Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘ பூத கணம்’


சர்ச்சைச் சிற்பங்கள் தொடரில் இன்று மீண்டும் ஒரு பெரிய சர்ச்சைச் சிற்பம் - கங்காள முர்த்தி. கதைக்கு செல்வதற்கு முன்னர் சிற்ப வடிவத்தின் அம்சங்களை பார்த்துவிடுவோம். வெகுவாக பிக்ஷாடனர் வடிவத்துடன் ஒத்துப்போவதால் இரு வடிவங்களுக்கு இடையே பலமுறை குழப்பம் வருவது இயல்புதான்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள இரு வடிவங்களையும் பாருங்கள்.

bhikshadana+gkc
kanakala+gkc

முதல் வித்தியாசம் என்று பார்த்தல் - துணி தான். பிக்ஷாடனர் பொதுவாக பிறந்த மேனியாக ஒரு சில பாம்புகளை மட்டுமே உடுத்தி இருப்பார். கங்காளற் மேல் துணியாக குதிரை அல்லது கழுதையின் தோல் அணிந்தும், கீழுக்கு சனலாலான துணி அதுவும் முட்டிக்கு மேல் வரைக்குமே அணிய வேண்டும். இருவருமே தடிமனான மாற பாத ரக்ஷைகள் அணிவார்கள்.

அடுத்த வித்தியாசம், தலை அலங்காரம். கங்காளற் அழகிய ஜடா மகுடம் ( ஜடையை கொண்டே கிரீடம் போல பின்னி இருப்பது ) வைத்திருப்பார். பிக்ஷாடனர் ஜடா பாரம் அல்லது ஜடா மண்டலம் - பொதுவாக

இப்படங்களை பாருங்கள் - வித்தியாசம் புரியும் …நன்றி

jatabara
jatamakuta
jatamandala

எனினும் அங்கும் இங்கும் சில இடங்களில் பிக்ஷாடனர் ஜடா மகுடதுடனும் காணபடுகிறார். ஒரு வேலை சிற்பி இரு உருவங்களையும் சேர்த்து ஒரு கலவை செய்தாரோ என்னவோ.

நல்ல வேலையாக நமக்கு உதவ இன்னும் சில வித்தியாசங்கள் உள்ளன.

சிவன் கீழ் இடது கையை முதலில் பார்ப்போம். அங்கே கபாலம் இருந்தால் அது பிக்ஷாடனர். தக்க என்ற ஒரு வகை மேளத்தை கொண்டு இருந்தால் அவர் கங்காளற்.

மேலும், கீழ் வலது கரம் மானுக்கு புள் கொடுக்கும் படி இருந்தால் அது பிக்ஷாடனர், கங்காளற் வடிவத்தில் அந்த கை பனா என்ற ஒரு குச்சியை கொண்டு அந்த மேளத்தை கொட்டும் வகையில் இருக்க வேண்டும். அடுத்த கை தான் மானுக்கு புள் கொடுக்க வேண்டும். இப்போது கங்கை கொண்ட சோழபுறது கங்காளற் வடிவத்தில் உள்ள பிரச்சனைக்கு வருவோம்…இங்கே அவருக்கு ஆறு கைகள். அதில் முன் இரண்டும் உடைத்து விட்டன. இருந்தும் அடுத்த வலது கரம் மானுக்கு புள் கொடுப்பதை வைத்து நாம் அவரை அடையாளம் கொள்ளலாம். பின் வலது கை மேலே ஒரு பாம்பை பிடித்துள்ளது.

இரண்டு உருவங்களுமே தங்கள் மேல் இடது கையில் ஒரு தண்டத்தை வைத்துள்ளனர். எனினும் கங்காளற் விடிவதில் இது மிகவும் முக்கியம் - கங்காளம் - எலும்புக் கூடு. பிக்ஷாடனர் கையில் இருக்கும் கபாலம் நான்முகனின் ஐந்தாவது தலையின் ஓடு என்றால் இந்த கங்காளம் கதை இன்னும் சர்ச்சைக்கு உரியது. பிரவ வடிவில் சிவன் பெருமாளை சந்திக்க செல்ல வாயிலில் விஷ்வாக்செனர் அவரை தடுத்து நிறுத்த, சினந்தில் தனது திரிசூலம் கொண்டு அவரை குத்தி அவரது சடலத்தை அதில் தொங்கியவாறே செல்வதாக செல்கிறது கதை. ( இதுவே இது தொடர்பான கதைகளில் கொடூரம் கம்மியாக இருந்தது !) எனினும் முடிவில் விஷ்ணு ( சிலர் லக்ஷ்மி என்கிறார்கள்) உதவியுடன் சிவன் சரியாகி - விஷ்வாக்செனரும் உயிர் பெற்றார் என்று முடிகிறது.

திரு கோபிநாத் ராவ் அவர்களின் சிற்ப நூல் குறிப்பில் Sri Gopinath Rao’s Elements of Hindu Iconography இவ்வாறு கங்காளற் வடிவம் இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

“கங்காளற் வடிவத்தில் அவரை சுற்றி நிறைய பெண்களும், பூத கணங்களும் இருக்க தண்டும். அந்த கணங்கள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் பல்வேறு இசைக்கருவிகளை வாசித்த வண்ணம் இருக்க வேண்டும். ஒரு கணம் தலையில் ஒரு பெரிய பாத்திரம் ஏந்தி இருக்க வேண்டும் - இதில் கங்காளற் பிச்சை எடுக்கும் உணவு போட பட வேண்டும் - இந்த கணம் அவருக்கு இடது புறம் இருக்க வேண்டும். சுற்றி இருக்கும் பெண்கள் அவர் மீது மோக மயக்கத்தில் அவரை அணைக்க துடிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். மேலும் ரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள் அவரை சுற்றி அஞ்சலி முத்திரையில் இருக்க வேண்டும். வாயு தெருக்களை பெருக்க, வருணம் நீர் தெளிக்க, மேலே தேவர்கள் மலர்கள் தூவ, ரிஷிகள் மாத்திரம் ஜெபிக்க, சுர்யனும் சந்திரனும் சாமரம் பிடிக்க - நாரதரும் தும்புருவும் இசை வாசிக்க இவர் வளம் வர வேண்டும் ”

சென்ற டிசம்பர் மாதம் திருக்குறுங்குடி சென்ற பொது கோபுர பராமரிப்பு வேலை நடந்துக்கொண்டு இருந்தது - அதனால் சாரங்களில் ஏறி மேல் தலத்தில் உள்ள சிற்ப்பங்களை படம் பிடிக்க முடிந்தது. அங்கே கங்காளற் சிற்பம் இருப்பதை கண்டு வியப்பில் ஆய்ந்தோம்.

tirukkurungudi1

கண்டிப்பாக அந்த சிற்பிக்கு நிறைய தைரியம் இருந்திருக்க வேண்டு,.

closeup

மேலே நாம் படித்த பெரும்பாலானவை இந்த சிற்பத்திற்கு அப்படியே பொருந்துகின்றன.

corpse
kankalamurthy
sages+moon
sun

அந்த தண்டத்தின் மறு பக்கத்தில் இருக்கும் அந்த பள்ளி / உடும்பு போன்ற விலங்கிற்கு தான் குறிப்பு கிடைக்க வில்லை.

animal

ஒரு வேலை இப்படி முதிகில் ஒரு சடலத்தை சுமந்த பிச்சை கேட்டல் யார் போடுவார்கள் பாவம். அதனால் மதிய உணவை கட்டிக் கொண்டு வந்து விட்டாரோ என்னவோ.

விளையாட்டை இருந்தாலும், இந்த கதைகளை எல்லாம் நாம் அந்த காலத்துக்கு சூழலில் பார்க்க வேண்டும். நவ கண்டம் போன்ற விஷயங்கள் பற்றி படிக்கையில் இந்த குறிப்பு கிடைத்தது தன உயிரை தானே எடுப்பது ” வீரன் மற்றும் நாராயணன் என்னும் சகோதரர்கள் - இரட்டை பிறவிகள் , இருவருமே முதலாம் பராந்தக சோழர் ஆட்சியில் பணிபுரிந்தவர்கள், நெல்லோரே அரசன் விக்கலனை எப்படி கொன்றோம் என்று மன்னர் கேட்டதற்கு இப்படி தான் என்று தானே தங்கள் தலைகளை கொய்தனர் !”

மறுமொழி அளிக்கவும் »

புள்ளலூர் பற்றிய சென்றைய பதிவினை இதற்கு முந்தைய பதிவு போல நினைத்துப் படிக்கவும்

கதிரவன் தலைக்கு மேலே வந்ததும் சங்கருக்கு தெரியவில்லை. நல்ல பசி. சில மாதம் பழக்கம் தான் அவருடன் பழக்கம் - மடல் மற்றும் அவ்வப்போது தொலை பேசியில் பேசிய தொடர்பு மட்டுமே . எனினும் அந்த சில மாதங்களில், ஒவ்வொரு வாரமும் திங்கள் வந்ததுமே ஒரு எதிர்பார்ப்பு, சங்கர் இந்த வாரம் எந்தக் கோயிலுக்கு சென்று அதில் உள்ள அற்புத வடிவங்களை பற்றி கூறுவார் என்று. சனி ஞாயிறு என்றாலே இந்த ஆர்வலர் அடிக்கும் லூட்டி , அப்பப்பா ? எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறாரோ ! சென்னை பயணம் என்றவுடன் அவருடன் ஒரு ஞாயிறு முழுவதும் இல்லை - அரை ஞாயிறு தான், காஞ்சி அருகில் உள்ள திருமால்புரம் செல்வோம் என்று பேசிக்கொண்டோம். இன்னும் நன்றாக அவரது ஆர்வம் தெரிந்திருந்தால் காஞ்சியிலே ஒரு கட்டு ஃபுல் மீல்ஸ் முடித்துவிட்டு வந்திருப்பேன்.

இடம் மட்டுமே தெரியும், அதுவும் அந்த ஊரில் உள்ள ரயில் நிலையம் தான் தெரியும். அதன் அருகில் சந்தித்தோம். பிறகு ரோடு என்ற பேரில் ஒரு கோடு கூட இல்லாத தடத்தில் உருண்டு சென்றோம். இதை விட சாலை மோசமாக இருக்க வாய்ப்பு இல்லை என்ற கோட்பாட்டை மீண்டும் மீண்டும் மாற்ற வைத்த பாதை, அருகில் பச்சை பசேல் என்ற வயல் வெளிகள் வரத்துவங்கின. அப்போது திடீரென ASI பச்சை வேலி கண்ணில் பட்டது. கதவில் பெரிய பூட்டு வேறு தொங்கியது. வேலியை சோதித்துப் பார்த்தோம். யாரோ நல்ல கான்ட்ராக்டர் போல இருந்தது. ஒரு இடத்தில கூட புகுந்து செல்ல முடியவில்லை ( அது சரி - நாம புகுந்து செல்ல நகர வாயில் வேண்டுமே !!) . உள்ளே சிறு கற்றளி - அப்படி ஒன்றும் பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. விமானம் கூட இல்லை.

அருகில் இருந்த ஊர் வாசிகளிடம் கேட்டுப் பார்த்தோம் - பொதுவாக அவர்களிடத்தில் சாவி இருக்கும் . இங்கே அதுவும் இல்லை. சரி, இவ்வளவு செய்துவிட்டோம், இது கூடவா செய்ய மாட்டோம். இரும்புக் கதவை ஏறி குதித்தேன். ஒரு கூட்டமே கூடி விட்டது ( இலவச சர்க்கஸ்??) . சங்கர் முயற்சிக்கும்போது எங்கள் மீது கருணை பிறந்து ஒருவர் தனது சைக்கிள் தந்து உதவினார். ( உடனே சென்று விட்டார் - அதன் மீது ஏறிய சங்கர் உள்ளே குதித்த பின்னர் திரும்பும்போது வெளியே எப்படி செல்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.. சார், வாங்க முதல்லே வேலையை முடிப்போம் - வி கிராஸ் தி பிரிட்ஜ் வென் வி கம் டு இட் !

அருகில் சென்றோம். அழகிய புல்வெளி தரை நடுவில் சிறு கோவில். பின்புறமாக பாதை சென்றது

entry+from+backside
first+glance+was+dissappointing

தொலைவில் இருந்து பார்த்துவிட்டு ரொம்ப சின்ன கோயில், இங்கே அப்படி என்ன இருக்கப் போகிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டோம்.

first+look+front

இப்படி ஒரு சிறு கோவிலுக்கு பராந்தகர் (907 - 955 CE) முதல் பொன்னியின் செல்வர் உட்பட பலரும் கொடை கொடுத்துள்ளனரே ? சரியான இடத்திற்கு தான் வந்துள்ளோமா ?

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/parantaka.html
http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_2/rajaraja_1.html

அருகில் சென்று பார்த்ததும், எங்கும் எதிலும் கல்வெட்டுகள். இன்னும் பல புதையல்கள் அதனுள் அடக்கி உள்ள இந்த கோயிலை புதிய மதிப்புடன் அணுகினோம்.

inscriptions
inscriptions2
not+plain+walls

பல நுண்ணிய சிற்பங்கள், தோரணம் மற்றும் மேலே பூத வரி என்று பல கண்களில் பட துவங்கின. அவை அனைத்தும் அடுத்த சில பதிவுகளில் பார்ப்போம். முதலில் பூத வரி என்றவுடன் மனதில் ஒரு ஆசை, நமது நண்பர் புலித்தொப்பை இருப்பாரோ என்று ஒரு முதல் தேடுதல் பணியை மேற்கொண்டோம்.

view+from+the+side
view+from+the+side+not+plain

அருமையான பூத வரி. ஆனால் நம் நண்பர் ?

gana+row
gana+row2
gana+row3

அதோ அங்கே, இருப்பது அவரா ?

is+he+our+friend
no+false+alarm

இல்லை , தலை கீழாக நின்று சிறக்கும் ஒரு கணம் தான் அது !!

இன்னும் சற்று தேடிய பொது., ஆஹா, நம் நண்பர் தான்,

oh+i+can+spot+something
oh+i+can+spot+something2
spot+tiger+belly

ஆனால் ஒன்றில்லை , இரண்டு பேர்.

two+tiger+bellies
tiger+belly+number1
tiger+belly+number2

இதுவரை நாம் ஒரு கோயிலில் ஒரு புலித்தொப்பை பார்ப்பதே அரிது. இங்கோ இருவரை பார்த்த ஆசை, பேராசையாக மாறி இன்னும் கிடைக்குமா என்று தேடினோம்.

backwall
tiger+belly+number3
tigerbelly3

ஆஹா, இங்கே இன்னும் ஒன்று.

tiger+belly3

மூன்று , ஒரே இடத்தில. இன்னொன்று இருக்குமோ ? இதோ.

tiger+belly+number4
tigerbelly4

புலித்தொப்பை தாகம் அடங்கி விட்டது. நால்வரை பார்த்த பெருமிதம். சரி அடுத்த பதிவில் அங்கே இருக்கும் மற்ற சிற்பங்களை பார்ப்போம்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 8  1  2  3  4  5 » ...  Last »