th June 1956 மற்றும் 16th Nov 1957 எடுத்த படங்கள். சென்ற பதிவில் திருட்டு ஸ்தபதி ஒரிஜினல் போலவே சோமஸ்கந்தர் சிலை மற்றும் நடராஜர் சிலைகளை செய்தான் என்பது தெரிய வந்தது.

அதே போல பிரெஞ்சு இன்ஸ்டிடுட் எடுத்த மற்ற சிலைகளின் படங்களை தேடிய பொது இந்த தனி அம்மன் சிலை கிடைத்தது.

00461_02_Sivapuram_Taniamman

நோர்டன் சைமன் அருங்காட்சியக பிற சிலைகளுடன் ஒப்பிட்டு பார்த்த பொது இந்த சிலை கிடைத்தது

Parvati, c. 1000
India: Tamil Nadu, 975-1025
Bronze
32-1/2 in. (82.6 cm)
The Norton Simon Foundation
F.1972.10.S
© 2012 The Norton Simon Foundation

d--images-F197210S

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று - இந்த சிலையை அவர்கள் சேர்த்த ஆண்டு - 1972, அதே ஆண்டில் தான் சிவபுரம் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகளும் சேர்க்கப்பட்டன.

இரு சிலைகளையும் ஒன்றாக வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக ஒன்றை ஒத்தே மற்றொன்று செய்யப் பட்டுள்ளது என்று தெரிகிறது.

compare1

எதோ ஒரு அலட்சியத்தாலோ என்னவோ - நடராஜர் வடிவத்தை நகல் செய்த பொது காட்டிய ஆர்வத்தை சோமஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகளை செய்த பொது ஸ்தபதி காட்ட வில்லை என்று தோன்றுகிறது. பல இடங்களில் வித்தியாசம் தெளிவாகவே தெரிகிறது - எனினும் இரு சிலைகளையும் ஒன்று சேர வைத்து பார்த்தால் தானே குட்டு வெளிப்படும் என்று அவன் நினைத்திருக்கலாம். மேலும் செப்பு சிலை வார்ப்பது என்பது எவ்வளவு கடினம் - ஆயிரம் ஆண்டு சோழர் கலை செல்வத்தை நகல் எடுப்பது கடினம் தானே.

compare2
compare3

சோமாஸ்கந்தர் சிலை போல இந்த அம்மன் சிலைக்கு நம்மிடத்தில் நேரடி ஆவன படங்கள் இல்லை என்றாலும் நடராஜர் மற்றும் சோமஸ்கந்தர் சிலைகள் திருடிய முறை, சென்றடைந்த இடம் என்று அனைத்தையும் வைத்து பார்த்தால் - கண்டிப்பாக இந்திய அரசு இந்த வழக்கை மீண்டும் திறக்க வேண்டும். யாருக்கு தெரியுமோ இல்லையோ திருட்டு பொருளை வாங்கி இன்றும் காட்சிக்கு வைத்திருக்கும் அந்த அருங்காட்சியகத்தின் அதிகாரிகளுக்கு உண்மை தெரியும் !!

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 17  1  2  3  4  5 » ...  Last »