Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘சிவ’

shiva gangadhara sholapuram.jpg

ஊடல் கூடல் காதல் என்பார்கள்.. … சிவபெருமானின் அழகிய சிற்ப வடிவம் ஒன்றை சமிபத்தில் கோவில் உழாவாரப்பணி குழுவில் கண்டேன்.

 

 

 

 

shiva gangadhara gangai konda cholapuram.jpg

சிவகங்காதரா என்னும் இந்த அற்புத சிற்ப வடிவம் - இதனை கங்கை கொண்ட சோழபுரத்திலும் காணலாம்.

 

 

 

திருச்சி மலை கோட்டையில் உள்ள பல்லவ மகேந்திரனின் புகழ் பெற்ற சிற்பமும் இவ்வடிவமே.( அது லலிதாங்குர பல்லவ க்ரிஹம் …ஆ!! அதையும் நாம் பின்னர் பார்போம் )

 

trichy lalitangura pallava griham.jpg

தன் வலது கையால் தனது ஜடையில் இரு ரோமங்களை சிவன் நீட்ட அதில் கங்கை இறங்கும் அற்புத சிற்ப வடிவம் - திருச்சி வடிவம் இதுவே… ஆனால் நமது சிற்பி ஒரு படி முன்னேறி, இதை காணும் உமை பொறுக்காமல் சினத்துடன் அவிடத்தை விட்டு விலக ஒரு கால் வைக்க, தன் மற்ற இரு கரங்களாலும் சிவபெருமான் ஆசுவாசப்படுத்த முயல்வது போல், அற்புத கற்பனையுடன் செதுக்கி உள்ள அக்காட்சி அருமை.

மற்ற படங்களுக்கு நன்றி
http://www.kumbakonam.info/kumbakonam/gkchopu/images/vimsta/viar16.jpg

மறுமொழி அளிக்கவும் »

ஈசனின் பல தாண்டவ கோலங்கள் உண்டு - பொதுவாக அழிவை கொண்டே இத்தண்டவம் என்ற கருத்து உலாவி வருகிறது - ஆனால் அது தவறு …ஆடல் வல்லானின் ஆனந்த கூத்தே அது. எந்த ஒரு ஆரம்பதிர்க்கும் ஒரு முடிவு வேண்டும் - அம்முற்றுப்புள்ளியே அடுத்த ஆரம்பத்தின் அறிகுறி

ellora+nataraja
natraja+ellora+bliss

ஓர் அரிய எல்லோரா சிற்பம்…. சிதைந்த நிலையிலும் சிற்பத்தினுள் இருக்கும் உணர்வு இன்னும் நமக்கு தெரிகிறது - கலை அழகும் தெய்வீகமும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன ….இங்கே மானிட அறிவும் கலைவண்ணமும் ஒரு உன்னத நிலையை அடைகின்றன… நாம் உடலை வளைத்து உழைக்கும் போது முகத்தில் வருவது சலிப்பு - ஆனால் இந்த சிலையில் தெரிவதோ ஒரு பரவச நிலை. அதை உணர்த்த ….தன்னை சுற்றிலும் இருக்கும் அழிவையும் தாண்டி வையகத்தில் என்றும் ஆனந்தம் நிலவுவதை உணர்த்தும் வண்ணம் இருக்கும் இந்த சிலை கண்டு கண்கள் கண்ணீர் வடிகின்றன ..

மறுமொழி அளிக்கவும் »

 Page 37 of 38  « First  ... « 34  35  36  37  38 »