Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘தஞ்சாவூர்’

ஒரே நாளில் மூன்று முறை அதிர்ஷ்டம் அடிப்பது கடினம். எனது மனைவியின் பிறந்த நாளன்று், தற்செயலாக நாங்கள் தஞ்சையில் இருந்தோம் - முதல் வேலையாக பெரிய கோயில் ( நானும் அரவிந்தும் விடியல் காலையிலேயே எழுந்து புள்ளமங்கை தனியே சென்று வந்து விட்டோம்). ஒரு போன் போட்டு குடவாயில் பாலு ஐயா இருக்கிறார்களா என்று பார்த்தோம். அவரோ, இதோ வருகிறேன் என்று அடுத்த நிமிடம் பெரிய கோயிலுக்கு வந்தது மட்டும் அல்லாமால், வாங்க.. நானே சுற்றிக் காட்டுகிறேன் என்று புறப்பட்டுவிட்டார். கரும்பு கடிக்க கூலி தேவையா. வாருங்கள் ஒரு கரும்பை, சாறு பிழிந்து உங்களுடன் பகிர்கின்றேன். சிறிய புடைப்புச் சிற்பம் தான், எனினும் சோழ சிற்பியின் கைவண்ணம் குடவாயில் பாலு அவர்கள் சொல்வண்ணம் இரண்டும் சேர்ந்தால். ..

kudavoil+sir+explaining

நாம் முன்னரே பெரிய கோயிலில் உள்ள தக்ஷன் தலையை கொய்தது மற்றும் காமனை எரிக்கும் படலங்களின் சிற்பங்களை பார்த்து விட்டோம்

தக்ஷன் தலையை கொய்த ஈசன் -

காமனை எரிக்கும் ஈசன்

இன்று நாம் பார்க்கும் காட்சி, அவற்றை அடுத்து வருபவை. மகேசன் மீண்டும் குடும்பஸ்தானாக ஆக சம்மதிக்க வைத்துவிட்டனர். தாக்ஷாயினி மீண்டும் உமையாக, பர்வத ராஜன் ஹிமவானின் குமாரியாக பிறந்து வளர்ந்து வருகிறாள். ஈசனே தன் கணவனாக வருவதற்கு தவமும் செய்யத் தொடங்கிவிட்டாள்.கந்தபுராணத்தில் இந்த காட்சியின் ஒரு வர்ணனை உண்டு ( சிற்பம் காலத்தால் அந்த காவியத்திற்கு முற்ப்பட்டது ).

கதை மிகவும் சுவாரசியம். பர்வத ராஜன் ஈசன் தூது அனுப்பிய ஏழு முனிவர்களின் பேச்சை ஏற்று தனது மகளை மகேசனுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டு விட்டான். ஈசன் தனது திருமணத்திற்கு கிளம்பி வருகிறார். அப்போது ஹிமவானின் மனைவி, ராணி மேனை , ஒரு அம்மாவுக்கே உண்டான ஆர்வத்துடன் தன மருமகனைக் காண விரைந்து செல்கிறாள். தன அருமை மகள் கரம் பிடிப்பவன் என்ன வதன சௌந்தர்யம் பொருந்தியவனாக இருப்பன் என்று பார்க்க அவளுக்கு ஆவல்.

ஈசன் எப்படி வருகிறார் - அவர் தான் திருவிளையாடல் நாயகன் ஆயிற்றே. இன்றும் ஜானவாசம் எப்படி எல்லாம் நாம் கொண்டாடுகிறோம் . என்ன தோரணை, பள பளக்கும் பட்டாடை, உடலெங்கும் தொங்கும் தங்க ஆபரணங்கள் , சிகை அலங்காரம் என்ன நகை அலங்காரம் என்ன, குதிரை மேலே மாப்பிள்ளை வர, ஆட்டம் பாட்டம் என்று கூட வரும் கோஷ்டி அடிக்கும் லூட்டி வேறு.

இதை எல்லாம் எதிர்பார்த்து சென்ற மேனைக்கு அங்கே ஒரு பெரும் அதிர்ச்சி.

shiva+as+bridegroom

பூத கணங்கள் சூழ்ந்து , ரிஷப வாஹனத்தில், அண்ணல் யானை தோல் உடுத்தி, நாக ஆபரணம் பூண்டு, பரதேசி போல வரும் கோலம். அதுவும் நமக்காக திரும்பி படம் பிடிக்க போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.

shiva+on+nandhi
snake

வரவேற்க வந்த மேனைக்கும் அவள் தோழிகளுக்கும் தூக்கி வாரி போட்டது. உடனே சென்று தன கணவரிடம் முறையிட்டாள்.

ladies+watching

ஏற்கனவே சிவன் மகா கோபக்காரன். பிரமன் தலையை. தட்சன் தலையைக் கொய்தவர். இப்படிப்பட்டவர் எப்படி வருகிறார் பாருங்கள்.. இவருக்கா நம் மகளைத் தருவது?என்னால் ஒப்புக் கொள்ளமுடியாது..

http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0239.html

மலரயன் புதல்வன் றன்னோர் மடந்தையை மணத்தின் நல்க
அலைபுனற் சடிலத் தண்ணல் அவன்றலை கொண்டான் என்பர்
நிலைமையங் கதனை யுன்னி நெஞ்சக மஞ்சு மெங்கள்
குலமகள் தனைய வற்குக் கொடுத்திட லெவனோ வென்றாள்.

அருகில் இருக்கும் பிரம்மன், விஷ்ணு, நாரதர் எடுத்துரைக்க - நடந்தது தக்ஷன் செய்த குற்றத்தின் வினைப்பயன். அதையும் மன்னித்து மகேசன் அவனை உயிர்ப்பித்து ( ஆட்டு தலையு்டன் ) விட்ட கதையை கூறி, உன் மகளுக்கு இவரே ஏற்ற கணவர் என்றும், ஏற்கனவே உள்ளதை கவர்ந்துவிட்டார் என்றும் கூறி சமாளித்து விட்டனர்.

முடிவில் திருமணம் சிறப்பாக நடை பெற்று அனைவரும் நலாமாக கிளை திரும்பினர். அடுத்து குமார சம்பவம் தான். …

shiva+umai

குடவாயில் ஐயாவுக்கு மீண்டும் ஒரு பெரிய நன்றி எனினும் அவர் இந்த சிற்ப்பத்தை தனது நூலில் வேறு விதமாக விவரித்துள்ளார் . அதையும் விரைவில் பார்ப்போம்.

மறுமொழி அளிக்கவும் »

தஞ்சை பெரிய கோயிலை பற்றி எழுதும்போதெல்லாம், சோழர் கலையில் அப்படியே சொக்கி நின்று விடுவோம். எனினும் அங்கு சில மற்ற கலைச்சிற்பங்கள், காலத்தில் பிந்தைய படைப்புகளையும், நாம் பார்க்க வேண்டும். பொதுவாக பல்லவர் சோழர் கலையையே நான் மிகையாக வர்ணிக்கிறேன் என்ற (உண்மை) கூற்று இருந்தாலும், அவ்வப்போது இங்கொன்றும் அங்கொன்றுமாய் - ஸ்ரீரங்கம் சேஷ ராயர் மண்டபம், பேரூர் கனக சபை சிற்பங்கள் என்று நாயக்கர் காலத்து நல்ல சிற்பங்களை எடுத்துக் காட்டிக்கொண்டு தான் இருக்கிறேன். அதே போல இன்று பெரிய கோயில் வளாகத்தில் நாயக்கர் கால பணிகளை பற்றி ஒரு பதிவு. சுப்பிரமணியர் ஆலயத்தில் இருக்கும் ஒரு சிறு தொட்டி பற்றிய பதிவே இது.

பெரிய கோயில் வளாகத்தில் சுப்ரமணியர் ஆலயத்தை கண்டுபிடிப்பது வெகு சுலபம். விமானத்தை சுற்றி வரும்போது, மூன்றில் ஒரு பங்கு கடந்தால் பின்னர் தெரியும் அழகிய ஆலயமே அது. பெரிய கோயில் கட்டி சு்மார் அறுநூறு ஆண்டுகளுக்கு பின்னர் எடுப்பிக்கப் பட்டாலும் அப்படியே கலை அம்சம் பொருந்த ஒத்து நிற்கும். பிரிட்டிஷ் லைப்ரரி படங்களை கொண்டும் இணையத்தில் உள்ள படங்களை கொண்டும் அதன் அழகை ஒரு முறை பார்ப்போம்.

subramanya+temple+go+around+it

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது இந்த சுப்பிரமணியர் ஆலயத்தை சுற்றி வரும்போது தெரியும்

look+to+your+left

கருப்பு வெள்ளை புகைப் படம் என்றாலே அதற்கு ஒரு தனி அழகு தான்.

anitque+photo2
antique+photo
antique+photo3

இப்போது, கண்ணில் படுகிறதா , நாம் இன்றைக்கு பார்க்கப் போகும் தொட்டி. இதை தான் ’மெனக்கெடுவது’ என்று பெரியவர்கள் சொல்வார்களோ? அபிஷேக நீர் வெளி வந்து சொட்டுவதற்கு இப்படி ஒரு படைப்பா. அருகில் சென்று பார்ப்போம்.

just+a+sink
take+a+closer+look
take+another+look

அந்த கோமுஹத்தில் - இல்லை இல்லை யாளி முகத்தில் தான் என்ன ஒரு வேலைப் பாடு. அந்த வளைவு, வளைவை இன்னும் நேர்த்தியாக வெளிக்காட்டும் கோடுகள்.

what+a+beauty
what+a+spout

அது சரி, கீழே உள்ள தொட்டியை பாருங்கள்.

the+sink
the+sink+front
the+sink+otherside

கம்பீர சிங்கங்களை கால்களாக கொண்டு, ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த அற்புதத் தொட்டி ஒரு கதையை வேறு சொல்கிறது.

purushamrigam
bheema
purushamrigam+catching+bheema

என்ன கதை. நம் பதிவுகளை விடாமல் படித்திருந்தால் இந்நேரம் கண்டு பிடித்து இருப்பீர்கள்.

பாதி பீமனை நீ சாப்பிடலாம் ..

படித்துவிட்டீர்களா ? பீமனின் கையில் இருப்பது என்ன

bheema
whats+bheema+having+in+his+hand

பிடி படும்போது கையில் ஒன்றுமே இல்லையே..அதனால்தானே பிடி பட்டான்.

purushamrigam+catching+bheema
bheema+hand+is=empty

மறுமொழி அளிக்கவும் »

 Page 5 of 18  « First  ... « 3  4  5  6  7 » ...  Last »