இந்த சிலையின் வரலாறை 1944 வரை தேடி கிடைத்த தகவல்களை கொண்டு படைத்த முந்தைய பதிவை பார்த்திருப்பீர்கள். “பெரிய, முக்கியமான பார்வதி செப்புச் சிலை, தென்னிந்திய சோழர் காலம், பதினோராம் நூற்றாண்டு”. இப்படித்தான் அந்த பிரபலாமான ஏல நிறுவனம் ஏலம் விடும் சிலைக்கு தலைப்பு கொடுக்கிறது. விலை பட்டியல் இந்த சிலைக்கு ஐந்து கோடி முதல் ஏழு கோடி என்று விலை நிர்ணயம் செய்து ஏலத்தில் ஆறு கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
அதே போல் இந்த சிலை பற்றி தேடியபோது 1944 ஆண்டு வெளிவந்த இந்த குறிப்பை பார்த்தோம்
Gauri
A Southern Bronze
By K. B. IYER
We had seen the reference in the 1944 article Gauri, A Southern Bronze, By K. B. IYER – where he specifically mentions “One of such pieces is Gauri from the Kailasanath temple, Conjeeveram, now in the collection of Ramgopal, the well-known dancer.”
இன்று இன்னும் தேடி 1915 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் இருக்கும் தகவல்களை கொண்டு இந்த சிலை காஞ்சி கைலாசநாதர் கோயில் சிலைதான் என்பதை நிரூபணம் செய்கிறோம். இந்த நூல் திரு O.C. Ganguly’s எழுதிய South Indian Bronzes. அவர் அந்நாளில் மிகவும் பிரபலமானவர் – நம் நாட்டு கலைச்செல்வங்களை பற்றி பல நூல்களை எழுதியும் தொகுத்தும் உள்ளார்.
அவர் இந்த சிலையை பற்றி அந்த நூலில் கொடுக்கும் தகவல்கள் இவ்வாறு
இதில் இருந்து நமக்கு தெளிவாக தெரிவது – 1915 வரை இந்த சிலை காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தான் இருந்துள்ளது. இடையில் 1915 – 1944 எப்படியோ புகழ் பெற்ற நடன கலைஞர் ராம் கோபால் இடத்தில சென்று விட்டது.
இந்த பதிவை கொண்டு சிலையை மீட்டு வர முடியாது என்றாலும் – எதோ ஊரு பேரு தெரியாத அனாதையை போல ஏலம் விடாமல் – காஞ்சி கைலாசநாதர் கோயில் கௌரி என்ற பெருமையுடன் விலை போவாளே !