Quantcast

குறிக்கப்பட்ட இடுகைகள் ‘யாழி’

நண்பர்களே, இன்றைக்கு நமக்கு ஒரு சிற்ப விருந்து. புள்ளமங்கை ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வந்த இரு நண்பர்கள் - இல்லை இல்லை அவர்களை அங்கு சென்று படம் எடுத்து வாருங்கள் என்று தூண்டி இப்போது அதன் பலனை உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன். புள்ளமங்கை ஒரு கலைப் புதையல். ஆனால் புதையல் என்றாலே புதையுண்டு பல காலம் நினைவில் இருந்து விலகி பின்னர் கண்டுபிடிக்கப்படுவது போல, இன்னும் புதையுண்டு கிடக்கும் பொக்கிஷம் புள்ளமங்கை. அதன் அருமைகளை இந்த தொடரின் மூலம் வெளியிடுகிறோம்.

பொதுவாக இடுகைகளில் படங்களை தொலைவில் இருந்து இட்டு மெதுவாக அருகில் செல்வோம். ஆனால் இந்த பதிவுக்கு அதை சற்றி தலைகீழாக மாற்றி, முதலிலேயே அருகில் செல்வோம். படித்து முடித்தவுடன் ஏன் என்று உங்களுக்கு புரியும்.

இன்று நாம் பார்கவிருப்பது நான்கு சிற்பங்கள். கந்தன் பிறப்பை கல்லில் காட்சியை வடிக்கும் சிற்பங்கள், மற்றும் சில யாளிகள்.

எனக்கு பிடித்தமான யாளிகளுடன் துவங்குகிறேன்.

the amazing warriors
warrior emering with his mount
action pose
even ladies
not just a mount he is a yaali rider
sadly broken
see the detailing of the crown

அற்புத வடிவங்கள், இவ்வளவு திறமை கொண்டு இவற்றை வடித்தான் சிற்பி என்றால், இவை வெறும் அலங்கார மதிப்புக்காகவா என்ற ஐயம் வருகிறது?

இன்னொரு யாளி ( கொம்புடன் இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் வ்யாலா என்கிறார்கள் )

vyaala

என்னடா, முருகனின் பிறப்பு என்று சொல்லி மீண்டும் யாளிகளை வலம் வருகிறானே என்று எண்ண வேண்டாம். போகப் போக உங்களுக்கே புரியும் . சரி இதோ சிற்பங்கள்.

shiva n parvathi dance with rathi and manmadha watching

முதல் வடிவம். உமையும் ஈசனும் ஆடும் அற்புத நடனத்தைக் கண்டு ஸ்தம்பித்து நிற்கும் காமன் மற்றும் ரதி. இருவர் ஆட்டத்தில் தான் என்ன ஒரு உயிரோட்டம். ஆடல் வல்லானின் ஆட்டத்தின் ஆண்மை கலந்த தோரணை, உமையின் வடிவத்தில் பெண்ணிற்கே உரிய நளினம்.

wow, what a lively composition

அடுத்த வடிவம், உமையை தன்பால் ஈர்க்கும் ஈசன்.

shiva striking a pose for a shy parvathi

வெட்கப்படும் பாவையாய் உமை, கடைக்கண் பார்வையால் தலைவனை பார்க்கும் வண்ணம் - ஆஹா, ஈசன் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்.

the shy stance of Parvathi
the style of shiva - see the crossed legs

அடுத்து, இன்னும் நெருங்கி விட்டனர். தனது ஆசைக்குரிய பார்வதியை அன்புடன் சிவன் அணைக்கும் காட்சி.

shiva courting parvathi

இந்த சிற்பம் வடித்த சிற்பிக்கு உள்ள அறிவுக்கூர்மையை பாருங்கள். முதல் பார்வையில் ஈசனுக்கு இரண்டு வலது கரங்கள் இருப்பது போல வடித்தாலும் - ஒரு கை பின்னால் அமர்ந்திருக்கும் நந்தியின் மேல் , இன்னொரு கரம் உமையை அன்புடன் அணைப்பது போல இருந்தாலும், சிற்பத்தை இன்னும் ஒரு முறை பாருங்கள்.

the fluid motion of shiva

கல்லில் ஈசனின் கை உயிர் பெற்று, நகர்ந்து உமையைப் பற்றுவது போல காட்டவே சிற்பி அப்படி வடித்தான் போல !!

அது சரி, அந்த முதல் ஸ்பரிசத்திற்கு உமையின் பதில். அப்பப்பா, நாணம் என்றால் இது தானோ !!!

seated grace of parvathi

அதனுடன் நிறுத்தவில்லை சிற்பி, நந்தியை கொஞ்சம் பாருங்கள்.

the detailing of nandhi, the fold of skin on the net, the bent leg

மேலே இருபுறமும் கணங்கள், கிழே பணிப்பெண் என்று பின்னுகிறான் சிற்பி.

gana top left blowing a conch
lady assistant bottom left
the gana top right prasing shiva

நான்காவது சிற்பம். முருகன் பிறப்பு.

kumarasambava

புரியவில்லையா. ஈசனின் மடியில் ஒரு குழந்தை, அப்பாவை செல்லமாக கை நீட்டி ஆசையாய் கன்னத்தை தொடுகிறது. கார்த்திகை பெண்கள் ஆறு, ஐவர் கையில் மற்ற ஐந்து குழந்தைகள்.

ladies holding babies

சிற்பங்கள் மற்றும் படங்கள் தரம் குறித்து சிலர் அதற்குள் கூறும் மறுமொழிகள் கேட்கிறது ( நல்லவை கெட்டவை இரண்டும் !!)

ஒரு நிமிடம் பொறுங்கள். காரணத்தை படங்கள் மூலமே சொல்கிறேன்.

the bottom panels
the top panels

இன்னும் முடியவில்லை

so much to see
closer look

இன்னும் தொலைவில் இருந்து, இப்போது புரிகிறதா ? இந்த சிறிய சிற்ப புதையல்களை நாம் முதல் பார்வையில் விட்டு விடக் கூடும்.

what to see in pullamangai

நான் ” சிறு ” என்று பதிவில் சொன்னேனா ?

size comparison

மறுமொழி அளிக்கவும் »


முந்தைய பதிவில் தஞ்சை பெரிய கோயில் முதல் யாளி வரிசையை பார்த்தோம். அவை யாளிகளா அல்லது சிம்மங்களா என்று நண்பர்கள் பலர் கேட்டனர். அவர்களை விட இன்னும் பன்மடங்கு நண்பர்கள் தஞ்சை கோயிலுக்கு பல முறை சென்றும் இந்த வரிசைகளை பார்க்கவில்லை / பார்கவில்லையே !! என்றும் வருந்தினர். அவர்களுக்காக இன்று இன்னும் ஒரு யாளி வரிசை ( முன்னர் பார்த்து மேல் வரிசை, இப்போது பார்ப்பது கீழ் வரிசை ) -நன்றி சதீஷ் - அருமையான படங்கள், மற்றும் கூர்ந்து கவனித்து படங்களின் அளவை குறிக்க அவர் கையாண்ட முறை மிக அருமை.

முதலில் படங்களை படங்களாகவே இடுகிறேன், வரிசையை கண்டு பிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள்

can you spot the second row of miniature yaalis
spot them in this frame
try in this
spot in this

சரி, இப்போது தெரிகிறதா பாருங்கள்.

can you spot the second row of miniature yaalis
can you spot them now
look towards the floor
spotted them

அடுத்தது

now can you spot them
spot in this
the bottom yaali row

அடுத்தது

try in this
notice the lovely magara thorana on the rail and the yaali row below

அடுத்தது

spot them in this frame
spot them in this frame now

சற்று இன்னும் அருகில் சென்று இந்த அற்புத யாளிகளை தரிசனம் செய்வோம். பலர் இவைகளை சீன டிராகண் போல உள்ளது என்று கூறுவார், எனினும் அவற்றை பார்த்தல் சற்று பயமாக இருக்கும், எனக்கு தஞ்சை யாளிகள் கொடூரமாக காட்சி அளிப்பதை விட சற்று விளையாட்டாய் சிரிப்பது போலவே உள்ளது.

vyaalas or yaalis

யாளி வரிசையின் கொடிகள் இன்னும் அருமை. இவை ஏற்கனவே மிகவும் அளவில் சிறியவை. அந்த சிறிய அளவிலும் மேல் வரிசையை போல யாளி வாயில் இருந்து வெளி வரும் வீரர்களை போல இங்கும் செதுக்கி உள்ளனர். அதற்க்குமேல் ஒரு பொடியன் வேறு.அப்பப்பா அபாரம் .

its got its own version of the emerging rider - what that black thing
the black thing is a ball pen cap
the corner of the yaali row are special
what that black thing
who is that to the right of the frame

பேனா மூடி அளவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது

இவை போதாதென்று அதே அளவில் ஒரு அருமையான யானை உரி போர்த்திய மூர்த்தி வேறு

whats this below the yaali row
our ball pen cap once again
shiva as gajasamhara murthy in miniature

அடுத்த முறை பெரிய கோவில் செல்லும் பொது, அதன் பிரம்மாண்டத்தை மட்டும் கண்டு வியக்காமல் இந்த சிறிய சிற்பங்களையும் கண்டு களியுங்கள்.

மறுமொழி அளிக்கவும் »

 Page 1 of 2  1  2 »