சென்ற வாரம் நண்பர் லக்ஷ்மி சரத் அவர்கள் தனது தளத்தில், ஒரு இடுகை இடும்படி கேட்டார்.
பல விஷயங்களில் தலையை நுழைத்து வழி தெரியாமல் திரிந்த எனக்கு சிற்ப கலை ஒரு அதீத மன அமைதியை தந்தது – கல்லின் மேல் ஏற்பட்ட காதல், இந்த அழியும் கலையின் மேல் ஏற்பட்ட மோகம், ஆடாமல் நின்று நம்மை நெகிழ்விக்கும் இந்த சிற்பங்கள் – அவற்றின் மொழி என்னை அவற்றின் வசம் இழுத்து ,ஆயுள் கைதி ஆக்கி விட்டது.
லக்ஷ்மி அவர்களின் தளம் மிக அருமையான நம் பழைய நினைவுகளை தூண்டும் தளம். அதனால் சிற்பகலை மற்றும் சுற்றுலா இரண்டும் சேருமாறு ஒரு இடுகை தயார் செய்தேன் – அதுவே மஸ்ரூர்.
http://backpakker.blogspot.com/2008/09/post-from-guest-blogger-was-this.html
சில மாதங்களுக்கு முன் மல்லை சோதனை சிற்பம் சார்ந்த புகை படம் தேடும் பொது, எனது சிறு வயது நண்பர் திரு ஆல்பர்ட் கண்ணில் பட்டர்,பழங்கதை பேசிவிட்டு அவ்வப்போது தொடர்பில் இருந்தோம். சில வாரங்கள் கழிந்த பின்னர், . அவர் ஹிமாச்சல பிரதேசம் சென்று அங்கு உள்ள மஸ்ரூர் ( himachal pradesh – masroor rock cut caves) குடவரை சென்றதாகவும், அங்கு எடுத்த படங்களை எனக்கு அனுப்பி வைத்தார். படங்களை பார்த்தவுடன் திகைத்து போனேன் !
177717811783
வட இந்தியாவில் இருக்கும் குடவரை, அதுவும் மலையின் உச்சியில் இருப்பவை, எட்டாம் நூற்றாண்டு, சிவன் கோயில், ( தர்மசால அருகில் ). இதுவரை பல குடைவரைகள் நம் பார்த்தோம் – தென் இந்தியா , தெற்கு இந்தியா என்று – எனினும் ஹிமாச்சல பிரதேசத்தில் இப்படி ஒரு குடவரையா என்று திகைத்தேன்.
17751779
பார்ப்பதற்கு அங்கோர் வாட் போலவே உள்ளன. அங்கோர் நிறுவியது பதினோராம் நூற்றாண்டு , மஸ்ரூரோ எட்டாம் நூற்றாண்டு. இரண்டு படங்களையும் பாருங்கள், என்ன ஒரு ஒற்றுமை , முன்னால் இருக்கும் குளத்து நீரில் கோபுரத்தின் அழகு பிரதிபலிக்கிறது.
17721785
http://news.nationalgeographic.com/news/2007/08/photogalleries/Angkor-pictures/
காலத்தினால் மிகவும் சிதைந்தாலும் மஸ்ரூர் இன்றும் அழகு தான். அங்க்கொரின் அழகும் அதன் சிதைவினால் தானே. ஒருவேளை மஸ்ரூர் அங்க்கொரின் முன்னோடியா ?